Language Selection

பி.இரயாகரன் 1996-2000
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 அம்மா 9 இல் ஷோபாசக்தி வழக்கம் போல் என்பெயரில் தான் எழுதியும், என்னைத் திரித்தும், வரட்டுவாதங்களிலும் தொடங்கி, தனது விவாதளத்தில் காலத்தை ஓட்டும் மலிவு ரசனைக்கு தொடர்ந்தும் பதிலளிப்பது அவசியமாகிவிட்டது.

 

 

"சிங்குச்சா சிங்குச்சா சிவப்புக்கலரு சிங்கிச்சா" என்று ரகுமானின் கட்டுடைப்பு பாணி இசை மரபில் தனது கம்யூனிச விரோத்தை "சிவப்புக்கலரு" பின் வெளி படுத்தியவர், "இருப்பதெல்லாம் கேள்விகள்" என்றவர் சிவப்பை கிண்டல் செய்யும் போது கேள்வி எல்லாம் மாயமாகிவிட்டது. "கேள்வி" என்பது சாரம்சத்தில் சமரசவாத நடுநிலைவாதமே. இதில் எதிர்ப்பு என்பது கம்யூனிச "எதிர்ப்பு" மட்டுமே.

 

அம்மா சஞ்சிகையின் நேர்மைக்கு சவால் விடும் வண்ணம் ஷோபாசக்தி என்பெயரில் எழுதுவதைப் பார்ப்போம்."சமூகத்தை குறித்து எழுதாமல் தனிநபர்களை நோக்கி எழுதுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படும்" என, என் பெயரில் கூறுகின்றார். நான் எழுதியது என்ன எனப் பார்ப்போம். "... அதை விடுத்து பழையதைக் கோருவதோ, இருப்பதைப் பாதுகாக்க கோருவதோ, ஒட்டுமொத்த சமூகத்துக்கு எதிராக தனிநபர்களை நோக்கி படைக்கும் படைப்புகள் பிற்போக்கானவையாகும். இவை தடை செய்யக்கூடியவை.." என்று ஒரு சோசலிச சமூகத்தில் வாக்கப் போராட்டம் குறித்து எழுதியிருந்தேன். இந்த வரியை எழுத முன் விளக்கமாக எட்டு வரிகளின் முன் "இது போன்று சோஷலிச சமூகத்தில் மாறிச் செல்லும் பொருளாதார நிலைக்கு ஏற்ப்ப சுரண்டல், ஆணாதிக்கம், சாதியத்தை போற்றும் .......... அனைத்துப் படைப்புகளும் விமர்சனம் செய்யப் பட்டு தடை செய்யப்படும். இங்கு மனிதனை சுரண்ட பிளக்கும் அனைத்து படைப்புகளும் நியாயப்படுத்தும் நேரடி மறைமுகப் படைப்புக்கள் எல்லாம் தடை செய்யப்படும்." என எழுத முன் உதரணமாக "இன்று ஜரோப்பாவில் கிட்லரை போற்றும், நாசிசத்தை உயர்த்தும், பாசிச இன வெறியை உயர்த்தும் படைப்புகள் தடை செய்யப்படுகின்றது. இதை யாரும் (நாசிகளுக்கு வெளியில்) ஜனநாயக விரோதம் என கூறுவது இல்லை. இத்தடை படைப்பாளியின் சுதந்திரத்தை பறிப்பதாக யாரும் æபுலம்புவது இல்லை" என எழுதியிருந்தேன். அதை எல்லாம் மறைத்தபடிதான் என்னைத் திரித்து தனது வரட்டுவரிகளை என்மீது சோடித்து அரசியலில் விபாச்சாரம் செய்கின்றார். இந்த இரண்டு வசனங்களின் அரசியல் வேறுபாடு வாசகர்கள் ஒப்பிட்டே புரிந்து கொள்ளமுடியும். என்வசனத்தையே மாற்றி எழுதி இருப்பதெல்லாம் "கேள்வி" என எழுதியே விமர்சனம் செய்யும் ஷோபாசக்தி, இதுபோல் நாளை பல எழுதின் பதிலளிப்பது எனின் மோசடியை அம்பலப்படுத்தத் தான் என்பதை வசாகர்  எற்றுக்கொள்வர். அத்துடன் ஓரு ஷோசலிச சமூகம் குறித்து சொன்னதை நாசூக்காக முடிமறைத்து திரித்து அரசியல் செய்வது கேவலமானது. நான் சொன்னது தவறு எனின் எப்படி என விளக்குவதுதானே அரசியல் நேர்மை.என்மீது இதை தாக்குதாலாக நடத்தும் போது "கேள்வி" அல்ல தெளிவான முடிவில் உள்ளாதால் இதை விளக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.

