செல்போன்களை பயன் படுத்துவதால் புற்று நோய், நரம்ப தளர்ச்சி, கேட்கும் திறன் குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்று சில ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.ஆனால் இந்த தகவல்கள் ஆதாரமற்றவை. அவை நிரூ பிக்கப்படவில்லை என்று மாறுபட்ட தகவல்களும் வெளியாயின. இந்த நிலையில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க டாக்டர்கள் இணைந்து ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

இந்த ஆய்வில் மொபைல் போன்களில் இருந்து வெளி யாகும் கதிர்கள் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இந்த கதிர் வீச்சு நமது தூக்கத்தை பாதிக்கும். இதனால் தூக்கம் வராமல் அவதிப்பட நேரிடும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மூளையின் செல்களை இந்த கதிர்வீச்சு தூண்டி விடுவதால் மூளை விழிப்பு டன் செயல்படும். இதனால் ஆழ்ந்த தூக்கம் வராது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 35 ஆண்கள் மற்றும் 36 பெண்களிடம் இந்த சோதனை நடத்தப்பட்டு நிரூபிக்கப் பட்டுள்ளது. இவர்கள் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள்.

http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1200911384&archive=&start_from=&ucat=2&