Language Selection

பி.இரயாகரன் 1996-2000
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

புலம் பெயாந்த இலக்கியம் என்பது எவ்வளவுக்கு எவ்வளவு கீழ்நிலைப் பாத்திரத்தை அடைகின்றதோ அந்தளவுக்கு மனித நடத்தைகளும் கேவலமாகின்றன. இலக்கியம் பேசுவதாக காட்டிக் கொள்ளும் இரண்டுநபர்கள் சந்திக்கும் போது அவர்கள் இலக்கியம் பேசுவதற்க்கு எதுவுமற்றவராகி விட்டதால்,

 இலக்கியம் பேசுவதாக பாசங்கு செய்வோர் பற்றி; தனிப்பட்ட விவாகரத்தை ஊதி, பெருக்கி, வால் மூக்கு வைத்து கதைகட்டுவது, பகிடியாக கதைகளை உலாவவிடுவது,  எழுத்தை திரிப்பது, இல்லாதைப் பொல்லதை ஊதிப் பெருக்குவது என நகரிகம் அற்ற பண்பாடற்ற வகையில் கீழ்நிலைப் பாத்திரத்தை இன்று புலம்பெயர் இலக்கியம் சிராழிந்து செல்கின்றது.

 

இந்தப் போக்கில் சில நம்பிக்கைகளுடன் பரிசில் சில கருத்துகளை பரிமாற கூடிய கூட்டத்தில் உடல் வன்முறை அரங்கேறியது. இந்தளவு காலமும் ஐனநாயக மறுப்பை காட்டி தம்மை முற்போக்காக காட்டினர்களோ அதை எந்த வெட்கமும் இன்றி அரங்கேற்றினர். இதில் ஒருவர் வன்முறையை உடல் ரீதியில் தொடங்க முயற்சித்ததும், அதன் தொடர்ச்சியில் 5,6 நபர்கள் தொடர்ச்சியன வன்முறைக்கு அழைப்பு விட்டதுடன், அதை நியாப்படுத்திதுடன் அதை ஓட்டிய வார்த்தைப் பிரயோகங்கள் உருண்டு ஓடின. இந்த இடத்தில் ஓன்றுக்கு மேற்பட்ட நபர்கள் பெண்ணை இழிவுபடுத்தும் துசணத்தால் தமது ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தியும், அதை பெண்கள் கூட மறைமுகமாக நியாப்படுத்த மௌனம் சாதித்த நிலையில், ஐனநாயக வேஷசங்கள் தனிநபர் வன்முறை கோசமானது. இந்த வன்முறையைத் தொடர்ந்து பிரான்சுக்கு வெளியல் வாழும் புலம் பெயர் பிரிவுகள் வன்முறையை நியாப்படுத்தியும் வாக்களத்து வாங்கியும் வன்முறையின் கதாநாயகர் ஆகின்றனர். மறுபுறம் இதற்க்கு எதிரான அனைத்து இலக்கிய சீராழிவுக்கும் மறுதரப்பு கம்பளம் விரிக்கின்றது. இந்ததளத்தில் ஐனநாயகத்தின் குரல்கள் மௌனித்துப் போய்யுள்ளது.

 

ஆம் புலிகள் பற்றியும் அதன் ஐனநாயக மீறல்கள் பற்றி வாய்க்கு வாய் கிழிய பேசும் இவர்கள்தான், தமது அதிகாரம் இழந்த போது மௌனமானதும், முடியாத நிலையில் அவை பல தளத்தில் பீறிட்டு வெளிக்கிளம்பியது. இந்த வன்முறை நிகழ்வின் போது வன்முறைக்கு எதிராக குரல் கொடுத்து விமர்சிப்பதற்க்குப் பதில், எதிர் வன்முறையை இரு எதிர் கன்னையிலும் தொடர்ச்சியாக தூபம் இட்டு வளர்த்த போக்கில், புலம் பெயர் இலக்கிய ஐனநாயகம் செத்துதான் போனது. ஐனநாயகம் பற்றி நம்பிச் சென்றோர் வன்முறைக்கு முன் மௌனம் சாதிக்கவே நிர்ப்பந்தித்து. அந்தளவுக்கு வன்முறையின் வார்த்தையும், பெண்ணின் மீதான ஆணாதிக்க இழிவாடல் மொழிகளும் கோராத்தை வெளிப்படுத்தின.

 

ஐனநாயகத்தை கொஞ்சம் தன்னும் காப்பாற்றியோர் இதை தவறு எனக் குறிப்பிட்ட நிலையில் வன்முறைகான சுயவிமர்சனத்தை பொதுவில் கோரிய போதும், சிலர் குறித்துக் கோரிய போதும், சுயவிமர்சனத்தை செய்து பின் நியாப்படுத்துவது, கேட்க்க மறுப்பது, அவை தமக்கு இல்லை என்ற மாதிரி ஐனநாயக வேடம் போட்டு வெளி நடப்பு செய்வது என கூட்டம் வன்முறையை நியாப்படுத்துவதில் அணைத்து வழியையும் கையாண்டாது. இதைத் தொடர்ந்து புலம் பெயர் நாடுகளுக்கு இதை நியாப்படுத்தியதன் தொடர்ச்யில் அங்கிருந்தும் வன்முறைக்கான ஆதரவுகள் அதிகரத்தின் வடிவத்தில் இருந்து நியாப்படுத்தப்படுகின்றது.

 

வன்முறையின் தொடக்கம், அதன் தொடர்ச்சியில் அதில் கன்னை பிரிந்தும் பிரியமலும் ஈடுபட்ட அணைவரும் வன்முறையின் பிரதிநிதிகள்தான். அத்துடன்  இதில் சம்மந்தப்படாது வெளியில் இருந்து இதை நியாப்படுத்தியவர்களும் வன்முறையின் பிரதிநிதிகள்தான்;. வன்முறை எதிர்ப்பாளன் அந்த இடத்தில் இதை தடுப்பவனாகவும், மௌனமாகவும் தமது கோபத்தை வெளிப்படுத்தியதுடன: விமர்சித்தனர்.

இந்த வன்முறை முன்கூட்டியே வளர்ச்சி பெற்றதால் அதன் தொடர்ச்சியையும் ஆராய வேண்டியுள்ளது. ஏன்னெனின் இது தீடீர் என நிகழ்ந்தவையல்ல. மாறக முன் கூட்டியே இதன் வடிவங்கள் படிப்படியாக அரசியல் சீராழிவால் மாற்றம் கண்டுவந்தன.

 

இந்த நிகழ்வையிட்டு சிலர் அதிர்ந்து போகவில்லை. மாறாக இதை அதன் அரசியல், கலை தளத்தில் எதிர் பார்த்தவர்கள்தான். ஆணால் கூட்டத்தில் முதன்முதலாக கூட்டத்தில் கலந்து கொண்டவன் முதல் நீண்ட உப்புச் சத்தற்ற பல கலந்துரையடால்களை கண்டவர்கள் பலர் அதிர்ந்து போயுள்ளனர். இனிமேல் மாற்று நடைமுறைக்கு இவைதான் தீர்வு என்ற அளவுக்கு புலம் பெயர் இலக்கியவான்களின் ஐனநாயக இலக்கிய நடத்தைகள் எமக்குமுன் விட்டுள்ளது. அத்துடன் மாற்று கருத்து முரண்பாட்டுக்கு இதுதான் பதில் என்ற தொடர் விளக்கத்தை அவர்களும், அவர்களின் தொங்குளும் பிரகடனம் செய்து பிரச்சாரத்தை முன்தள்ளுகின்றனர்.

