உலகமயமாதல் என்றால் என்ன என்ற பொருளை எதார்த்தம் நடைமுறையில் நிறுவுகின்றது. 1997க்கு பின் 100 கோடியை விட அதிக சொத்துடையவர்களின் சொத்து 66.4 சதவீதத்தால் அதிகரித்தது. இதன் மூலம் ஏழைகளின் அதிகரிப்பை உலகமயமாதல் இயல்பாகவே எடுப்பாக எடுத்து இயம்புகின்றது. ஏழைகளின் பிணங்களின் மேலான அஸ்த்திவாரத்தில்தான், நவீன உலகமயமாதல் சுதந்திரமாகவும், ஜனநாயகமாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டமைப்பின் வெட்டுமுகம் மிகவும் இழிவானது.

1960இல் உலகில் முன்னணி 20 சதவீத பணக்கார நாடுகளின் வருமானம், அடியில் உள்ள 20 சதவீதமான ஏழைநாடுகளை விட 30 மடங்கு அதிகமாக இருந்தது. இது உலகமயமாதலின் பண்பாக 1990இல் 60 மடங்காகியுள்ளது. உலகில் என்ன நடக்கின்றது என்பதை இது தெளிவாகவே நிர்வாணமாக்கி விடுகின்றது. 19891999க்கும் இடையில் ஒரு நபருக்கு 1.5 முதல் 1.8 சதவீதம் என்ற அளவில், உலகில் உற்பத்தி அதிகரித்தது. ஆனால் இந்த பத்து வருடத்தில் 80க்கு மேற்பட்ட நாடுகளில் இருந்ததை விட குறைந்து வந்துள்ளது. 50 நாடுகளில் ஒவ்வொரு வருடமும் குறைந்து வருகின்றது.


 நாம் இந்த உலகத்தின் சூட்சுமத்தைக் கடந்து, சில உண்மைகளை புரிந்து கொண்டேயாகவேண்டும். உழைப்பாளியின் சொந்த உழைப்பின் இழப்புதான், பெரும் பணக்காரக் கும்பலை ஒவ்வொரு கணமும் உருவாக்குகின்றது. பரந்துபட்ட உலக மக்களின் சொந்த இழப்புதான், தனி மனிதர்களை மிதப்பாக்குகின்றது. இந்த பணக்காரக் கும்பலின் கட்டமைப்பை கட்டிப்பாதுகாக்கும் சுதந்திரம்தான், ஜனநாயகமாகின்றது. இதற்கு வெளியில் எந்த விளக்கமும் இருப்பதில்லை. உலகளவில் கம்யூனிசம் ஏற்படுத்திய தாக்கம் மற்றும் பாதுகாப்பும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட போலிக் கம்யூனிசமும் தகர்ந்தபோது, ஏழைகள் பெருகிச் சென்றதையே மேலே உள்ள தரவுகள் பளிச்சென்று உண்மைகளைப் போட்டு உடைக்கின்றது. இந்த தனிப்பட்ட சொத்துக் குவிப்பின் பின் உள்ள வக்கிரத்தை மேலும் விரிவாகப் பாப்போம்.


 1982இல் உலகில் 100 கோடிக்கும் அதிகமாக தனிப்பட்ட சொத்தை வைத்திருந்தோர் 12 பேர் மட்டுமே. ஆனால் 2004இல் 587 பேராக அதிகரித்தது. 2005இல் இது 691யாக பெருக்கெடுத்துள்ளது. 1982 முதல் பணக்காரனின் சொத்து 200 கோடியாக இருந்தது. ஆனால் 1999இல் முதல் பணக்காரனின் சொத்து 8,500 கோடி டாலராகியது. 2003இல் முதல் பணக்காரரின் சொத்து 10,300 கோடி டாலராகியுள்ளது. உலகமயமாதல் எதைத்தான் இந்த உலகுக்கு உருவாக்கி கொடுக்கின்றது என்பதை இந்த பணக்கார வர்க்கத்தின் வெட்டுமுகம் தெட்டத் தெளிவாகவே எடுத்துக்காட்டுகின்றது.

