Language Selection

பி.இரயாகரன் 1996-2000
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்று பெண்கள் ஜனநாயகமாக வாழ்வதாக ஒரு மாயை ஆனாதிக்க வாதிகளால் உருவாக்கப்பட்டது. பெரும்பாலும் எல்லா ஆன்களும் பெண் ஜனநாயகத்தை அனுபவிப்பதாக கூறும் அதேநேரம்,

 அனேகமான பெண்கள் கூட இப்படி என்னுகின்றனர். இது ஆனாதிக்க கருத்தியல் கண்னோட்டத்தை பெண்களுக்கும் ஆண்களுக்கும் வழங்குவதன் மூலம் மதம், மொழி, கலாச்சாரம் போன்ற வடிவங்கள் ஊடாக புகுத்தப்பட்டு இயல்பாக ஏற்க நிற்பந்திக்கப்படுகிறது.

 

இதை நாம் விபரிப்பதாயின் ஏகாதிபத்தியம் மூன்றாம் உலகநாடுகள் மீது எப்படி அடக்கி ஒடுக்கியபடி அதை ஜனநாயகம் எனக் கூறியபடி, அதையே சொந்த மக்களையும், மூன்றாம் உலகமக்களையும் ஏற்க வைக்கப்பாடுபடுகின்றதோ அதுபோன்றதே இதுவும்.

 

இதை மக்களை மூலச்சலவை செய்வதன் மூலம் பல்வேறு வடிவங்களில் உள்ள ஒடுக்கு முறைகளை ஒரு சாதாரண இயல்பான நிகழ்ச்சியாக மாற்றி விடுகின்றனர். இந்தவகையில் வானேலி, தொலைக்காட்சி, சினிமா, விளம்பரங்கள், பத்திரிகைகள், புத்தகங்கள், மதம், கலாச்சாரம் ............ என அனைத்தும்இதன் செயற்பாட்டுக்கு உழைக்கின்றது.

 

இந்தநிலையில் பெண்கள் மீதான ஒரு தனித்துவமான ஆண்களுக்கு இல்லாத ஒடுக்கு முறையை இனம் காட்டுவதே இக்கட்டுரையாகும். இக்கட்டுரையில் மூன்றாம் உலகநாடு இந்தியாவையும், முதலாம்; உலகநாடு அமேரிக்காவை ஒட்டி பல புள்ளிவிபரங்களை தொகுக்க முனைகின்றேன்.

 

ஒரு பெண் விடுதலை அடையவேண்டும் எனின் அது தனித்து சாதித்து விட முடியாது. அப்பெண் சமுதாயத்தில் அங்கம் என்பதால் அப்பென் சமுதாய மாற்றத்துடன் தான் விடுதலை பெறமுடியும். இந்த வழகயில் பெண் போராட முற்படும் போது சமுதாயத்தில் காணப்படும் ஏற்றத் தாழ்வான வழ்நிலையில் பெண்களின் கோரிக்கைகள் மாறுபட செய்கிறது. பெண் இந்த மாதிரி மறுக்கப்படும் அற்ப கோரிக்கை என்பது அப்பெண்ணை விடிவித்து விட மாட்டாது. மாறாக சமுதாயம் முழுவதுமாக ஒரு கலாச்சாரப் புரட்சியை நடத்தும் வகையில், பெண்கள் தமது கோரிக்கையை பல்வேறு சமூகக் கோரிக்கைகளுடன் இணைக்க வேண்டும்.

 

இந்தவகையில் பெண் போராட வேண்டும் எனில் ஆண்கள், பெண்கள் ஒரே நிலையை அடைவது மட்டும் இன்றி சமுதாயத்தில் உள்ள அனைத்து வேறுபாடுகளும் அகற்றப்படவேண்டும். இந்தவகையில் ஒரு போராட்டத்தைக் கட்டி எழுப்புவது என்பது ஒடுக்கப்பட்ட ஒரு பெண்ணின் கோரிக்கையாக, ஒரு சமுதாயக் கோரிக்கையாக இருக்க முடியும்.

