11302021செ
Last updateச, 09 அக் 2021 9am

உயிரியல் கடிகாரமும் வயதாதலும்.புரத மூலக்கூறுகள்- வாழ்க்கைக் காலத்தோடு நச்சுத்தன்மை உள்ள புரதத்தின் அளவும் உடல் அங்கங்களில் அதிகரிக்கிறது.

மனிதன் கருவில் தோன்றி குழந்தை, இளமை, முதுமை என்ற நிலைகளைக் காலவோட்டத்தோடு கடக்கிறான் அல்லவா. இது எதனால் எமதுடலில் நிகழ்கிறது என்ற அறிய அமெரிக்க உயிரியல் ஆய்வாளர்கள் எலிகளை வைத்து நடத்திய ஆய்வில் இருந்து குறுகிய கால வாழ்வுக் காலம் கொண்ட புரத மூலக்கூறின் உற்பத்தியும் அதன் சுத்திகரிப்பும் மீள் உற்பத்தி வேகமுமே இதனைச் செய்யத் தூண்டுகிறது என்று கண்டறிந்துள்ளனர்.

எமது உடலின் இரசாயனத் தொழிற்சாலையாக இருப்பது ஈரல். வயதாக வயதாக ஈரல்கலங்களில் பாழடைந்த புரத மூலக்கூறுகளை துப்பரவு செய்யும் பணியும் மீளப் புதிப்பிக்கும் பணியும் பலவீனமடைந்து செல்வதால் கலங்களும் குறிப்பாக மூளை, இதயம் மற்றும் ஈரலில் உள்ள கலங்கள் நோய்வாய்ப்படும் வாய்ப்பும் அதிகப்பதால் அவை செயலிழந்து மூப்பும் அது சார்ந்த நோய்களும் உருவாவதாக இனங்கண்டுள்ளனர்.

இள வயதில் பாழடைந்த புரதங்களை சுத்திகரிக்கும் தொழிலும் மீளப் புதிப்பிக்கும் தொழிலும் சுறுசுறுப்பாக நடப்பதால் உடலும் இளமையாக இருக்கிறது.

முதுமையிலும் பாழடைந்த புரதங்களை சுத்திகரிக்கும் பணியை, மீளப் புதிப்பிக்கும் பணியை சுறுசுறுப்பாக்கக் கூடிய வகையில் மரபணு மாற்றங்களைச் எலிகளில் செய்து பரிசோதித்துப் பார்த்த போது, அவை குறிப்பிடத்தக்க அளவு இளமைத் தன்மையுடன் பாழடைந்த புரதத்தை சுத்திகரிப்பதையும் மீளப் புதிப்பிப்பதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதன் மூலம் முதுமைக் காலத்திலும் இளமைத் தன்மையுள்ள ஆரோக்கியமான வாழ்வை நீட்டிக்க முடியும் என்று விஞ்ஞானிகளிடம் புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. அத்துடன் தீர்க்க முடியாத சில நோய்களையும் தீர்க்க முடியும் என்றும் கருதுகின்றனர்.

இது தொடர்பான பரிசோதனைகள் இன்னும் பல கட்டங்களை தாண்ட வேண்டி இருக்கின்றன.

 

http://kuruvikal.blogspot.com/2008/08/blog-post_11.html