Language Selection

பி.இரயாகரன் 1996-2000
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உறவினர்களினதும், நண்பர்களினிதும் நல்ல உறவுகளை கூட துண்டிக்க கோரும் மதம், வீட்டு கதவுகளையும், தொலை பேசிகளிலும் மற்றைய மதங்களையும், மனிதர்களையும் தூற்றி, செம்மாறியாடாக தம்மிடம் வந்துவிடும்படி கொடுக்கும் தொல்லைக்கு முடிவுகட்ட, தொடர் துண்டுப்பிரசுரம் அவசியமாகிவிடுகின்றது. இதை நீயும் உன்னால் இயன்றளவு பரப்பி பங்களிப்பது உனது கடமையாகும்.

நீங்கள் இதை படிக்கத் தொடங்கவே உங்களை மேய்போர் சொல்வார், இந்த சாத்தானை படிக்காதீர்கள், பார்க்காதீர்கள் என்பர். இது நாஸ்திகம், இது மற்றைய சமயத்தாரின் செய்கை எனவே "நீ கடவுளை நம்பு" என்பார். மனிதனை நம்பாதே என்பார். நீ உனது அறிவின் நிமித்தம் கொஞ்சம் சிந்தித்து பார். நீயாக எல்லாவற்றையும் படித்து அறிந்து முடிவுக்கு வந்தாயா? அல்லது மேய்பரின் அடிமைகளா நீங்கள்? கிணற்றுத் தவளையாக, செம்மாறி ஆடுகளா நீங்கள் வாழ்வதை விட்டு, நீ உனது சொந்த அறிவின் நிமித்தம் உனது இன்றைய நிலையை வந்தடைந்தையா? மதத்தை யார் உருவாக்கினார்கள்? நீ ஏன் வழிபாடுகின்றாய்? என்று உன்னை நீ எப்போதவாது கேட்டு பார்த்தயா?

 

இந்த மண்ணில் சொக்கத்தை படைப்பதை பற்றி எப்போதவாது சிந்தித்தாயா? மேட்சத்தில் சொர்க்கத்தை படைப்தைப் பற்றி மேய்ப்பர் கூறுகின்றனரே! அந்த சொர்க்கம் என்ன? தங்க கட்டிலில் படுத்துறங்குவதா? சிந்தி! அந்த சொர்க்கம் தான் என்ன? உன்னை நீ பெரியவனாக கருதக் கோரும் மதம், மற்றவனை சிறுமைப்படுத்தி இழிவுபடுத்தக் கோருகிறதே ஏன்? உன்னையும் உன்னைச் சுற்றியுள்ள செம்மறிகளை மட்டும் மேய்பர் உயர்ந்தவர்களாக காட்டி, மற்றைய மக்களை தூற்றுகின்றாரே ஏன்? சிந்தி உன் மூளையால். மூளை சிந்திப்பதற்கு ஒழிய, இயந்திரமாக மீள ஒப்புவிப்பதற்காக அல்ல. மேய்பர் இதை மறுக்கின்றாரே ஏன்?

 

நீ உனது துயரத்தை சொந்த வாழ்வின் நடைமுறையில் தீர்க்கத் தவறி, யாரோ ஒருவரிடம் ஏன் முறையிடும் படி கூறப்படுகின்றது.? அப்படி நீ உனது ஆத்ம திருத்திக்காக முறையிடுவது கூட பரவயில்லை, ஏன் அதை கோயிலிலும், சபைகளிலும் செய்கின்றீர்கள். யேசு சொன்னார் கோயிலைக் கண்டால் கல்லால் அடி என்றார். ஆனால் நீங்கள் அவருக்கு எதிராகவே, அவரில் பெயரில் ஏன் கூடுகின்றீர்கள். ஏன் கல்லால் அடி என்று யேசு சொன்னார்? அங்குள்ள போதகர்களும், மேய்போர்களும் ஏழை மக்களை சுரண்டி, அதிகாரத்தை நிறுவி அடக்கியாண்ட போதே, அதற்கு எதிராக போராடிய யேசு உண்மையான மனிதனாக இருந்தார். கடவுளாக அல்ல. ஏன் எனின் அவர் இறைவனிடம் முறையிடவில்லை. ஆனால் இன்று மேய்போரும், போதிப்போரும் எல்லோரையும் சபையிலும், கோயிலிலும் கூடும்படி கோருகின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு என்ன லாபம்? சிந்தித்து பார்த்தாயா? இப்படி மேய்ப்போரும், போதிப்போருக்கும் அரசு ஏன் பணம் கொடுக்கின்றது.? ஏன் உன்னிடம் இருந்து பணம் வாங்குகின்றார்கள். நீ இரவு பகலாக உழைக்கும் போது, உனது உழைப்பில் இருந்தும், உனது உழைப்புக்கு வரி எடுத்து, அதை இந்த மேய்பர்ருக்கும், போதிப்போருக்கும் வழங்குகின்றதே ஏன்? சிந்தித்தயா? ஏன் போதிப்போர், மேய்ப்பர் உன்னைப் போல் உழைப்பதில்லை? உன்னையே நீ கேட்டுப் பார்த்தயா?. அவர்கள் சொல்லுவார்கள் கடவுளுக்கு ஊழியம் செய்ய இருப்பதாக? எதற்காக ஊழியம்? அரசிடம் எம்மைச் சுரண்டும் வரியில் இருந்து ஊதியம் பெறும் இந்த சாத்தான்கள், அரசுக்கு விசுவாசமாக அல்லவா, வால் ஆட்டுவர். புரியவில்லையா?

