என் வயது 26. பற்கள் நிஜமாகவே வெள்ளை நிறமாகத்தான் இருக்குமா? ஏனென்றால் என் பற்கள் சிறிது பழுப்பு நிறமாக உள்ளன?

 

- பரிமளா, கொரட்டூர்.

 

ஆரோக்கியமான மற்றும் முழுமையாக உருவாகிய பற்கள் வெள்ளை நிறமாக இருக்காது. இருக்கவும் கூடாது. சிறிது பழுப்பு  நிறமாகத்தான் இருக்கும். உங்களுக்கு இன்னொன்று தெரியுமா? பலமான பற்கள் சிறிது பழுப்பு நிறமாகவே இருக்கும். அதனால் கவலைப்படாதீர்கள்.

 

பால் பற்கள் எந்தப் பருவத்தில் முளைக்கும்? நிரந்தரப் பற்கள் எந்தப் பருவத்தில் முளைக்கும்? தெரிந்து கொள்ள சற்று ஆர்வமாக உள்ளது?

 

- தினேஷ், மவுண்ட்ரோடு.

 

கீழ் முன்வெட்டுப் பற்கள் - 6 மாதம் முதல் 15 மாதம் வரை

 

பக்கவாட்டு வெட்டுப்பற்கள் - 9 மாதம் முதல் 15 மாதம் வரை

 

கீழ்த்தாடை முதல் அரைக்கும் பற்கள் - 12 மாத அளவில்

 

கீழ்த்தாடை இரண்டாம் அரைக்கும் பற்கள் -20 மாத அளவில்

 

கீழ்த்தாடை அரைக்கும் பற்கள் - 16 மாத அளவில்

 

நிரந்தரப் பற்கள்

 

மைய வெட்டுப்பல் - 6-7 வயதில்

 

பக்க வெட்டுப்பல் - 7-8 வயதில்

 

கோரைப் பற்கள் - 9-10 வயதில்

 

முதல் முன் கடைவாய்ப் பற்கள் - 10-12 வயதில்

 

இரண்டாம் கடைவாய்ப் பற்கள் - 11-12 வயதில்

 

முதல் கடைவாய்ப் பற்கள் - 6-7 வயதில்

 

இரண்டாம் கடைவாய்ப் பற்கள் - 11-13 வயதில்

 

மூன்றாம் கடைவாய்ப் பற்கள் - 17-18 வயதில் இந்தப் பற்கள் சுமார் ஓரிரு ஆண்டுகள் தாமதமாக முளைக்கலாம்.

 

என் பற்களின் மேல் காரை காரையாகப் படிந்திருக்கிறது. ஏன்?

 

லிவிங்ஸ்டன், அண்ணாநகர்.

 

உமிழ் நீரில் உள்ள ஜீலீ 7 ன் அளவு குறையுமானால் அதிலுள்ள கால்சிய உப்புச்சத்து பற்கள், மேல் படிந்து காரையாக மாறிவிடும். இது ஆரம்பத்தில் படிமமாக்கப்பட்டு, கடினமாகும். ஈறு உள்ள இடத்தில் தங்குவதால் ஈறினை உறுத்தி வலியை ஏற்படுத்தும். இந்தக் காரை மஞ்சளாகவும் கருப்பாகவும் இளநீலமாகவும் இருக்கும். இது பற்களின் மேல் படிவதால் பயோரியா வியாதி ஆரம்பிக்கிறது. அதுமட்டுமல்ல, பற்களை சரியாகச்  சுத்தம் செய்யாதவர்களின் பற்களிலும் கரை படியும்!

 

பற்கள் எடுத்த பிறகு உடனே எதை எதையெல்லாம் பின்பற்ற வேண்டும்?

 

- ஆனந்தி பாபு, அண்ணாமலைபுரம்.

 

பற்கள் எடுத்த இடத்தில் வைக்கப்பட்ட பஞ்சினை சுமார் ஒரு மணி நேரம் கழித்து நீக்கிவிட வேண்டும்.

 

நாக்கையோ, விரலையோ பயன்படுத்தி பல் எடுத்த இடத்தை நோண்டக் கூடாது. டாக்டரின் ஆலோசனையில்லாமல் ஐஸ்கட்டி வைப்பதை தடுக்க வேண்டும்.

 

பற்கள் எடுத்த ஆறு மணி நேரத்திற்குப் பின், வெந்நீரில் சிறிது சமையல் உப்புக் கலந்து வாய் கொப்பளிக்கலாம். தொடர்ந்து இரத்தக் கசிவு இருக்குமேயானால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

 

 

பல் மருத்துவம்- டாக்டர் பதில்கள்

  Dr தாயப்பன்

 http://rammalar.wordpress.com/2008/08/29/பல்-மருத்துவம்/