Language Selection

பி.இரயாகரன் 1996-2000
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

காலக்குறி இலக்கம் 10 இல் யமுனா ராNஐந்திரன் புக்கர் பரிசு பெற்ற அருந்ததி ராய்வின் கதையை புகழ்ந்தும்,  எதிராக விமர்சிப்பவர்கள் எல்லாம் இடதுசாரி அரசியலை முன்னெடுக்க லயக்கற்றவர் என முன்வைக்கின்றார்.

 

 

அக்கட்டுரையில் ''கம்யூனிசம் உலகெங்கிலும் நெருக்கடிக்கு உள்ளாகிறது." என ஐமுனா எழுதுகின்றார். கம்யூனிசம் உலகு எங்கும் நெருக்கடிக்கு உள்ளாகின்றது என்ற யமுனாவின் கண்டுபிடிப்பு மூலம், முதலாளித்துவம் இறுதியான வெற்றியை பெற்றுள்ளது என்பதைத்தான் கூறவருகின்றார். ஆனால் மூன்றவது பாதையான முதலாளித்தவம் மனிதபிமானமாக மாறினால் சரி என்பது தான் யமுனாவின் அரசியலாகும். மார்க்சியத்தால் நிறுவப்பட்ட கம்யூனிச சமூக விஞ்ஞான உண்மையை, அதன் உள்ளாhந்த  வர்க்கப் போராட்ட விதிகளை யாரும் உலகில் விஞ்ஞான பூர்வமாக தவறனவை என நிறுவியது கிடையாது. வர்க்கப் போராட்டம் மனிதன் வாழ்கின்ற எல்லா இடத்திலும் நீரும் நெருப்புமாக உயிர் வாழ்வதுடன், அதன் ஏழுச்சிகள் ஏற்ற இறக்கம் கொண்ட மனித இடைவெளிகள் நிடிக்கின்றது. கம்யூனிசம் தனது தத்துவர்த்த ரீதியிலும் சரி, அதன் போராட்ட பாதையிலும் நெருக்கடிக்குள்ளானதில்லை. மறாக சுரண்டு வர்க்கத்துக்கும் சுரண்டப்பட்ட வர்க்கத்துக்கும் இடையில் நடக்கும் அதிகாரத்துக்கான போராட்டம்;  தான் மாறி மாறி அதிகாரத்தை பெறுவது இழப்பதுமாக நிடிக்கின்றது. இது வர்க்கப் போராட்ட பாதையில் இயல்பானது மட்டுமின்றி மாhக்சியம் இதை முன் கூட்டியே இதை புரிந்தும் இருக்கின்றது. இது தத்துவார்த்த நெருக்கடியாலோ, போராட்ட நெருக்கடியலோ அல்ல மாறக இரண்டு வர்க்கத்துக்கும் இடையில் நடக்கம் போராட்டத்தில் இது யதார்த்தமானது.

 

''.. உலகின் எந்த மனிதனும் எந்த மனிதனுடையதும் அனுபவங்களையும் உணர்ந்த கொள்ளக் கூடியவனாகவே இன்று இருக்கின்றான்" என்ற கண்டு பிடிப்பு விசித்திரமான கற்பனையாகும். ஏன் உலகுக்கு போவான் சொந்த நாட்டிலேயே மனிதனுக்கு மனிதன் புரிந்து கொள்ளப்படுகின்றதா? இல்லையே. சாதியால் பிளவுண்ட சமுதாயம், ஆணாதிக்கத்தால் நெருக்கடியாகியுள்ள சமூகம், இனவாதத்ததால் பிளந்துள்ள ஆதிக்கங்கள், சுரண்டலால் வாழ்வு இழந்த மனிதம் என உலகில் இரு நபருக்கிடையிலேயே பிளந்துள்ள சமுதாயத்தில் அனுபவங்கள் புரிந்து கொள்ளப் படுகின்றது என்றால், இந்த அமைப்பில் மாற்றம் அவசியமற்றது என்பதையே யமுனா கூறவிரும்புகின்றார். அண்மையில் ஈராக் மீது தாக்குதல் நடந்த போதும், குருடீஸ்தான் தலைவர் கைது செய்யப்பட்ட போதும், பல்கன் மீதான ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பும் போது எதிர்த்து போராடியவர்கள் பெரும்பான்மையானவர்கள் ஓரே பிரிவு அல்ல. இங்கு குறுகிய நலன்கள் பொதுவானதை அடையாளம் காணவிடாது தடுத்தது. பொதுவான வகையில் இப்படி அடையாளம் கண்டவர்கள் எங்கும் எப்போதும் கம்யூனிசத்தை குறைந்த பட்சம் எற்றவரர்களாக இருப்பது யதார்த்தமாக உள்ளது.

