09252022ஞா
Last updateபு, 02 மார் 2022 7pm

குழந்தை வளர்ப்பு

நேற்று மாலை என் அலுவலகத்தில், பெற்றோர்கள் தங்கள் வீட்டில் குழந்தைகளுடன்
நேரம் செலவழிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு பேச்சு நடைபெற்றது.
நானும் போயிருந்தேன்.'இன்னும் கல்யாணம் கூட ஆகலை, அதுக்குள்ளே குழந்தை வளர்ப்பு
பத்தி இவ்ளோ அக்கறையா? வெரி குட்' என்று நிகழ்ச்சி நடத்தியவர்கள் என்னைப்
பாராட்டிய போது, 'அதெல்லாம் ஒண்ணும் இல்லை, என் அப்பா அம்மா என் கிட்ட சரியான
முறையில நேரம் செலவழிச்சாங்களான்னு தெரிஞ்சு கொள்ள வந்தேன்' என்று
ஜோக்கடித்தேன். இருந்தாலும் எனக்கு மகள் பிறக்க வேண்டுமென்றும் அவளை
எப்படியெல்லாம் வளர்க்க வேண்டுமென்றும் எனக்கு இருக்கும் ஆசைகள் பலரும்
அறிந்ததே என்பதால் நான் அந்த நிகழ்ச்சிக்குப் போனதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

அதிலே சொல்லப்பட்ட சில சுவாரஸ்யமான தகவல்கள் இவை -

குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பதனால் அவர்களுக்கு ஏற்படும் நன்மைகள்:

-- பெற்றோருடன் அதிக ஒட்டுதல் எற்படும் (Bonding)
-- பெற்றோர்கள்கள் குழந்தைகளை நன்கு புரிந்து கொள்வார்கள். புரிந்து கொண்டால்
தான் அவர்களுக்குத் தேவையானதைச் செய்ய இயலும் (Understanding)
-- குழந்தைகள் தனது அனுபவங்களைப் பெற்றோருடன் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு
ஏற்படும் (Sharing of experiences)
-- பெற்றோர் தங்கள் அனுபவங்களையும் பாடங்களை குழந்தைகளுக்குக் கற்றுத் தர ஒரு
சந்தர்ப்பமாக அமையும் (Passing of the knowledge)
-- குழந்தைகளுக்கு தங்கள் பெற்றோரிடம் எந்த விஷயமானாலும் பேசலாம் என்ற
நம்பிக்கையை ஏற்படுத்தும் (Building trust)
-- தங்கள் பெற்றோரின் வாழ்வில் தாங்கள் ஒரு முக்கிய பகுதி என்பதை அறிந்து
அவர்களுக்கு ஒரு சுயமதிப்பு ஏற்படும் (Self-esteem)

பெற்றோர்களுடன் சிறு வயதில் அதிக நேரம் செலவழித்து நெருக்கம் பெற்ற குழந்தைகள்,
தங்கள் பதின்ம வயதுகளில் தவறான செயல்களில் ஈடுபடுவதில்லை என்பது ஆராய்ச்சியின்
மூலம் கண்டறியப்பட்ட உண்மையாகும்.

நேரம் செலவழிப்பது என்பதை "தரமான நேரம்" (Quality Time) என்று கூறுகிறார்கள்.
ஏனோதானோவென்று குழந்தையுடன் இருப்பதை தரமான நேரம் என்று கருத இயலாது.
அதற்கென்று சில அம்சங்கள் இருக்கின்றன:

