Language Selection

பி.இரயாகரன் 1996-2000
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்று திரைப்படம், வீடியோ படம் முதல் ஆவணப்படங்கள் வரை ஆளும் வர்க்க கருத்துகளை பாதுகாக்கும் வரையறைக்குள் இயங்குகின்றன. இந்த ஒரு நிலையில் இதை மறுத்து உலகளவில் சமுதாயத்தின் விடுதலையை நோக்கிய வெளியீடுகள் அற்ற நிலையில்,

 தீக் கொழுந்து போன்றன ஒரு மகத்தான ஒரு முன்முயற்ச்சியாக எம்முன் நிற்கின்றது.

 

ஒரு சமுதாய பிரச்சனை எப்படி அனைத்தும் தழுவியதாக உள்ளது என்பதை தொகுப்பதிலான உங்கள் பரிச்சார்த்த முன்முயற்;சி, எதிர் காலத்தில் மேலும் முன்னேறி ஒரு புரட்சிகர ஊடாகமாக மாறும், மாற்றி அமைக்க முடியும். இந்த நிலையில் உங்கள் கைகளை இறுகப்பற்ற வேண்டிய வரலாற்று காலகட்டத்தில் நிற்கின்றோம். இந்த முயற்சியில் உங்கள் முதல் அனுபவத்தை வாழ்த்தும் அதே நேரம், மேலும் முன்னேறிய வகையில் வளர்த்தெடுப்பதில் சில அபிராயங்களை தெரிவிப்பது அவசியமானது.

 

இந்த திரைமுழக்கம் ஒரு புதிய கலாச்சார இதழ் போன்றோ, ஒரு புதிய கலச்சார பாடல் பேழை போன்று தரமிக்கதாக இன்னமும் மாறிவிடவில்லை. மக்களின் விடுதலை வென்று எடுக்கும் போராட்டத்தில், பாட்டாளி வர்க்கத்துக்கு கிடைக்கின்ற குறைந்த தொழில் நுட்பத்துடன், உயர்ந்த கலையை பாட்டாளி வர்க்கத்தால் படைக்க முடியும். அதை படைத்துக் காட்ட வேண்டும். அதை எதிர்காலத்தில் நாம் செய்யமுடியும். அந்த வகையில் சில அபிரயங்கள் தெரிவிக்க விழைகின்றேன்.

 

1.இந்த படத்தை ஒரு திரைக் கதையாக நினைப்பது தவறானது. மாறாக இது ஒரு ஆவணத் தொகுப்பும் (டொக்கிமென்றி) அல்ல. இதை சரியாக உள்ளடக்கம் கொண்டிருக்கவில்லை. மனித வாழ்வின் யதார்த்தத்தை அடிப்படையாக கொண்டு தொகுத்த அதே நேரம் அதைத் தாண்டி காட்சிகள் உணர்வை துண்டிவிடவில்லை. அதாவது இந்த மனித அவலம் மீத கோபம், உணர்ச்சி, அணுதபம் துயரத்தை துயரத்தை காட்சிகள் உந்தி தள்ளியிருப்பின்   நோக்கம் அதிகமான செய்தியைத் தந்திருக்கும்;. இங்கு இது ஒரு திரை கதையாக அல்லத ஆவணமாக மாறிவிட்ட நிலைதான் இதன் முழுப்பலனை பெற்று தந்து விடவில்லை. இதை தொகுக்கும் போது யதார்த்தை அப்படியே பிரதிபலிக்கும் கண்ணோட்டம் இதன் அடிப்படையாக இருந்திருக்கலாம்;. யதார்த்தம் அதன் உணர்ச்சியுடன் நாம் மீள சொல்வது என்பது, மக்களின் பின் இழுபடுவதே.  உங்கள் பாடல் பேழைகள் சொல்லும் செய்தி அதில் கொப்பழித்து எழவைக்கும் உணர்ச்சிகரமான கோபம், இந்த திரை முழகத்தில் இருக்கவில்லை. இதை பற்றி கவனம் எடுக்க வேண்டும்.

 

2.காட்சி  அடிக்கடி புதிய விடையத்துக்கள் முறிந்து செல்லுகின்றது. இது தவிர்த்திருக்க வேண்டும்;. கேள்விகள் பலவற்றை கேட்பது வேறு. ஆனால் தொகுப்பில் குறித்த எல்லைக்குள் கேள்வியை கட்டுப்படுத்திருக்க வேண்டும்.

