நாம் எப்போதும் எங்கும் எல்லாத் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் ஆதரிக்க மறுக்கின்றோம்.


இந்த வகையில் தான் புலிகளின் தேசிய விடுதலைப் போரை எதிர்க்கின்றோம். அதே நேரம் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை வழங்கக்கோரி, தமிழ்மக்கள் மீதான அனைத்து அடக்குமுறையையும் எதிர்க்கின்றோம். அதே நேரம் புலிகளை அழிக்கவெனக் கைக்கொள்ளும் எல்லா பிற்போக்கு ஏகாதிபத்திய சக்திகளின் நடவடிக்கைகளையும் எதிர்க்கின்றோம். புலிகள் ஒரு முற்போக்கான ஒரு முதலாளித்துவ தேசியத்தைக் கூட முன்னெடுக்காது, பிற்போக்கான நிலப்பிரபுத்துவ தேசியத்தைக் கோருவதை எதிர்த்து, முற்போக்கான தேசியத்தை உயர்த்தக்கோரும் நாம் புலிகளின் தேசியத்தை எதிர்ப்பது சரியான அடிப்படையாகும். அதேநேரம் பாட்டாளி வர்க்கம் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை அதாவது அது ஒரு அரசாக இருக்கும் கோரிக்கை தனியான விசேஷ சலுகை கோராத வகையில் கோரும் உரிமை முன்வைத்துப் போராட முனைகின்றது.

 

எல்லாத் தேசியத்தையும் ஆதரிக்கக் கோருவது என்பது பிற்போக்கான சுரண்டல் ஏகாதிபத்திய நலன்களை ஆதரிக்க கோருவது தான் . இந்தியாவில் பாரதி ஐனதாவின் இந்து தேசியக் கோரிக்கையை நாம் எதிர்க்கின்றோம் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். அதைத்தான் அன்று மார்க்ஸ்- எங்கல்ஸ் குறிப்பான நிலைமையில் கைக்கொண்டனர் என்பதை நாம் இனி சொல்லித் தெரியவேண்டியதில்லை. விரும்பின் அ.மார்க்ஸ் கும்பல் பாரதி ஐனதாவின் இந்து தேசியத்தை ஆதரிக்கட்டும். ஏனெனில் அது அந்தக் கும்பலின் ஒத்த நலன்களைப் பிரதிபலிக்கின்றதல்லவா ?

 

அடுத்து அந்தோனிசாமி மார்க்ஸ் என்ன கூறுகிறார் எனப் பார்ப்போம். "ரஸ்சியா மாற்றும் கிழக்கு ஐரோப்பா நாடுகளில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றங்களின் பின்னணியில் ரோசாவின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றிய கருத்துக்கள் மீண்டும் முக்கியம் பெற்றுள்ள போதிலும், சுயநிர்ணய உரிமை என்ற மார்க்சிய கோட்பாட்டை மறுத்தவர்......" எனச் சுட்டிக் காட்டி தனது மார்க்ஸ், லெனின், மாவோ சிந்தனை எதிர்ப்பை ஏதோ சரியாக ரோசாவை விமர்சிப்பது போல் காட்டி, பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்ற அடிப்படை மார்க்சியக் கோட்பாட்டை மறுக்கின்றனர்.


அதாவது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் தேவை அற்றது என்ற நிறப்பிரிகை கும்பலின் நிலையை ரோசா ஆதரிப்பார் என நம்புவதாகத்தான் இவர்கள் ரோசாவை எடுத்து பின் அதில் விமர்சனம் காண்கின்றனர்.


அதாவது மக்கள் போராட்டம் என்பது அடிப்படையில் எப்போதும் வர்க்கப் போராட்டம் தான். வர்க்கப் போராட்டம் என்பது இன்னுமொரு வர்க்கத்திற்கு எதிரான போராட்டம் தான். அது ஆட்சியில் உள்ள வர்க்கத்தை எதிர்த்த போராட்டம் தான். இப்போராட்டங்களைக் கையாளும் ஆளும் வர்க்கம் அதை அமைதியாகத் தனித்து பல்வேறு சலுகைகள் வழங்குவதிலும் இவ்வர்க்கங்களுக்கிடையில் சமச்சீரைக் கண்டறிய பலவாக முனைகிறது. இவை அப்போராட்டத்தை தனிக்க வைக்கின்றது. இல்லாத போது மீளவும் வெடிக்கின்றது. அதாவது வடிவத்தில் ஆட்சி முறைகளை அடிக்கடி மாற்றுகின்றது. உள்ளடக்கத்தில் அல்ல.