 

"இருப்பதெல்லாம்" "கேள்வி" என்றவர் இதில் மட்டும் கேள்வி கடந்து தனிநபர் சுதந்திரத்தின் காவலர் ஆவது எப்படி? தப்பிப்பதற்க்கு "கேள்விகள்", "எதிர்"பதற்க்கு முடிவுகள் இது என்ன மோசடி?

 

என்பெயரில் அவர் எழுதிய வரிகளை ஆராய்வோம். ஒருவிவாதத்தில் ஈடுபடுவனுக்கு "கேள்வி"கள் எனின் அதை எப்படி ஆராயவேண்டும். அதை அம்மா ஆசிரியர் புவனன் கூறுவது போல் "மொட்டைத்தனமான குறிப்புகளைவிட்டு" தர்க்க ரீதியாக ஆதாராத்துடன் எழுதவேண்டும். சமூகம் முதன்மையானதா? தனிநபர் முதன்மையானவரா? அல்லது இரண்டுமா? எப்படி? சமுகத்தின் எதிர் அல்லாவ தனிநபர்? அதாவது சமூகத்தின் சுதந்திரமா? தனிநபர் சுதந்திரமா? சமுதயத்தின் ஒருபிரிவுக்கு சுதந்திரம் மறுக்கப்படும்போது தானே சுதந்திரம் கேள்வியாகின்றது? இரண்டு பிரிவுக்கும் சுதந்திரம் எப்படியிருக்கமுடியும். இவைகளை எல்லாம் "கேள்வி"யாக எழுப்பி அதில் எப்படி கோட்பாட்டு தவறு இழைக்கின்றேன் என வாசகருக்கு அம்பலப்படுத்தியிருக்க வேண்டும். மாறாக சமுதாயத்தின் பொதுவான முதலாளித்துவ சிந்தனையான தனிநபர் முதன்மைப்படுத்தலை சதாகமாக்கி, தனிநபர் சுதந்திரம் என்ற முதலாளித்துவ அமைப்பின் தொடர்ச்சியான நிடிப்புக்கான அடிப்படையை தனக்கு சாதகமாக கொண்டு, வேறு ஒரு சமூகத்தை ஒட்டி கூறிய கருத்தை திரித்து விளக்கம் இன்றி வரட்டு சொற்தொடர் ஊடாக சேறு விசுவது விமர்சனப் பண்பல்லா என்பதை "இருப்பதெல்லாம் கேள்விகள்" என்றத்துக்குள் இதையும் இனைத்து இப்படி விமர்சிப்பதை நிறுத்தி "கேள்வி"யை எழுப்பி அதில் ஒரு முடிவுக்கு வருவது தான் முக்கியம்.

 

"இருப்பதெல்லாம் கேள்விகள்" என்றால் அரை ஆயுள் முடிந்துள்ள நிலையில் வாழ்க்கை எல்லாம் கேள்வி கேட்டுக் கொண்டே காலத்தையும், மக்களையும் இருட்டில் வைத்து கதையாளக்க கோருகின்றீர்களோ? ஏன் அடுத்த தலைமுறையும் உங்களைப் போல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தால் ஒரு வாய் சோறு இன்றி பட்டினி கிடப்பவன், ஆணாதிக்க கொடுமையில் சிக்கியுள்ள பெண்கள், சாதியத்தின் கொடூரத்தில் உளறும் மக்கள் .... என சமுதயத்தில் உள்ளோர் எல்லாம் "கேள்வி"களுக்கு விடை காணும்வரை  காத்திருக்க வேண்டுமா? அல்லாது கேள்வி கேட்டு கொண்டு இருக்க வேண்டுமோ? அதன் எல்லையை தெரியப்படுத்துமாறு மக்கள் சார்பாக கோருகின்றேன். இல்லாது தெரிந்த அறிவு மேதைகள் பதில் தரவும்.