 
 இந்த சமூக விரோத செல்வக் குவிப்பு வெளிப்படுத்தும் வக்கிரம் விரிவான ஒன்று. 1997இல் 149 அமெரிக்கர்கள் 100 கோடி டாலருக்கும் அதிகமான சொத்துக்களை வைத்து இருந்தனர். இது 1996இல் 96 பேர் மட்டுமே. 2000ஆம் ஆண்டில் உலகளவில் 100 கோடி டாலருக்கு அதிகமான சொத்துடையவர்களின் மொத்தச் சொத்து 1,10,000 கோடி டாலராக இருந்தது. இது 1999 உடன் ஒப்பிடும் போது 10,000 கோடி டாலராக அதிகரித்திருந்தது. 1999இல் முதல் 200 மிகப்பெரிய பணக்காரர்களின் சொத்துக்கள் 200 கோடி டாலருக்கும் அதிகமாக இருந்தது. இவர்களின் மொத்தச் சொத்தின் பெறுமதி 1,00,000 கோடி டாலருக்கும் அதிகமாகும். இவர்களின் சொத்தை 1990 உடன் ஒப்பிடும் போது 53,700 கோடி டாலராக அதிகரித்தது. 2000ஆம் ஆண்டில் முதல் 400 பணக்காரர்களின் மொத்தச் சொத்துக்கள் 2,00,000 கோடி டாலராக இருந்தது. 2001இல் 538 பேர் 100 கோடிக்கு அதிகமான சொத்தைக் கொண்ட கொழுத்த மக்கள் விரோத, சமூக விரோதிகளாக இனம் காணப்பட்டனர். 2000ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 100 கோடி டாலருக்கு அதிகமான சொத்துடைய 216 பேர் புதிதாக உருவாகியிருந்தனர். இவர்கள் 46 நாட்டைச் சேர்ந்தவர்கள். முதல் 500 பணக்காரரில் 271 மக்கள் விரோதிகள் அமெரிக்கராவர். இவர்களின் சராசரி சொத்து 320 கோடி டாலராக இருந்தது. அண்ணளவாக இது 1,72,160 கோடி டாலராகியது. இதை 2000 ஆண்டுடன் ஒப்பிடும் போது ஒரே வருடத்தில் 62,000 கோடி டாலராக அதிகரித்திருந்தது.


 2002ஆம் ஆண்டில் 497 பேர் 100 கோடி டாலருக்கும் அதிகமான சொத்துடைய மக்கள் விரோத கும்பல் என்று இனம் காணப்பட்டது. இவர்களின் மொத்தச் சொத்து 1,56,555 கோடி டாலராகும். இது 2001ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது சற்றுக் குறைவுதான். ஆனால் 2000ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 46,000 கோடியாக அதிகமாகும். அதாவது 2000ஆம் ஆண்டு நுகர்ச்சி வெறி சார்ந்த சந்தைக் கொண்டாட்டம் திடீர் அதிர்வை உருவாக்கியது. இது ஏற்படுத்திய வீக்கம் பின்னால் படிப்படியாக சீரடைவதை பிந்திய நிலைமை காட்டுகின்றது. 2002இல் புதிதாக 28 பேர் 100 கோடி டாலருக்கு சொந்தக்காரர்கள். அதேநேரம் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான சர்வதேச நெருக்கடிகளால், 100 கோடி டாலருக்கு அதிகமான சொத்துடைய பணக்காரர்களின் சராசரிச் சொத்துக்கள் 320 கோடியில் இருந்து 310 கோடி டாலராக வீழ்ச்சி கண்டது. மீண்டும் 2003இல் 48 பேர் புதிதாக 100 கோடி டாலருக்கு அதிகமான சொத்துடையோர் கும்பல் ஒன்று புதிதாக உருவாகியது. இதன் மூலம் 476 பேர் 100 கோடி டாலருக்கு அதிகமான சொத்துடைய மக்கள் விரோதக் கும்பல் என்று இனம் காணப்பட்டது. இவர்களின் மொத்தச்சொத்து 1,40,000 கோடி டாலராகியது. அதாவது பிரிட்டனின் மொத்த தேசிய வருமானத்துக்குச் சமமானதாக இது இருந்தது.


