Language Selection

பி.இரயாகரன் 1996-2000
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

முதலாம் உலக சிறுதேசிய முதலாளிகள் தமது சந்தையைத் தக்க வைக்க போராடுவது நாளாந்த விளைவாகியுள்ளது. இது தேசியத்தை முன்வைக்கின்றது. சூறையாடலுக்கு எதிராக போராட்டத்தினை சர்வதேசிய வாதிகள் ஆதரிப்பதுடன், அதை முன்வைத்துப் போராடுவது யதார்த்தமாகி உள்ளது. ஏனெனில் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான ஜனநாயகக் கோரிக்கையாக இவை உள்ளது. சுரண்டலுக்கு ஆதரவு இல்லை எனினும் வர்க்கப் போராட்டத் திசையில் இந்த ஜனநாயகக் கோரிக்கை முன்வைத்துப் போரிடுவது அவசியமாக முதலாம் உலக நாடுகளில் உள்ளது.

 

கடந்த தேர்தலில் பிரான்சில் சமூக ஐனநாயகக் கட்சியும் (சோஷலிசக் கட்சி ), சீரழிந்த கம்யூனிசக் கட்சி என்பன சிறு முதலாளிகளைப் பாதுகாக்க உறுதியளித்தன. இதை எதிர்த்த வலது சாரிகள் திறந்த சந்தைக் கொள்கையை முன்வைத்து எதிர்த்துப் பிரச்சாரம் செய்தனர். உலகமயமாதலைக் கோரியது மட்டுமன்றி, மற்றவர்கள் முன்வைப்பது அரச பொருளாதாரம் என பிரச்சாரம் செய்தனர். இது தான் அந்த தேர்தலில் முக்கிய பொருளாதாரக் கொள்கையாக இருந்தது கவனிக்கத்தக்கது.


அடுத்து சேகுவராவின் கோட்பாடு மார்க்சியம் அல்ல. ஒரு முதலாளித்துவ தேசியத்துக்குப் பதில் பாட்டாளி வர்க்க தேசியமல்லாத ஒரு கலவையின் தொகுப்பே. அதனால் தான் எல்லா தென் அமெரிக்க வர்க்க மற்றும் தேசிய போர்களும் தொடர்ச்சியாக கைவிடப்பட்டும், காட்டிக் கொடுக்கவும் படுகின்றது.


உலகில் வீறு கொண்ட புரட்சி கொந்தளிப்பு கொண்ட ஒரு விளைநிலமாக மீள மீள தென் அமெரிக்கா இருந்த போதும் அங்கு தான் மிக மோசமானதும், அடிக்கடி துரோக வரலாறும் அரங்கேறுகின்றது. இது சேகுவோராவின் மார்க்சியமல்லாத, பாட்டாளி வர்க்க தலைமை அல்லாத கோட்பாட்டின் தோல்வியின் விளைவுதான்.


உலகில் ஒரு பலம் பொருந்திய ஒரு பாட்டாளி வர்க்க அரசு இருப்பின், இப்போராட்டத்தை விமர்சித்தபடி ஆதரிப்பதன் மூலம் சிலவேளைகளில் அவர்களை சரியாக வழிநடத்த முயலலாம். இல்லாத போது அவை மீள மீள காட்டிக் கொடுக்கப்படும்.


சேகுவோரா உயிருடன் இருந்திருப்பின், சிலவேளை மார்க்ஸ், லெனின், மாவோ சிந்தனைளை ஏற்றுக் கொள்ளும் இயங்கியல் அவரிடம் இருந்தது. ஏன் சோவியத் சீனா முரண்பாட்டில் சீனாப் பாட்டாளி வர்க்க நிலையைத்தான் தனிப்பட்ட சேகுவரா ஏற்றுக்கொண்டார். ஏன் எனின் அவர் ஒரு போராட்ட வீரராக, கோட்பாட்டுத் தலைவராக மக்களுடன் இணைந்து செல்ல முனைந்தார்.


அதனால் தான் சேகுவராவை அமெரிக்கா கொல்ல தீவிரமாக முயன்று கொன்று போட்டனர். ஏன் எனில் சேகுவோரா உயிருடன் இருந்தால் உயிர் ஓட்டமுள்ள மார்க்சிய, லெனினிய, மாவோயிச சிந்தனையை தனது சொந்தக் கோட்பாட்டுத் தோல்வியில் இருந்து ஏற்றிருப்பார்.