 

மறுதளத்தில் சுரண்டும் வர்க்கம் கூட தனது வர்க்க எல்லையில் உலகளவில் இனம் கண்கின்றனர். உலகில் தனது வர்க்க எல்லைக்குள் அடையாளம் காணும் பிளவுதான் ஒன்று மீதான அனுபவப் பகிர்வாக இருக்கின்றது.

 

''பிரச்சினைகள் உலகமயமாகி வருவதையும், உலகில் எங்குவாழும் வாசகனும் பிற படைப்பாளிகளை புரிந்து அனுபவிக்கும் சூழல் உருவாகி வருவதையும் இடதுசாரி அரசியல்  வாதிகளை விடவும் சர்வதேசீய பதிப்பாளர்கள் மிக நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள். நவகாலனியம்  மேற்கத்திய மதிப்பீடுகள்  ஏகாதிபத்தியம் என்று விமர்சனக் கண்ணோட்டத்தை அமைத்துக் கொள்கிறவர்கள் இந்த அம்சத்தைக் நிர்ணயித்துக் கொள்வதில்லை." என்று யமுனா கூறும் போதுதான் தனது கம்யூனிச எதிர்ப்பை துல்லியமாக்கின்றார். இடது சாரி அரசியல் வாதியை விட உலகமயமாதலை யார் சரியாக புரிந்து கொள்வான் எனின், யார் உலக மயமாதலை ஆதாரித்து நிற்க்கின்றனனோ அவன் மட்டும்தான் என்பது தௌ;ள தெளிவானது. தான் ஒரு இடதுசாரி அல்ல என்பதை கூறியபடிதான் இந்த பரிசை வாழ்த்த முடிகின்றது என்பதையும் சொல்லாமல் சொல்லியுள்ளார். ஏகாதிபத்தியம், நவகாலனித்துவம், .. என ஆய்வு செய்பவன் சர்வதேசீய மதிப்பீட்டை காணமுடியாதவன் ஆகின்றன் என்பதன் மூலம் யமுனா ஏகாதிபத்தியம், நவகானித்துவம் தொடர்பான மதிப்பிட்டை மறுப்பதால் உலக படைப்பை அனுபவிக்க முடிகின்றது என்கிறார்.

 

அதாவது ஏகாதிபத்தியம் உருவாக்கி திணிக்கும் உலகமயமாதலை மறுக்கும் தேசிய முதலாளித்துவம், பாட்டாளிவர்க்கம் தான் உலக மயமாதலின் பயன் பாட்டை சிலருக்கு மறுக்கின்றது என்பது உண்மை. இது உலகை ஆளும் ஏகாதிபத்திய நுகர்வு பொருட்கள் முதல் அதன் இலக்கியம், பண்பாடு, கலாச்சாரம் என அணைத்தையும் எதிர்த்து போராடுகின்றது. இந்த வர்க்கப் போராட்டத்தில் உலக மயமாதல் தனது உச்ச வடிவமான அனைத்து செல்வாக்கையும், ஆயுதத்தையும் பயன்படுத்துகின்றது. இதில்தான் பதிப்பாளர்கள் செயல்படுகின்றனர். ஏன்எனின் பதிப்பாளர்கள் வர்க்கம் கடந்த nஐன்மங்கள் அல்ல. உலகளவில் செய்தி அமைப்புகள் எப்படி ஏகாதிபத்திய கட்டுப்பட்டில் உள்ளதோ அதேபோல்  பதிப்பகங்களும் வர்க்க காட்டுபாட்டில் உள்ளது.

 

நோபள்பரிசு, புக்கர் பரிசு .. என நீடிக்கும் எல்லா அமைப்புகளும் வர்க்க எல்லைக்குள் தான் உள்ளது. இது மூலதனத்துக்கு கட்டுப்பட்டது. இந்த நிறுவனங்கள் இந்த மூலதனத்தை கவுட்டுப் போடும் எந்த படைப்புக்கும், அரசியல் வாதிக்கும் பரிசு வழங்கி விடுவதில்லை. மாறாக இந்த பொருளாதார அமைப்பை ஏற்றக் கொள்ளும், அதே நேரம் இதற்குள் மாற்றத்தை சிபர்சு செய்யும் படைப்புகள், அதே நேரம் இந்த சமூக அமைப்பை மாற்றக் கோரும் கம்யூனிசத்துக்கு எதிரான படைப்புகள் என இந்த எல்லைக்குள் மட்டுமே பரிசின் எல்லை உள்ளது.