 

இதற்க்கு அம்மா 3இல் ஷோபாசக்தி எழுதிய "மைசூர் ராசா" கதை அழாகவே அவர்க்கு பதில் தருகின்றது." |இப்ப உலகத்தில் நடக்கிற பிரச்சனைகளைப்பற்றி என்ன நினைக்கிறீர? என்று கேட்டார். இந்தக் கேள்வியை அவர் கேட்ட லாவகமும், ராகமும், அறுபது, எழுவது, வருசமாகவே அவர் இப்படியான கேள்விகளை கேட்டுக்கேட்டே கேள்வி கேட்பதில் அதிகபட்ச |எக்ஸ்பீரியன்ஸ்| உடையயவராகிவிட்டார் என்பதை நிரூபித்தன----- ஓகே.. பருப்பு விலை கூடிப்போச்சுது எண்டது உண்மை. அப்ப பருப்பின்ர விலையை எப்படி குறைக்க முடியும் எண்டு நினைக்கிறீர்?| " என்ற வரிகளை அன்று எழுதியவர் இன்று "கேள்வி" கேட்பதையே, தீர்வுக்கு பதிலாக முன்வைக்கின்றார். நாங்கள் சாதி ஒழிப்பை முன்வைக்கின்றோம். அதை மறுத்து சாதியை பாதுகாக்கும் தாலித்தியத்தை முன்வைத்தை விமர்சித்தோம். இல்லை எனின் எப்படி ஒழிக்கலாம் என பருப்பு விலை போல் கேட்க்க என்ன மாதிரி ஒழிப்பது என்பதை "கேள்வி"க்குள் போட்டு வாழ்க்கை பூரவும் கேட்டுக் கொண்டு இருக்க வேண்டிய "எக்ஸ்பீரியன்ஸ்" அரசியலை முன்வைக்கின்றார்.

 

மறுபுறத்தில் "கேள்வி"க்கு விடைதெரிந்தவைகளை எமக்கு ஷோபாசக்தி பட்டியல் போட்டு காட்டவேண்டும்;. அதிலாவது உருப்படியான உங்கள் கருத்தை தெரிந்த நாலு பேர் உங்கள் பாதையில் போராட உதவும். அதுவுமில்லை "இருப்பதெல்லாம் கேள்விகள்" என்று போட்டு யமுனாவை, என்னை, ராNஐஸ்வரி எப்படி எந்த "கேள்வி" முடிவால் விமர்சிக்கமுடிந்தது. "இருப்பதெல்லாம் எதிர்ப்புக்கள்" என்றவர் "இருப்பதெல்லாம் கேள்விகள்" என்று கூறியபடி எப்படி "எதிர்த்து" விமர்சிப்பது சாத்தியம். "கேள்வி" எழுப்பி விடை தெரியாதவன் எப்படி "எதிர்க்க" முடியும். இதற்க்கு இதே அம்மாவில் தமிரசன் எழுதிய கட்டுரையில் "..தம்மை எதிலும் சாராதவர்களாக அடியும் முடியும் தேடி அலைந்து கொண்டிருப்பவர்ராக சிலர் வாக்கு மூலம் கொடுத்தாலும் கூட எழுத்தாளனை அறியாமலும் அறிந்தும் ஒரு அரசியல் மற்றும் சமூகப்பார்வை இருக்கும்" என்ற வரிகள் அழகாக கருணகாமூர்த்திக்கு மட்டுமல்ல ஷோபாசக்திக்கும் பொருந்தும். இவர் கேள்வி மீது அடிமுடி தேடி அலைந்த படி இருக்கும் பிரகடணம், உண்மையில் இருக்கும் சமூகத்தை கெட்டியாக பாதுகாக்கும் "கேள்வி"யல்ல செயல்தளமாகும். "எதிர்ப்பு" எல்லாம் "கேள்வி"க்கு பதில், ஒவ்வொருவனையும் சமுகத்தின் பங்களியாக அதில் போராடு எனக் கோரும் மார்க்சியம் மீதுதான் என்பது "கேள்விகள்" பின் எழும்பும் "எதிர்ப்புகள்" தௌ;ள தெளிவாக உறுதிசெய்கின்றது. ஏன்எனின் மாhக்சியம் வாக்கத்தை, ஆணாதிக்கத்தை, சாதியை திட்டவட்டமாக வன்முறை மூலம் ஒழிக்க கோருகின்றது. இதைச் செய்ய தெளிவான அரசியல் மாhக்கத்தை, பாதையை வைக்கின்றது. இதை எதிர்த்து " கேள்வி" என்றபடி "கேள்வி" கேட்க்காது, விளக்காது, தனது வரட்டுதனத்தால் "எதிர்ப்ப"தெல்லாம் வர்க்கப்போராட்டத்தையே.

