தேவையானவை

எண்ணெய்
ஸ்பிரிங் ரோல் பேஸ்ட்ரி(Sheets)
மைதா மாவு - 1 டேபிள் ஸ்பூன்

For Stuffing
பெரிய வெங்காயம் - 1/4 கப் (நறுக்கியது)
முளைப்பயிறு(பாசிப்பயிறு) - 1/4 கப் (நறுக்கியது)
கோஸ், 1/4 கப் (நறுக்கியது)
கேப்சிகம்(பச்சை & சிவப்பு) - 1/4 கப்(நறுக்கியது)
பூண்டு - 1 பல் (பொடியாக நறுக்கியது)
சில்லி சோய் சாஸ் - 1 டீஸ்பூன்
உப்பு
மிளகாய்த்தூள் - தேவையான அளவு


செய்முறை
  • கடாயில் எண்ணெய் விட்டு பூண்டு சேர்த்து வதக்கவும்.
  • பிறகு வெங்காயம், முளைப்பயிறு மற்றும் காய்கள் சேர்த்து உப்பு போட்டு வதக்கவும்.
  • கடைசியாக சில்லி சோய் சாஸ், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி அடுப்பை அணைக்கவும்.
  • மைதா மாவை தண்ணீரில் பேஸ்ட் மாதிரி கலந்து வைக்கவும்.
  • காய்கறிகலவை நன்கு ஆற விடவும்.
  • பிறகு பேஸ்ட்ரி ஷீடில் ஒரு டேபிள் ஸ்பூன் காய் கலவையை வைத்து ஸ்பிரிங் ரோல் மாதிரி சுற்றி அதன் முனையை மைதா பேஸ்டில் ஒட்டவும்.


  • காய்கறி கலவை முடியும் வரை செய்யவும். 10 அல்லது 12 ஸ்பிரிங் ரோல் செய்யலாம்.
  • பிறகு கடாயில் எண்ணெய் வைத்து ஒவ்வொன்றாக பொறித்து எடுக்கவும்.


http://suganthiskitchen.blogspot.com/2008/08/blog-post_21.html