 

இந்த வகையில் பெண் ஒடுக்கு முறையை நாம் புரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு புள்ளி விபரங்களை இவ்விடத்தில் தொகுக்க முனைகின்றேன். இக்கட்டுரையில் கற்பழிப்பு என்ற சொல்லை நான் பயன் படுத்துகின்றேன். இது பெண்களுக்கு கற்பு உண்டு என்ற அர்த்தம் அல்ல. மாறாக கற்பழிப்பு என்ற சொல்லக்கு மாற்றாக சரியான அதன் ஆணாதிக்க பலாத்கார வன்மையை தெளிவு படுத்த ஒரு சொல்லை தமிழில் பெறுவது கடினமாக தற்போது உள்ளதால் மட்டுமே பயன்படுத்துகிறேன்.

 

உலகில் 52 வீதமாக உள்ள பெண்களில் 11 சாவீதம் பேரே அரசியலிலும், அரசாங்கத்திலும், முடிவெடுக்கும் அமைப்புக்களிலும் உள்ளனர். அத்துடன் உலக சனத்தொகையில் வருடம் கானாமல் போய் விடுகின்றனர். அமெரிக்கா அல்லாத மற்றைய நாடுகளில் நிர்வாக உயர்நிலையில் பெண்களின் பங்கு 1 சதவீதத்துக்கு குறைவானதேயாகும். இது அமெரிக்காவில் ஒரு சதவீதத்துக்கு சற்றுக் கூடுதலாகும். ஆண்களுக்கு சமமான நிலையை பெண்கள் அடைய 450 வருடங்கள் செல்லும் என்பது ஆணாதிக்க ஒடுக்கு முறையைப் புரிந்து கொள்ள உதவுகிறது.

 

உலகில் உள்ள ஒவ்வேரு 2000 பெண்களுக்கு ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள். வளரும் நாடுகளில் 3 பெண்களுக்கு ஒரு பெண் கணவன் மாரால் துன்புறுத்தப்படுகிறாள். உலகில் உள்ள மெத்த சனத்தொகை 560 கோடியாக உள்ள அதே நேரம் மிகவும் மோசமான வறுமைக்குள் 100 கோடிப் பேர் உள்ளனர். இதில் 70 கோடிப்பேர் பெண்களாவர். ஏகாதிபத்தியக் கொள்ளையில் ஏற்படும் வறுமையினை ஆனாதிக்கம் பின் பெண்கள் மீது திணிக்கின்றது. இதன் முலம் பெண்கள் இரட்டைச் சுமைக்கள் உள்ளாக்கப்படுகின்றனர்.


100 கோடிப் பேர் எழுதப்படிக்கத் தெரியாத அதேநேரம் இதில் 50 கோடி சிறுவர் சிறுமியராவர். இதில் பெண்கள் தேகை 75 கோடியாகும். குழந்தைகளில் 3இல் 2 பகுதி பெண்களாவர்.

 

ஒவ்வேரு 1000 குழந்தை பிறப்பில் ஆபிரிக்காவில் 175 பேர் இறக்க இந்தியாவில் 100 பேர் இறக்க முன்னேறிய நாடுகளில் 15 பேராக உள்ளது. இதில் பெண்கள் ஒவ்வெரு நாட்டுக்கும் இடையில் குழந்தை பெற்றெடுப்பதில் பாரிய வேறுபாட்டை கொண்டுள்ளன. இந்தவகையில் பின்தங்கிய நாட்டுப் பெண்கள் குழந்தை பேறுகளில் பாரிய சுமையைச் சுமக்கின்றனர்.