 

அன்னை திரேசாவுக்கான நோபள் பரிசு, nஐயலலிதவுக்கான ராஐதந்திரிக்கான அமெரிக்கன் நட்பு நிறுவனப் பரிசு (இந்தப் பரிசு 1995 நெல்சன் மண்டேலாவிற்க்கும், 1996 இல் அமெரிக்க மலைவாழ் தலைவர் அல்பர்டாஐhய்க்கும், 1997 இல் அன்னை தெரசாவுக்கும், 1998 இல் Nஐhர்டன் மன்னர் ஹீசேனுக்கும் வழங்கப்பட்டது.), அமார்த்யா சென்க்கு பொருளாதாரத்துக்கான நோபள் பரிசு, இந்தியாவுக்கான அழகுராணி பரிசு என பரிசுகள் இந்தியாவை நோக்கி உலகமயமாதல் ||புரிந்து|| கொண்டு வழங்குவது முன்பை விட அதிகரித்துள்ளது. அதாவது இந்தியாவில் உள்ள 10 சதவீத மேற்க்குடியை உலகமயமாதலுக்கு கொண்டு வந்தாலே ஒரு மிகப் பெரிய சந்தை கிடைத்துவிடும் என்பதால் பரிசுகள் குவிகின்றது. இந்த பரிசு மீது அறிஐPவிகளை இரண்டாக்குவதன் மூலம் புரட்சியை பற்றி கேள்வியை வேறு எழுப்பி மழுங்கடிக்கமுடியும்.

 

குவாட்டமாலா றிகோபெர்ரா மென்சுக்கான  இலக்கிய நோபள் பரிசு நீண்ட ஒரு வர்க்கப் போராட்டத்தை மாற்றமின்றி முறியடிக்கமுடிந்து. நெல்சன் மண்டலவுக்கான நோபள் பரிசு கறுப்பின மக்களின் பொருளாதார மாற்றம் இன்றி வெள்ளையார் பொருளாதாரத்தை பாதுகாக்கமுடிந்தது. அரபாத்துக்கான பரிசு பாலஸ்தினம் இன்றி இஸ்ரேலுக்கு உட்பட்ட காலனியை உருவாக்கமுடிந்தது. இப்படி வரலாறு எல்லாம் பரிசுகளின் பின் ஒரு துரோக வரலாறும், வர்க்க விசுவாசமும் அப்பட்டமாக இருப்பது யதார்த்தமாக உள்ளது. பல்கலைக்கழகம் சென்றவர் என்றால் எதோ பெரிய படிப்பாளி மாதிரி, நோபள் பரிசு அல்லது இது போன்ற பரிசுகள் பெற்றால் ஏதோ சமூகத்தின் உன்னதமான மனிதனாக காட்ட விரும்பும் பரிசு நோக்கம் தான் இந்த சமூக அமைப்பின் உயிர்நாடி. பரிசு என்பது சுரண்டல் அமைப்பை பாதுகாக்கும் எல்லைக்கு உட்பட்டது. படைப்பை அதிகமாக பார்க்க கோருவதும், அவர் அச் சமூகத்தின் ஒரு அந்தஸ்த்துக்கு உயர்த்துவதும் இருக்கும் சமூக நெருக்கடியை தணிக்கவே. ஏன் இரண்டாம் உலக யுத்தத்தில் செஞ்சிலுவை சங்கத்துக்கு வழங்கிய நோபள் பரிசு யுத்தப் பின்னனியை பாதுகாத்ததுக்கேயாகும். எந்த பாதிக்கப்பட்ட யூதர்க்கும் சேவை செய்யாத நோபள் பரிசு, இன்று பல்கன் மீதான ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு போது செஞ்சிலுவைச் சங்கத்தின் கேவலங்கள் (சேர்பிய அகதிகளுக்கு உதவாத மனிதபிமானம். அத்துடன் யுத்தத்தை கண்டிக்காத யுத்த பின்னணி செயல்தளம்)  மீள ஒருமுறை யதார்த்தமாகியுள்ளது.