வர்க்கங்களுக்கு இடையில் அணிதிரளும் இரண்டு வர்க்க ஐக்கியம் மற்றும் போராட்டம் இருக்கும் ஒழுங்குகள் சாத்தியமான ஒரு ஒழுங்கை நிறுவ முடியாத போது மறு வர்க்கம் ஆட்சியைக் கைப்பற்றுகின்றது. எனவே ஆட்சி மாற்றம் என்பது தவிர்க்க முடியாது, . ஒரு வர்க்கம் ஆட்சியாக உள்ளது. இப்படி உலகில் பல ஆயிரம் முறை நிகழ்ந்து அனைத்து ஆட்சியும் ஒரு வர்க்கத்தின் சர்வாதிகார ஆட்சியாகவே உள்ள போது, அவை பல்வேறு முழக்கங்களாலும், பல்வேறு வடிவங்கள் மூலம் மீட்டு இருக்கும் உற்பத்தி முறையையே சிறு மாற்றங்களுடன் நீடிக்கின்றனர்.


அதாவது இங்கு அடிப்படை ஆளும் வர்க்கம் சுரண்டல் ஆட்சி மட்டும் உலகம் எங்கும் தொடர்ச்சியாக பல ஆயிரம் புரட்சிகள், மாற்றத்தின் பின் இன்னும் நீடிக்கின்றது. என்ன தான் இந்த அடிப்படை மாறாத வரை எல்லா ஆட்சி மாற்றங்களும், எல்லாப் புரட்சியும் ஒரு வர்க்கம் இன்னோரு வர்க்கத்தை அடக்கும் சுரண்டல் ஆட்சியாகவே உள்ளது, நீடிக்கின்றது. அரசு உருவான பின் ஒரு ஆட்சியைத் தன்னும் சுரண்டல் எல்லைக்கு அப்பால் காட்ட முடியாது அ.மார்க்ஸ் அவர்களே.


இந்நிலையில் தான் ஆயிரம் ஆயிரம் புரட்சி, மற்றும் புதிய அரசுகளின் அனுபவத்தை தொகுத்துக் கொண்ட பாட்டாளி வர்க்கம், அடிப்படை உற்பத்தி முறை மாறாத வரை சுரண்டலும் ஒரு வர்க்க சர்வாதிகாரமும் இருக்கும் என்பதைக் கண்டு கொண்டனர்.


எனவே தான் இருக்கும் உற்பத்தி மீதான வர்க்கச் சுரண்டல் சர்வாதிகாரத்துக்குப் பதிலாக, சுரண்டலை எதிர்க்கின்ற பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை, இருக்கும் சுரண்டல் அரசைத் தூக்கி எறிவதன் மூலம் நிறுவ வேண்டும், என்ற சமூக விஞ்ஞான உண்மையைக் கொண்டுதான், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரக் கோட்பாட்டை முன்வைத்தனர்.


அதாவது சுரண்டும் வர்க்கம் வெறும் நபர்களோ அல்லது அதன் வர்க்கத்தின் கருவிகளோ அல்ல. அது அந்த சமூகம் முழுக்க ஊறிப்போன, அதே நேரம் ஒழுங்கு அமைக்கப்பட்ட வடிவில் எங்கும், எதிலும் காணப்படுவதால் அதை முற்றாகத் தூக்கி தலைகீழாகப் புரட்டி போடுவது மட்டும் இன்றி அதற்கு எதிரான போரை நடத்த பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் உடனடியாக மட்டுமல்ல, தொடர வேண்டியதை பாட்டாளி வர்க்கம் கண்டு கொண்டது.


