01272023வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

இந்து மதவெறியர்களை கண்டித்து மாபெரும் ஆர்பாட்டம்

 

-

 

கோவை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய பொதுக்கூட்டத்தில் சீமானுக்கு எதிராக கலவரம் நடத்திய இந்து மதவெறியர்களை கண்டித்து 02.09.2008 அன்று சென்னை மெமோரியல் அரங்கம் எதிரில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்பாட்ட்த்தில் எழுப்பட்ட முழக்கங்கள்.

இந்து என்று சொல்லாதே

பார்ப்பான் பின் செல்லாதே

-

தூக்கியெறிவோம் தூக்கியெறிவோம்!

பார்ப்பன னால் திணிக்கப்பட்ட

வட மொழியின் ஆதிக்கத்தை

தூக்கியெறிவோம், தூக்கியெறிவோம்!

-

விரட்டியடிப்போம், விரட்டியடிப்போம்!

பார்ப்பன கடவுள்களை

விரட்டியடிப்போம்.

-

ஆண்டப் புளுகு, ஆபாச புளுகு

இதிகாக் குப்பைகளை

கொளுத்தியெறிவோம்!

-

எச்சி ராஜா, இலை கணேசன்

நச்சுப் பாம்பு துக்ளக் சோ

ஆரியப் - பார்ப்பன வெறியர்களை

விரட்டியடிப்போம் விரட்டியடிப்போம்.

-

ஒரு குலத்திற்கு ஒருநீதி - பார்ப்பனியம்

ஒரு வர்க்கத்திற்கு ஒருநீதி - மறுகாலனியம்

பார்ப்பனியத்தை வேரறுப்போம்

மறுகாலனியத்தை முறியடிப்போம்.

-

பன்னாட்டுக் கம்பெனியும் பார்ப்பானும் ஓரணி

பஞ்சமனும் சூத்திரனும், தொழிலாளியும் எதிரணி

-

கோ மாதாவுக்கு பசு மடம் வைக்கும் இராம. கோபாலா

பன்றி பகவான் வராகனுக்கு என்ன மடம்? சங்கர மடமா?

-

மாட்டைத் தொட்டப் புண்ணியம்

மனுசன தொட்டா தீட்டு.

மானங்கெட்டத் தனத்துக்குப் பேர்தான் இந்து தர்மமா?

-

திரும்பப் பெறு, திரும்பப் பெறு

பெரியார் தி.க தோழர்கள் மீது

பகுத்தறிவு சீமான் மீது

போடப்பட்ட பொய்வழக்குகளை

திரும்பப் பெறு, திரும்பப் பெறு.

நன்றி : மதச்சார்பற்ற கருத்துரிமை பேரியக்கங்களின் கூட்டமைப்பு


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்