ஏகாதிபத்தியம் கட்டியமைக்கும் உலகமயமாதல் மக்களின் அடிப்படை வாழ்வுரிமையை பறிக்கின்றபோது, இதற்க்கு மாற்றான சமூக உதவிகளை செய்தபடி உலகமயமாதலை தீவிரமாக்க கோரும் படைப்புகள், பொருளாதார ஆய்வுகளை நோக்கிய தளத்துக்கு பரிசுகள் வழங்ப்படுகின்றன. இது போல் மேற்க்கு அல்லாத நாடுகளை நோக்கியம் பரிசு வழங்கப்படுகின்றன. ஏன்? உலகமாயதாலின் கொடூரங்களை சந்திப்பவர்கள் உடனடியாக மேற்க்கு அல்லாத மக்களாக இருப்பதாலும், அந்த சமூகங்களில் எழும் கொந்தளிப்புகளை தணிக்கவும், இந்த பொருளாதார அமைப்பில் மனிதபிமானத்துக்கு சலுகை கோரும் ஆய்வுகள் மற்றும் ஏகாதிபத்தியம் பற்றி பேசாத,  சீர்திருத்தை முன்வைக்கம் இலக்கியத்தை நோக்கியும் பரிசுகள் வழங்கவதன் மூலம் புரட்சி தீ அணைக்க இப்பரிசுகள் உதவுகின்றன. இலக்கியத்துக்கும், பொருளாதார ஆய்வுகளுக்கும், அழகுக்கும், சமாதனத்துக்கும் என மேற்க்கு அல்லாத பரிசுகள் ஏன் விஞ்ஞானத்துறைக்கு, சமுகவியல்துறைக்கு வழங்கப்படுவதில்லை என்பதன் அரசியல் தெளிவானது. அடுத்து பரிசுகள் கொடுக்கும் போது அதை தெரிந்து வெளியிடும் நிறுவனத்துக்கு பெரும் தொகை விற்பனை லாபமும் (மூலதன குவியலும்), மற்றைய புத்தகத்துக்கு ஒரு இலவச விளம்பரமும் கிடைக்கின்றது.

 

பரிசில் இடது சாய்வு, பரிசு குழுவில் இடதுசாரிகள் உள்ளனர் என்ற யமுனாவின் வாதம் இடது என்பது என்ன? ஏகாதிபத்தியத்தை மறுத்த, பொருளாதார சுரண்டலை மனித உரிமை மீறலாக ஏற்றக் கொண்ட, இந்த பொருளாதார முறையை மாற்றி, உழைக்கும் மக்கள் ஆட்சியை கோராதவன் எப்படி இடதுசாரியாக இருக்கமுடியும். ஒரு செயல் தளத்தில் தீவிரம், மென்மை என்பன வலது இடது என வகைப்படுத்தும் ஆய்வு மனிதவிடுதலைக்கு உதவாது. ஏன் nஐயலலிதா, கருணநிதி, பாரதிய ஐனதா, காங்கிரஸ் என நீளும் கட்சிக்குள் கூட இடது வலது என அடையாளப்படுத்த முடியும். ஆணால் மக்களின் விடுதலைக்கு இந்த ஒருபிரிவை இடது ஆக காட்டி அரசியல் செய்வது விபாச்சாரம்தான். அடுத்து கம்யூனிஸ்ட் என ஒன்றை அடையானப்படுத்துவது எனின் அதன் அடிப்படை உள்ளடக்கம் என்ன?

 

மார்க்ஸ்- எங்கெல்ஸ் நிறுவிய முன்வைத்த மார்க்சியத்தை எற்றுக் கொள்ளல். இரண்டாவது புரட்சிக்கான பாதையாக வர்க்கப் போராட்டத்தை ஏற்றுக் கொள்ளால். மூன்றாவது புரட்சிக்கு பிந்திய சமுதாயத்தில் வர்க்கப் போராட்டத்தை தொடருதல். இந்த அடிப்படை உள்ளடக்கத்தை ஏற்றுக் கொண்டு நடைமுறைதளத்தில் செயல்படாத அனைத்து வகைளும் மார்க்சியம் அல்ல, அது போல் கம்யூனிச சமுகத்தை கம்யூனிசத்தை  உருவாக்க மாட்டது. இதை விதிந்துரைக்காத, திரிக்கின்ற, அல்லாது வௌ;வேறு விளக்கங்களை முன்வைக்கின்ற எதுவும் இடது சாரித்தனமும் அல்ல அதுபோல் கம்யூனிசமும் அல்ல. மாறாக இந்த முதலாளித்தவ அமைப்பின் வௌ;வேறு விதிந்துரைகளே.