 

இந்த வன்முறை என்பது தீடிரென எழுந்தவையல்ல. இதற்க்காக புலம் பெயர் இலக்கிய மூலத்தை ஆய்வு செய்வது அவசியமாகின்றது. இந்தவகையில் இரு போக்குகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

 

1.இலக்கியத்தின் நிலை
2.தனிநபர்களின் பாத்திரங்கள்

 

ஒடுக்கப்பட்ட அதாவது இனரீதியாகவும், ஐனநாயக ரீதியாகவும், புலம் பெயர் நாட்டில் நிற ரீதியாகவும், உழைப்பு ரீதியாகவும், கலாச்சாரப் பண்பாட்டுப் பிரிவாலும் இன்னமும் வேறு ஒடுக்குமுறைகளுடனும் (சாதி, பெண்...) புலம் பெயர்ந்த சமூகம் ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்து எமுந்து போராடவேண்டிய வராலாற்றுக் கடமையை அன்று தொடங்கி படிப்படியாக இன்று குழிதோண்டி புதைத்தபோது வன்முறையும் அதன் குணாம்சம் ஆகின்றது. மக்கள், மக்களின் துயாரங்கள் மலையாளவானது. எல்லையற்றவை. ஆனால் தனிமனித வக்கிரத்தில் இருந்து ஆங்கங்கே கொட்டிவிடும் படைப்புகளை தனதாக்கி மக்கள் இலக்கியத்தை துலைத்து நீண்டநாட்கள் ஆகிவிட்டன. மக்களின் தளத்தில் இருந்து சொந்தக் கருத்தை எழுத்தில் வைக்கமுடியாத அவலம். சொந்த நாட்டைப் பற்றியோ, புலம் பெயர் நாட்டைப் பற்றியோ, புலம் பெயர் தமிழர்களைப் பற்றியோ எந்தவிதமான அக்கறையின்மை வன்முறையின் தளமாகின்றது.. அதில் இருந்து சமூகத்தை பார்ப்பதும் கிடையாது. மனித அவலங்கள் எல்லையில்லாத பரிணமத்தில் விரிந்துள்ள நிலையில் இந்த இலக்கிய உலகம் கண்மூடி பால் குடிக்கும் பூனையானது. சிலர் எதாவது தெரிந்து கொள்ளலாம் என்ற முயற்சிகள் (கருத்தரங்குகள், கூட்டங்கள்....) வன்முறை மூலம் பந்தாடப்படுகின்றது அல்லது அவதூறுகள் மூலம் முடிவுக்கு கொண்டுவரப்படுகின்றது.. அதே பழைய இயக்க அரசியல். இதில் எந்த விதமான சுயவிமர்சனமும் கிடையாது. இந்த விமர்சனங்கள் என்பது கடந்தகால இயக்கத்தை அரசியல் ரீதியில் விமர்சிக்க முனையவேண்டும். இருக்கவேண்டும். இந்த வன்முறையில் ஈடுபட்டோர் கடந்த கால தமது அரசியல் அமைப்பையோ, தமது அரசியல் ரீதியன ஐனநாயக விளக்கத்தையோ என்றும் பகிரங்கமாக வைத்தில்லை. மாறாக தம்மை காட்டிக் கொள்ள சில கோசங்கள் அதன் மீதான கேள்விக்கு பதிலற்ற பூச்சாண்டிக்காட்டுவது என்று புலம் பெயர் அரசியல் மாற்றுகள் நாறிய போது, இதுவும் அம்பலப்பட வன்முறை அரங்கேறுகின்றது. இந்த வன்முறை தொடக்கியவரில் இருந்து அதில் கன்ணை பிரிந்து அணிதிரண்டு வன்முறையை செய்ய தயரான அணைவருமே வன்முறையின் பிரதிநிதிகள்தான்;. இவர்கள் அணைவரையும் பொதுவில் கண்டிக்க மாறுப்பவர்கள் அணைவரும் வன்முறையின் மறைமுகமான ஊக்கிகள்தான்.

 

இங்கு யார் முதல் தொடங்கியது என்பதோ, கன்ணை பிரிந்து வன்முறையை நியாப்படுத்தியதோ, பெண்ணை இழிவு படுத்தும் துசாணத்தால் வீரம் பேசியதோ, வன்முறையில் ஈடுபட தயராக அறை கூவல் இட்டோர் என்பதில் யார் குற்றவாளி என்பது இரண்டாம் பட்சமானது. மாறாக வன்முறையை அரசியல் ரீதியில் விமர்சிக்க தவறி ஐனநாயக்ததை குழிதோண்டிப் புதைக்கவும் பின்னால் அவர்களுடன் சேர்ந்து வக்களத்து வாங்கும் அணைவரும் கடும் விமர்சனத்துக்குரியவர்கள். இதை எல்லைப்படுத்துவது, விளக்கம் அளிப்பது என அணைத்தும் மிக கேவலமானது. ஒரு வன்முறையின் போது தற்காப்பு நடவடிக்கையை சம்பந்தப்பட்டவார் எடுக்கமுடியும்;. ஏன்எனின் முகம் தெரிந்த கடந்தகால இலக்கிய நன்பர்களாக திரிந்தவர்கள், அரசியல் ரீதியில் தம்மை ஓரே நிலையில் இனம் காட்டுபவர்கள், கன்ணை பிரிந்து வன்முறையில் ஈடுபடுவதும், வன்முறைக்கு கூவி அழைப்பதும் ஐனநாயகத்துக்கு எதிரானது. இனம் தெரியாத நபர்கள் இங்கு திடீர்ரென தாக்கும் போது இதன் தற்பரியம் வேறுபட்டவைதான்.

 

கருத்துச் சுதந்திரத்தின் எல்லை என்பது கருத்தை சுதந்திரமாக சந்திக்கும் வரைதான் உயிர் வாழ்கின்றது. இது மறுக்கப்படும்  எல்லா நிலையிலும் அவை தனிமனித பயங்கரவாதமாகின்றது. இது போல் கருத்தை பகிரங்கமாக வைக்காத அனைத்து நடவடிக்கையுயும் ஐனநாயகத்துக்கு எதிரானவைதான். இதுபோல் இல்லாதையும், திரித்து எழுதுவதும் ஐனநாயகம் அல்ல. வடிவத்தில் இவை வேறுபட்டாலும் பொதுவில் இவைகளின் அரசியல் வேறுபடுவதில்லை. இதில் தனிமனித பாத்திரங்கள் தீர்க்கமாக வன்முறையில் செயல்படுகின்றன.

