09302022வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

மீண்டும் பேரெழுச்சி

வசந்தத்தின் இடிமுழக்கமாக எதிரொலித்த நக்சல்பாரி உழவர் பேöரழுச்சி, வர்க்க உணர்வுள்ள தெலுங்கானா மக்களுக்கு மீண்டும் ஒரு உந்துதலைக் கொடுத்தது. விவசாயிகளின், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு வழிகாட்டியாக விளங்கிய நக்சல்பாரி புரட்சிப் பாதையில் நிலத்திற்கும் அரசியல் அதிகாரத்துக்குமான பேரெழுச்சியாக தெலுங்கானா பகுதிகளில் மீண்டும் இயக்கம் பரவியது. தெலுங்கானா போராட்டத்தை போலி கம்யூனிஸ்டுகள் எவ்வளவுதான் திரித்துப் புரட்டினாலும், அவர்களின் முகத்தில் கரியைப் பூசிவிட்டு நக்சல்பாரி புரட்சியாளர்கள் தலைமையில்விவசாயிகள் அணிதிரண்டு புரட்சிப் பாøதயில் முன்னேறி வருகின்றனர்.


பாசிச கொலைவெறி பிடித்த வெங்கல்ராவ், அஞ்சையா ஆட்சிகள் போர்க்குணமிக்க விவசாயிகளின் போராட்டத்தை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தன. நூற்றுக்கணக்கான இளம்புரட்சியாளர்களும் விவசாயிகளும் "போலீசுடன் மோதல்' என்ற பெயரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆட்சிகள் மாறின. ஆனாலும் அடக்குமுறை ஓயவில்லை. பாசிச சன்னியாசி என்.டி.ஆர். ஆட்சியிலும் புரட்சியாளர்களும் போராடும் விவசாயிகளும் நரவேட்டையாடப்பட்டனர். இந்தக் கோழைகள் எவ்வளவுதான் அடக்குமுறைகளை ஏவிவிட்டாலும் புரட்சித் தீயை அவர்களால் ஒருபோதும் அணைக்க முடியவில்லை. அது நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டுதான் இருக்கிறது. ஆயிரமாயிரம் தியாகிகளின் நினைவை நெஞ்சில் ஏந்தி புரட்சிப் பாதையில் தன்னம்பிக்கையோடு நாம் தொடர்ந்து முன்னேறுவோம்!

 

இறுதி வெற்றி உழைக்கும் மக்களுக்கே!


மாபெரும் தெலுங்கானா இயக்கம் நீடூழி வாழ்க!


விவசாயிகளின் விவசாயப் புரட்சி ஓங்குக!