 

யேசு ஒரு யூதன். அவரைக் கொண்டவனும் யூதன். யேசு எழைகளின் துயரத்தை ஒழிக்க, மண்ணில் சொர்க்கத்தை படைக்க, கடவுளிடம் அல்ல நடைமுறையில் இந்த துயரத்துக்கு காரணமான அரச பரம்பரையை எதிர்த்துப் போரடினார். மறுக்கின்றீர்களா? மனித துயரத்தக்கு காரணமான அரச பரம்பரையிடம் இருந்து ஊதியம் பெறாது ஏழைமக்களின் விடுதலைக்காக போராடிய தலைவர். அன்று ஊதியம் பெறாத ஏழைகளின் விடிவுக்காக போராடியதால் தான் சிலுவையில் அறையப்பட்டார். மறுக்கின்றீர்களா? இன்று இதற்கு மாறாக போதிப்போரும், மேய்ப்போரும் பணம் பெற்றே இதைச் செய்கின்றனர். ஏன் பணத்துக்கு வாலாட்டுபவரானார்கள்? இந்த வரலாற்றை யேசுவின் மறைவின் பின்பு திரித்து, எழைகளின் தலைவனை மன்னர்கள் தமது வணக்கத்துக்குரிய வைப்பாட்டியாக்கினர். அதாவது யேசுவின் பெயரால், யேசு போராடிய எழைகளை ஒடுக்கிச் சரண்டி எழையாக்குவது இலகுவானதாகியது. யேசு சம்பளம் பெறாத ஒரு விடுதலை வீரன் என்பதை தலை கீழயாக்கி, சம்பளம் பெற்று அதை போதித்து எழைகளை அடக்கும் நவீன வடிவமாகவே யேசு திரிக்கப்ட்டார். இதையே 1455 ஆண்டு முதன் முதலில் அச்சில் வந்த பைபிள், அதாவது 28 தலைமுறை கடந்த பின்பு (1455 ஆண்டுகள் பின்) தனது சரமாக கொண்டுள்ளது. யேசு யார் என்பதை நீ சொந்தமாக எப்போதவாது தேடினயா? மேய்ப்போரை விட்டு நீ சொந்தமாக தேடு, உன் சொந்த மூளையால். அப்போது உண்மை நிர்வணமாகும்.

 

மேய்ப்போர் போராடக் கூடாது என்கிறனர். யேசுவின் கொள்கைக்கு மாறாக. யேசுவே போராடியதால் தான் கொல்லப்பட்டார். எல்லாவிதமான மேய்ப்போரும், போதிப்போரும் போராடக் கூடாது என்கின்றனர். நீ வேலை செய்யும் இடத்தில் உனது முதலாளி என்ன செய்தாலும், உனது அகதி அந்தாஸ்து மறுக்கப்பட்டு நாடு கடத்தினாலும், உன்னை யார் என்ன செய்தாலும் எதிர்த்து போராடக் கூடாது என்கின்றனர். போராட்டம் என்பது இயற்கையின் உணர்ச்சி. இங்கு இந்த போராட்டம் என்பது தற்காப்பில் தொடங்குகின்றது. நாய் கடிக்க வரும் போது எதிர்த்து பாதுகாப்பு பெறுவது உயிர் வாழ்வுகான போராட்டமாகும். இதுபோல் தான் அனைத்தும். ஆனால் அரசிடமும், வேறு வழியிலும் ஊதியம் பெற்று போதிப்போரும், மேய்ப்போரும் போராடுவதை எதிர்க்கின்றனர். ஏன்? அரசு ஊதியம் கொடுக்கும் அடிப்படை நோக்கில் இருந்தே, போராட வேண்டாம் என்று போதிக்கப்படுகின்றது.