 

வன்முறையை தொடங்கியதும், அதை தொடர்ந்ததும், நியாப்படுத்தியதுடன் நிகழ்வை தொடர்ச்சியில் கூட்டத்தை வன்முறைக்குள் இட்டுச் செல்ல தொடர்ச்சியான முயற்சிகளை னகயாண்டனர். மீண்டும் கூட்டத்தை தொடங்கிய போது வன்முறையை தொடரும் ஆவல், அதன் உச்சத்தனம், வன்முறை சாத்தியமில்லை என்றால் பகிஸ்கரிப்பும், கலந்து கொண்டாலும் வன்முறைக்கு தயார் என்று கூறி நிற்பதும் என்று தொடர் நிகழ்ச்சிகளை அரசியல் ரீதியில் விமர்சிக்க தவறி கூட்டம் கலைந்தது. வன்முறையயை கடைப்பிடிக்க தயரான அணைவரும் வன்முறையை நியபாப்படுத்திய படியேதான் வெளியேறினர். மொழியல் வன்முறை, மொழியல் ஆணாதிக்கம் என்ற உச்சரிக்காத புலம் பெயர் இலக்கியம், மற்றும் நபர்கள் இன்று இல்லை. ஆணால் பெண்கள் குறித்த தூசனப் பயன்படும் ஆணாதிக்கத்திகின் கோர முகத்தை அன்று காட்டியது. மிககேவலமான சொற் பிரயோகங்களால் ஆண்களை பெண்ணின்   நிலைக்கு தாழ்த்தி பெண்ணுக்கு ஓப்ப ஆணை இழிவுபடுத்திய போது, அதாவது பெண்ணையும் முரண்பட்ட ஆணையும் ஓரே நிலைக்கு கொண்டுவந்து இழிவுபடுத்தியது, ஆணாதிக்கத்தின் உச்ச கொப்பழிப்பாக இருந்தது. பெண்களை ஆணாதிக்கம் கொண்டு தாக்கும் போதும், திட்டும் போதும் இந்த தூசனம் தான் அதன் பொது மொழியாகின்றது. இந்த மொழிப் பிரயோகம் தொடங்கியவரில் இருந்து பலர் பயன்படுத்தினர். இது கண்டனத்தை எந்த சந்தர்ப்பத்திலும் கோரவில்லை.

 

இன்று இதற்கு மாற்றாக தூசனங்களை இலக்கியமாக்கும் முயற்சிகளின் தனிமனித வக்கிரத்தை கொட்டுவது அதிகரித்துள்ளது. எந்தளவுக்கு எந்தளவு அரசியல் அற்ற தனிமனித வக்கிரத்தை தனது தளத்திலும், பிற தளத்திலும் கையாள்கின்றனரோ அந்தளவுக்கு தனிமனித வன்முறை அரசியல் கோரமுகம் எடுக்கின்றது. சமூகத்தின் மொழி, சமூகத்தின் போராட்டம், சமூகத்தின் இலக்கியம்... என்ற பார்வை மறுத்த இலக்கியங்கள், செயல்கள்... அணைத்து தனிமனித வன்முறையின் மூலம் ஆகின்றது. மக்களை மாற்ற மொழி, இலக்கியம், செயல்;....  கோராத வரை வன்முறை தீர்வாகின்றது. அதுவே அரசியல் ஆகிப் போவது புலம் பெயர் இலக்கிமாகின்றது. இது தனது சொந்த சீராழிவால் முடிவுக்கு இட்டுச் செல்கின்றனர்.

 

இந்த வன்முறையின் பின்னணியில் நாம் அடையாளம் காணும் முக்கியமான விடையங்கள்

 

1.ஓட்டு மொத்த வன்முறையும், அதில் ஈடுபட்ட அனைவரும் விமர்சனத்துக்குரியவர்கள். இதை கண்டிக்க மறுப்பவர்களும் கண்டனத்துக்குரியவர்கள்.!

 

2.பெண்களை இழிபடுத்தி அடக்கும் ஆணாதிக்க துசாணப் பயன்பாட்டை பெண்ணியல் கண்ணேணாட்டத்திலும், மொழியல் கண்ணோட்டத்திலும் கடும் விமர்சனத்துக்குரியவை!

 

3.இந்த வன்முறைக்கு தூபமிட்ட அணைத்து இலக்கியமற்ற நடத்தைகள் மூலம், முதுகுக்கு பின் செய்யும் பிரச்சாரம், அழுக்குகள் செயல்கள் எல்லாம் கண்டனத்துக்குரியவை!

 

4.இலக்கியம் என்று எதுவுமற்ற, அரசியல் அற்ற போக்கின் வளர்ச்சி வன்முறை ஊற்று மூலமாக இருப்பாதால் அவையும் கண்டனத்துக்குரியவை!

 

5.இதில் சம்பந்தப்படாத மற்றைய நாட்டு நபர்கள் வன்முறையை நியாப்படுத்தியும், மறு தளத்தில் இலக்கியமற்ற செயல்களும், ஐனநாயகத்தை புதைக்க  ஈடுபடுபவர்களும் விமர்சத்துக்குரியவர்கள்.!

 

இந்த வகையில் இக் கண்டனம் மிகமுக்கியத்துவம் வாய்ந்;தன. மீண்டும் வரலாறு ஐனநாயகத்தினை கோரிய போதே இத்துண்டுப்பிரசுரம். அணைத்து வன்முறையையும் கண்டிக்கவும், அதையொட்டி சிந்திக்கவும் எம்மை நிர்பந்திக்கின்றது.

 

மணிவண்ணன் - கிளி - தில்லை - இரயா - விஐpயன்
12.10.1999

 

சின்ன ஒரு விடையத்துக்கே சுயவிமர்சம் செய்ய மறுத்து நியாயம் சொல்லி திரிப்பவர்கள் கடந்த காலத்தை எப்படி சுயவிமர்சனம் செய்திருப்பார்?

 

ஐந்து பேர் கையெழுத்திட்ட எமது துண்டு பிரசுரத்தை தொடர்ந்து சமரின் மேலதிக விளக்கங்கள் இவை.

 

புலம் பெயர் இலக்கியம் என்பது புலம்பெயர் நாடுகளில் மறைந்து செல்லும் இன்றைய நிலையில் பாரிசில் அவை உயிர் துடிப்புடன் இருப்பது போல் பசாங்கு செய்கின்றது. இந்த பாசங்கு என்பது தனிப்பட்ட மனிதர்களின் முரண்பாடுகளின் இறுக்கமான சூழலின் பிரதிபலிப்பே புலம்பெயர் இலக்கியமாக பாரிசில் எஞ்சிப் போய்யுள்ளது. இந்த முரண்பட்ட தனிநபர் நடத்தைகளில் இருந்து வெளிப்படுத்தும் கடைசி பரிஸ் தொகுப்பு இலக்கியம், தன்னளவில் தனக்குள் வன்முறையின் புகை மூட்டத்தை கொண்டு புரையோடிப் போய்யுள்ளது. இந்த இலக்கியம் இந்திய சமூகத்தில் நடைமுறையில் மக்களுக்காக போராட மாறுக்கும் பாட்டாளிவர்க்கத்துக்கு எதிரான பிரிவுகளிடம் கட்டுரைகளை பெற்று பிரசுரிப்பதில் எஞ்சிப் போய்யுள்ளது. இந்த இந்திய இலங்கை பிரிவுகள்; தம்மைப்பற்றி இலக்கியமல்லாத போலிப் பெயரை பதிவு செய்வர்கள் என்ற நம்பிக்கையிலும், அங்கு உள்ளவர்கள் இவர்கள் மூலம் வெளிநாட்டப் பயணம் அல்லது இவர்கள் மூலம் கிடைக்கும் என்ற எல்லைக்குள் இந்த இலக்கியம் தொங்கிப் போய்யுள்ளது. சஞ்சிகை நடத்துவோர் யாரும் எதையும் பெரிதாக எதோ ஒரு துறையைத்தன்னும் சொந்தத்தில் இலக்கியமாக எழுதமுடியாத நிலையில் தொகுப்பளராக மாறிய போக்கில் இந்திய புத்திஐpவிககளின் திருப்திப்படுத்தலும், (முன்பு இலங்கைப் புலம்பெயர் புத்திஐpவிகளை சார்ந்து இருந்த புலம்பெயர் இலக்கியம் உயிர் வாழ்ந்தது.) அதன் ஊடாக  தம்மை புகழ்வார்கள் என்ற நப்பாசையில் சீரழிந்துள்ளது. அத்துடன் இலங்கை தினசரி இதழ்களில் தம்மைத்தாம் புகழ்ந்து எழுதுவது என்று இந்த புலம் பெயர் இலக்கிய கடைசி மூச்சான பரிஸ் இலக்கியம் மரணப் படுக்கையில் இருந்தபடி வன்முறையை தனக்குள் நேரடியாக தீhவாக முன்வைத்து பரஸ்பரம் தம்மைதாம் நியாப்படுத்துகின்றனர்.