 தொடர்ச்சியாக 2004ஆம் ஆண்டில் 100 கோடிக்கு அதிகமான சொத்துடைய மக்கள்விரோதக் கும்பல் 587 பேர் இனம் காணப்பட்டனர். இவர்கள் மக்களைக் கொள்ளையிட்டு சேகரித்த மொத்தச் சொத்தின் பெறுமதி 1,90,000 கோடி டாலராக இருந்தது. 2002க்கும் 2004க்கும் இடைப்பட்ட இரண்டு வருடத்தில் உலக பணக்காரர்களின் மக்கள் விரோதச் சொத்து 50,000 கோடியாக அதிகரித்தது. இது 2000ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 80,000 கோடி டாலராக அதிகரித்தது. இந்த அதிகரிப்பு 1997இல் இருந்த உலகளாவிய முதல் 200 பணக்காரரின் மொத்தச் சொத்துக்குச் சமமானதாக 2000க்கும் 2004க்கும் இடையில் வீங்கி வெதும்பி நிற்கின்றது. எங்கும் மனித இனத்தை நிர்வாணமாக்கி கொள்ளையடிப்பதன் மூலம் கொழுப்பு ஏறுகின்றது. இதுவே 2005இல் மேலும் வெம்பியது. மொத்தமாக 691 பேர் 100 கோடிக்கு அதிகமான சொத்தை குவித்தனர். இதன் மொத்தப் பெறுமானம் 2,20,000 கோடி டாலராகியது. 2004யுடன் ஒப்பிடும் போது 2005இல் 30,000 கோடி டாலரால் மிகப் பெரிய மக்கள் விரோதக் கும்பலின் சொத்துக்களின் பெறுமதி அதிகரித்தது. இதை 2000யுடன் ஒப்பிடும் போது 80,000 கோடி டாலரால் தனிப்பட்ட சொத்துக்கள் அதிகரித்தது. இதை இழந்தவர்கள் உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள்தான்.


 2004இல் அதிக சொத்து அதிகரிப்பு பெற்ற மக்கள் விரோதியான வாரன்புவ்பெகற் (ஙிச்ணூணூஞுண ஆதஞூஞூஞுtt) என்பவன், ஒரே வருடத்தில் 1,240 கோடி டாலரை புதிதாக தனது கணக்கில் சேர்த்துக் கொண்டான். இதன் மூலம் தனது தனிப்பட்ட சொத்தை 16,000 கோடி டாலராக்கினான். இலக்கியம் என்ற பெயரில் ஏச்ணூணூதூ கணிttஞுணூ ண்ஞுணூடிஞுண் எழுதி விற்ற ஒணிச்ணணஞு ஓச்tடடூஞுஞுண கீணிதீடூடிணஞ் என்ற மக்கள் விரோத எழுத்தாளர், (இவர் ஒரு பெண்) மக்கள் விரோத பணக்காரக் கும்பல் வரிசையில் 18வது இடத்தைப் பெற்றுள்ளார். இவர் முன்னர் சமூக நல உதவிப்பணம் பெற்றே வாழ்ந்தவர். இவர் சிறுவர்களுக்கு வன்முறை சார்ந்த மனித விரோதக் கதைகளை எழுதிய பின்னரே, அந்தக் குழந்தைகளின் பெற்றோரிடம் இருந்த பணத்தைப் பிடுங்கியே முதல்தரமான கோடீஸ்வரரானவர். அத்துடன் இந்த குழந்தைக் கதைகள் மூலம் பண்பாட்டுச் சீரழிவுகளை உருவாக்கி, பலவிதமான பண்பாடுகளையும் அழித்தொழித்தவர். சுதந்திரமான இலக்கியமும், சுதந்திரமான சந்தையும் காதல் கொண்ட போது, கோடி கோடியாக மக்களின் உழைப்பைப் பிடுங்கி எடுத்தவர். இப்படியும் உலகின் செல்வங்கள், சிலர் கையில் குவிகின்றது, குவிந்து வருகின்றது.


 100 கோடி டாலருக்கு அதிகமான சொத்துடைய கும்பலை 2003ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2004இல் 64 பேர் புதியவர்கள். இதில் ருசியாவை எடுத்தால் 2003இல் 17 பேராக இருந்த எண்ணிக்கை, 2004இல் 25ஆக அதிகரித்துள்ளது. 2005இல் 36 பேராக மாறியுள்ளது. பணக்காரர்கள் எண்ணிக்கை அடிப்படையில் அமெரிக்கா மற்றும் ஜெர்மனிக்கு பின்னால் ருசியா புதிதாக இணைந்துள்ளது. கம்யூனிசத்தின் அடிப்படைகள் அனைத்தையும் துடைத்தெறிந்து கழுவேற்றிய பிறகு, ருசியப் பணக்கார வர்க்கத்தின் சொர்க்கம் களைகட்டி நிற்பதையே காட்டுகின்றது. உழைக்கும் மக்கள் தமது அடிப்படையான சமூக வாழ்வை இழந்து விடுவது துரிதமாகவே அரங்கேறிவிடும் போது, ருசியாவின் புதிய பணக்காரர்கள் உலகம் தெரிய வக்கிரமாகவே உருவாகிவிடுகின்றனர்.


