பெரியார் பல்வேறு சந்தர்ப்பங்களில் மதுவிலக்கை எதிர்த்தே வந்துள்ளார் என்பதைக் கீழ்க்கண்ட அவரது கூற்றுகள் விளக்கும். பொதுநீதி, பொது அறம், பொது ஒழுக்கம் என்னும் பெருங்கதையாடல்களிடிப்படையிலான பேரறங்களை அவர் எப்போதும் மறுத்தார்.

 

* மதுபானத்தால் பொருளாதாரக்கேடு ஏற்படுவதும், அறிவுக்கேடு ஏற்படுவதும் செயற்கையாலே ஒழிய இயற்கையால் அல்ல. (குடிஅரசு - 03.10.1937)

 

* பொதுவாக மது அருந்துவதையே குற்றமென்று சொல்லிவிடமுடியாது. கெடுதி உண்டாக்கும்படியானதும், பொருளாதாரத்திலும், அறிவிலும், கேடுவிளைவிக்கும்படியானதுமான மதுபானமே இன்று விலக்கப்பட வேண்டியதாகும். அதைத்தான் நாம் மதுவிலக்கு என்பதே ஒழிய மதுவையே யாரும் எப்போதும் அடியோடு வெறுத்ததுமில்லை. (குடிஅரசு - 03.10.1937)

 

* மதுவிலக்கு சர்க்காரின் மனதறிந்த ஒரு மோசடியாகவே இருந்துவருகிறது. இதனால் உழைப்பாளிமக்கள் உற்சாகம் குறைந்து சோம்பேறிகளாகவே ஆக்கப்படுவர். (விடுதலை - 29.11.1962)

 

* பொதுவாக மதுவிலக்கு என்பது இயற்கையோடு போராடும் முட்டாள்தனமான போராட்டமேயாகும். (விடுதலை - 09.11.1968)

 

* மது அருந்துபவர்கள் எல்லோரும் யோக்கியப்பொறுப்பற்றவர்கள் என்றும், மது அருந்தாதவர்கள் எல்லோரும் யோக்கியப்பொறுப்புடையவர்கள் என்றும் கருதிவிடக்கூடாது. (குடிஅரசு - 16.02.1969)

 

* தீபாவளிக்கு லீவு விடுவது எவ்வளவு முட்டாள்தனமோ, அதைவிட இரண்டுபங்கு முட்டாள்தனம் மதுவிலக்கை எடுக்கமாட்டேன் என்று பிடிவாதமாக இருப்பதுமாகும். (விடுதலை - 21.10.1969)

 

* மதுவிலக்கு என்பது ஒரு அதிகார ஆணவமே ஒழிய மனிதத்தன்மையில் சேர்ந்ததல்ல என்பதை எங்குவேண்டுமாலும் நிரூபிக்கத்தயார்.(விடுதலை - 17.03.1971)

 

* பத்து கள்ளுக்கடைகள் மூடப்படுவது ஒரு கோயிலைத்திறப்பதற்குச் சமம். கோயிலை மட்டும் வைத்துக்கொண்டு கள்ளுக்கடைகளை மூடவேண்டுமா? (விடுதலை - 20.06.1973)

 

('விடுதலை', 'குடிஅரசு'- முனைவர். 'மா.நன்னன்' அவர்கள் தொகுத்த 'பெரியார்கணினி' நூலினின்று எடுக்கப்பட்டவை)

 

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/04/blog-post_4488.html