09282023வி
Last updateபு, 02 மார் 2022 7pm

தொல்லை கொடுக்கும் மென்பொருளின் இயக்கத்தை தொலைத்துக்கட்ட

எத்தனையோ முறை விண்டோஸ் இயங்குதளம் முரண்டு பிடித்திருக்கிறது.
எதாவது ஒரு தளத்தைப் பார்வையிடும்போதோ, குறிப்பிட்ட மென்பொருளைப் பயன்படுத்தும்போதோ இயங்குதளம் கேட்பாரின்றி அப்படியே கிடக்கும்.

இதை ஹேங்கிங் [ HANGING] என்பார்கள். என்ன செய்தாலும் நமது கட்டுக்குள் வந்து தீராது.

உலாவி கூடப் பல நேரங்களில் அப்படியே நின்று நமது பொன்னான நேரத்தை வீணடிக்கும்.
அப்போது அந்த அப்ளிகேசனை அப்படியே நிறுத்திவிட முயற்சி செய்வோம். எதுவும் நடக்காது.

இந்த மாதிரியான சமயத்தில் நமக்கு உதவுவதற்காக ஒரு இலவச மென்பொருள் இணையத்தில் உள்ளது.

இந்த மென்பொருளை இணையிறக்கி, நிறுவிக் கொள்ள வேண்டும்.

எப்போதெல்லாம் எதாவது ஒரு பயன்பாடு நம்மை தொல்லை கொடுக்கிறதோ அப்போதெல்லாம் இந்தப் பயன்பாட்டை இயக்கி தொல்லை கொடுத்த அப்ளிகேசனை நிறுத்திக்கொள்ளலாம்.


http://www.stylet-software.com/click-gone-setup.exe


http://www.stylet-software.com

 

http://tamizh2000.blogspot.com/2008/08/blog-post_3523.html