புரட்சி நடந்த அடுத்த கணம், அதாவது அரசைக் கைப்பற்றிய அடுத்த கணமே எல்லாம் மாறிவிடும், மாறிவிட்டது எனவே இனிப் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் தேவை இல்லை என்ற இயங்கியல் மறுப்புக் கோட்பாட்டை பிடிப்பதன் மூலம, மீளவும் முதலாளித்துவ மீட்சியை மறைமுகமாக அப்பட்டமாகக் கோருகின்றனர்.
ஒரு வர்க்கம் என்ற முறையில் பாட்டாளி வர்க்கம் தனது சர்வாதிகாரத்தை சுரண்டல் பிரிவுக்கு எதிராக முன்னெடுப்பது, அதை அமுல்படுத்துவதும் அவசியமானதாக உள்ளது. இது வன்முறை சார்ந்தும், வன்முறை சாராதும் நீடிக்கின்றது. சுரண்டல் பிரிவு எப்போது அச்சமூகத்திற்குள்ளும் வெளியிலும் உலகளவில் இல்லாமல் போகின்றதோ அப்போது வர்க்க மாற்ற ஆட்சி தேவை அற்றதுடன் அரசு தேவையற்றதாகிவிடுகின்றது.


சுரண்டும் வர்க்கம் உள்ள வரை பாட்டாளி வர்க்க சர்வாதிகார அடிப்படையானது மட்டுமின்றி, அவர்களுக்கு எதிரான தாக்குதலை பாட்டாளி வர்க்கத் தலைமையில் தொடுக்கப்படுகின்றது. இதைத்தான் மனித உரிமை மீறல் என வேறு கூச்சல் எழுப்புகின்றனர். மார்க்சிய வேடமிட்ட சில விரோதிகள்.


இன்னும் ஒரு மனிதனின் உழைப்பைச் சுரண்டும் உரிமை தான் மனித உரிமை மீறலே ஒழிய அதற்கு எதிரான தாக்குதல் மனித உரிமை மீறல் அல்ல.


இன்றைய உலக ஒழுங்கு ஒருமனிதனை இன்னும் ஒருவன் சுரண்டும் உரிமையைத்தான் மனித உரிமை எனப் பிரகடனம் செய்கின்றன. இதைத்தான் அ.மார்க்ஸ் முதல் சேரன் ஈறாக சுரண்டும் உரிமைதான் மனித உரிமை என்கின்றனர்.


அடிமைச் சமூகம் அடிமையை வைத்திருக்கலாம், அதை அசையா சொத்தாகக் கொண்டிருக்கவும், கொல்லவும் இருந்த உரிமைதான் அன்றைய மனித உரிமையாகும். அதுதான் சட்ட அமைப்பாகும். இதை எதிர்த்துப் போராடி அடிமை உடமை சமூகத்தை தகர்த்த போது அடிமையை வைத்திருப்பது குற்றமாக இருந்தது. அடிமையை வைத்திருக்க மீண்டும் மீண்டும் விரும்பிய சமூகத்தின் மீது வன்முறை பாய்ந்த போது, அது மனித உரிமை மீறலாக அடிமை உடமையாளர்கள் கருதினர்.