 

30 போடிப்பேரைக் கொண்ட ஒரு பகுதிப் பெண் தொழிலாளர் அரைகுறை வேலையில் மிக மோசமாக கசக்கிப் பிழியப்படுகின்றனர். இந்தியாவை நாம் எடுப்பின் சராசரி ஒரு மணிநேரத்துக்கு ஒரு வரதட்சனைக் கொலை நிகழ்கிறது. இது வருடம் கிட்டத்தட்ட 9000 கொலையாக உள்ளது. 1989 முதல் 1991 வரையில் 18000 பெண்கள் வரதட்சனைக்காக தீக்கிரையாக்கப் பட்டுள்ளனர். மாமியார், கணவனின் சித்திர வதைக்குள்ளாகி 20000 பேர் தற்கொலை செய்தனர். தீயாக்கப்பட்டதுடன் கூடிய 13 பிரேதம் நாளோன்றுக்கு பிரேதப் பரிசோதனைக்கு அகமதாபாத்தின் பிரேத சாலைக்கு வருகின்றது. வரதட்சனைக் கொடுமையால் இறந்ததை சமாளிக்க பொலிசுக்கு 20000 ரூபாவும், நீதிபதிக்கு 25000 ரூபாவும் பொடுத்து தப்பித்து வருகின்றனர்.

 

டெல்லியில் வரதட்சனைப் படுகொலைகள் அதிகரித்து வருகின்றது. இது 1985 இல் 43ஆகவும் 1988இல் 71 ஆகவும், 1989 தை, மாசியில் மட்டும் 132 என அதிகரித்து வந்துள்ளது. இது குஜராத் மானிலத்தில் நாளுக்கு 13 ஆகவுள்ளது.

 

1987 முதல் 1993 வரை இந்தியாவில் ஒரிசா மானிலத்தில் வழக்கு விசாரனைக்கு வந்த 1688 கற்பழிப்பு வழக்குகளில் 27 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டனர். இது போன்று விசாரணக்கு பம்பாய் மாநிலத்தில் வந்த 68 வழக்குகளில் 14 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டனர். இந்தவகையில் கற்பழிப்பு வழக்குகளில் பெண்களை விபச்சாரழகள் என நிறுவுவதும், இவர்களை அவமானப் படுத்துவதன் மூலம் ஆணாதிக்க நீதிமன்றம் செயற்பட்டு வந்தன. இது போன்று பல கற்பழிப்புகள் வெளியில் வராமல் இருப்பதுடன், பொலீஸ் வழக்கை பதிவு செய்ய மறுப்பதும், மருத்துவர்கள் கற்பழிப்பை உறுதிசெய்ய மறுப்பதும், பொலீசே கற்பழிப்பதும் சர்வசாதாரணமான ஒரு இயல்பான விடையமாக மாறிவிடுகின்றது. இந்தியாவில் வருடம் 20000 கற்பழிப்பு வழக்குகள் வருவதுடன் அதில் 100 பேர் தண்டிக்கப்படுவதே அப+ர்வம் என்ற நிலைக்கு இன்று ஆணாதிக்க ஆட்சி நடக்கிறது.

 

இன்று பெண்களை இழிநிலையாகக் கருதுவதுடன் பெண் என்றால் கருவில் அழிப்பதும், பிறந்தபின் கொலை செய்துவிடுவதும் என்ற நிலை வேகமாகப்பரவிச் செல்கின்றது. உதாரணமாக சேலம் மாவட்டத்தில் 1250 குடும்பத்தை எடுத்து ஆய்வு செய்த போது 750 குடும்பத்துக்கு பெண் குழந்தைகள் மட்டுமே உயிர்வாழ்கின்றது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

பெண்மீது வரதட்சனை, கற்பு, அடிமை நிலை என்ற பல்வேறு காரணத்தை உள்ளடக்கி ஆணாதிக்க சமூகம் பெண்ணை இழிநிலைக்கு இட்டுச் சென்று பெண்ணை உயிருடன் கொல்கின்றனர். இந்திய கிராமப் புறத்தில் 43 வீதமான சிறுவர்களும், 69 வீதமான சிறுமிகளும் வறுமை காரணமாக பாடசாலை செல்லதில்லை. மற்றும் படிக்கும் மாணவர்களில் 5 பேருக்கு ஒருவர் பாடசாலைப் படிப்புக்களை முடிக்காது இடையில் கைவிடுகின்றனர். அத்துடன் பாடசாலை செல்லும் மாணவர்கள் 8 வீதம் பேருக்கு பள்ளிக்கூடமோ, கரும்பலகையோ, மேசைகளோ இல்லை. என்பதில் இருந்து பெண்களில் கல்வி எப்படிப் புறக்கணிக்கப்படுகின்றது என்பதை இதன் மூலம் காணமுடியும்.