-- குழந்தையுடன் தனியாக இருக்க வேண்டும் மற்றும் அவர்களோடு பழக வேண்டும் (alone
with and interacting with the child). இதிலே இரண்டு பகுதிகள் இருக்கின்றன. ஏதோ
ஒரு கல்யாணத்துக்குக் குழந்தையுடன் போய்வந்து விட்டு, "இன்று நான் என்
குழந்தையோடு தரமான நேரம் செலவழித்தேன்" என்பது ஒப்புக் கொள்ளப்படமாட்டாது.
நீங்களும் குழந்தையும் ஒரு தனி இடத்தில் இருக்க வேண்டும். இன்னொன்று இருவரும்
ஒரு தனி அறையில் அமர்ந்து ஆளுக்கு தனியாக ஏதாவது வேலை செய்து கொண்டிருந்தால்
அதுவும் சரி கிடையாது. இருவரும் பேசிப் பழக வேண்டும் அப்போது தான் அது தரமான
நேரமாகக் கருதப்படும். இதிலே ஒருமித்த நேரம் (focussed time) என்றும், இணைந்து
இருக்கும் நேரம் (hang around time) என்று இருவகைகள் உண்டு. ஒருமித்த நேரம்
என்பது, இருவரும் இணைந்து ஒரு முக்கியமான செயலைச் செய்வது. இணைந்து இருக்கும்
நேரம் என்பது இருவரும் சேர்ந்து ஏதாவது (முக்கியமானதாக இருக்க வேண்டும் என்று
அவசியமில்லை) செய்வது. ஆனால் எந்த வகையில் நேரம் கழித்தாலும் உங்களது கவனம் 100
% குழந்தையை நோக்கியதாக இருக்க வேண்டும்.

-- சொற்கள் மற்றும் செயல்கள் மூலம் அன்பை வெளிப்படுத்துவது (demonstrating love
through words and actions). நீங்கள் இணைந்து இருக்கின்ற நேரத்தில் உங்களது
சொற்கள் மற்றும் செயல்கள் மூலம் அன்பை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.
இருப்பினும் இதனை சூழ்நிலை மற்றும் குழந்தையின் வயது ஆகியவற்றை மனதில் கொண்டு
செய்யலாம்.

-- சிறப்பான தாக்கம் ஏற்படுத்த வேண்டும் (having a special impact).
ஒருமிக்கும் நேரம் (connect times) என்று ஒன்று உண்டு. அதாவது நாம் குழந்தையை
நீண்ட நேரம் பிரிவதற்கு சற்று முந்தைய நேரம் (நாம் அலுவலகம் செல்லும் போது
அல்லது குழந்தை பள்ளிக்குச் செல்லும் போது), நீண்ட காலத்துக்குப் பின் மறுபடி
காணும் நேரம் (அலுவலகத்திலிருந்து/பள்ளியிலிருந்து திரும்பிய நேரம்), இரவு
படுக்கைக்குச் செல்லும் நேரம் போன்றவை. இந்த நேரங்களில் குறிப்பாக பெற்றோரின்
அன்பும் கவனமும் கிடைக்கப்பெற்றால் குழந்தைகள் மிகவும் மனம் மகிழ்கிறார்கள்.
இது அவர்களின் மனதில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் அவர்களின்
பிறந்த நாள் அல்லது அவர்கள் மேடையில் கலைத் திறனை வெளிப்படுத்தும் நேரம்
ஆகியவற்றின் போதும் பெற்றோர்கள் உடனிருப்பது அவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை
அளிக்கிறது.

-- குழந்தைகள் விரும்பும் மற்றும் குழந்தைகள் ஆரம்பித்த வேலைகளின் போது (child
initiated and child sanctioned activities). அதாவது குழந்தைக்குப் பிடித்தமான
ஒரு வேலையின் போது நீங்கள் உடனிருந்தால் தான் அது தரமான நேரமாக கருதப்படும்.
ஒரு குழந்தைக்கு வீட்டுப் பாடம் செய்ய அவ்வளவாய்ப் பிடிக்காது எனும்போது
வீட்டுப்பாடம் செய்ய நீங்கள் உதவினாலும் அது தரமான நேரமாக குழந்தைக்குத்
தோன்றாது. அதற்குப் பிடிக்கிற ஒரு வேலையை அதற்கு அடுத்து அந்தக் குழந்தை
செய்யும்போது நீங்கள் உடனிருந்தால் அது நன்று.