இது போல் வரலாற்றில் ஒரு முன்னோக்கிப் பாச்சல் நடக்கும் போது பிற்போக்கைப் பாதுகாக்க மனித உரிமை மீறல, எனவும் அதை மீட்க பல போராட்டத்தை பழைய சமூக ஒழுங்குள்ளும் வெளியிலும் நடத்தினர். இதற்கு எதிராக அந்த அரசு வன்முறையைக் கையாண்டது. ஆனால் எல்லா மாற்றமும் இருக்கும் உற்பத்தி முறையைப் பாதுகாத்தபடி இருந்ததால், பெரியளவிற்கு இவை எதிர்ப்புக்குள்ளாகவில்லை. ஆனால் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் இருக்கும் உற்பத்தி முறையை மறுப்பதாலும் மறுத்ததாலும் இதை எதிர்த்துப் பாதுகாக்க தனிமனித உரிமையின் பெயரால் மனித உரிமை மீறல் எனக் கூச்சல் எழுப்புகின்றனர். மனித உரிமை மீறல் என்பது இரண்டு மனிதர்களுக்கும் இடையில் ஒப்பீடானவையே. இது வர்க்க சமுதாயத்தில் மட்டும் இருக்க கூடியவை. சுரண்டல் மற்றும் உற்பத்தி முறையை மாற்றும் மார்க்சிய வர்க்கப் போராட்டத்தை சிறுமைப் படுத்த சிதைக்க முன்வைப்பதே மனித உரிமை மீறல் பற்றிய மார்க்சிய எதிர்ப்பு மனித உரிமை மீறல் பற்றிய ஒப்பாரியாகும். சுரண்ட நினைப்பவன் மீது வன்முறையைக் கையாளும் போது தான் இவர்கள் மனித உரிமை பற்றி ஒப்பாரி வைக்கின்றனர். ஆனால் சுரண்டும் போது அது மனித உரிமை மீறலாக மனித உரிமை வாதிகளுக்கு தெரிவது இல்லை.


ஒரு சமூகம் அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டின் முன்னைய ஆளும் வர்க்கத்தின் மீது சர்வாதிகார வன்முறையைக் கையாள்கின்றது. இது வெறும் பாட்டாளி வர்க்கம் மட்டுமல்ல. உலக வரலாறே அப்படிதான் இருக்கின்றது. ஆனால் பாட்டாளி வர்க்கம் அல்லாத மற்றைய ஆட்சிகளில் சீர் திருத்தம் மூலம், அல்லது பாச்சல் மூலம் சுரண்டலை மட்டும் பாதுகாத்தபடி உற்பத்தி முறையை புதிய வடிவங்கள் உருவாக்கப்பட்டன. அது எப்போது எல்லா நேரத்திலும் ஒரு சர்வாதிகார வடிவத்தின் மூலமே ஒழிய வெளியில் அல்ல.


பாட்டாளி வர்க்கம் மட்டுமே சுரண்டல் அற்ற ஒரு வர்க்க சர்வாதிகாரத்தை சுரண்டுவோர் மீது நிறுத்துவதன் மூலம் சுரண்டலை ஒழிக்க முனைகிறது. இதைப் பாதுகாக்க தொடர்ச்சியாக பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் தேவையாக உள்ளது.
இன்று சோவியத் ரஸ்சிய, கிழக்கு ஐரோப்பாவில் என்ன நடந்தது? பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் விளைவா இவை? இல்லையே. வரலாற்றை, மக்களை ஏமாற்ற விரும்புபவர்கள் மட்டும் தான் விஞ்ஞான பூர்வமான முடிவுகளுக்குப் பதில் தமது கோட்பாடுகளுக்கு இசைவாக பொய்யை இட்டுக் கட்ட முனைகின்றனர்.


சோவியத், கிழக்கு ஐரோப்பாவிலும் ஸ்ராலினுக்குப் பின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிட்டதன் மூலம் தான, இன்று இந்நிலை தோன்றியது. இதை அன்று மார்க்சிய, லெனினிய சிந்தனையை ஏற்ற உலகப் புரட்சிக் குழுக்கள் மிகச் சரியாகச் சுட்டிக் காட்டிய நடைமுறை நீண்டு கிடக்கிறது. ஆனால் அ.மார்க்சின் கும்பலின் கண்ணுக்கு இவை தெரிவதில்லை. ஏன்? சீனாவில் டெங் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிட்டதை அன்று மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனைவாதிகள் சுட்டிக்காட்டினார். நாளை சீனாவும் இன்றைய ரஸ்சியா நிலமைக்குச் செல்வதை யாரும் தடுக்க முடியாது.


எனவே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அல்லாத மார்க்சிய, லெனினிய, மாவோயிச வழியில் கொண்டு இராத, ஒரு முதலாளித்துவ சர்வாதிகாரத்தை சுட்டிக் காட்டி அதை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என அ.மார்க்ஸ் குறிப்பிடின் அதன் பின் உள்ள கபடம் மார்க்சிய, லெனினிய, மாவோ சிந்தனையை சேறடிப்பது தான். அதற்கு எப்படியும் எதையும் முத்திரை குத்துவது தான். இல்லை இது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் தான் என விஞ்ஞான பூர்வமாக ஆய்வை நிராகரித்து சத்தியம் செய்யத்தான் முடியும்.