 

இன்று பெண்கள் அனுபவிக்கும் ஆணாதிக்க சமூகத்தின் மற்றும் ஒரு புள்ளி விபரத்தைப்பார்ப்பின் அதிர்ச்சி அழிக்கும். இந்தியாவில் 12 பாடசாலையைச் சேர்ந்த 348 மாணவிகளை ஒள்ளடக்கிய ஆய்வு ஒன்று சம்வதா அமைப்பு நடத்தியது. ஒவ்வெரு 20 பெண்களில் 3 டிபர் கற்பழிக்கப்பட்டும், பல்வெறு சித்திர வதைக்கு உள்ளாகியிருந்ததையும் இதில் மூன்றில் ஒரு பங்கினர் 10 வயதிற்குக் கீழேயும், இச்சம்பவம் நடந்தள்ளது. 10 பேர்கழில் 5 பேருக்கு குழந்தையாக இருந்தபோதும், பலாத்காரப்படுத்த முற்படுபவர்கள் 10 பேரில் 8 பேர் சிறுவயதிலேயே மார்பகங்களை கசக்குவது போன்ற பல பலாத்கார நிந்தனைகளை சந்தித்தனர் என்பது தெரிய வந்தது. இதில் வேடிக்கை என்னவெனில் இச்செயற்பாடுகளில் ஈடுபட்ட 50 வீதமான ஆண்கள் அக்குழந்தைகளின் அப்பாக்கள், மாமாக்கள், சகோதரர்கள், மற்றும் நெருக்கிய உறவினர்களாவர்.

 

பெண் குழந்தைகளை தலைகுனிய வைத்து வீட்டுக்குள் ப+ட்டி வைத்த படியே இந்தியாக் கலாச்சாரம் பெண்களை பலாத்காரம் செய்கின்றது. பின் இவர்களே ஆணாதிக்கக் கற்பைக் கோருவதும் வேடிக்கையாக உள்ளது. குழந்தை என்று எந்த சிறுமியையும் விட்டுவைக்காத இவ்வாணாதிக்க சமூகம், அதன் கலாச்சார ஒழுக்கம் தேவைதானா என்பதை நாம் ஒவ்வெருவரம் கேட்க வேன்டும்.

 

இங்கு இதைச் செய்வதில் மதம் தீவிரமான பங்கு வகிக்கின்றது. இந்து மதம் பெண்ணை நிர்வானமாக சிலைகள் வடித்தது முதல் பெண்ணை கோவிலுக்கு விடமறுப்பதும், பெண்ணை ப+சை செய்ய விட மறுப்பதும், பெண்ணை தாழ்த்தப்பட்ட சாதியின் நிலைக்கு உயர்சாதி சுட்டிக்காட்டும் இந்து தத்துவம் தான் இதன் எல்லாவற்றிற்கும் கோளாறு ஆகும். பெண்களை இரண்டாவது நிலைக்கு இட்டுச் சென்று தாழ் நிலைக்கு அடையாளப்பகுரியும் இந்து, முஸ்லீம், புத்த, கிறிஸ்தவம், ........ என அனைத்து சமயமும் தமது அடிப்படைக் கோட்பாட்டில் நிலைநிறுத்தி உள்ளன.

 

மூன்றாம் உலக நாடான இந்தியாவைப் பார்ப்பது போல் அமெரிக்காவை எடுப்பின் 7 அமெரிக்காப் பெண்களுக்கு ஒருவர் ஏழையாகவும், 6 பெண்களுக்கு ஒருவர் மருத்துவ வசதி இன்றியும் உள்ளனர். இதில் கறுப்பு நிறப் பெண்கள் 25 சதவீதம் பேர் வறுமைக்குள் உள்ளனர். நிறவேறியும் சேர்ந்து கறுப்புப் பெண்களை ஒடுக்குகின்றது. இங்கு கறுப்பு நிறப் பெண் வறுமை, ஆணாதிக்கம், நிறம் போன்ற மூன்று சுமையை ஒரேநேரத்தில் சந்திக்கின்றாள்.