 

நீ போராடமல் விடுவதன் மூலம் என்ன நிகழ்கின்றது.? இதனால் யாருக்கு லாபம்? சிந்தித்தயா? லாபம் கடவுளுக்கா? அல்லது சில மனிதருக்கா? மனிதனுக்கு எனின் ஏன் அதை எதிர்த்து போராடக் கூடாது என்கின்றனர்? மற்றைய மதங்களையும், உன்னுடன் சேர்ந்து நிற்காதவனையும் எதிர்த்து போராடாக கோரும் மதம், ஏன் இதில் செய்வதில்லை. திரும்பிப் பார்? எத்தனை நண்பர்களின், இரத்த உறவுகளின் உறவைக் கூட மதத்தின் இணைவுடன் துலைத்தாய் என்று! இதை ஏற்படுத்தியவர்களை, ஏன் நீ திரும்பிப் பார்க்கவில்லை? உலகத்தை கடவுள் படைத்தான் என்கிறது மதம். மதம் என்பது எங்கிருந்து உருவானது? யாரால் உருவாக்கப்பட்டது? கடவுள் உண்டென்றும், மதம் உண்டென்றும் யார் சொன்னார்கள்? எப்போதவாது கேட்டுப் பார்த்தாயா? கடவுளால் படைக்கப்ட்டதாக கூறப்படும் உலகத்தில் அனைத்தும் அனைவருக்கும் பொது அல்லவா! மறுக்கின்றீர்களா? அனைத்தும் பொதுவாக உள்ள உலகமாகவா உலகம் இன்று உள்ளது. உலகம் முழுக்க சிலரின் தனிப்பட்ட சொத்தாகிவிட்டது. ஏன் நீ கூட நிலத்துக்கும் ,சொத்துக்கும் எல்லை போட்டு, வங்கி கணக்குடன் வாழ்கின்றாயே, இது கடவுள் படைத்தாக நீ நம்பும் உலகுக்கு எதிர் அல்லவா? என் இறைவனின் ஆசி பெற்ற உன்னையும் உன்னை சுற்றியும் திரும்பி பார். சாதியம், பெண்ணடிமைத் தனமும், அற வட்டியும், சுரண்டலும் என்று அனைத்து மனித கொடூர இயல்புகளுடன் கடவுளின் ஆசிர்வாதத்தை பெற்று உன் அருகில் இருப்பதை, நீ கணவில்லையா? இதை நீ ஏன் எதிர்க்கவில்லை? உலகில் எல்லோருக்கும், உழைக்கும் உழைப்பின் ஆற்றல் இருக்கின்றமையால் (அங்கவீனம் போன்ற விதிவிலக்கு தாண்டி), உழைப்பு எப்படி தனிப்பட்ட சிலரின் சொத்தாகின்றது. உன்னைச் சுற்றிப்பார்? கொடூரமான வட்டி முதல் உன்னையே ஏமாற்றிப் பிழைக்கும் முதலாளியீறாக உள்ள உலகத்தில், செல்வத்தை கடவுள் பிரித்துக் கொடுக்கின்றார் என்பது, எவ்வளவு பெரிய பொய் என்பதை உன்னால் பார்க்க முடியவில்லையா? நீ உனது செம்மறித் தனத்தையும், கிணற்றுத் தவளை போன்ற வாழ்வை விட்டு வெளியே வா! வந்து பார் உலகத்தை! அப்போது புரியும் உன்னை ஏமாற்றி வாழும் சொறி நாய்களை.