 

இதானல் எற்படும் எல்லாவிதமான அரசியல் போக்கையும் விமர்சிக்கும் போது அது மிக மூர்க்கமாக தன்னை இனம் காட்டுகின்றது. இதில் இருந்து விடுபட்டுவிட முடியாத வராலாற்று அம்பலப்படுத்தல் அவசியமாகின்றது. இதை எங்கெல்ஸ் எப்படி எதிர் கொண்டரோ அதைப் போல் போராட வேண்டியுள்ளது. இதை எங்கெல்ஸ் ".... இதன் மூலம் மிகப்பெரும் சங்கடங்களையே நான்  விலைக்கு வாங்கிக் கொள்கிறேன் என்று எனக்குத் தெரியும் ஆயினும் திடநம்பிக்கைகளின் வலிமையிலிருந்து எவ்வளவுதான் முயன்றாலும் என்னால் விடுபட முடியவில்லை... பகுத்தறிவின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதைப் பற்றிப் பேசப்படும்போது சகலவித நிர்ப்பந்தைத்தையும் நான் எதிர்க்கின்றேன்.|| எங்கெல்ஸ் குறிப்பிட்டது போல் நாமும் போராட கற்றுக்கொள்கின்றோம்.

 

இதன் அங்கமாக 3.10.1999 இல் பாரிசில் நடந்த வன்முறை முயற்ச்சியை தொடர்ந்து ஆறு வேறுபட்ட துண்டுபிரசுரங்கள் வெளியாகியிருந்தன. இந்த ஒரு சின்ன ஒரு விடையத்துக்கே சுயவிமர்சம் செய்ய மாறுத்து (நாலு துண்டுபிரசுரம்) நியாம் சொல்லி திரிப்பவர்கள் கடந்த காலத்தை எப்படி சுயவிமர்சனம் செய்திருப்பர்? இதையொட்டி இத்துண்டுபிரசுரங்களையும், இதையொட்டிய பிரதிபலிப்பையும் சுருக்கமாக விமர்சிப்பது அவசியமாகின்றது. இந்த மோசமான நடத்தைகளின் பின் தனிமனிதர்களின் நடத்தைகள் பற்றி பெயர் குறிப்பிட்ட விமர்சனம் அவசியமாகிவிடுகின்றது. ஏன்எனின் கடந்தகால இயக்க அரசியல், அதன் ஆதாரவு அரசியல், மற்றும் பலரும் தாம் அன்று நியாப்படுத்திய வன்முறை படுகொலைகளை எல்லாம் சுயவிமர்சம் செய்ததுகிடையாது. மாறாக இலக்கிய ஐம்பனாக போலித்தனமாக உயர்த்து எழுந்தவர்கள் தமது கடந்த அதிகாரங்கள், பிரமைகளை மூட்டை காட்டி வைத்திருந்தவர்கள் இன்று புலம் பெயர் இலக்கிய சீராழிவுடன் மீளவும் வன்முறையை கையாள பின்நிற்க்கவில்லை. பின் இதை நியாப்படுத்துவதும், சுயவிமர்சனத்தை செய்ய மாறுத்து கண்மூடி பால்குடிக்க நினைக்கும் இன்றைய நிலையில் இந்த அம்பலப்படுத்தல் என்பது வராலாற்றின் தேவையாக உள்ளது. நடந்த சம்பவத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் சுயவிமர்சனத்தை முன்வைக்க முன்வராதும், அனைத்து வன்முறையையும் பரஸ்பரம் இந்த சின்ன விடையத்தையே சுயவிமர்சனம் செய்யவும் விமர்சனம் செய்யவும் கண்டிக்க மறுத்த போதுதான், கடந்த காலம் மீதான இவர்களின் அரசியல் வன்முறையை, மக்கள் விரோத அரசியலை மட்டும,; எப்படி அரசியலில் சுயவிமர்சனத்தை செய்திருப்பர் என்பதை எம்முன் உள்ள அடுத்த கேள்வியாகும்.

 

இந்த வன்முறையில் நாம் எந்தப் பக்கமும் சார்பானவர்கள் அல்ல. அதற்க்காக நாம் நடுநிலையாளர்களும் அல்ல. மாறாக எமது நிலை இரண்டுக்கு எதிரான மூன்றாவது நிலையில் இரண்டையும் விமர்சித்தோம். ஏன்  இரண்டு பக்கமும் இல்லை என்ற வினாவில் மேலும் துல்லியமாக ஆராய்யின் ஒருதளத்தில் உச்ச வன்முறையும் மறுதளத்தில் சதிராட்டங்களும் கொண்ட பிரதான போக்கில் இரு தளத்திலும் பரஸ்பரம் இரண்டையும் கொண்ட சீரழிவு, சமூகத்துக்கு எதிரானது. இதனால் இரண்டினையும் எற்றுக் கொள்ளவில்லை. சமுதாயம் என்பது சமூக உறவின் ஓட்டு மொத்தமாகும். இது உழைப்பில் இருந்து வளர்ச்சி பெறுகின்றது. புலம் பெயர் இலக்கியம் சமூக உறவில் இருந்து அன்னியப்பட்டு, சமுதாயத்தில் இருந்து விலகிய வளர்ச்சியில் மேலும் வன்முறை சமூக உறவுக்கு எதிராக மாறிய நிலையில் இதற்க்கு எதிரான எமது போராட்டம் தீர்க்கமானது.

 

சமூக நடைமுறையை மாறுத்த போக்கில் தனிமனிதர்கள் சமூகமாக காட்டுவதும் அதில் தம்மை நியாப்படுத்துவதும் புலம்பெயர் இலக்கிய கேவலங்களாகின்றது. மார்க்ஸ சமூகத்துக்கும் தனிமனிதனுக்கும் உள்ள உறவை "மனித சமூக சாரம் என்பது, ஒவ்வொரு தனிமனிடமும் இயல்பாக உள்ளார்ந்திருக்கும் சாரம் என்பதல்ல அது சமூக உறவுகளின் முழுத்தோற்றம் ஆகும்|| என்றார். இதை மறுத்த தனிமனித எல்லைகள் நியாப்படுத்தல்களை நாம் மாறுத்துப் போராடக்கற்றுக் கொள்கின்றோம்;.  தனிமனிதர்களின் இருப்பை அவர்களின் உணர்வுகள் தீர்மனித்தவிடுவதில்லை. மாறாக சமூக இரப்பே தீர்மனிக்கின்றது. புலம் பெயர் இலக்கியம் சமூக உறவை மாறுத்து தனிமனித உணர்வுகளை முதன்மைப்படுத்திய போது அதன் ஆற்றல் விரியம் இழந்து சேடம் இழுக்கின்றதை அம்பலப்படுத்துகின்றோம்.

