01272021பு
Last updateதி, 25 ஜன 2021 1pm

அமெரிக்கர்கள் ஆக்கிரமித்த ஆப்கானிஸ்தான் இன்று

அமெரிக்க "தேவர்களால்", தலிபான் "அரக்கர்கள்", 7 வருடங்களுக்கு முன்னர் விரட்டியடிக்கப்பட்ட பிறகு, "விடுதலையடைந்த" ஆப்கானிஸ்தானின் இன்றைய நிலமை என்ன? மேற்கத்தைய கல்வி போதிக்கப்படுவதற்காக, நூற்றுக்கணக்கான பாடசாலைகள் எரிக்கப்படுகின்றன. அப்படி ஒரு சம்பவத்தை படம்பிடிக்க சென்ற ஊடகவியலாளர் சிலர், எரித்த தலிபான்களையும்,

 அப்போது பாதுகாப்பு படையினருடன் நடந்த சண்டையையும் வீடியோ பதிவு செய்துள்ளனர்.(அந்த வீடியோவை நீங்கள் இங்கே பார்வையிடலாம்.)

  

சாம்பலில் இருந்து உயிர்த்த தாலிபான்கள், பல்கிப்பெருகி, தற்போது மூன்றில் ஒரு பங்கு ஆப்கனிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை, அங்கே ஆக்கிரமித்துள்ள "நேட்டோ" படை அதிகாரிகளே ஒத்துக்கொள்கின்றனர். அவ்வப்போது பாரிய இராணுவ நடவடிக்கைகள் மூலம், தலிபானை அடக்கி ஒடுக்கி வருவதாக, அமெரிக்க இராணுவ பேச்சாளர்கள், CNN ஐ கூட்டி வந்து காட்டினாலும், தொலைக்காட்சி கமெராக்கள் அகன்ற பின்னர், அங்கே நடப்பன பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. கிராமங்களிலும், சிறு நகரங்களிலும், இரவு வேளைகளில் தலிபான் போராளிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று உத்தரவு போட்டு விட்டு செல்கின்றனர். மீறுவோரின் கதி என்ன என்று எல்லோருக்கும் நன்கு தெரியும்.

   

அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பு படைகள் பெருமளவு நேரம் முகாம்களுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். தலிபானுடன் சண்டையிடும் வேலையை, அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட ஆப்கன் பாதுகாப்புபடையினர் செய்கின்றனர். எப்படியோ மரணிப்பது ஆப்கானியர்கள் அல்லவா? தலிபான் போராளி ஒவ்வொருவருக்கும் சம்பளம் வழங்கப்படுகிறது. இது சாதாரண அரசபடை வீரர்களினுடையதை விட 5 மடங்கு அதிகம். தலிபான் முன்னிலும் விட பலமாக காணப்படுவதாகவும், போரிடும் திறணை வளர்த்துக் கொண்டுள்ளதாகவும், மேற்குலக ஊடகங்களே கூறுகின்றன.

  

அமெரிக்கர்கள் விடுதலை செய்த ஆப்கானிஸ்தானில் மனிதஉரிமை எப்படி மிதிக்கப் படுகின்றது என்பதை கீழேயுள்ள ஆவணப்படம் உணர்த்தும்.

  

http://kalaiy.blogspot.com/2008/08/blog-post_20.html