 

செல்வத்தை கடவுள் விரும்பியவருக்கு கொடுக்கின்றார் என்கிறாய். அப்படியாயின் இறைவன் ஆசிவாதத்தை பெற்றதாக கருதும் உன்னிடம் செல்வம் இல்லை. ஆனால் ஆசிவாதம் பெறாதவனிடம் எப்படி செல்வம் குவிந்த கிடக்கின்றது. மேற்கு நாட்டுக்கும், மூன்றாம் உலக நாட்டுக்கும் இடையில் உள்ள செல்வத்தின் ஏற்றத் தாழ்வு கடவுள் கொடுத்தா? ஏன் உனது பைபிள் கறுப்பு, வெள்ளை நிற பிறப்பை எப்படி சித்தாரித்துள்ளது என்பதை பார்? அப்போது புரியும் பைபிளின் நாசிய நிறவெறித்தனம். ஏன் இன்று செல்வம் ஒரு சிலரின் சொத்தாக மாறிவிட்டதே, இதுவும் கடவுளின் செயலா? உன்னை உனது வேலையை விட்டு வெளியேற்றுகின்றானே, அதுவும் கடவுளின் செயலா? உலகில் வாழும் 120 கோடி மக்கள் அடுத்த நேர உணவு இன்றி வாழ்கின்றனே அதுவும் கடவுள் செயலா? 50 கோடி மக்கள் குடிக்க தண்ணிர் இன்றி வாழ்கின்றனே, அதுவும் கடவுள் செயலா? குடிக்கும் தண்ணீருக்கு பணம் வாங்கிறனே! அதுவும் கடவுள் செயலா? 25 கோடி குழந்தைகள் மூன்று வயது முதல் உழைக்க தொடங்ககின்றார்களே, அதுவும் கடவுள் செயலா? கடந்த 100, 150 வருடத்துக்கு முன்பு உழைப்பின் காலம் ஏழு நாலாகவும், வேலை நேரம் 12 முதல் 18மணியாகவும் இருந்ததே, அதுவும் கடவுள் செயலா? இன்று இது சில பகுதிகளில் காணப்படுகின்றதே அதுவும் கடவுள் செயலா? நீ அனுபவிக்கும் எட்டு மணி நேர வேலை நாள், வேலை இழந்தோருக்கான உதவி, வீட்டுகான உதவி, அகதி அந்தஸ்து பெறும் உரிமை என்று அனைத்தும் கடவுள் கொடுத்தாரா? அல்லது உழைக்கு இரண்டு கையுள்ள மனிதன் போராடிப் பெற்றவையா? நீ எப்போதவது இதற்காக போராடி உள்ளயா? உனது மேய்போர் இதற்காக போராடச் சொல்லி உள்ளார்களா? போராட வேண்டாம் என்ற மட்டும் சொல்லி விடுகிறார்களே! இதை நீ எப்போதாவது யோசித்து பாத்தாயா? சிந்தி ஒரு கணம் மேய்பார்களிடம் இருந்து சுதந்திரம் பெற்று கொஞ்சம் சிந்தி.

 

துயரங்களை கடவுள் கொடுத்தரா? மனிதன் அனுபவிக்கும் உரிமைகளை கடவுள் கொடுத்தாரா? அல்லது இவற்றை மண்ணில் படைத்தானா? துயரங்களும், உரிமைகளும் மனிதனால் ஏற்பட்டவைதான். வெள்ளையினத்தவனின் ஆடம்பர நுகர்வையும், கறுப்பு இனத்தவனின் கையேந்திய வாழ்க்கையையும் கடவுள் கொடுக்கவில்லை. இது இந்த மனித சமுதாயத்தில் மனிதனை மனிதன் சுரண்டி அடிமைப்படுத்தி அடக்கியதால் ஏற்பட்டவை. ஒவ்வொரு மனிதனும் சந்திக்கும் துயரமும், மற்றொரு மனிதனால் எற்பட்டவை. பெண் ஆணால், தாழ்ந்த சாதிக்காரன் உயர் சாதிக்காரனால், கறுப்பன் வெள்ளையினத்தவனால், பலவீனமான இனம் பலமான இனத்தால், ஆதிகமற்ற மதம் ஆதிக்க மதத்தால், பட்டினி கிடப்பவனின் உழைப்பை உழையாது இருப்பவன் உறுஞ்சுவால் என்று விரிந்த தளத்தில் மனிதன் துயரத்தைச் சந்திக்கின்றான். இது கடவுளால் ஏற்பட்டவையல்ல. இது போல் நோய்களும் மற்றைய உயிரினத்தாலும், மனிதன் இயற்கையை தவறாக பயன்படுத்துவதாலும் ஏற்படுகின்றது. இதை எந்தக் கடவுளும் நிவர்த்திக்க முடியாது. இதை ஏற்படுத்துவதே கடவுள் என்று மதம் சொல்லும் வரை (இதை எந்த கடவுளும் நேரில் வந்து சொன்னதில்லை), இதை எந்த கடவுளும் எப்படி நிவர்த்திக்க முடியும்? மனிதனால் ஏற்பட்டவை மனிதனால் தான் தீர்க்க முடியும். இயற்கை அழிவுகள் கூட பெரும்பாலனவை, மனிதனின் தவறான இயற்கை பயன்பாட்டின் விளைவுகளாக உள்ளது. மழை, வெள்ளம், காற்று அழுத்தம் என்று மனிதன் இயற்கையை பயன்படுத்தும் விதத்தில் ஏற்படுகின்றது. இவை மனிதனால் ஏற்படுவதால், உற்பத்தி வடிவங்கள் பற்றி பிரச்சினையாக உள்ளது. இதைத் தாண்டி இயற்கை அழிவுகள் வான் வெளியின் பல்வேறு இயற்கை மாற்றத்துடன், பூமியின் சிறப்பான இயற்கையின் தொடர்புடன் தொடர்புடையது. இதை எந்த கடவுளும் தடுத்து நிறுத்த முடியாது. மனித அறிவியலுடன் இதை ஆராய்வதன் மூலம் தான் அதை தற்காத்து தடுக்கமுடியும்.