 

இந்த வன்முறை என்பது எனக்கு (றயாகரனுக்கு) எதிராகவே அன்று திட்டமிடப்பட்டு இருந்தது. சமர் 25 இல் சபாலிங்கம் கொலைபற்றி நான் எழுதியதை எதிர்த்து நான் பேசும் போது பகிஸ்கரிப்பு அல்லது கலாட்ட செய்ய முன்கூட்டியே தயார் நிலையில் வந்திருந்தனர். இவைகளை முன் கூட்டியே நான் தெரிந்திருந்த நிலையில், என் மீதான வன்முறைகூட நடக்கலாம் என்பதை சிலர் குறிப்பிட்டனர். இதை திட்டமிட்டவர்களிடைய உள்ள முரண்பாடு இரண்டு குழுவடிவத்தில் இவை எப்படி எதிர்த்து எனக்கு எதிராக கையாள்வது என்பதில் ஓத்தமுடிவற்ற தன்மையினால் அவர்களுக்கு இடையிலான மோதலாக அது மாறியது. இதை ஒரு கட்டத்தில் சபாலிங்கம் பிரச்சனையை ஒட்டி எனக்கு எதிராக மோத "பொடிகாட்டாக" (பாதுகாவலராக) புஸ்பாராசவுக்கும், அந்தோனிப்பிள்ளைக்கும் சார்பாக வந்தாக சுகன் குறிப்பிட்டதன் மூலம் இந்த கூட்டத்தை குழப்ப வந்ததை அல்லது இந்த விவாத்தில் கலந்து கொண்டது அதற்காவே என்பதை தெளிவுபடுத்தியிருந்தார். சபாலிங்கம் பற்றிய எனது விமர்சனத்தை எந்த நபரும் அரசியல் தளத்தில் விமர்சிக்க முடியாத இன்றைய நிலையில் அவைகளை ஊக்கப்படுத்த தயாரக இருப்பதை சமகால நிகழ்வுகளும் காட்டுகின்றது. அண்மையில் என்னை பிரஞ்சு உயர் பொலிஸ்சார் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டது எல்லாம் சபாலிங்கம் வழியிலான மக்கள் விரோத முயற்சியின் கைகைரியம் என்பதும் தெட்ட தெளிவாக இனம் கண்டேன். அன்று வன்முறை நிகழ்ந்த கூட்டத்தை எனக்கு எதிராக  திட்டமிடலில் சிலர் வெளியில் இருந்து திட்டமிட்டதையும், அவர்கள் கூட்டத்துக்கு வராதையும் அறியமுடிகின்றது. இதன் போக்கில் அன்று கூட்டம்பற்றிய முன்கூட்டிய எதிர்பார்ப்புடன்தான் சிலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆணால் எதிர்பார்த்தை தாண்டி அவர்களுக்கு இடையிலான முரண்பாடு அவர்களுக்கு இடையிலான மோதலாக தொடங்கி, அவை அடுத்த கட்ட முரண்பாடுகளுடனான மோதலாக வளர்ச்சி பெற்றது.

 

இந்த நிலையில் வன்முறைபற்றிய ஒருதலைப்படசமாக "அசோக்கிற்கு ஒரு முத்தம்e என்ற பெயரில் தனிநபர் தாக்குதலை எழுபேர் கையெமுத்துடன் நடத்தியிருந்தனர். அசோக் அன்று வன்முறையை நடத்த முயன்றதும், தொடர்ந்தும் அதை நியாப்படுத்திதும், தனக்கு சார்பாக வன்முறையில் குதித்த கலைச்செல்வனையும் லட்சுமியையும் இன்றும் விமர்சிக்க மறுத்து பாதுகாப்பதன் மூலம், அசோக் வன்முறையையும், தனக்கு சார்பான வன்முறையை நியாப்படுத்தி பாதுகாக்கும் செயல்களினை விமர்சிப்பது ஐனநாயகவாதியின் கடைமையாகும்;. இதன் பொருள் அசோக் தனதும், தனக்கு சார்பான வன்முறையை (கடந்தகால இவர்களின் இயக்க வன்முறையுடன் ஒப்பிடும் போது இது சின்ன விடையம்) விமர்சிக்க மாறுத்தது என்பது கடந்தகால சொந்த இயக்கத்தின் அரசியலையே விமர்சிக்கமாறுப்பதை வேறு காட்டுகின்றது. அத்ததுடன் அக் கூட்டம் பற்றி கலைச்செல்வன் லட்சுமி; வெளியிட்ட உயிர்நிழல் சஞ்சிகை கூட்டம் பற்றிய திரித்த குறிப்பில் எந்தவிதமான சுயவிமர்சனத்தை செய்யாது சம்பவதைத்தையே இருட்டடிப்பு செய்தன் மூலம் வன்முறையை மேலும் கடந்தகால இயக்கபாணி அரசியலில் நியாப்படுத்தி வழியில் தம்மை பாதுகாத்துடன்  தமது கடந்த கால இயக்க வன்முறையை மேலும் விமர்சிக்க மாறுப்தைக் காட்டுகின்றது. சுழிபுரம் படுகொலை, இறைகுமார் உமைகுhரன் படுகொலை போன்றவை எல்லாம் இப்படித்தான் மறுக்கப்பட்டது, நியாப்படுத்தப்ட்டது, தமது அணிக்கும் மக்களுக்கும் மூடி மறைத்து புலியின் ஐனநாயக மீறல் பற்றி பேசியபடி தமது வன்முறை அத்துமீறல்களை தமது பத்திரிகையிலும் ஊடகங்களிலும் இருட்டடிப்பு செய்தே கடந்தகால மக்கள் விரோத அரசியலை தொடாந்தனர். இது கடந்தகால இயக்கத்தையும், அதன் அரசியலையும், நடத்தைகளையும் அரசியல் ரீதியில் சுயவிமர்சம் செய்யாதன் வெளிபாடுதான் அன்று நடந்த சம்பவமும் அதை தொடர்ந்த அனைத்து செயல்பாடுகளும் காட்டுகின்றன. அத்துடன் இந்த வன்முறையை அசோக் கலைச்செல்வன் சார்பாக லண்டனில் இருந்து நியாப்படுத்தி விளக்கம் கொடுத்த சந்தர்பவாதியும் பொறுக்கி அரசியல் செய்துகொண்டிருக்கும் யமுனாவை பாதுகாக்க உயிர்நிழல் முயன்றனர். அந்தவகையில் யமுனாவின் மார்க்கிய தலைவர்கள் மீதான அவதூற்றுடன் கூடிய தனிநபர் தாக்குதலை உள்ளடக்கிய உயிர்நிழல் கட்டுரையை விமர்சித்த எனது கட்டுரையில் யமுனாவின் வலதுசாரி அரசியலை அம்பலப்படுத்திய எனது கட்டுரையை வாசகர் கடிதம் ஆக்கி தமது வன்முறையை நியாப்படுத்த வெட்டி திரித்து தமக்கு சார்பாக இந்த வன்முறைக் கும்பல் திட்டமிட்டே மாற்றியுள்ளனர். யமுனாவின் பொறுக்கி அரசியலை இக்கட்டுரையை தொடர்ந்து பின்குறிப்பில் பார்ப்போம்.