சிவப்புக் கொடியை ஆட்டி ஆட்சிக்கு வந்த இன்றைய போலந்துக் ஆட்சியைக் கூட, இந்த அ.மார்க்ஸ் கும்பல் நாளை கமியூனிச ஆட்சி எனக் கூறி மார்க்சிய, லெனினிய, மாவோ சிந்தனைக்கு சேறடிக்க ஒருக்காலும் தயங்க மாட்டார்கள. என்ன எனின் அவர்களின் எல்லாக் கோட்பாடுகளும் அப்படித்தான் இருந்தன இருக்கின்றன.


எனவே ரஸ்சிய, கிழக்கு ஐரோப்பா நிலைமை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கு பதில் முதலாளித்துவ சர்வாதிகார ஆட்சியில் முதலாளித்துவத்தின் விளைவுகளே. இதை ஒவ்வொரு கால கட்ட மார்க்சிய, லெனினிய, மாவோ சிந்தனை வாதிகளும், குழுக்களும் அமைப்புகளும் தமது சொந்தப் புரட்சிகர போராட்டத்தின் ஊடாக சொன்னார்கள் சொல்லி வருகின்றனர். இதைக் கொஞ்சம் எடுத்துப் படித்துப் பாருங்கள். அப்போது புரியும் அ.மார்க்சின் நோக்கம் என்ன என்பது.


இந்த இடத்தில் அ.மார்க்ஸ் குறிப்பிடுகிறார் "......... தேசிய இனப்பிரச்சனை குறித்த மார்க்ஸ்-ஏங்கல்ஸ்சின் கெக்கலியத் தாக்கமிக்க கருத்துக்கள் ரோசாவின் மீது அதிக செல்வாக்கு வகித்தன." எப்படி மார்க்ஸ்-ஏங்கல்ஸ் தத்துவத்தினை எப்படி கெக்கலித்து முத்திரை குத்துவது பின் ரோசாவின் தவறான கோட்பாட்டை அதன் தொடர்ச்சியாக நிறுத்தி மார்க்ஸ், ஏங்கல்ஸ் வரிசையில் ரோசாவை கொண்டு வருவதன் மூலம், மார்க்சிய, லெனினிய, மாவோ சிந்தனைக்கு சேறடிக்க, இந்த அ.மார்க்சும் அவரது சீடர்களும் எங்கெங்கும் மார்க்சிய, லெனினிய, மாவோ சிந்தனைக்கு யார் யார் எதிராக இருந்தனரோ, அவர்களை மார்க்சிய, லெனினிய, மாவோ சிந்தனைக் கோட்பாட்டாளர்களுடன் தொடர்பு படுத்தி, பின் மார்க்சிய, லெனினிய, மாவோ சிந்தனைக்கே சேறடிப்பது தான் இவர்கள் நோக்கம்.


கம்மியூனிசக் கட்சியின் பெயராலும், சிவப்புக் கொடியின் பெயராலும், மார்க்சிய, லெனினிய, மாவோ சிந்தனையாளர்களின் பெயராலும் முதலாளித்துவப் பிரிவுகள் எப்படிப் பிழைப்பை நடத்துகின்றனரோ, அதற்கு மேலாக அ.மார்க்ஸ் அவர் சீடர்கள் மார்க்சிய கோட்பாட்டை பகுதியாக, முழுமையாக ஏற்பதாக பாசாங்கு செய்தும், மார்க்சிய, லெனினிய, மாவோ சிந்தனைக்கு எதிரானவர்கள் உடன் ஒன்று படுத்தியும் தனது பாட்டாளி வர்க்க எதிர்ப்பு கோட்பாட்டை முன்னிறுத்தினர்.