தரம் என்பதோடு நேரத்தின் அளவும் (quantity of time) முக்கியத்துவம் வாய்ந்ததே.
குறிப்பாக குழந்தைகள் சிறிய வயதினராய் இருக்கும் போது மேலே குறிப்பிட்ட
வகைகளில் அதிக நேரத்திற்கு அவர்களோடு பழகி இருக்க வேண்டியது மிக அவசியம்.
ஏனென்றால் சிறிய வயதில் அவர்களுக்கு உங்களின் அன்பும் கவனிப்பும் அதிகமாகத்
தேவைப்படுகிறது. மேலும் சிறிய வயதிலே தான் உங்களாலும் அவர்களின் வாழ்வில்
குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களை நல்வழிப்படுத்த இயலும்.

குழந்தைகளோடு நெருக்கத்தை வளர்க்க உங்கள் வாழ்நாளில் ஏறக்குறைய அவர்களின் முதல்
பதினைந்து வருடங்களுக்காவது அன்றாடம் சிறிது நேரம் ஒதுக்குங்கள். அது
கண்டிப்பாக பின்னாட்களில் அதிகமான பலனை அளிக்கும்.

On 9/15/05, Buhari A <buh...@gmail.com> wrote:

> சிக்கந்தர் சேகரித்த பக்கங்கள்

> புதிய விவாகரத்து விதிகளினால் நன்மைபெற இருக்கும் அராபிய பெண்மணிகள்

> ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பெண்களுக்கான உரிமைகளைப் பாதுகாப்பதற்கான
> மிகப்பெரு முயற்சியாக மந்திரி சபை தனிப்பட்டோரின் சார்பான ஒரு
> சட்டத்துக்கான அனுமதியை வழங்கியுள்ளது. இதன் பிரகாரம் பெண்கள் தமது
> மதரீதியான நீதிமன்றம், ஷாரியாவுக்கு மனுச் செய்து தமது கணவன்மாருக்கும்
> போதிய நஷ்டஈட்டுத் தொகை வழங்கிய பின்னர், தமது கல்யாணத்தை விலக்கிக்
> கொள்ளும் உரிமை வழங்கப்படுகின்றனர்.

> இச்சட்டம் யூ.ஏ.ஈ. ஆட்சியாளர்களால் நிறுவப்பட்ட எவ்.என்.சி. (சமஷ்டி
> தேசிய கவுன்சில்) யினது அனுமதிக்காக இன்று எதிர்பார்த்திருக்கிறது. இது
> எகிப்தியர்களதும் ரியூனிஷியர்களதும் சட்டத்தையொத்ததென்றும்
> புரட்சிகரமானதென்றும் பிரபல சமூகவியலாளர் றிமா சமானினால்
> வர்ணிக்கப்பட்டுள்ளது.

> " இது அரபுலகில் பெண்களின் உரிமைகளுக்காக இத்தகைய தீர்மானமொன்றை
> மேற்கொண்ட மூன்றாவது நாட்டின் இடத்தில் யூ.ஏ.ஈ.யை அமர்த்துகிறது. இந்த
> உரிமை இஸ்லாத்தினால் எல்லாப் பெண்களுக்கும் வழங்கப்பட்டிருப்பினும், அது
> செயற்படுத்தப்படுவதில்லை." என்கிறார் பெண்களது உரிமைகளுக்காகக் குரல்
> கொடுக்கும் சபான்.

> குலோ எனப் பெயரிடப்பட்ட இந்தச் சட்டப் பிரேரணை தம்பதிகளுள் யாராவது
> ஒருவர் மற்றவரிடத்து, மூளைக்கோளாறு, குஷ்டம் அல்லது பாலியல் பலவீனம்
> போன்ற நோய்கள் இருப்பது கண்டால் விவகாரத்துக்கு மனுச் செய்யலாம். ஆனால்,
> இந்தக் குறைபாடுகள் இருப்பதாக மண முடிப்பதற்கு முன் அறியப்பட்டிருந்தால்
> அல்லது மணம் நடைபெற்ற பின் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால் இந்த விண்ணப்பம்
> செல்லுபடியாகாது.