 

அடுத்து கடவுளிடம் எதை வேண்டுகின்றீhகள் வாழ்வில் கிடைப்பவை எல்லாம், மனிதன் அன்றைய வாழ்வின் அம்சங்களே ஒழிய, அற்புதங்கள் அல்ல. உங்களைப் போல் கும்பிடாத மனிதனுக்கும் அவை கிடைக்கின்றனவே ஏன்?. உங்களைப் போல் வழிபாடு இன்றியே அவனுக்கு கிடைப்பது எப்படி என்று எப்போதாவது சிந்தித்து பார்த்தாயா? மோட்சத்தில் விடுதலை வேண்டிய நீங்கள் கடவுள் கடவுள் என்கின்றீர்கள். அங்கு தங்க கோப்பையில் குடித்து தங்க கட்டிலில் படுத்து உறங்கவா கடவுள் கடவுள் என்று புலம்புகின்றீர்கள். ஆவிபற்றி உங்கள் அபிரயங்யங்கள் கற்பனையாகும. இறைவனை விசுவாசிக்காதவர்கள் ஆவியாக உலாவுவார்கள் எனின், உலகின் இறைவனை விசுவாசிகாத 99.99வ வீதமானோர் ஆவியாகவே உலாவவேண்டும்! அவர்கள் எங்கே? மறுபடியும் மனிதானக பிறப்பான் என்றால், உங்கள் ஆதாம் தேவானில் இருந்து, 600 கோடி மனிதனாக பெருகியது எப்படி?

 

கட்டுமிராண்டி மதமான இந்துமதத்தின் தாலியையும், குங்கும பொட்டையும் அணிந்தபடியும், அணிவித்த படியும் கிறிஸ்துவத்தின் பெயரால் யாருக்கு உபதேசம் செய்கின்றீர்கள்? யாரை ஏமாற்ற விரும்புகின்றீர்கள்? உங்களை நீங்களே ஏமாற்றுகின்றீhகள். நீங்கள் நம்பும் பைபிள் எதை எமக்கு போதிக்கின்றது. எண்31.32-40 இல், "படைவீரர் கொள்ளையிட்ட பொருளில், ஆறுலட்சத்து எழுபத்தையாயிரம் ஆடுகள். எழுபத்தீராயிரம் மாடுகள், அறுபத்தோராயிரம் கழுதைகளும் மீதியாயிருந்தன. புருஷ யோகத்தை அறியாத ஸ்திரீகளில் முப்பத்தீராயிரம்பேர் இருந்தார்கள். யுத்தஞ்செய்யப் போனவர்களுக்குக் கிடைத்த பாதிப்பங்கின் தொகையாவது: ஆடுகள் மூன்றுலட்சத்து முப்பத்துதேழாயிரத்து ஐந்நூறு. இந்த ஆடுகளிலே கர்த்தருக்குப் பகுதியாக வந்தது எழுபத்தைந்து.......". 2 சாமு 12.11 இல், "கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி, உன் கண்கள் பார்க்க, உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன், அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான்" பெண்களை கற்பழித்த சொர்க்கம் கண்டதை பைபிள் புகட்டுகின்றது. இதையா யேசு சொன்னார்? யேசு ஒரு மனிதன். அவருக்கு தந்தை யார் என்று தெரியாத ஒரு அனாதை. ஏன் யேசுவின் பல தலை முறைக்கும், பல உறவினருகும் கூட தந்தையை தெரியாது. இதை பைபிள் மத் 1.22-23, இசை7.14 இல் "கன்னி கருத்தாங்கி ஒருமகனைப் பெற்றெடுப்பாள்" இயேசுவின் தாய் கன்னியாகவே திருமணத்துக்கு வெளியில் குழந்தையைப் பெற்று எடுத்தாள். அது போல் ஐந்து தலைமுறையாக இயேசுவின் பரம்பரை திருமணத்துக்கு வெளியில் வாழ்ந்ததைக் காட்டுவதுடன் அவை தாய்வழியாக அடையாளம் காண்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவ் ஐந்து பெண்களும் மத் 1.1-17 இல் முறையே தாமார் 1.3, ராகாபு, ரூத்து 1.5, பாதத்சேபா 1.6, மரியாள் 1.16 என பைபிள் அடையாளம் காட்டுகின்றது.