 

மறுதளத்தில் அசோக்கு எதிராக எழுபேர் கையெழுத்திட்ட துண்டறிக்கை தனிநபர் தாக்குதலாக மாறியது. விமர்சனம் என்பது வன்முறை மீதான அரசியல் விமர்சனத்தால் விமர்சிக்கப்பட வேண்டும். ஆணால் அதை எந்த இடத்திலும் செய்யாத துண்டுப் பிரசுரம் அசோக் மீதான தாக்குதலை அவரின் உளரல்களின் மீது செய்திருந்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால் இதை கையெழுத்திட்டவர்களில் ஒரு பகுதியினர் எதிர்தரப்பு வன்முறையில் ஈடுபட்டதுடன், உச்சம் தொனியில் துசானத்தால் சவால் விட்டதுடன், அசோக்கு எந்த விதத்திலும் குறையாத அதே உளரலை செய்தவர்களே. குறிப்பாக எக்சில் ஆசிரியர் கணேஸ்(கற்சுறா) அன்று தூசனத்தால் உச்சதொணியில் சண்டைக்கு வரக்கோரி அழைத்தபடி வெளியில் சென்றார். அவருடன் nஐபாவும் எழுந்து சென்று வெளியில் வன்முறைக்கு தயார் ஆனர். இங்கு அசோக் தயராக வெளியில் சென்றதெல்லாம் அன்றைய சம்பவங்கள். மீண்டும் புஸ்பராஐhவுடன் மீண்டவர்கள் எக்சில் ஞானம்(ஸடாலின்) உட்பட வாத்தைகளை உளரலாக கொட்டி தீர்த்தனர். இதைத்தான் வழக்கம் போல் கலைச்செல்வன் தனது புலம்பெயர் இலக்கிய வாழ்வில் செய்பவர். இப்படி எல்லாம் இருக்க அசோக்கை மட்டும் குற்றம் சாட்டியும் அவரின் உளரால்களை மட்டும் அரசியல் இன்றி முன்வைத்து தாக்குவது தனிநபர் தாக்குதல்தான். தமதுதரப்பு வன்முறையை ஒருவரிதன்னும் கண்டிக்க மறுத்து வன்முறையில் ஈடுபட்டவர்கள் கையெழுத்திட்டு வெளியிட்ட சம்பவம் கடந்தகால இயக்கபாணியிலான மக்கள் விரோத மோசடி அரசியலாகும்;. தமிழ் மக்களின் பெயரில் சந்திகளில் உயிரற்ற நிலைக்குள்ளாக்கி தொங்கவிடப்பட்டவர்கள் பின் இருந்தோர் எதைச் செய்தனரோ அதையே மீண்டும் சம்பவத்தை திரித்து தமிழ்மக்களாகி கருத்து கூறி விடுவது மோசடியாகும்.

 

அசோக்கின் புலம்பல் சொற்கோவைகளை எடுத்து முன்வைத்தவர்கள் தங்கள் சொற்கோவைகளை மறைத்து நல்லபிள்ளை வேடம் போட்டு நடித்ததுடன், தம்தரப்பு வன்முறையை பாதுகாத்தன் மூலம் வன்முறையை மறுதரப்பில் நியாப்படுத்தியுள்ளனர். எமது துண்டுபிரசுரத்தை அடுத்து அதன் பிரதிபலிப்பாக விஐp, nஐபா கையெழுத்திட்ட துண்டு பிரசுரத்தில் (இங்கு அந்த வன்முறை நடந்த போது nஐபா துசானப் பயன்பாட்டை நியாப்படுத்தியவர். அதை தான் கையெழுத்திட்ட துண்டுப்பிரசுரத்தில் சுயவிமர்னசம் செய்யவில்லை. யாரோ பேசியோரை பெயர்குறிபிடாது கண்டிக்கின்றரே ஓழிய தான் நியாப்படுத்தியதை அல்ல) ஆணாதிக்க துசானப் பிரயோகத்துக்கு எதிராக எழுதிய அதே நேரம் அவர்களுடன் முதல்நாள் கையெழுத்திட்ட ஆண்கள், தமது ஆணாதிக்க வக்கிர சொல்லாடலை வேறு சுயவிமர்சனம் செய்ய தயராற்றதன் மூலம் இரண்டு பெண்களுடன் கண்டிப்பு நின்று போனது. இதனால் முதல்நாள் கையெழுத்திட்ட ஆண்கள் தம்மை ஆணாதிக்க வாதிகள் என தம்மைக் காட்டிக் கொண்டனர். அதே நேரம் இதை வெளியிட்ட பெண்கள் தூய்மை, அசுத்தம் போன்ற வரையறைக்குள் உடன்பாடு இல்லை என வேறு தமது அரசியல் நிலையை அந்த துசானப் பயன்பாட்டின் மீது கூறியதன் மூலம் பெண்ணை இழிவுபடுத்த ஆண்,பெண் பாவிக்கும் சொற்களுக்கு கோட்பாட்டில் ஆதாரவு தெரிவித்தனர். நடைமுறையில் எதிர்ப்பு, கோட்பாட்டில் ஆதாரவு என்ற இரட்டை நிலை சந்தர்ப்பவாதம் இவர்களின்  ஆணாதிக்கமாகியது.

 

எழுபேர் கையெழுத்திட்ட துண்டுபிரசுரத்தில் அனைத்து வன்முறையையும் (பாட்டாளி வர்க்க....உட்பட) சமரசமில்லாது   எதிர்ப்பதாக கூறியவர்கள் சொந்தத்தில் எழுந்த வன்முறையுடன் எப்படி கையெழுத்தின் பின் சமராசமானர்கள். கையெழுத்திட்டவாகள் சிலர் சண்டித்தனத்துக்கு அழைப்பு விட்டதும், துசானத்தால் உச்சம் தொனியில் அலறியதும், வாய்க்கு வந்தபடி புலம்பியதை எல்லாம் மறைத்த சமரசம், கேவலம் எல்லாம் வன்முறையை நியாப்படுத்தும் மறுபக்கம்தான். அத்துடன் சொந்த தளத்தில் எழுந்த வன்முறையை மறைத்து கையெழுத்திட்ட, நேரடி வன்முறையில் ஈடுபடதோரும் தம்பக்க வன்முறையை மறைத்து பாதுகாத்தன் மூலம் வன்முறையின் பிரதிநிதிகள்தான் என்பதை சுயவிமர்சனம், விமர்சனம் இன்றி காட்டியுள்ளனர். அதாவது கடந்த கால இயக்கங்கள் படுகொலை செய்தவர்களை பாதுகாக்கும் முயற்சியில் அதன் அரசியல்பிரிவு ஈடுபட்டது போல் இது கடந்த கால இன்றைய அரசியலாகியது.

 

வன்முறைபற்றிய ஒருதலைப்பட்சமான தனிநபர் தாக்குதல் அவதூறை இத்துண்டுபிரசுரம் செய்திருந்தது. வன்முறையில் ஈடுபடத் துடித்தெழுந்த அசோக்கை தொடர்ந்து சுகனுக்கு ஆதாரவாக துசானத்தால் எதிர்தரப்பை சண்டித்தனத்துக்கு அழைத்தபடி கதிரையை காலால் பின் எத்தியபடி  வன்முறையின் அடுத்த கட்டத்தை தொடக்கி வைத்த கதாநயாகன் கலாமோகன் ஆவர். இதைத் தொடர்ந்தே அடுத்த கட்ட வன்முறை (கலைச்செல்வன் தொடங்கினர்.) வளர்ச்சி பெற்றது. இந்த இடத்திலும் அசோக்கை தடுத்தவர்கள் வன்முறைக்கு எதிராக இருந்ததுடன் வன்முறையில் ஈடுபட்டோர் (குறிப்பாக கலைச்செல்வன்) தடுத்தவர்களுடன் உடன் அக்கணத்தில் மோதிவிடவில்லை. மாறாக கலைச் செல்வன் கலாமோகன் சுகனுக்கு சார்பாக வன்முறையில் ஈடுபட எழுந்த போதே மோதலில் ஈடுபட்ட தொடங்கியதுடன் அதை உச்ச எல்லைக்கு இட்டுச் சென்றது மட்டும் இன்றி கூட்டத்தை விட்டு வெளியேறிய தருனத்தில் வன்முறையில் ஈடுபட தயாராக உள்ளதாக அறைகூவல் இட்டுச் சென்றார். கலைச் செல்வன், ஞானம் தமது உச்சம் தொனியில் வன்முறைக்கு அழைப்பு விட்டு புலம்பிய அதை யாராலும் கட்டுப்படுத்த முடியாத நிலையில் அவர்களை அவர் அவருடன் சேர்ந்து வாழ்வோரே (மணைவிமாரே)  கட்டுப்படுத்த முடிந்தது. அந்தளவுக்கு மொழியாடல் வன்முறை மீது உச்சத்தில் இருந்தது. கலாமோகன் மற்றும் அரவிந்தஅப்பாத்துரை வெளியிட்ட தனித்தனி துண்டுபிரசுரத்தில் தன்னையும், கலாமோகனையும் பாதுகாக்கும் வகையில் திரித்து சமாதனம் நாடகம் காட்டுவதும், மற்றவர் மீது குற்றச்சாட்டை சோடிப்பது வன்முறையின் ஒருபக்கத்தை பாதுகாத்து வன்முறையின் பிரதிநிதியாக இருக்கின்றனர்.