அ.மார்க்ஸ் பின் நவீனத்துவ நூலில் மார்க்சியம் மொத்த தத்துவம் என கூறி, சிறு தத்துவம் வேண்டும் எனக் கூறி மார்க்சியம் தேவையற்ற காலாவதியானது என்கின்றார். ஆனால் இந்த நூலில் மார்க்ஸ்


எங்கல்ஸ் வரிசையில் ரோசாவை இணைத்து கெகலியத்தின் ஊடாக இணைக்கும் கபடம் மார்சியம் மீது சேறு வீசுவதற்கேயாகும். இவர்கள் இப்படி செய்தபடி எப்படி விளக்குகின்றார்கள் எனப் பார்ப்போம். "மொத்தத்தில் மார்க்ஸ்-ஏங்கல்சிடம் இருந்து தேசிய இனப்பிரச்னை குறித்த முரண்பட்ட பார்வைகள் ரோசாவிடம் வெளிப்பட்டது எனலாம்." என அ.மார்க்ஸ் குறிப்பிட்டு ரோசாவின் தவறு மார்க்ஸ்-ஏங்கல்சுக்கு இருந்தது போல, இருந்தது தான் ஆனால் மற்றவை மிகச் சரியாக இருந்தவை என சத்தியம் செய்து, ரோசாவின் பெயரால் மார்க்சிய, லெனினிய, மாவோ சிந்தனைக்கு மார்க்ஸ் ஏங்கல்ஸ் வேட்டு வைக்க பிரயத்தனம் செய்கின்றனர்.


குறிப்பிட்ட பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது முற்று முழுதாகத் தவறானவை, அது அதிகாரத்தின் மையம், தலைமை வழிபாட்டின் குவியம் இதை எல்லாம் மார்க்ஸ், ஏங்கல்ஸ் போல் ரோசா சரியாக சொல்லி உள்ளார். என ஒரு சினிமாக் காட்டி மார்க்ஸ், ஏங்கல்ஸ் கூட பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கு எதிராக மாற்றி விடுகின்றனர். அத்துடன் தேசம் தொடர்பான ஆய்வை, ஆய்வில் இறங்காத மார்க்ஸ், ஏங்கல்ஸ் நிலையைக் கீழ் இறக்கி ரோசாவுடன் முன்வைத்து சேறடிக்கின்றனர்.


மார்க்ஸ், ஏங்கல்ஸ் வழியில் ரோசாவும் ஒரு மார்க்சிய வாதி தேசிய இனப்பிரச்சனையில் மட்டும் தவறு இழைத்தனர். என்ற ஒரு பார்வையை வாசகர்க்கு ஏற்படுவதன் மூலம், ரோசாவின் மார்க்சிய, லெனினிய எதிர் பார்வையை மார்க்சியத்தின் பெயரால், மார்க்ஸ், ஏங்கல்சின் பெயரால் பின்பக்கத்துக் கதவால் உட்புக முனைத்ததன் விளைவு தான் "தேசியம் கற்பிதம்" என்று புத்தகத்தின் முழுமையான நோக்கம் இது போல் புத்தகம் மீள மீள பல முறை பலரின் பெயரால் வெளிவரும்.


இதை மேலும் வளம் படுத்த "....... சரியான முழக்கமாகிய சுயநிர்ணய உரிமை என்பதை முன் வைப்பதில் லெனினை ரோசாவால் எட்ட முடியவில்லை. ......." என்று கூறுவதன் மூலம் ரோசா மற்ற வகையில் லெனினுடன் சமமாக சரியாக மார்க்சியத்தை பின்பற்றினார் என்கின்றார் அ.மார்க்ஸ். அது ஒரு புறமிருக்க, முன்பு அந்தோனிசாமி மார்க்ஸ் கூறுகிறார் மார்க்ஸ்-ஏங்கல்ஸ் ஒரு வரையறையை முன்வைக்க இல்லை என்று கூறி, பின் லெனின் தான் முதல் முதல் தேசிய சுயநிர்ணயத்தை முன்வைத்தவர் என்கின்றார். லெனின் காலத்து விடையத்தை எப்படி மார்க்ஸ்-ஏங்கல்ஸ் அதை முன்னெடுத்து இருக்க முடியும் என அ.மார்க்சை யாரும் கேட்க மாட்டார் என நினைத்து, சுற்று மாற்றுக் கருத்துவிவாதம் நடத்தியதின் விளைவே இப்படி முன்வைத்துள்ளார்.