 2002இல் ருசியாவில் 10 லட்சம் தனிப்பட்ட முதலாளிகளும், 20 லட்சம் வர்த்தகர்களும், 6 லட்சம் நிலப்பிரபுக்களையும் கொண்ட ஒரு சமூக விரோதக் கும்பலே உருவாகியிருந்தது. இவர்கள் 14 கோடி மக்களின் தலைவிதியையே கேள்விக்குள்ளாக்கி நிற்கின்றனர். சராசரியாக மாத வருமானம் 140 டாலர் என்ற நிலைக்குள் ருசியா சரிந்து வீழ்ந்துள்ளது. 1991இல் மிகச் செல்வம் கொழித்த 10 சதவீதமானோரின் வருமானம், ஏழைகளை விட 4.5 மடங்கு அதிகமாகவே காணப்பட்டது. இது 2000இல் 14.3 மடங்காகியுள்ளது. ருசியாவில் உள்ள 2 சதவீத பணக்காரர்கள் நாட்டின் வருமானத்தில் 33.5 சதவீதத்தை பெறும் நிலைக்கு நாடு மாற்றி அமைக்கப் பட்டுள்ளது. வறுமையில் உள்ள பத்து சதவீதத்தினர் வருமானமோ மொத்த தேசிய வருமானத்தில்  2.4 சதவீதம் என்ற அளவுக்கு ஏழ்மையை ஜனநாயகமாகியுள்ளது. 2001இல் ருசியாவில் வாழ குறைந்த பட்சம் ஒருவருக்கு மாதம் 55 டாலர் தேவை என அரசாங்கம் அறிவித்தது. ஆனால் ருசியாவில் வாழும் மூன்றில் ஒரு பங்கு மக்கள் இதைவிடக் குறைவாகப் பெற்ற பரம ஏழைகளாகி உள்ளனர். 2005இல் ருசியாவில் 90 லட்சம் குழந்தைகள் மிக மோசமான வறுமையில் வாழ்வதாக யுனிசேவ் அறிவித்தது. இதே நிலையில் 2.98 கோடி மக்கள் வாழ்வதாக கூறுகின்றனர். ருசியா மீட்டதாகக் கூறும் ஜனநாயகம் இதுதான். இது எதிர்மறையில் 2003இல் 100 கோடி டாலருக்கும் அதிகமான சொத்துடைய 17 பேர் கொண்ட சமூக விரோதக் கும்பல் ஒன்றை  உருவாக்கியது. ஜனநாயகம் என்பது சமூக விரோதிகள் உயிர்உள்ள ஆன்மாவாகியுள்ளதையே, தரவுகள் தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. உண்மையில் அரசு சொத்துக்களை சிலர் தமதாக்கியதன் மொத்த விளைவே இது. சோசலிச கட்டமைப்பில் இருந்த ருசியாவில் சட்டப்படி தனிச் சொத்துரிமை ஒழிக்கப்பட்டு இருந்தது. இன்று இந்த நாட்டில் நூறு கோடிக்கும், பல பத்து கோடிகளுக்கும் சிலர் சொந்தக்காரராக உள்ள நிலைமை, அந்த மக்களின் சொத்துக்களை திருடியதன் விளைவால் தான் ஏற்பட முடியும். இதைத் தான் ஜனநாயகம் என்றும், சுதந்திரம் என்றும் பீற்றுகின்றனர். இதுவே சீனாவிலும் நடந்து வருகின்றது. மக்களின் உழைப்பைத் திருடுவதே ஜனநாயகமாகியபோது, சொத்துக்குவிப்பே சுதந்திரமான ஜனநாயகப் பூங்காவாகியது.