> எனினும், பாலியல் பலவீனத்துக்காகச் செய்யப்பட்ட விண்ணப்பம் ஏற்றுக்
> கொள்ளப்படும்.

> " இது எங்களது மன ஆர்வத்துக்கு ஒரு உண்மையான உந்து சக்தியாகும்.
> திருப்தியற்ற மண வினைகளால் கவலையில் வாழும் பெண்கள் பலருளர். அவர்கள்
> எதுவும் செய்ய முடியாத கஷ்ட நிலையில் இருந்தனர். இப்போது அவர்களுக்கு
> அவசியமாகத் தேவைப்பட்ட உரிமை கிடைத்துள்ளது." என்கிறார். டுபாயைத்
> தளமாகக் கொண்ட இயக்கமொன்றின் செயலரான மொனா அல் மன்சூறி.

> எமிறேட்சின் ஆட்சியாளர்களான யூ.ஏ.ஈ. யின் உச்சமன்றத்தினால் இச்சட்டவரைவு
> சட்டமாக்கப்படுதல் வேண்டும். அது சட்டவலுப் பெற்ற பின்னர் இதுவரை
> தீர்ப்பு வழங்கப்படாதிருந்த முந்திய நாட்களுக்கான விவாகரத்து
> விண்ணப்பங்களுக்கான விசாரணைகளையும் இது உள்ளடக்கும்.

> இந்தச் சட்டம் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் கணவனால் கொடுக்கப்பட வேண்டிய
> தற்காலிக பராமரிப்புத் தொகைக்கும் வழிவகுக்கிறது. பெற்றார்
> இல்லாதவிடத்து, பராமரிப்பாளர் சம்பந்தமான விடயத்தையும் இது கையாள்கிறது.

> " கடந்த 15 வருட காலமாக நான் மிகவும் அவலமான திருமணச் சிறையொன்றில்
> அடைபட்டுக் கிடந்தேன். இது என்னை உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும்
> வதைத்திருந்தது. நான் இனி எனது உரிமைகளைப் பற்றிச் சிந்திக்க முடியும்
> என்பது பற்றி மகிழ்ச்சியடைகிறேன். எனது மகள்மாரினது நிலையும் அத்தகையதே."
> என்கிறார் தனது பெயரை வெளிப்படுத்த விரும்பாத ஒரு பெண்மணி.

> அவர் மேலும் கூறுவதாவது, " கல்யாணத்தினால் ஏற்படும் முரண்பாடுகளினதும்
> பொருந்தாத தன்மையினாலும் சகித்து வாழும் பல பெண்களை யானறிவேன். இச்சட்டம்
> என்னைப் போன்ற பெண்களுக்கு எமது எதிர்காலத்தைப் பற்றித் திட்டமிட
> வழிசமைத்துத் தந்துள்ளது."

> பல்கலைக்கழக மாணவியான அயேஷா அல் கர்மாலி வித்தியாசமான கருத்தொன்றைக்
> கூறுகிறார். " இந்த முறை முன்னேற்றகரமானதுதான். ஆனால், இந்தச் சட்டம்
> துஷ்பிரயோகம் செய்யப்படக் கூடாதென்பதைப் பற்றி நாம் கவனம் செலுத்த
> வேண்டும். தமது கடமைகளைத் தட்டிக் கழிக்கும் பெண்கள் இத்தகாத செயல்களில்
> ஈடுபடுவதற்கு முன்னர் அவர்கள் தமது கணவர், பிள்ளைகளைப் பற்றி தீவிரமாகச்
> சிந்திக்க வேண்டும்."

> அவர் மேலும் கூறுவதாவது, " விவாகரத்துக்காக விண்ணப்பம் செய்யும்
> பெண்களும், ஆண்களும் தீவிர வழிநடத்தல் செயற்பாடுகளுக்கு
> உட்படுத்தப்படுதல் வேண்டும். கண்டபடி விவகாரத்துக் கோரும் நிலையைத்
> தவிர்க்க முயற்சிகள் மேற்கொள்ளுதல் வேண்டும்".