மார்க்சியமான மாக்சிய, லெனினிய, மாவோவிச சிந்தனையாக இன்று இல்லாத சேகுவோராவின் கோட்பாட்டை இன்று உயர்த்துவதில் பலர் அதிக அக்கறை எடுக்கின்றனர். ஏகாதிபத்தியம் முதல், திரிபு வாதிகள், மார்க்சிய விரோதிகள் ஈறாக சேகுவோராவை முன்னிறுத்துவதன் மூலம், போராட்டத்தை சேகுவோரா வழியில் முன்னெடுத்து அதை இடைநடுவில் சீரழித்துவிட முடியும் என்ற கடந்தகால நீண்ட அனுபவத்துடன் சேகுவோராவை இன்று பெயரளவில் விளம்பரம் செய்கின்றனர். ஆகவே மார்க்சிய விரோத திரிபுவாதிகள் மார்க்சியத்தின் முக்கிய கோட்பாடுகளாக சேகுவராவை முன்னிலைப்படுத்துவது அதிகரித்துள்ளது.


அடுத்து மாக்சிய, லெனினிய, மாவோவிச சிந்தனையை எப்படியும் யாருக்கும் பயன் படுத்த முடியும் என்ற கோணத்தில், அ.மார்க்ஸ் எப்படி மார்க்சிய விரோத கோணத்தில் எதை முன்வைக்கிறார் எனப் பார்ப்போம்.


"இன்றைய தேசிய இன எழுச்சிகளை சுயநிர்ணய உரிமைக்கான போராட்டக்களாகக் கண்டு ஆதரிப்போரும் பிரிவினை வாதமாகக் கண்டு ஒதுக்கு வோரும் மார்க்சியச் சிந்தனைத் திரட்டுகளிலிருந்தே மேற்கோள்களைக் காட்டுவதில் இருந்து ஒன்று தெளிவாகிறது. வேறுபட்ட பல்வேறு சூழல்களிலும், விவாதங்களிலும் சொல்லப்பட்ட கருத்துகளை வாய்பாடுகளை தூக்கிப் பிடிப்பதைக் காட்டிலும் .......... பேராசான்கள் இருவரும் தாங்கள் வாழ்ந்த நாளில் "தேசம்" என்பதற்கு எந்த வரையறையையும் வழங்கும் முயற்சியில் இறங்கவில்லை. மேலும் பொது மொழி, பாரம்பரியங்கள், புவியியல் மற்றும் வரலாற்று ஒற்றுமை ஆகியவற்றைத் தேசத்தின் அவசியமான பண்புகளாக அவர்கள் எங்கும் குறிப்பிடவுமில்லை. ......... மார்க்ஸ்- ஏங்கல்ஸ் செக்குகள் மற்றும் தென் ஸ்லாவியர்களின் தேசிய இயக்கங்களை எதிர்த்ததை ஸ்ராலினும் மற்றவர்களும் அடிக்கடி சுட்டிக் காட்டுவது வழக்கம். .......... போலாந்து மற்றம் அங்கேரி மக்களைப் "புரட்சிகர மக்கள்" எனவும் செக்குகளையும், தென் ஸ்லாவியர்களையும் "பிற்போக்கான மக்கள்" எனவும் மார்க்ஸ்-ஏங்கல்ஸ் குறிப்பிடுவதற்கு பின்னணியாக வேறொரு பார்வை அவர்களிடம் இருந்ததை சுட்டிக்காட்டித் தான் ஆக வேண்டும். n:கலை தலைகீழாக மாற்றிப் போட்டு அதிலிருந்து விடுபட்டு வந்தவர் தான் மார்க்ஸ் எனினும் n:கலின் கூறுகள் அவரிடம் தொடக்க காலத்தில் முற்றிலும் விலகாமல் இருந்ததை இன்று அல்தூஸர் போன்ற அறிஞர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ........ மார்க்ஸ்-ஏங்கல்ஸ் ஜெர்மனி, போலாந்து, அங்கேரி, இத்தாலி போன்றவை மாபெரும் வரலாற்று நாடுகள்" எனவும் தென் ஸ்லாவியர், செக்குகள், ஸ்லோவாக்குகள், செர்பியர்கள், குரோட்கள் ஆகியோரை வரலாற்றவர்கள் எனவும் வகைப்படுத்தினார். இத்தகைய வகைப்படுத்தலுக்கு முதலாளிய வளர்ச்சியை ஒரு அளவு கோலாகவும் அவர்கள் மேற்கொண்டனர். இந்த அடிப்படையில் ஃப்ளாண்டர்ஸ், லேர்ரேன், அச்சேல் ஆகியவற்றை பிரான்ஸ் கைப்பற்றியதையும் ஷ்வெஸ்விக்கைச் nஐர்மனி கைப்பற்றியதையும் காட்டு மிராண்டித் தனத்துக்கு எதிரான "நாகரிகத்தின் உரிமை" உன மார்க்ஸ் கூறினார். இவ்வாறு தேசங்களின் சுயநிர்ணய உரிமை என்பது, தேசங்களை அடிமைப்படுத்துவதற்கான "நாகரீகத்தின்" உரிமையாகத் தலைகீழானது. இது பிற்காலத்தில் தேசிய இனப் பிரச்சனை குறித்த மார்க்சிய கருத்தாக்கம் உருவாதலில், குறிப்பாக தேசிய இன உணர்வை முதலாளித்துவத்தடன் இணைத்துப்பார்க்கும் கருத்துருவாக்கத்தில் மிகுந்த செல்வாக்கு வகித்ததை நாம் மறந்து விடக் கூடாது. இந்த நோக்கிலேயே 1845-1847 இல் அமெரிக்கா மெக்சிக்கோவை ஆக்கிரமித்ததையும், பிரான்ஸ் அல்ஜீரியாவை விழுங்கியதை ஏங்கல்ஸ் ஆதரித்ததையும் நாம் பார்க்க வேண்டும். லத்தீன் அமெரிக்க நாடுகளின் விடுதலை வீரனாகிய சைமன் பொலிவரைப் பற்றிய "அதிகார வெறியன்" என்கின்ற கருத்துப்பட மார்க்சின் விமர்சனம் உண்மையான போதும் அதன் பின்னணி இதுதான்." என அந்தோனிசாமி மார்க்ஸ் தனது கட்டுரையில் முன்வைத்து மார்க்சியத்தை திரித்து எதிர்க்கின்றார்.