 இப்படி பூங்காவாகியதன் விளைவு பயங்கரமானது. 2004இல் ருசியாவில் முதல் 100 கோடீஸ்வரர்களின் சொத்து 14,000 கோடி டாலராகியது. முதல் 10 பணக்காரர்களின் சொத்து 400 கோடி டாலருக்கும் அதிகமாகியது. 1997இல் நான்கு பேர் மட்டும் தான் 100 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை வைத்திருந்தனர். இது 2004இல் 36யாக மாறியுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தக் கும்பல் திருடிச் சேகரித்தச் சொத்து, அமெரிக்காவில் திருடிய அளவைவிடவும் அதிகமாகும். இந்த 36 பேரும் ருசிய மக்களிடம் திருடிய சொத்து, ருசியாவின் மொத்த வீட்டு உற்பத்தியில் 24 சதவீதத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றது. அதாவது மொத்த ருசியாவின் உள்நாட்டு வீட்டு உற்பத்தியான 45,800 கோடி டாலரில், இந்த 36 பேரின் சொத்து 11,000 கோடி டாலராக இருந்தது. ஆனால் அமெரிக்காவில் 100 கோடிக்கு அதிகமான மக்களின் உழைப்பை திருடிய 277 பேரின் சொத்து, அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு வீட்டு உற்பத்தியில் 6 சதவீதத்தையே பிரதிநிதித்துவம் செய்தது. அதாவது அமெரிக்காவில் மொத்த வீட்டு உற்பத்தியான 11,00,000 கோடி டாலரில் இந்த 277 பேரின் சொத்து 65,100 கோடி டாலராக மட்டுமே இருந்தது. இப்படி மக்களின் உழைப்பை திருடும் திருட்டுக் கூட்டமே, உலகெங்கும் திருடும் ஜனநாயகத்தின் காவலராக உள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்து அதிக திருடர்களைக் கொண்ட நாடாக ஜெர்மனி மாறியுள்ளது. இப்படி 52 பேர் உருவாகியிருந்தனர்.


 இப்படி உலகெங்கும் உள்ள அதேநேரம் முன்னாள் சோசலிச நாடுகளில், திருட்டின் சதவீதம் தலை கீழ் தெரியாத அளவில் அதிகரிக்கின்றது. ருசியாவில் உள்ள 23 மிகப் பெரிய தொழில்துறை, மொத்த தொழில்துறை உற்பத்திகளில் 57 சதவீதத்தைக் கட்டுப்படுத்தியது. இதன் மூலம் சிறு உற்பத்திகள் மீட்சிக்கு இடமற்ற நிலையை அடைந்துள்ளது. முன்பு அரசுகளின் சொத்தாக இருந்தவை, மிகக் குறுகிய காலத்தில் தனியார் சொத்தாகியது. கொள்ளைகளில் மிகவும் சிறப்பான எடுப்பான வடிவமாக இது காட்சியளிக்கின்றது. இது சீனாவிலும் நிர்வாணமாகிவிடுகின்றது.


 சீனாவை எடுத்தால் இன்று புதிதாக உலகமயமாதல் சந்தையில் குதித்துள்ள சீனாவில் தனிப்பட்ட சொத்தை  உடைய புதிய பணக்காரக் கும்பல் ஒன்று வேகமாகவே கொழுக்கத் தொடங்கியுள்ளது. 2003இல் 400 முன்னணி சீனப் பணக்காரர்களின் சொத்து 30,110 கோடி டாலராகியுள்ளது. சராசரியாக 70 கோடி டாலரைக் கொண்ட 400  பேரின் செல்வ இருப்பே இது. கம்யூனிசத்தை குழிதோண்டிப் புதைத்து, அதை அத்திவாரமாகக் கொண்டு கம்யூனிசத்தின் பெயரால் ஆட்சியில் உள்ள பாசிஸ்டுகளின் செல்வத்தைப் பெருக்கிக் குவிக்கின்றது. நவீன சீனா கம்யூனிசத்தைக் கைவிட்டு உலகமயமாதல் என்ற சந்தைக்குள் புகுந்தது முதலே, இது உருவாகி வளர்ந்து வருகின்றது. 2004இல் முதல் நூறு பேரின் ஆகக் குறைந்த சொத்து 14.1 கோடி டாலராக இருந்தது. இது 2003இல் 10 கோடி டாலராக மட்டுமே இருந்தது. 2002இல் 8.4 கோடி டாலராக இருந்தது. 2001இல் இது 6 கோடி டாலராக இருந்தது. 2000இல் 4.2 கோடி டாலராக இருந்தது. 1999இல் வெறும்  60 லட்சம் டாலர் மட்டுமே. இது மக்களின் உழைப்பையும், மக்களின் சொத்தையும் திருடிக் கொழுத்த முதல் தரமான பணக்காரக் கும்பலின் மாஃபியாத் தனத்தையே எடுத்துக் காட்டுகின்றது. 


