Super User வண்டிக்காரன் அதோ பாரடி அவரே என் கணவர்--அதோ பாரடி!புதுமாட்டு வண்டி ஓட்டிப்போகின்றார் என்னை வாட்டி!அதோ பாரடி!இருப்பவர் உள்ளே முதலாளி செட்டிஏறுகால் மேல்தானென் சர்க்கரைக் கட்டிதெரிய வில்லையோடி தலையில் துப்பட்டி?சேரனே அவர்என்றால் அதில்என்ன அட்டி?அதோ பாரடி!ஐந்து பணத்தினை என்னிடம் தந்தார்அடிசாயும் முன்னே வரவு மிசைந்தார்அந்தி வராவிட்டால் பெண்ணே இந்தா"ஆசைமுத்தம்" என்று தந்து நடந்தார்!அதோ பாரடி! http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt101 Previous Article மாடு மேய்ப்பவன் Next Article புரட்சித் திருமணத் திட்டம் நடத்தும் முறை