 

1989 இல் அமெரிக்காவில் ஆண் உழைப்பாயின் வருமானத்தில், ஒரே வேலையைச் செய்யும் வெள்ளையினப் பெண் 62 வீதத்தையும், கறுப்பு இனப் பெண் 56 வீதத்தையும் மட்டுமே பெற்று தனது இரண்டாவது நிலையை ஆணாதிக்க ஜனநாயக சமுதாயத்தில் பெறுகிறாள்.

 

அமெரிக்காவில் பெண்கள் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட நிலமை என்பது 1986-89 க்கு இடையில் 9 வீதம் கூலிய பணவீக்கத்துடன் குறைத்தும், மற்ம் ஓய்வூதியக் குறைவும் 13.8 வீதமாக மாறியதால் தான். இதனால் 1980இல் 54 வீதம் மாணவப் பெண்கள் உழைப்பில் ஈடுபடல் 1990 65 வீதமாக மாறியதன் மூலம் தனது குடும்ப உழைபுவருமானத்தைப் பங்கிட்டு சரிக்கட்ட முயல்கின்றனர்.

 

இதேநேரம் அமெரிக்காவில் நிரந்தர வேலை செய்யும் 1கொடி பெண்கள் தமது அடிப்படைத் தேவையைக் கூட ப+ர்த்தி செய்ய முடியாத வறுமைக்குள்ளான சம்பளத்தைப் பெறுகின்றனர். 1980-88 க்கு இடைப்பட்ட காலத்தில் அமெரிக்காவில் 3 லட்சம் சிறுபண்ணைகளை விழுங்கிய பெரிய பண்ணைகள் கிராமப் புற வறுமையை 44.8 வீதமாக அதிகரிக்க வைத்ததன் மூலம் கிராமப்புறப் பெண்களின் அரைவாசிப் பேர் வறுமைக்குள் வாடுகின்றனர். ஒரு பண்ணை மூடியபோது 3 முதல் 5பேர் வேலை இழந்தனர்.1988 இல் அமெரிக்காவில் மகற்பேறு மருத்துவர் 100,000 பேருக்கு 61.4 பேர் நகரப் புறத்திற்கு இருந்தனர். இது கிராமப் புறத்திற்கு 24.5 ஆக இருந்தது. இந்த வகையில் கிராமப் புறப்பெண்கள் மிக மோசமாக ஒடுக்கபட்ட அதே நேரம் நகர்புறப் பெண்கள் போதிய மருந்தின்றி அவதிப்பட்டனர்.

 

அமேரிக்காவில் உள்ள முதியோரில் 58 வீதம் பெண்களாவர். 65 வயதிற்கு மேற்பட்ட முதியோரில் 71 சதவீத பெண்கள் ஏழைகளாவர். வீடின்றி அவதிப்படும் மக்கள் 30 முதல் 40 லட்சமாக உள்ள அதே நேரம் அதில் பெரும்பாலானோர் பெண்களாவர். வீடு வசதியற்ற பெண்கள் 30 வீதமானோருக்க மகற் பேளு காலக் கணிப்பு ஏதுமின்றி உள்ளனர். 1000 க்கு 17 குழந்தை இறப்பு உள்ள அமெரிக்காவில் வீடற்ற குழந்தைகள் இறப்பு 25 ஆக உள்ளது.

 

1987 இல் அமெரிக்காவில் குழந்தை இறப்பு 1000 இற்கு 17 என்ற சிலையில் வெள்ளைக் குழந்தை இறப்பு 8.6 ஆகவும், கறுப்புக் குழந்தை இறப்பு 17.9 ஆகவும் காணப்பட்டது. இதைவிட அமெரிக்காவில் எந்த நேரமும் 1 லட்சம் குழந்தைகள் வீதியில் வசித்த வண்ணம் உள்ளன.