 ஏழைகளுக்கும் பணக்காரருக்கும் இடையில் ஜனநாயகம் வழங்கிய சுதந்திரத்தில் இடைவெளிகள் பாதாளமாகியுள்ளது. இதன் விளைவு சில துறைகளில் அப்பட்டமாகவே பிரதிபலிக்கின்றது. சீனா அரசு அறிக்கை ஒன்றில் ஒத்துக் கொண்டபடி வயது வந்த 7.1 சதவீதமான இளைஞர்களில், 22.1 சதவீதம் பேர் அதிக நிறையை உடையவராக மாறியுள்ளனர். அதாவது 2 கோடி பேர் இப்படி மாறியுள்ளனர். இந்த அளவு அமெரிக்காவுடன் ஒப்பீடும் போது அதிகரித்துச் செல்லுகின்றது. அமெரிக்காவில் நிறை அதிகரிப்பு 65 சதவீதமாக உள்ளபோது அதிக கொழுப்பு 35.5 சதவீதத்தாலேயே அதிகரித்து. இது சீனாவில் நிறை அதிகரிப்பு 1992ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 39 சதவீதத்தால் அதிகரிக்க, உடலின் கொழுப்பு 97 சதவீதத்தால் அதிகரித்து. சீனத் தலைநகரமான பீக்கிங்கில் 60 சதவீதமானவர்கள் அதிக நிறையுடையவராக மாறியுள்ளனர். இந்த கொழுப்பு உடையவர்களின் பிரதான உணவு அமெரிக்கா மக்டொனல் மற்றும் அமெரிக்காவின் பீசாவாக மாறியுள்ளது.


 சோசலிச சமூகத்தில் மக்களின் உழைப்பு உருவாக்கிய சொத்துக்கள் தேசிய சொத்தாகவே இருந்தன. இதை களவாடவே உருவாக்கிய ஜனநாயகமும் சுதந்திரமும், மக்களின் சொத்துக்களை தமது தனிப்பட்ட சொத்தாக்கினர். இதன் மொத்த விளைவையே மேலுள்ள வக்கிரம் நமக்கு எடுத்துக்காட்டுகின்றது. உலகமயமாதல் என்பது மக்களின் உழைப்பை திருடிக் குவிப்பதைத் தாண்டி, இதற்கு என்று வேறு அர்த்தம் எதுவும் எதார்த்தத்தில் கிடையாது.


 பொதுவாக உலகில் மிகப் பெரிய பணக்காரரில் 10க்கு 8 பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். 2005இல் அமெரிக்காவின் முதல் 400 பணக்காரனின் சொத்து 1,00,000 கோடி டாலராகியுள்ளது. இது சென்ற வருடத்தை விடவும் 4,500 கோடி டாலராக அதிகரித்துள்ளது. ஏழைபணக்கார வீதத்தை 1997யை அடிப்படையாகக் கொண்டு ஆராயும்போது, மற்றொரு உண்மை அம்பலமாகிவிடுகின்றது. 1997இல் உலகில் இருந்த 80 லட்சம் உலக பணக்காரரில் 64 லட்சம் பேர் அமெரிக்காவில் இருக்க, மற்றைய நாடுகளில் மீதமான 16 லட்சம் பேர் எஞ்சிக் கிடந்தனர். சொத்துக் குவிப்பும் மக்கள் விரோத அமெரிக்காவை நோக்கி இருப்பதை மேலும் இது தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. இதனால் தான் அமெரிக்கா சொர்க்க உலகம் என்று நக்கிப் பிழைப்பவர்கள் கூறுகின்றனர். இதனால் பணத்துடன் சொர்க்கத்தை நோக்கி ஒடுகின்றனர். 1994இல் 100 கோடி டாலருக்கு அதிகமான சொத்தை வைத்திருந்தவர்களில், மெக்சிகோவைச் சேர்ந்த 24 பேர் இருந்தனர். இது 2001இல் 13ஆக குறைந்தது. இது பணத்தைக் கொண்டு ஒரேநாளில் தப்பிஓடியது மட்டுமல்ல, சொத்துக் குவிப்பு அமெரிக்கா மற்றும் மேற்கு நோக்கி நகர்வதையே இது துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றது.


