lankasri.comசெல்போனை பயன்படுத்துவதால் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் மனஅழுத்தம் அதிகரிப்பதாக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் அவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதுடன் தூக்கமின்மை, பொறுப்பற்ற மனப்போக்கு போன்ற பிரச்னைகளும் ஏற்படுகிறது.

சுவீடன் நாட்டில் 14 முதல் 20 வயதுக்குட்பட்ட 21 மாணவர்களிடம் செல்போன்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் அதிக நேரம் செல்போனை பயன்படுத்தும் 20 மாணவர்கள் மனஅழுத்தம், ஆழ்ந்த தூக்கம் இன்மை போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

இவர்களால் படிப்பில் ஆழ்ந்த கவனம் செலுத்த முடியாததுடன் முக்கிய விஷயங்களில் கூட பொறுப்பில்லாமல் செயல்படும் மனபோக்கும் இவர்களிடம் காணப்படுகிறது.

புகை பிடித்தல், மது போன்றவைக்கு அடிமையாவது போல சில இளைஞர்கள் செல்போன்களை பயன்படுத்துவதற்கும் அடிமையாகி உள்ளனர்.

இதே நிலை தொடர்ந்தால் அவர்களது உடல்நிலையையும் இது பாதிக்கும் என்பதும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

எனவே செல்போனை அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

கர்ப்பிணிகளுக்கும் பாதிப்பு: கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அதிக அளவில் செல்போனை பயன்படுத்தினால் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 7 வயதுக்கு உள்பட்ட சிறார்கள் செல்போன்களை அடிக்கடி பயன்படுத்து அவர்களது உடல்நிலை பாதிக்கப்படும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1213130970&archive=&start_from=&ucat=2&