இனி நாம் ஸ்ராலினின் வரையறையான பொதுப்பண்பாட்டை எடுப்போம். ஒரு தேசம் உருவாக வேண்டின் ஒரு குறித்த மக்கள் கூட்டம் ஒரு குறித்த பண்பாட்டை, கலாச்சாரத்தை பிரதிபலிக்க வேண்டும். பல்வேறு பண்பாட்டை உடைய உதிரிகள் ஒருக்காலும் ஒரு தேசிய இனமாக மாறிவிட முடியாது. ஒன்றுக்கு மேற்பட்ட பண்பாட்டை உடைய வௌவேறு மக்கள் கூட்டம் ஒரு பல்தேசிய இனமாகவோ அல்லது ஒரு தேசிய இனத்துடன் சேர்ந்தோ இருக்க முடியும். எந்தப் பண்பாடும் இல்லாத வெற்றிடத்தில் ஒரு தேசியம் உருவாக முடியாது. ஆகவே ஒரு கூட்டம் மக்களைக் கொண்டு குறைந்த பட்சம் ஒரு பண்பாடு இருக்க வேண்டும்.


பண்பாடு தேவையில்லை எனக் கூறுபவன் அதாவது அடிப்படை வரையறையாக பண்பாடு தேவையில்லை எனக் கூறுபவன் உண்மையில் வெற்றிடக் கலாச்சார கற்பனையை பிரதிபடுத்துவதுடன், அடிப்படையில் பண்பாட்டை உடைய தேசிய இனத்தின் தேசிய அடையாளத்தை மறுப்பவனாக உள்ளான்.