Super User உதய சூரியன் உலகமிசை உணர்வெழுப்பிக் கீழ்த்திசையின் மீதில்உதித்துவிட்டான் செங்கதிரோன்; தகத்தகா யம்பார்!விலகிற்றுக் காரிருள்தான்; பறந்ததுபார் அயர்வு;விண்ணிலெலாம் பொன்னொளியை ஏற்றுகின்றான் அடடா!மிலையும்எழிற் பெருங்கடலின் அமுதப்ர வாகம்!மேலெல்லாம் விழிஅள்ளும் ஒளியின் ப்ரவாகம்!நலம்செய்தான்; ஒளிமுகத்தைக் காட்டிவிட்டான், காட்டிநடத்துகின்றான் தூக்கமதில் ஆழ்ந்திருந்த உலகை!ஒளிசெய்தான் கதிர்க்கோமான் வானகத்தில் மண்ணில்உயர்மலைகள், சோலை,நதி இயற்கைஎழில் கள்பார்!களிசெய்தான் பெருமக்கள் உள்ளத்தில்! அதனால்கவிதைகள், கைத்தொழில்கள் என்னென்ன ஆக்கம்!தெளிவளிக்க இருட்கதவை உடைத்தெறிந்தான் பரிதி!திசைமகளை அறிவுலகில் தழுவுகின்றார் மக்கள்;ஒளியுலகின் ஆதிக்கம் காட்டுகின்றான்; வானில்உயர்கின்றான்; உதயசூ ரியன்வாழ்க நன்றே! http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165iyatkai.htm#1.6.%20உதய%20சூரியன் Previous Article மக்கள் நிலை Next Article சிரித்த முல்லை