 

1990 இல் அமெரிக்காவில் கற்பழிப்பு 4 மடங்கு அதிகரித்ததுடன் 5 ஒரு பெண் கற்பழிக்கப்படுகின்றாள். வருடம் 30 முதல் 40 லட்சம் பெண்கள் அடித்து துன்புறுத்தப்படுவதுடன் இதில் 10 லட்சம் பெண்கள் மருத்துவத் தேவைக்கு மருத்துவ மனைக்குச் செல்கிறாள். இந்த வகையில் 1000க்கு 23.5 வீதமாக வெள்ளியினப் பெண் அனுபவித்த இந்த சித்திர வதையை கறுப்பு இனப்பெண் 35.3 ஆக உள்ளது.

 

1990 இல் அமெலிக்காவில் 1.8 முதல் 2 கோடிப்போர் வருடம் முழுக்கப் பட்டினியாக உள்ளனர். இதில் 18 வயதிற்கு குறைந்த குழந்தைகள் 70 முதல் 80 லட்சமாகவும், 65 வயதிற்கு மேற்பட்டோர் 20 லட்சம் பேராகவும் உள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்களாவர்.

 

அமெரிக்க அரசின் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள மக்கள் தொகை 3,2 கோடிப் பேராவர். இதில் பெரும்பகுதி பெண்களாவர். இந்த வறுமைக்கோட்டின் நிலவரம் 1980-88 க்க இடையில் 43 வீதமாக அதிகரித்தது. 1985 இல் சராசரி வருடத்திற்கு 3 லட்சம் ரூபா வருமானமுடைய தாய்மார் 68 வீதம் வீட்டுக்கு வெளியிலும் வேலை செய்தனர். இதன் மூலம் தமது வறுமையைத் தவிர்க்க முனைந்தனர்.

 

இந்த வகையில் அமெரிக்காவிற்கம் இந்தியாவிற்கும் இடையில் வறுமையும் பெண் ஒடுக்கு முறையும் அதிக வேறுபாடின்றி பொதுவான ஒன்றாக உள்ளது. எண்ணிக்கையில் மட்டுமே இங்கு வேறுபாடு இருப்பதை நாம் அவதானிக்க முடியும். நாமுஇ வேறுசில நாடுகளை எடுத்துப் பார்ப்பின் 1988 இல் சீனாவில் ஒரு குழந்தை ஒரு குடும்பத்திற்கு என டெங்சியாபிங் அறித்தபின் அங்கு பெண் சிசுக் கொலை வேகமாக அதிகரித்துச் சென்றது. இது வருடத்திற்கு 10 லட்சமாக மாறியது. டெங் கம்ய+னிசத்தைக் கைவிட்டு முதலாளித்துவத்தை ஏற்றபின்பு சமூகத்தில் பெண்கள் 2ஆவது பிரஜையாக மாறியதுடன் பெண்களை இழிநிலைக்கு ஈட்டுச்சென்றனர்.

 

இன்று அங்கு பெண்கள் பகிரங்க இடத்தில் ஏலம் விடுவதுடன், பெண்களை விலை பேசி விற்கப்படுவதும், ஒரு பெண்ணை 4,5 பேர் கூட்டாக வாங்கி அடிமைகளாக தமது விடுகளில் விடுகின்றனர். பெண்களை வரிசையாக நிறுத்தி அவளின் மார்பகத்தின் மீது ஒரு துண்டில் பெயர், வயது, விலை விற்பதற்காக நிறுத்தி வைக்கப்படுவது இன்று நடமுறையாக உள்ளது. 25 வீதமான பெண்கள் வீட்டில் துன்புறுத்தலை கணவன்மார் மூலம் எதிர் கொள்கின்றனர். 15 கொடிப் பெண்களாகும். இன்று டெங் பொருளாதார சீர்திருத்தம் 2 கோடிப் பெண்களை வேலையை விட்டு நீக்கி வீட்டில் அடிமையாக இருக்க வீட்டுக்கு அனுப்பியுள்ளது.பாகிஸ்தான் சிறையில் உள்ள 70 வீதமான பெண் கைதிகளை பொலிசார் பாலியலில் பல்வெறு வன்முறைக்கு உள்ளாக்குகின்றனர். 90 வீதமான பெண்களுக்க தாம் எந்தச் சட்டத்தின் கீழ் அடைத்து வைத்திருக்கின்றோம் எனத் தெரியாது. 50 முதல் 80 வீதமான பெண்கள் ""ஹ்தூக்"" கீழ் அடைக்கப்பட்டு உள்ளனர். இச்சட்டம் பெண்ணை சந்தேகத்துக்குரிய கூட்டம் மட்டுமே குற்றவாழியாக்கின்றது. அதேநேரம் ஆண்களுக்கு இச்சட்டம் நாலுசாட்சிகள் குற்றவாழி என நிறுவ வேண்டும்.