 

3.மக்களிடம் இருந்து செய்தியை கோரும் தன்மைக்குள், கேள்வி கேட்டவருக்கும் இடையில் இடைவெளியிருந்துள்ளது. மக்களின் வாழ்வை அவர்களின் சொற்கள் அதன் உள்ளர்ந்த யதார்த்த தன்மையுடன் இனைந்த வெளிவரவில்லை. (விதிவிலக்கா, உதாரணமாக முந்தி ரேசன் அரிசியை நீங்கள் உண்டது இல்லையா? அந்த அரிசி பற்றி முந்தி என்ன நினைத்தீர்கள்? இன்று என்ன நினைக்கின்றிர்கள்? என்ற பகுதியில் வரும் பெண் தனது சோகத்தை கலங்கிய கண்ணுடன் கூறும் போது, அங்கு காட்சியின் இனைவு சமூக இனைவாகின்றது. இத போன்று வாழ்வு முழுக்க கல் சுமக்கும் வயதான தொழிலாளியின் அப்முக்கற்ற கதை, சினிமா பாடல் பின் இழையோடும் சோகம் இந்த சமூகத்தையிட்டு கோபம் கொள்வைக்கின்றது.) இது பொதுவாக பல தளத்தில் கையாண்டிருக்க வேண்டும். அதாவது பிரச்iனையை சரியாக அடையாளம் கண்டு அவர்களுடன் நெருங்கிச் சென்று கேள்வி எழுப்பப்பட வேண்டும். அதாவது கேள்வி கேட்டவருக்கும் மக்களுக்கும் இடையில் ஒரு இடைவெளி இருந்தது இதில் தெளிவாகின்றது. கேள்விக்கும் பதிலுக்கும் இடையில் இடைவெளி, முரண்பாடு இருக்க கூடாது. கேட்க்க நினைப்பதும் சொல்ல வரும் ஒரு தொடர்ச்சியாக இருக்க வேண்டும். ஆனால் விதிவிலக்காக முதல் இரண்டு பாடல் கட்சியில் படத்துக்கும் காட்சிக்கும் இடையில் இருந்த நெருக்கமான உள்ளடக்க பிணைப்பு, மற்றையவற்றில் விதிவிலக்காக சிலதை தவிர்த்து இருக்கவில்லை. இதை கவனத்தில் எடுப்பது அவசியம்.

 

இந்த விடையத்தில் மத்தியதரவர்க்க அறிவிஐPகளுக்கு (நடைமுறையில் பங்கு கொள்ளாத) பாடல் அவசிமற்றதாக இருக்கும் அதேநேரம், அந்த மக்களுக்கு நெருக்கமான அவர்களின் வாழ்வியல் மொழியாக, அவர்களின் சொந்த பாடலாக காட்சியாக வெளிப்படுகின்றது. இங்கு ஒரு மக்களுக்கு முன் தலைமை தாங்கிச் செல்லும் வகையில் பாடல் சமற்றும் காட்சி உந்தி தள்ளுகின்றது. மக்கள் அல்லாத அறிவத்துறையினருக்கு பாடல் அவசிமற்றதாக, ஒரு தகவல் மட்டமே அவர்களுக்கு தேவையானதாக இருக்கின்றது.

 

4.மூலதனத்தின் சுரண்டலை அனுபவிக்கும் வர்க்கத்தின் நுகர்வுக் காட்சிகளை இனைக்க தவறியது என்பது, உழைத்து வறுமையில் வாழும் வர்க்கத்துக்கு இன்னமும் தெரியாத விடையமாகின்றது. அதாவது அவர்களின் எல்லைக்குள், அவர்களின் பங்களவுக்குள் கால் வைக்க முடியாத நிலையில், அங்கு என்ன நடக்கின்றது என்பதை மக்களுக்கு காட்டியிருப்பின், சுரண்டி கொழுத்து வாழும் எதிரியை தெளிவாக இனம் கண்டிருப்பார்கள்;. இங்கு இதை வெற்றிடமாக்கி விட்டமை என்பது, தலைமை தாங்கி செல்லும் பாத்திரத்தை அணிதிரட்டலை பின்தள்ள வைத்துள்ளது. அத்து மீறலுடன் அவர்களின் வக்கிர முகங்களை காட்சி படுத்தியிருப்பின் அவை முன்னெறிய நிலைதான்  இந்த கட்சிகளை அவர்களின் பல்வேறு ஆடம்பர டாக்கமென்றிகள், தேயிலை தோட்டம் சார்ந்த சினிமாவில் இருந்து எடுத்தே நேரடியாக காட்டியிருக்கலாம். உதாரணமாக ஜெயலளிதாவின் காட்சியை வீடியோவில் இருந்தே எடுத்தே இனைத்து இருக்கலாம். வெறும் படமாக அல்ல. அந்த படத்தின் மேல் அதில் உங்கள் பழை பாடல் நாலு வரியை இனைத்திருக்கலாம்;. இது போன்று ஊட்டியின் மேட்டுக் குடியின் வக்கிரத்தை சுற்றுலத்துறை விளம்பரத்தில் இருந்து எடுத்து ஒப்பிட்டு காட்டியிருக்க வேண்டும்.