 

லூக் 1.34-38 இல் "மரியாள் தூதரிடம் ~இது எங்ஙனம் ஆகும்? நானோ, கணவனை அறியேன்.| என்றாள் அதற்கு வானதூதர், ~பரிசுத்த ஆவி உம்மீது வருவார் உன்னதரின் வல்லமை உம்மீது நிழலிடும். ஆதலின் பிறக்கும் திருக்குழந்தை கடவுளுடைய மகன் எனப்படும். இதோ, உம் உறவினளான எலிசபெத்தும் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறாள். மலடி எனப்படும் அவளுக்கு இது ஆறாம் மாதம். ஏனெனின் கடவுளால் ஆகாதது ஓன்றுமில்லை."ஆதி 17.15-22 இல் தொண்ணூறு வயதான சாராள் இறைவன் அருளால் குழைந்தையைப் பெற்றாள் என்கிறது. லூக் 1.5-10 மலடியான எலிசபெத்து கடவுள் அருளால் குழந்தை பெற்றாள் என்கிறது. லூக் 1.28-38 இல் கணவனை அறியாத மரியாள் குழந்தையை பெறுகிறாள். ஆதி.38 இல் கனானியப்பெண் தாமார் வேமார் வேசியுருப்பூண்டு தன்கணவனின் தந்தையாகிய யூதாவிடம் உறவு கொண்டு இருவரை பெற்று எடுத்தாள். ரூத்து 4.13-22 இல் மோவாபியர் இனத்தைச் சார்ந்தவளான ரூத்து இஸ்ராயேலின் உடன் உறவு கொண்டு பிள்ளை பெற்றாள். சாமு 11-12 இல் எத்தையனான உரியாவின் மனைவி பெசாபே தாவீதோடு உறவு கொண்டு பிள்ளை பெற்றாள். இந்த உறவுகளின் வழியில் தான் இயேசுவின் பரம்பரை உருவானது. இயேசுவின் சொந்த தாய் கன்னியாக பெற்று எடுத்த நிலைக்கு ஆணாதிக்க விளக்கத்தினை, மதத்தின் ஊடாக காட்டியே ஆணாதிக்க ஒருதார மணத்தை உருவாக்கமுடிந்தது. லூக் 1.37 இல் "கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை" என்றதன் மூலம் தாய் வாழி சமூகத்தில் தந்தை கிடையாது. அதை முடி மறைத்து திhத்து தந்தை வழி சமூகத்தில் ஏழுதப்பட்ட பைபிளில், யேசுவின் தந்தையை தேவ குமாரனாக்கிவிடுவது நிகழ்கின்றது. தந்தை வழிச் சமூகத்தில் பைபிளை எழுதியவர் ஏன் கொல்லப்பட்டார். புதிய ஏற்பட்டடை எழுதியவர் ஏன் கொல்லப்பட்டார்? இன்று இரண்டும் எப்படி ஒன்றாக சமரசமானது? பழைய பைபிள் பல பகுதி ஏன் கைவிடப்பட்டது? பழைய புதிய பைளின் தேவை ஏன் எழுந்தது? "கஷட்டத்தில் நீ குழந்தை பெறுவாய்" என்ற பைபிள் வாக்கியத்துகாக மயக்க மருந்தையே எதிர்த்து துற்றினர் பைபிள் வாதிகள். இதை எல்லாம் நாம் தொடர்ந்து எமது இரண்டாவது துண்டுப்பிரசுரத்தில் பார்ப்போம்.