 

கொன்யா நாட்டில் பெண் குழந்தைகள் பிறந்தவுடன் அப்பெண் குழந்தையின் பெண்ணுறுப்பில் உள்ள உணர்ச்சிப் பகுதியை வெட்டி எறியப்பட்ட பின் பெண்ணுறுப்பை தைத்து விடுவார்கள். அப்பெண் திருமணம் ஆனபின்பே அத்தையலை அறுத்து ஆணாதிக்க கற்பை உறுதிசெய்கின்றனர். இதற்கும் எம்நாட்டில் இருப்பதற்கும் அதிக வேறுபாடில்லை.


தாய்லாந்தில் 10 லட்சம் சிறுமிகள் விபச்சாரத்தில் ஈடுபடுவதன் மூலம் அச்சிறுமிகளை சிறுவயதிலேயே எயிட்சுக்கு உள்ளாக்கி சீமைப்பண்றிகள் கொண்றொழிக்கின்றன. இலங்கையில் உல்லாசப் பயனத்துறையில் சிறுமிகளை பயன்படுத்துவதுடன் வெள்ளை சீமான்களின் பாலியல் தேவைக்கு 40 சிறுவர் சிறுமியர்கள் பலியாக்கப்பட்டு உள்ளனர். இதைவிட 90-94 இடையில் 4 ஆயிரம் பெண் சிசுக்கள் கருவில் அழிக்கப்பட்டு உள்ளது. இன்று உள்ள பெண் வீதம் 93.5 மேலும் குறைந்து செல்ல புள்ளி விபரங்கள்  ஊக்குவிக்கின்றன.

 

ஐரோப்பாவில் 10 முதல் 15 வதமான சிறுவர்கள் ஆனாதைகளாக உள்ள அதே நேரம் சிறுமிகள் பாலியல் வதைக்க உள்ளாகின்றனர். அண்மையில் பிராஸ் நாட்டின் புள்ளி விபரம் ஒன்றில் 15 வயதிற்கு மேற்பட்ட பெண்களில் 16 சதவீதத்தினர் தாம் ஏதோ ஒரு வகையில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்டது தொரியவந்தது. பிரான்சில் ஆணுபக்கும், பெணஇணுக்கம் இடையில் பாரிய சம்பள வேறுபாட்டை ஒரே தொழிலில் கொண்டுள்ளனர்.

 

வருடவருமானம்          பெண்                   ஆண்                அதிகரிப்பு

பாதுகாப்புத் துறை    1,96,200 பிறாங்    2,69,000 பிறாங்     37 வீதம்
தொ. நுட்பவியல்      1,15,800 பிறாங்     1,37,000 பிறாங்     18 வீதம்
அலுவலகர்                  86,800 பிறாங்       96,600 பிறாங்     11 வீதம்
தொழிலாளர்                72,100 பிறாங்       93,600 பிறாங்     29 வீதம்

 

இந்தவகையில் உள்ள அதேநோரம் விவாகரத்துக்கள் பிரான்ஸில் 19809 இல் 79600, 1986 இல் 1,06,700, 1989 இல் 1,03,600, 1993 இல் 1,09,200 என அதிகரித்துள்ளது. மக்கள் குடும்பமாக வாழ்தல் என்பது பின்வரம் அட்டவனையை ஒட்டி ஆராய்வோம்.