 

5.இடையிடையோன விளக்க குறிப்புகளின் துல்லியமான கருத்தை, மேலும் அதிகரித்திருக்கலாம்.

 

6.உலகமயமாதல் விளைவுகள் சார்ந்தே இந்த நிலை என்பதை எடுத்துக் காட்டும் காட்சி ஆதாரங்கள் தெளிவாக்கப்படதமையால், மக்களுக்கும் இடையில் இந்த படம் இடைவெளியை விட்டே செல்லுகின்றது. உதாரணமாக தேயிலைக்கு கட்டுபாடற்ற ஏற்றுமதி இறக்குமதியை நீக்கிய போதே ஏற்பட்ட மாறமே இது, என்பதை துல்லியமாக ஆதாரத்துடன் செய்தியாக்கியிருக்க வேண்டும்;. ஏன் எனின் காட்சியில் வந்த மக்கள் யாருக்குமே இந்த காரணம் தெளிவாக தெரிந்திருக்கவில்லை. அது மீண்டும் தெளிவுபடுத்தப்பட வில்லை. அறிவுஐPவிகளுக்கு தெளிவாக்க உதவுகின்றதே ஒழிய மக்களுக்கு அல்ல. மக்கள் இதை புரிந்த கொள்ள வைப்பதே இதன் பிரதான நோக்கமாக இருந்திருக்க வேண்டும்; தேசிய உற்பத்தி பாதுகாக்கவும், தேசிய உணர்வுகளையும் வர்க்க உணர்வகளை தெளிவாகும் வகையில் வளர்ச்சி பெறவில்லை.

 

7.அந்த மக்களின் இயல்பான கலகலப்பான வாழ்வில் எப்படி இந்த இடி வந்தது என்பதை காட்சியாகியிருக்க வேண்டும். உதாரணமாக ஒரு சிறு பெண் குழந்தை ஒன்றை துக்கியோடும் குறுக்கான சில வினாடி கட்சியில், அந்த சிறவர்களின் கலகலப்பான வாழ்க்கையில் இந்த அவலம் நேர்ந்தை ஒப்பிடும் போது, காட்சியில் இனிமையான மனித இயற்கையின் வஞ்சகமற்ற இயல்பு அழிக்கப்படுவதை அவன் முன் கொண்டுவருவது சொல்ல வரும் விடையத்துடன் நேரடியாக தொடர்புடையது. அந்த இயற்கை அந்த மக்களையே மீளவும் உணர்வுட்டும். கிளர்ந்த எழச் செய்யும்;. சொந்த கலகலப்பான வாழ்க்கை எப்படி யாரால் நாசமாகிப் போனது என்பதை, ஒப்பிட்டுத் தன்மைக்குள் கொண்டு வரவேண்டும்;. இது சிறுவர்களின் சிரிப்பு, அவர்களின் கலகலப்பான வாழ்கை, வஞ்சகம் சூதற்ற வெகுளித் தனம் மற்றும் மக்களின் உழைப்பின் ஆர்வத்தை  எடுத்து அதில் இந்த அவலத்தை ஒப்பிட வேண்டும். இது அந்த மக்களையே திரும்பி தனது சொந்த அவலத்தை பார்க்க வைக்கும். அவாகள் தமது யதார்த்தில் காணமுடியாத நுட்பமான விடையங்களை, அவர்கள் முன் திறந்து காட்டியிருக்க வேண்டும்;.  இது மக்களை அணிதிரட்டுவதில் முக்கிய பங்களிக்கும்.

பி.இரயாகரன்.