 

சுகன் போன்றோர் தன்னைத்தான் புகழ்ந்து எழுதியும், பண்பாட்டு கலாச்சரா சீராழிவின் பிரதிநிதியாக திரிந்தபடி, கூட்டங்களில் சம்பந்தமில்லாது உளறிக் கொட்டி குழப்பியபடி, சகுனித்தனத்தின் ஓட்டுமொத்த நரித்தனத்தையும் செய்தபடி அதையே அரசியலாக, புலம்பெயர் இலக்கிய நடத்தையாக செய்யும் அருவருப்புகளை கண்டிக்க திரணியற்ற மனிதர்கள் கருத்தை கருத்தால் எதிர் கொள் அழைப்பது வேடிக்கையானதுதான். அதற்க்காக தாக்கவோ அல்லது சுகன் போன்றோரின் கூட்டத்தை சம்பந்தமில்லாது அலட்டி குழப்பும் போக்கு அடித்தால் (இப்படி பலர் அடிப்பதை நியாப்படுத்தகின்றனர்) விடுதலைப் போராட்டத்தை குழப்புவதாக கூறி ஏன் புலிகள், துரோக இயக்கங்கள் அடிக்க, சுட முடியாது. இங்கு இரண்டுக்கு எதிராக போராடாத ஐனநாயகம் என்பது கேலிக் கூத்தாகும். மறுதளத்தில் கருத்தை கருத்தால் எதிர் கொள்ள சகுனித்தனத்தின் ஒத்த ஒரே முகமான சுகனால் முடியாதபோது கருத்தை கருத்தால் எதிர் கொள்ள கையெழுத்திடுவதும் சகுனித்தனம்தான். இதற்க்கு ஒத்து ஊதியவர்களும் அதன் தொங்குகள்தான். சுகனை இதற்க்காக குற்றம் சாட்டியபடி சுகனின் சகுனித்தனத்தை ஒத்த பலர் அதற்க்கு வன்முறை தீர்வாக கூறியபடி அதிலும் குறைவாக இன்று அதே சகுனித்தனத்தில் ஈடுபடுவது எதிர்தரப்பு புலம் பெயர் இலக்கியமாகியுள்ளது.

 

ஒட்டமொத்த வன்முறையை கண்டிக்காத அனைவரும் வன்முறையை எதோ ஒருவகையில் நியாப்படுத்துபவர்கள்தான். கூட்டம் பற்றி கருத்து கூறி வன்முறைபற்றி மௌனம் சாதிப்பதும் வன்முறைதான். நடந்தை திரித்தும், ஒருதலைப்பட்சமாக திரித்துக் காட்டுவதும் வன்முறைதான். அத்துடன் தமக்கு சதாகமானவர்களை வன்முறையிலும், எழுத்திலும், மற்றவர் எழுத்தை வெட்டுவதிலும் பாதுகாப்பதும் வன்முறைதான். இந்த வன்முறையில் ஊக்கத்துடன் ஈடுபட்டவர்கள், நியாப்படுத்தியவர்கள், திரித்தவாகள், சகுனித்தனத்தில் சதி செய்பவர்கள் உயிர்நிழல், எக்சில், நாட்டமை, அசை (இப்பத்திரிகை வெளிவர உள்ளதாக கலக்குறியில் குறிப்பு போட்டவர்)  போன்ற சஞ்சிகையாளர்களும், ஆங்காங்கே எழுதிக் கொண்டு இருப்போராவர். ஏன் இவர்கள்  அணைவரும் பின்நவீனத்துவ (சிலர் ஐமுனா மாதிரி அரைகுறை பின்நவீனத்துவ வாதிகள்) வாதிகள் ஆவர். அத்துடன் புலியின் ஐனநாயக மீறல் பற்றி கூறியபடி தமது வன்முறையை சுயவிமர்சனம் செய்ய தயார் அற்றவர்கள்தான். பாட்டாளி வர்க்க ஐனநாயக மீறல் பற்றியும் வாய் கிழிய உப்புச் சப்பின்றி உளறுபவர்கள்தான் இந்த புலம் பெயர் உன்னதமான இலக்கியவான்களாக காட்டிக் கொள்ளும் வன்முறையாளர்கள்;. மூகமுடிகளின் பின் ஒளித்துக் கொண்டவர்கள் இன்ற வன்முறையை செய்தன் மூலம், அதை நியாப்படுத்தியதன் மூலம், அதை பாதுகாப்பதன் மூலம் கன்னை பிரிந்து நிர்வணமாகியுள்ளனர். புலம்பெயர் இலக்கியம் என்பது வன்முறையின் வன்மத்துடன்தான் பின்நவீனத்துவ வழிகளில் அழிந்து கொண்டு இருக்கின்றது.. இதுமூடிமறைத்த வழியில் உயிர் வாழ்ந்தது முடிவுக்கு வந்து நாலு சந்திக்கு நிர்வணமாகி சந்தி சிரிக்கின்றது.

 

பின்குறிப்பு

 

யமுனா புலம்பெயர் இலக்கிய வன்முறையை நியாப்படுத்தியபடி நிகழ்கால ஈழ எந்த வன்முறையையும் கண்டித்தில்லை. மாறாக அந்த வன்முறைகளை பாதுகாத்து அதில் தொங்கிய படி மேலும் மக்கள் விரோத அரசியலில் கால்விரித்துளதே அவரின் அரசியல் வாழ்க்கை. ஐனநாயக விரோத, மக்கள் விரோத வன்முறை நாயகர்களுடன் சேர்ந்து யமுனா பார்பணியத்தையும், ஆணாதிக்கத்தையும், சாதியையும் நியாப்படுத்தும் சினிமாக்ளை பார்பணிய சதிப்பானியில் அதே கண்ணோட்டத்தில் நியாப்படுத்திய ஒரு பொறுக்கி அரசியல் பிழைப்பு நடத்துபவர். இந்த பொறுக்கி பகிஸ்தானில் அண்மையில் எற்படுத்தப்ட்ட இராணுவ புரட்சி பற்றியும் இதானால் இலங்கையில் என்னவிளைவு எற்படும் என்ற கேள்விக்கு அளித்த பதிலை எனது நன்பர் ஒருவர் தொகுத்து தந்ததை பார்ப்போம்;. "பாகிஸ்தானில் எப்போதும் ஐனநாயகத் தன்மை இருந்ததில்லை. அதற்க்கான ஐனநாக அமைப்புகளை அந்த நாடு கட்டியதில்லை. இதனால் பாகிஸ்தானில் இரானுவ சர்வதிகாரம் எற்படுவது இயல்பு.