 

இதில் தான் யமுனாவின் அடுத்த வரிகளை ஆராய்வோம். "மூன்றாவது பாதை பேசும் காலகட்டமான இன்று தாராளவாதம் தனது இறுதிகாலத்தை அண்மித்துவிட்டது. கெடுபிடிப்போர் அநேகமாக முடிந்துவிட்டது." என்கிறர். கட்டுih வெளிவந்த நேரம் பல்கனில் யுத்தம் மூன்றாம் உலகயுத்ததை நோக்கி ஏகாதிபத்தியம் கெடுபிடியை நகர்த்தியுள்ளது. அதுசரி மூன்றவது பாதை என்ன? வர்க்கப் போராட்டமா? அல்லது சீர்திருத்தமா? இதற்க்கு அவர் நான் கீழ் எழுப்பும் ஒவ்வொரு கேள்விக்கான பதிலால் இனம்காட்டவேண்டும். இவர் மூன்றவது பாதை என்பது வர்க்கப் போராட்டம் என கூறவில்லை. இதில் இருந்து அவர் வைப்பது தேசியம் கடந்த, கம்யூனிசம் கடந்த உலகமயமாதல் தான் மூன்றவது பாதை. அதாவது ஏகாதிபத்தியம், நவ காலனித்துவம் .. பேசாத தேசிய முதளித்துவம், கம்யூனிசம் கடந்த மூன்றவது பாதையாக உருவாகிவரும் உலகமயமாதல்தான். இதுதான் இடதுசாரி அரசியலை விட நன்றாக புரியக் கூடியவர்கள் என சிபார்சு செய்கின்றார். இதற்க்கு இவரின் வேறு பல கட்டுரைகளை எடுத்துக்காட்டமுடியும். நோர்வையில் வெளியாகும் சக்தி இதழில் பர்மாவில் வெளிநாட்டு பெண்ணின் தலைமையில் அமெரிக்கா துதராலயம் முன் உதவி கேட்டு போராடுவதாக வெளியான சினிமாவை மெச்சி, அதுபோல் படம் எடுக்க வேண்டும் என மூன்றாம் உலக சினிமாதயாரிப்பாளர்களை அறைகூவுகின்றார்.

 

யமுனா ஐரோப்பாவில் முக்கியமாக ஈழமுரசிலும், சிறு சஞ்சிகையிலும் எழுதி வருவதுடன், இந்தியாவில் சில நூல்களையும் வெளியீட்டுள்ளார். பொதுவாக வர்க்கப் போராட்டத்தை மறுப்பதும், இருக்கும் பொருளாதாரத்தில் மனிதபிமான சீர்திருத்தை உயர்த்தவதும் என ஒரு அரசியல் அரங்கையே வைத்து  இடதுசாரி அரசியல் என உருவகம் கொடுத்து இந்த அமைப்பு தகராது பாதுகாக்க பின்நிற்க்கவில்லை.

 

இந்தவகையில் அவர் கடந்தகாலத்தில் தனது அரசியலை இனம்காட்டது (இதற்க்கும் அரசியல் உண்டு) எழுதிவரும் அரசியலை ஒட்டியும், மற்றவர் படைப்புகளை என்ன வகையில் ஆராய்கின்றார் எனபதை புரிந்து கொள்ளவும் அவர் முன் பதிலளிக்க சில கேள்விகளை எழுப்பவேண்டியுள்ளது. இது யமுனாவுக்கு மட்டுமல்ல  எழுதும் அனைவருக்கும் பொருந்தும்.


மார்க்ஸ் நிறுவி முன் வைத்த மார்க்சியத்தை எற்றுக்கொள்கின்றிர்களா? இல்லை எனின் ஏன? எற்றுக் கொண்டால் வர்க்கப் போராட்டத்தை ஏற்றுக் கொள்கின்றீர்களா? இல்லை எனின் ஏன்? எற்றுக் கொண்டால் எப்படி வர்க்கப் போராட்டத்தை செய்யமுடியும்? இந்த வர்க்கப் போராட்டம் வன்முறை சார்ந்தா? அல்லது இல்லையா? இது எப்படி? வர்க்கப் போராட்டத்தில் சமுகத்தில் இருக்க கூடிய எதாவது விதிவிலக்கு உண்டா? அப்படி உண்டு எனின் அது என்ன? ஏன்? சமுகத்தின் அவலங்களுகான காரணங்கள் என்ன? இது இயற்க்கையில் இருந்ததா அல்லது இடையில் எற்பட்டதா? அதாவது சாதியம், ஆணாதிக்கம், தேசங்கள், ஏகாதிபத்தியங்கள், ஒரினச்சேர்க்கை, சுரண்டல் .. என அனைத்து இயக்கையில் இருந்தா? அல்லது இடையில் தோன்றியதா? இடையில் தோன்றியது எனின் ஏன்? இதன் சமூக, பொருளாதார காரணங்கள் என்ன? இதை மாற்றமுடியாதா? முடியும் எனின் எப்படி? மாற்றம் இயற்க்கையை நோக்கியா? அல்லது சீர்திருத்தையா? இதில் உங்கள் நிலை என்ன?