 உலகெங்கும் கொள்ளையடித்த பணத்துடன், சுதேசிய வேடமிட்டிருந்த பணக்காரக் கும்பல் அமெரிக்காவை நோக்கி வேகமாக ஒடுகின்றனர். குறைந்தபட்ச முதலீட்டைச் செய்யக் கூடிய சொத்துடையவருக்கான விசேட விசா வழங்கும் திட்டத்தைக் கூட, வருடாந்திரம் அமெரிக்கா நடைமுறைப்படுத்துகின்றது. இதனடிப் படையில் அமெரிக்கா வருடாந்தரம் 5 லட்சம் பேருக்கு விசேட விசாவை வழங்குகின்றது. இவை பெருமளவில் அமெரிக்க பொருளாதார நலனைச் சார்ந்ததாகவே கையாளப்படுகின்றது. 1998இல் இதை ஆராய்ந்தால், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், தனியார் உற்பத்தியில் உயரதிகாரிகள் என 40,000 பேருக்கு அமெரிக்கா செல்ல விசா வழங்கியது. இதைவிட உயர்ந்த கல்வித் தரமுள்ளவர்கள் 40,000 பேருக்கும், வேலையில் உயர் தகுதியுடையவர்கள் 30,000 பேருக்கும் அமெரிக்கா விசா வழங்கியது. 5 லட்சம் டாலரை முதலீடு செய்யக் கூடியதும், தனிப்பட்ட ரீதியில் விசேட உற்பத்தி செய்யும் தனிநபர்கள் 10,000 பேருக்கும், 10 லட்சம் டாலர் முதலிட்டு 10 பேருக்கு வேலை வழங்கக் கூடியவர்களான 10,000 பேருக்கும் விசேட விசா வழங்கினர். இந்த முதலீட்டு விசா மூலம் குறைந்த பட்சம் 1,000 கோடி டாலரை மூன்றாம் உலக நாடுகளில் இருந்து நேரடியாகவே, அமெரிக்காவுக்குள் 1998இல் கடத்திச் சென்றனர். கொள்ளையடிப்பில் அறிவின் வளம், உழைப்பின் திறன், மூலதனம் என்ற அடிப்படையில் அமெரிக்கா வருடாந்தரம் 5 லட்சம் பேரை உள்வாங்குகின்றது. இதன் மூலம் அமெரிக்காவில் அறிவு குவிவதுடன், செல்வக் குவிப்பையும், உலகளாவிய சமூகச் சிதைவையும் உருவாக்குகின்றனர்.


 உலகில் 100 கோடி டாலருக்கு அதிகமான, தனிப்பட்ட, தனிநபர் சொத்துடைய மக்கள் விரோதக் கும்பலை அதிகம் கொண்ட பிரதான ஏகாதிபத்தியங்களை அடிப்படையாகக் கொண்டு நாம் விரிவாக அவற்றை ஆராய்வோம். இப்புள்ளி விபரங்கள் எல்லாம் உத்தியோகப் பூர்வமாக அறிவிக்கப்பட்டதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. அட்டவணையில் உள்ள அனைத்துப் பெறுமானங்களும் கோடி டாலரில் உள்ளது.


100 கோடி டாலருக்கு அதிகமான தனிப்பட்ட சொத்தை உடைய, உலகளாவிய, மக்கள் விரோத பணக்காரக் கும்பலின் சொத்துக்கள் கோடி டாலரில்

 

1.100 கோடி டாலருக்கு அதிகமான சொத்துக்களை வைத்திருந்தோர் எண்ணிக்கை

2. உலகில் முதல் பணக்காரர்களின் தனிப்பட்ட சொத்துக்கள் 

3.உலகில் முதல் பத்து பணக்காரர்களின் தனிப்பட்ட  சொத்துக்கள் 

4.உலகில் முதல் இருபத்தி ஐந்து பணக்காரர்களின் தனிப்பட்ட சொத்துக்கள் 

5.100 கோடி டாலருக்கு அதிகமான சொத்து வைத்திருந்த பணக்காரர்களின் தனிப்பட்ட சொத்துக்கள் 