இந்தியாவை நீங்கள் பார்த்திர்களானால் அங்கு ஐனநாயக தன்மை நீண்டிருக்கும்; மனித உரிமைக்கான குரல்கள் ஒலிக்கின்றன.நடாளமன்றத்தில் கூட ஐனநாயகம் பரிணாமித்துள்ளது. இந்திர, ராஐPவ் அரசகளைவிட அண்மையில் இந்தியாவில் தெரிவான பாரதிய ஐனதா கட்சி மற்றை கட்சியில் தெரிவனோருக்கு (கூட்டணி கட்சினருக்கு) அதிக அமைச்சு கொடுத்திருப்பது இந்தியா ஐனநாயகத்தின் வெளிப்பாடு.||என்றரே யமுனா. இதை அதிர்த்தியுடன் எழுதிய நன்பர் ஐமுனாவிடம் ஐனநாயகம் பற்றி கேட்டு எழுதி தந்தை அப்படியே தருகின்றேன்.

 

"யமுனாவின் பார்வையில் இந்திய ஐனநாயகம் இப்படியுள்ளதா?


1.இலங்கை, மலை தீவு ஆக்கிரமிப்பு

 

2.இலங்கையில் ஆயிரக்கனக்கான மக்கள் படுகொலை

 

3.காஸ்மீர் தொடக்கம் தமிழ்நாடுவரை விடுதலைப் போரளிகள், மனித உரிமைவாதிகள் பல ஆயிரம் கொலைகள்

 

4.மூஸ்லிம், கிருஸ்த்தவ ஆலையங்கள் இடிப்பு, கற்பழிப்பு, மதகுருமார் கொலைகள்

 

5.உலகில் குழந்தை உழைப்பளாரை வருத்தும் முதல் பெரும்நாடு


6.பல கோடி தாழ்த்தப்பட்ட வாக்களரை வாக்களிக்க விடாது தடுத்த ஐனநாயக நாடு

 

7.கோடிக்கணக்கான தாழ்த்தப்டடோரை தனிக்குவளை, செருப்பு அணியத் தடை... போன்றவற்றை அணியத்தடை

 

இவற்றை எல்லாம் ஐனநாயகம் என ஐமுனா எப்படி நியாப்படத்த மடிந்தது."


இந்த நன்பர் ஒரு எழுத்தளார் அல்ல. ஆணால் நியாமாக எழுப்பிய கேள்விகள் எல்லாம் பார்ப்பாணிய சதியில் ஐனநாயமாகின்றது என்பது உண்மையே.

 

ஐனநாயகம் என்பது சுரண்டுவோர்க் கிடையில் பங்கிடுவதில் யமுனா நியாப்படுத்துகின்றார். ஆளும் வர்க்கங்கள் தமக்கிடையில் பங்கிட்டுக் கொள்ளும் அதிகரங்கள் மக்களை கூட்டாக எப்படி சுரண்டுவது, எப்படி அடக்குவத என்hபதற்றாவே ஒழிய மக்களின் ஐனநாயக ஆட்சிக்காக அல்ல. ஐனநாயகம் என்பது மக்கள் என்னத்தை பெற்றர்கள் என்பதை பொறுத்தது. அத்துடன் அவை எப்படி பகிரப்படுகின்றது என்பது தொடர்பானது. அதாவது மக்கள் ஆட்சியை தமதுதாக்கும் நிகழ்வில் இது ஐனநாயமாகின்றது. மற்றவை சுரண்டி அடக்கி ஆள நினைப்பது ஐனநாயகமல்ல. ஆணால் பார்ப்பணியம் இதை எற்றது கிடையாது. இதை யமுனா நியாப்படுத்தும் போது யமுனா ஐனநாயகம் வன்முறையால் பார்ப்ணியமாயமாகின்றது.

 

இந்தியா ஐனநாயக நாடு என்று பூ வைத்தவர். பராதி ஐனதா ஒரு ஐனநாயக கட்சி என்று ஆசி வழங்கியவர். இந்திய தேர்தலில் தாழ்த்தப்பட்ட மக்கள் வாக்களிக்க விட மாறுத்ததம், கஸ்மிரில் துப்பாக்கி முனையில் வாக்ளிக்க அழைத்துச் செல்லப்பட்ட பல வக்கிரங்க ஐனநாயகம் சந்தி சிரிக்க அவை ஐமுனாவின் ஐனநாயகமானது. இந்தமாதிரி யமுனா, கண்ணன் (இவர் பரிசில் அண்மையில் பார்ப்பணிய இந்துதர்மத்தை பாதுகாக்க காதஉபதேசம் செய்தவர். இவர் மார்க்சியத்தை விமர்சிக்கும் ஐனநாயகவாதியாகின்றார்.) போன்ரோரை விமர்சித்த எனது விமர்சனக் கட்டுரை அம்பலப்படுத்தப் படுத்த பகுதிகளை கருத்து சுதந்திரத்தின் எல்லை இல்லாத சுதந்திரத்தில் இருந்து தமது வன்முறையின் உச்சத்தில் வெட்டி நிக்கினர். ஏன்எனின் அசோக், கலைச்செல்வன், லட்சுமி தலைமையிலான வன்முறையில் ஈடுபட்டோரை யமுனா, தனது வன்முறை மீதான பார்ப்பணிய ஐனநாயகத்தில் இருந்து பாதுகாக்க, எதிர்தரப்பில் யமுனாவை இவர்கள் பாதுகாத்து வன்முறை அரசியலை தொடர எனது கட்டுரையை கூட்டாக வெட்டி அடுத்த வன்முறையை கருத்தில் செய்தனர். வந்தேறு குடிகளான பார்பணர்கள் இந்தியா மக்களை சதியால் மோசடியால் எப்படி வென்று இந்திய மக்களை அடக்கி தமது பண்பாட்டால் ஆதிக்கத்தை எற்படுத்தி இன்று அந்த மக்கள் நரக சேற்றில் தள்ளினர். இதையே புலம்பெயர் இலக்கிய பலவீனத்தில், அதன் வெற்றவேட்டுதனத்துக்கு பின்னால் இவர்கள் தமது இடத்தை இந்த புலம்பெயர் சமூகத்தின் மீது குந்தி இருந்து பிற்போக்கை நியாப்படுத்தி பார்பணியத்தின் அதே சதியை கையாள்ளுகின்றனர். ஈழத்தமிழர் இந்திய சினிமா பற்றி இருந்த பொதுவான முற்போக்கான எதிர் கண்ணோட்டத்தை யமுனா போன்ற பாhபணிய சாதியாளர்கள் அதை நியாப்படத்த கோட்பாட்டுவிளக்கம் கொடுத்து நிறுவ புலம் பெயர் ஈழத் தமிழர்களின் அரசியல் குருட்டுத் தனத்தை களமாக பயன்படுத்தி வருகின்றனர். படுகேவலமான ஆணாதிக்க, சாதித் திமிர், சுரண்டல் ஆதிக்க சிந்தனையை பரப்பும் படங்களை எல்லாம் புகழ்ந்து மோசடியில் மக்களை எமாற்றி அதன் பிற்போக்கில் ஆளும் வர்க்கத்துக்கும், பணக்கரா கொழுத்த மக்கள் விரோதிகளின் படத்துக்கு விளம்பரம் செய்கின்றார். பாம்பாய் சினிமாவின் பார்பணியத் திமிரை முஸ்லிம் மக்களுக்கு எதிராக நியாப்படுத்திய பார்பாணின் மறுமுகம்தான் யமுனா.


பி;.இரயாகரன்
18.10.1999