அடுத்து அ.மார்க்ஸ் "அறிஞர் ஈ.எஸ்.கார் லெனினினது தேசிய இனப்பிரச்சனை பற்றிய கொள்கை சற்றே தெளிவற்றது தான் எனக் குறிப்பிட்டுள்ளது கவனத்துக்கு உரியது" எனக் கூறும் இந்த மார்க்சிய விரோதி அதை எப்படித் தெளிவற்றது என விளக்க முடியவில்லை. யார் ஐயா அ.மார்க்ஸ் அவர்களே இந்த கார் அறிஞர். பெயர்கள், பெயரால் கூட கட்டுரையில் விளையாட்டு தொடர் சரியில் மார்க்சிய, லெனினிய, மாவோ சிந்தனைக்கு எதிராக வளம் சேர்க்கும் வித்தையில் கைதேர்ந்துள்ளார் அ.மார்க்ஸ் என்ற அறிவுக் குஞ்சு.


அடுத்து அ.மார்க்ஸ் குறிப்பிடுவதைப் பார்ப்போம். "எனினும் 1915 வரை தேசங்களின் தோற்றம் பற்றிய லெனினது சிந்தனையில் தொடக்க கால முதலாளிய எழுச்சியோடு தேசியத்தை இயந்திர கதியில் இணைத்தும் பார்க்கின்ற போக்கு வெளிப்படுகின்றது." என லெனினுக்கே மார்க்ஸ் ஏங்கல்ஸ்சின் n:கலியத் தாக்கம் இருந்ததாக வார்த்தையால் பிரிவது காட்டுகின்றார். . அதாவது லெனினின் தேசிய இனக் கோட்பாட்டையும், ஸ்ராலினின் தேசிய இனக் கோட்பாடு பொதுத் தன்மையை சிதைக்க லெனினை இரண்டாகப் பிரித்துப் பார்க்கக் கோருவதன் மூலம் மாக்சியத்தையும் லெனினியத்தையும் இரண்டாக்கி அதன் உள்ளடக்கத்தைச் சிதைக்க, சந்தேகத்தை விதைக்க செய்த முயற்சியின் விளைவே இவை.


இது மட்டுமல்ல மார்க்ஸ்-ஏங்கல்சுக்கு கெக்கலியத் தாக்கம் இருந்ததாக அ.மார்க்ஸ் சொல்வது ஸ்ராலின் தேசியத்துக்கு உண்டு என்கின்றார். அதாவது மார்க்சிய, லெனினிய, மாவோ சிந்தனையின் ஒரு பகுதி n:கலின் தாக்கம் கொண்டது என்பதன் ஊடாக அதன் உயிர் உள்ளடக்கத்தை கேள்விக்கு உட்படுத்தி மாக்சிய, லெனினிய, மாவோ சிந்தனையின் புரட்சிகர வரலாற்று ஓட்டத்தை சிதைத்துவிட செய்யும் முயற்சியின் விளைவு தான் இது. முன்பு ரோசாவை உயர்த்த லெனினைப் போற்றி பின் n:கலை அழைக்கும் மோசடி தான் இந்த அ.மார்க்சின் சதித்தனமான சேறடிப்பாக உள்ளது.


லெனினின் சுயநிர்ணயக் கோட்பாடு எடுத்த எடுப்பில் மிக புரிந்து கொள்ள இலகுவானது ஒரு குடும்பத்தில் எப்படி விவாகரத்துப்பற்றிய சுயநிர்ணய கோட்பாடு உள்ளதோ அதே அளவுக்கு தேசிய சுயநிர்ணயக் கோட்பாடு இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியது.


தேசிய சுயநிர்ணயக் கோட்பாடு தெளிவற்றது எனக் கூறுபவன் உண்மையில் இப்படிக் கூறியபடி மக்களை ஏமாற்றி தமது சொந்த வர்க்கத்தைப் பாதுகாக்க செய்யும் முயற்சியின் வெளிப்பாடு தான்.