               2004            2003         2002          2001          2000         1999         1998        1997           1996
 1.            587              476            497            538            322            298           230          259             423
 2.         4,660           4,070        5,280         5,870         6,000        9,000        5,100       3,800         1,850
 3.       25,500        21,720      26,625       26,700       27,520     27,025      17,190     35,834      12,050
 4.       46,970        38,850      45,500       47,400       45,610      43,110    42,660      51,960      21,860
5.     1,90,000    1,40,000   1,56,555    1,72,160    1,10,000    1,00,000            -               -                -

 

 உலகில் 100 கோடி டாலருக்கு அதிகமான தனிப்பட்ட சொத்துடையோர் எண்ணிக்கை 2004இல் 587 பேராக அதிகரித்துள்ளது. இது 1996இல் 423 ஆகவும், 1997இல் 259ஆகவும் இருந்தது. 2005இல் 100 கோடிக்கு அதிகமான சொத்துடைய 691 பேர் இனம் காணப்பட்டனர். இது 2004யை விட 104 பேர் அதிகமாகும்.  இவர்களின் மொத்தச் சொத்து 2,20,000 கோடி டாலராகியது. முதல் பணக்காரனின் சொத்து 4,650 கோடி டாலராகியது. முதல் பத்து பணக்காரக் கும்பலின் சொத்து 26,220 கோடி டாலராகியது.  சொத்துக்கள் தனிப்பட்ட நபர்களிடம் தொடர்ந்து பெருகிச் செல்லுகின்றது. உலகளவில் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான பொருளாதார நெருக்கடிகள், நவீன தொழில் நுட்பங்கள், நவீன நுகர்வுப் பண்பாடுகள், திடீர் களியாட்ட நுகர்வுவெறிக் கொண்டாட்டங்கள் அலை அலையாக உலகளாவிய சந்தையை உலுக்கியது, உலுக்கிவருகின்றது. இதன்போது சொத்துடைய வர்க்கம் மேலும் கீழுமாக உருண்டு ஒடியது. இது தேச எல்லையைத் தாண்டி அங்கும் இங்குமாக அலைபாய்ந்தது. உலகமயமாதல் மூலம் ஏகாதிபத்திய மூலதனப் பகை முரண்பாட்டை பின்தள்ள வைக்கும் உள்ளடக்கத்தினுள், ஏகாதிபத்தியங்கள் தன்னை மீள்நிர்மாணம் செய்து கொண்டது. உலகைச் சூறையாடுவதன் மூலம், மூலதனத்தின் செழிப்பை மீள் உருவாக்கம் செய்தது. இதன் மூலம் ஏகாதிபத்திய மூலதனங்கள் தனது சொந்த அதிர்வுகளில் இருந்து மீண்டன. இதன் மூலம் பணக்காரக் கும்பல் தனது சொந்தச் சரிவுகளில் இருந்து மீண்டும் மீண்டும் செழிப்படைகின்றனர்.


 இந்தச் செழிப்பை தக்கவைத்துக் கொண்டு மேலும் கொழுக்க மூலதனம் மிகவும் சூழ்ச்சித்திறன்மிக்க மக்கள்விரோத நடவடிக்கையை அடுக்கடுக்காக உலகெங்கும் எடுத்தது, எடுத்து வருகின்றது. மக்களின் சேமிப்புகளில் கைவைத்ததுடன், அதற்கு வழங்கிய வட்டிவீதத்தை படிப்படியாக, தொடர்ச்சியாகக் குறைத்தன. இதன் மூலம் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள், பணக்காரக் கும்பலின் செல்வக் குவிப்பாகியது. இதேபோன்று ஓய்வூதியப் பணத்தையும் கூட கைவைத்ததன் மூலம், தேசிய அரசுகள் திவாலாகிவிட்டன. மக்களின் சேமிப்புக்களை எடுத்து மிக உயர்ந்த வட்டி விகிதத்தில் அந்த மக்களுக்கே கடன் கொடுத்து தேசங்களையே அடிமையாக்கி விடுகின்றனர். அத்துடன் உலகை உறிஞ்சிக் கொழுத்த மக்கள்விரோத பணக்காரக் கும்பலுக்குச் சாதகமாக முன்வைக்கும் வரிக்குறைப்பு, இயல்பில் பணக்காரக் கும்பலின் செல்வக் குவிப்புக்கு கைகொடுத்து தூக்கிவிடுகின்றனர். வரிக் குறைப்பின் பின்னுள்ள எதார்த்தம் என்ன எனப்பார்ப்போம்.