> அதிகாரிகளை கவலையடையச் செய்யும் அளவுக்கு விவாகரத்து விகிதம் யூ.ஏ.ஈ.யில்
> உயர்வடைந்துள்ளது. இளம் பெண்கள், தங்கள் வயதுக்கேற்ற, கல்வித் தகைமை,
> விவேகத் தகைமைக்கேற்ற மணவாளர்களைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில்,
> மணம் செய்து கொள்வதில் அதிகரித்து வரும் கஷ்டமான நிலையை
> எதிர்நோக்குகிறார்கள்.

> அதிகாரத்திலுள்ளவர்கள் இந்த நிலையை மாற்றியமைப்பதற்கும் அவலமான
> நிலைகளிலிருந்து தம்பதிகளைப் காப்பாற்றுவதற்கும் பல திட்டங்களையும்
> முன்மாதிரிகளையும் தீட்டி நடைமுறைப் படுத்துகின்றனர்.

> " இந்தச் செயற்பாடு யூ.ஏ.ஈ.யில் பெண்களுக்கு ஒரு பாரிய உந்து சக்தியாக
> அமைந்துள்ளதுடன், இது படிப்படியாக அராபிய உலகம் முழுவதிலும் பரவும்.
> இந்தச் செய்தி ஏனைய அரபு நாடுகளையும் இத்தகைய சட்டங்களை இயற்றுவதற்கும்,
> பெண்கள் இயக்கங்களை பெண்களது உரிமைகளுக்கு போராடுவதற்கும் பாரிய
> ஊக்கமளிக்கும்." என்கிறார் சபான்.

> அவர் மேலும் கூறுவதாவது, "மூன்று அரேபிய நாடுகள் இதைச் செய்தால் எல்லா
> அரேபிய நாடுகளும் இதனைப் பின்பற்றி செய்யக் காலம் கனிந்துள்ளது. ஏனெனில்,
> இவை இஸ்லாம் மதத்திலேயே பொதியப்பட்டுள்ள உரிமைகளாகும். அவற்றை
> நடைமுறைப்படுத்த மறுப்பதற்கு எக்காரணமுமில்லை".

> சபான் மேலும் விளக்குவதாவது, "இந்தச் சட்டமூலத்தில் சில தவறுகள் உள்ளன.
> ஒரு ஷரத்து மகள் ஒருவர் 13 வயதை அடைந்தவுடன் அவரைப் பராமரிக்கும்
> உரிமையைத் தந்தைக்கு வழங்குகிறது. இது பெண்களது உரிமையைப் பாதிப்பதாக
> அமைகிறது. பெண் பிள்ளையொருவர் தனது எதிர்காலத்தைத் தானே நிர்ணயிக்கும்
> வயதையடையும் வரை அவரைப் பராமரிக்க மிகப் பொருத்தமானவர் அவர் அன்னையே.
> தவிர்க்க முடியாத காரணங்களுக்காக இந்நிலை மாற்றமடையலாம். இந்த ஷரத்து
> புனராலோசனை செய்யப்பட வேண்டியதொன்று."

> இந்தச் சட்டமூலத்தின் பிரகாரம் ஒரு ஆண்பிள்ளையைப் பெண்கள் பராமரிக்கும்
> வயது 11 வரையிலாகும். பெண்பிள்ளை 13 வயது வரை பெண்ணினால்
> பராமரிக்கப்படலாம். இது பிள்ளையின் நன்மைக்காக நீதிமன்றம் ஒன்றினால்
> மாற்றியமைக்கப்படலாம்.

> இந்தச் சட்டம் யூ.ஏ.ஈ. மக்களுக்குப் பொருந்தும், புலம் பெயர்ந்து
> சென்றோர் தமது நாடுகளின் சட்டதிட்டங்களைத் தாங்கள் பின்பற்றப் போவதாகத்
> தீர்மானித்தலான்றி, இச்சட்டம் அவர்களுக்கும் பொருந்தும்.

