. தமிழரங்கம்
12052020
Last updateஞா, 29 நவ 2020 7pm

"பிளாக் டீ' அருந்தினால் நீரிழிவு நோய் கட்டுப்படுமாம்

lankasri.com"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்ற கூற்றை நாம் பலமுறை நினைவுக்கூர்ந்தாலும், அந்த குறைவற்ற செல்வத்தை பெறுவதில் நம்மில் பலர் போதிய விழிப்புணர்வின்றியே இருக்கிறோம். நாள்தோறும் நிகழ்ந்து வரும் விஞ்ஞான-அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ப, நோய்களும் பல்வேறு நிலைகளில், வெவ்வேறு தன்மைகளில் மாற்றமடைந்து வருகின்றன.

மனிதகுலத்தில் எண்ணற்ற நோய்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டாலும், அதில் தலையாயதும், மனிதனின் உடலை சிறிதுசிறிதாக அழிவுக்கு இட்டுச்செல்வதும் நீரிழிவு நோய்தான்.

அதனையொட்டி, பல ஆய்வுகள் உலக அளவில் நடத்தப்பட்டு, அன்றாடம் புதுபுது தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்தவகையில், லண்டன் நகரில் நீரிழிவு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பிளாக் டீ அருந்தினால் நீரிழிவு ஒரளவு கட்டுப்படும் என்ற புதிய தகவல் வெளியாகிவுள்ளது. "பிளாக் டீ' யில் இருக்கும் வேதியியல் பொருளுக்கு நீரிழிவைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதனையும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு உள்பட்டே அருந்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். அதற்கு மேல் சென்றால் அதுவும் ஆபத்தில் முடியும் என அவர்கள் எச்சரித்துள்ளனர். ஆகவே, நீரிழிவு நோயை கட்டுப்படுத்த இதனை ஓர் வழிமுறையாக எடுத்துக் கொண்டாலும், அதனை வராமல் தடுப்பதே நாம் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய அம்சமாகும்.

http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1204789206&archive=&start_from=&ucat=2&