தேசியம் ஒரு முதலாளித்துவக் கோரிக்கை என்ற அடிப்படை உண்மையை மறுத்த அந்தோனிசாமி மார்க்ஸ் ஒரு இடத்தில் தானும் விஞ்ஞான பூர்வமாக அதை நிறுவி அதை வெளியில் காட்ட முடியாது போய் உள்ளார். ஆனால் வார்த்தைகளால், விஞ்ஞான ரீதியில் விவாதிக்க முடியாததை மீள மீள கூறுவதன் மூலம் மட்டுமே, மீள மீள இதை ஒப்பிக்க முடிந்துள்ளது. ஒரு பைபிளாகத்தான் "தேசியம் ஒரு கற்பிதம்" என்ற புத்தகம் உள்ளது.


அதாவது சமய வாதிகள் கடவுள் உண்டு எங்கே என்றால் எங்கும் உண்டு என்பது போல் அதை விளக்க முடியாது, உண்டு, அது அற்புதம் இது அற்புதம் எனக் கூறிப் பிழைப்பது போல் தான் அ.மார்க்ஸ் தேசியம் முதலாளித்துவம் இல்லை எப்படி என்றால் இல்லை முதலாளித்துவம் இல்லை என வார்த்தை விளையாட்டை விளையாடுகின்றாரே ஒழிய, விஞ்ஞான பூர்வமாக ஒன்றையும் விளக்க முடிவது இல்லை.


இனி அ. மார்க்ஸ் தொடரும் அடுத்த விடையத்தைப் பார்ப்போம். "ஆக தேசிய இயக்கம் என்பது வளர்ந்து வரும் முதலாளியக் காலகட்டத்துக்கு மட்டுமே உரியது என்கின்ற கருத்தில் இருந்து மார்க்சியத்தை விடுதலை செய்தார் லெனின். இக்கால கட்த்தில் இருந்து அதாவது முதலாம் உலகப் போருக்கு பின்பு ( 1915-16) லெனின் காலனிய விடுதலைப் போராட்டக்களைச் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்களாகவே பார்க்கத் தொடங்கினார். தேசியம் என்பது வெறும் முதலாளித்துவ நிகழ்வு அல்ல. காலனிய அரைக் காலனிய நாடுகளின் தேசியப் போராட்டங்கள் என்பன தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் தோன்றிவரும் முதலாளிகள் ஆகியோரால் நடத்தப் படலாம். ...... ஒடுக்கப்பட்ட தேசங்கள் மற்றும் காலனிய நாடுகளின் விடுதலையை ஆதரித்து கருத்துரைத்துள்ள லெனின், இவற்றில் எங்கும் ஸ்ராலினின் தேசியம் பற்றிய வரையறையை கைக்கொள்ளாததும் கவனிக்கத் தக்கது." என்று மிக நுணுக்கமாக லெனினைத் திரித்து லெனினின் பெயரால் லெனினுக்கு எதிராகவே கதை சொல்லும் இந்த அ.மார்க்ஸ் என்ற ஏகாதிபத்திய கோட்பாளரின் அடிப்படையை அவரின் மேற்கோளில் இருந்து ஆராய்வோம்.


லெனின் தேசியத்தை முதலாளித்துவத்துக்கு உரியது மட்டும் என்பதில் இருந்து விடுவித்தார். என அ.மார்க்ஸ் லெனினின் பெயரால் கூறும் போது, ஏதோ லெனின் மார்க்ஸ்-ஏங்கல்சில் தவறுகளில் இருந்து விடுவித்து பாதுகாத்ததாக பிரகடனம் செய்கின்றனர். மார்க்ஸ்-ஏங்கல்ஸ் தேசியத்தை முதலாளித்துவத்தின் கூறு எனக் கூறியதை லெனின் மறுத்தார் என வேறு விளக்கம் கொடுக்கின்றனர். அதுதான் லெனின் பெயரால் "தேசியம் வெறும் முதலாளித்துவ நிகழ்வு அல்ல" எனக் கூறுவது லெனினையே மறுத்துத் திரிப்பதாகும்.