 

வன்முறை மூலம் சமூகம் புரட்சி செய்தால் அதை ஏற்றுக் கொள்விர்களா அல்லது எதிர்ப்பிர்களா? ஏன்? வர்க்கப் போராட்டத்தில் ஆட்சியை பிடித்த அடுத்த கணமே வர்க்கப் போராட்டம் முடிவுக்கு வந்து விடுமா? அல்லது தொடருமா? ஏன்? இங்கு வர்க்கப் போராட்டம் எந்த வடிவில் இருக்கும்? இந்த வர்க்கப் போராட்டத்தில் ஏதாவது விதிவிலக்கு இருக்குமா? இங்கு ஐனநாயகம் எப்படி இருக்கும்? பலகட்சி இருக்குமா? எப்படி? முதலாளிக்கு , ஆணாதிக்கத்துக்கு, சாதிய ஆதிக்கத்துக்கு என மனிதனை பிளக்கும் அனைத்துக்கும் எல்லா தளத்திலும் சுதந்திரம் இருக்குமா? எப்படி? இருக்கும் எனின் வர்க்கப் போராட்டத்தை எதை நோக்கி, எந்த தளத்தில்? சனநாயம் என்றால் என்ன?  அது ஒரு சமூகத்தில் எதிர் எதிர் தளத்தில் இருக்கமுடியுமா? எப்படி? இல்லை எனின் யாருக்கு? சாதியை எப்படி ஒழிக்க முடியும்? ஆணாதிக்கத்தை எப்படி ஒழிக்க முடியும்? ஏகாதிபத்தியத்தை எப்படி ஒழிக்க முடியும்? சுரண்டலை எப்படி இல்லாது ஆக்க முடியும்? மனிதபிமானம் வர்க்க எல்லைக்கு உட்பட்டதா அல்லது வெளியிலா? எப்படி? மனிதபிமானம், ஐனநாயகம் ஒருவனுக்கு இல்லாத நிலையில் மட்டும் தானே இச்சமுகத்தில் நீடிக்கும்? இது எல்லோருக்கும் இருந்தால் இது கற்பிதமாகி விடுமல்லவா? சுரண்டல் வன்முறை மூலம் நிடிக்கின்றதா இல்லையா? மனித உரிமை அமைப்புகள் சுரண்டலை மனித உரிமை மீறலாக (மற்றவன் உழைப்பை கொள்ளை அடிப்பது) கருத நிலையில் அவைகளின் மனித உரிமை மீறல் பற்றிய அபிப்ராயம் சுரண்டல் அமைப்புக்கு உட்பட்டது தானே? இல்லையா எப்படி? இந்த சமுதாயத்தில் எந்த மனிதனும் தான் படைக்கும் ஒரு பொருளில் (இது இலக்கியமாக இருந்தாலும்) இயற்க்கையில் மனிதன் இருந்ததுக்கும் இன்று இருப்பதற்க்கும் இதை இயற்க்கையை நோக்கி மாற்றுவதற்க்கும் உள்ள உறவை வெளிப்படுத்தாத, அதை குறிக் கோளாக கொள்ளாதவை நியமானதா? மனித நலன் கொண்டாதா?

 

இவைகள் பற்றியும், மேலும் உள்ளவை பற்றி யமுனா மட்டமல்ல சமுகம் பற்றி எழுதுபவர்கள், செயல்படுபவர்கள் முன் எழுப்பப்படும் அடிப்படையான  கேள்விகளாகும். இதற்க்கு பதிலளிக்காத, அல்லாது இதற்க்கு வெளியில் பிழைப்பில் ஈடுபடுபவர்கள் எந்த தளத்தில் செயல் பட்டாலும் உண்மையில் இந்த சுரண்டல் அமைப்பு வாழ உழைப்பவர்கள்தான்.