தேசம், தேசிய விடுதலைப் போர் என்பவற்றுக்கு என்று ஒரு வரையறையை மார்க்ஸ்-ஏங்கல்ஸ் கொடுக்கவில்லை எனவே ஸ்ராலினின் வரையறை தேவையில்லை எனவும், மார்க்ஸ்-ஏங்கல்ஸ் ஆக்கிரமிப்புக்கு துணையாக நின்றதாகவும் அவர்கள் ஆக்கிரமிப்பு சக்திகள் அல்லது மார்க்சியத்தில் குறை உண்டு என பலவாகக்காட்ட, இவைகளை அ.மார்க்ஸ் அவரின் நிறப்பிரிகை எடுத்து முன்வைத்துள்ளது.


மார்க்ஸ்-எங்கல்ஸ் ஒரு வரைவிலக்கணத்தை வைக்கவில்லை என்ற அ.மார்க்ஸ் கும்பலின் பித்தலாட்டத்தை கொஞ்சம் ஆராய்வோம்.

 

"அ.முதலாளித்துவ தோற்றம் மற்றும் அது உறுதிபடுதல் ஆகியவற்றைத் தொடர்ந்து ஏற்பட்ட, சமூக வளர்ச்சியின் விதிகளை உள்ளடக்கிய தேசிய வடிவத்தின் தோற்றம், தேசிய இன சமுதாயங்களின் சரித்திர பூர்வமான தற்காலிகத்தன்மையை வலியுறுத்துவது.

 

ஆ.தேசங்களின் உருவாக்கத்திலும் முன்னேற்றத்திலும், தேசிய உறவுகளின் வளர்ச்சியிலும், பொருளாதாரக் காரணிகள் குறிப்பாக பொதுவான பொருளாதார, வாழ்க்கையின் தீர்மானகரமான பாத்திரம்.


இ.தேசிய மற்றும் சர்வதேசிய இயக்கங்களின் வளர்ச்சியின் மீது வர்க்க காரணிகளின் வலிமையான அழுத்தம், தொழிலாளி வர்க்க சர்வதேசியத்தினதும், முதலாளித்துவ தேசியவாதத்தினதும் செல்வாக்கு.


ஈ.ஒரு பொதுவான மொழியும், பொதுவான பிரதேச அமைப்பும் தேசங்கள் உருவாதலின் முக்கியத்துவம் .


உ.தேசங்களின் வளர்ச்சி, தேசிய கலாச்சாரம் சம்பந்தப்பட்டவரை அவற்றுக்கிடையேயான பரஸ்பர உறவுகள், தேசிய மனோபாவம், தன்மை ஆகியவற்றின் வலிமையான செல்வாக்கு பகைமை சமுதாயங்களில் சமுதாய முரண்பாடாக (வர்க்க) அவை திகழ்கின்றன." -மார்க்ஸ் - எங்கல்ஸ் -- லெனினியமும் தேசிய இனப்பிரச்சனையும் -( பக் 20)


அ. மார்க்சின் பொய்யுரைகளை மார்க்ஸ் - எங்கல்ஸ் மறுத்துரைக்கும் மேற்கூறிய மேற்கோள்கள் உண்மையில், தேசங்கள் என்ற ஸ்டாலின் வரையறையை உருவாக்க அடிப்படையாக இருந்ததுடன், மார்க்ஸ் - எங்கல்ஸின் ஆய்வுகளின் தொடர்ச்சி தான் ஸ்டாலின் வரையறையை உருவாக்க அடிப்படையாக இருந்ததுடன், மார்க்ஸ் - எங்கல்ஸின் ஆய்வுகளின் தொடர்ச்சி தான் ஸ்டாலின் வரையறை என்பதை நிறுவுகின்றது.