> இந்த நாட்டில் வாழாத அல்லது தொழில் புரியாத வெளிநாட்டவர்களுக்கெதிராகத்
> தொடுக்கப்பட்ட வழக்குகளை நீதிமன்றங்கள் விசாரிக்கலாம். எப்போதெனில்,
> அவர்களது பெற்றோர் அல்லது பிள்ளைகள் இந்நாட்டில் வாழ்ந்து தொழில்
> புரிபவர்களாக இருந்து தமது பராமரிப்புக்காக மேற்கூறப்பட்டவர்கள் மீது
> வழக்குப் பதிவு செய்திருந்தால்.

> அண்மைக் காலமாக யூ.ஏ.ஈ. பெண்கள் கல்வி, வர்த்தகம், தொழிற்றுறைகள் ஆகிய
> சமூகத்தின் எல்லாத் துறைகளிலும் அதிகரித்த அளவிற் பங்குபற்றி
> வருகிறார்கள். 2003 ஆம் ஆண்டில் யூ.ஏ.ஈ.யின் மிகப்பெரிய
> பல்கலைக்கழகத்தில் இருந்த பெண் பட்டதாரி மாணவிகளின் எண்ணிக்கை விகிதம்
> ஆண்களுடன் ஒப்பிடும் போது 5:1 ஆக இருந்தது.

> தேசத்தின் தொழிற்றுறையில் 1986 ஆம் ஆண்டில் 9.6 விகிதமாக இருந்த
> பெண்களின் தொகை 2004 இல் 22.4 ஆக அதிகரித்துள்ளது. 2003 மே மாதம்
> தொடக்கம் யூ.ஏ.ஈ. பெண்கள், வர்த்தக பெண்களுக்காக ஒரு மன்றத்தை
> நிறுவியுள்ளனர். அதன் முதலீடு 3.3 பில்லியன் யூ.எஸ். டொலர்களுக்கு
> அதிகமானது எனப் பெருமையுடன் பேசிக் கொள்கின்றனர்.

> காலஞ்சென்ற யூ.ஏ.ஈ. ஜனாதிபதி ஷீக் சாகெட் பின் சுல்ரான் அல் நாயேன்
> காலத்தில் பெண்களது முன்னேற்றத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. " நான்
> பெண்களது ஆதரவாளன். பெண்களது வேலை செய்வதற்கான உரிமைக்கு அழுத்தம்
> கொடுக்கவும் அவர்கள் இந்த நாட்டின் முன்னேற்றத்துக்குப் பங்களிப்புச்
> செய்வதை ஊக்குவிக்கவும் யான் இதைச் சொல்கிறேன்." என்று அவர் கூறுகிறார்.

> சபான் கூறுவதாவது, "பெண்கள் என்ற நிலையில், இத்தகைய சந்தர்ப்பங்களைப்
> பயன்படுத்தி, நாம் எமது உரிமைகளுக்காகத் தொடர்ந்து முயற்சித்து, உரிய
> வெற்றி நிலையை எட்ட வேண்டும். பிரச்சினை யாதெனில், எமது பெண்கள்
> இயக்கங்கள் பஹ்ரெய்ன், குவைத்தில் இருப்பவை போன்று வலுவானதாகவும்
> தீவிரமானவையாகவும் இல்லை."

> அவர் மேலும் சொல்கிறார், " நிறுவனங்களிடம் விடாமல் யூ.ஏ.ஈ. பெண்கள் இந்த
> விடயங்களைத் தாங்களே கையாள வேண்டும். மாற்றம் உள்ளிருந்தும்,
> அடிமட்டத்திலிருந்தும் வரவேண்டும். சட்டங்கள் அமைக்கப்பட்டாலும், பெண்கள்
> மாற்றம் வேண்டும்." என்ற மன ஆர்வத்துடன் செயற்படா விட்டால் சட்டங்கள்
> வாளா உறங்கும்.".

 

http://groups.google.com.pr/group/anbudan/msg/df41569d077686b9