 

ஷோபாசக்தி தொடர்ந்தும் "|சமர்| பத்திரிகையோ பின்நவீனத்துவவாதிகளும், தலித்தியர்களும், பெண்ணியவாதிகளும் பூச்சிகள், புழுக்கள், தடைசெய்யப்படவேண்டியவர்கள், தண்டிக்கப்படவேண்டியவர்கள் என்று தீர்ப்பெழுதி தீராத அலுப்புக்கொடுத்து வருகிறது." என ஷோபாசக்தி எனது பெயரில் எழுதியே அரசியலில் நக்கி பிழைக்க வேண்டிய அரசியல் வறுமையில் மிளவும் தள்ளப்படுகின்றார். இப்படி எங்கேயாவது சமரில் எழுதியதை யாராவது நிறுவினால் நான்  எழுதுவதையே கைவிட தயாராக உள்ளேன். விரும்பினால் சமருக்கு நான் செலவு செய்யும் பணத்தை நிறுவிய நேர்மையாளனுக்கு தொடர்ந்து தரசம்மதிக்கின்றேன். இல்லாத பட்சத்தில் என்பெயரில் அவர்  எழுதிய தவறான வரிகளுக்கு மனம்வருந்தி ஒத்துக் கொள்ளவேண்டும். இந்த மாதிரி  தவறான வரியை போட்டு எனது நேர்மையை களங்கப்படுத்தியதுக்கு அம்மா தனது மன வருத்தை, ஷோபாசக்தி நிறுவாத நிலையில் தெரியப்படுத்தவேண்டும்.

 

அம்மா 8 இல் சேணன் யமுனாவை விமர்சிக்கும் போது "கீழ்ஐhதிகளின் கோட்பாடு" என எழுதியதாக யமுனா பெயரில் சேணன் எழுதி இந்த இலக்கிய விமர்சனங்கள் மோசடித்தனமானவை. நேர்மையற்ற இந்த போக்கில் உயிர்வாழும் இந்த சின்னத்தனமான மனிதர்கள் பின் விவாத்தில் நேர்மையில்லை. எனக்கு எழுதிய ஷோபாசக்தியின் கல்வெட்டில் கூட நான் எழுதா வரிகளில் மீது தனது வரட்டுவரிகளை போட்டே தனிநபர் மீது விமர்சன உலாவருகின்றார். ஒருவனின் சொந்தக் கருத்தை, அவனின் வரிகளை எடுத்துப் போட்டு விமர்சிக்கும் தகுதியும், நேர்மையும், ஆழுமையும் இன்றி தமது கற்பனைகளை மற்றவர்கள் மேல் போட்டு விமர்சிக்கும் அற்ப்பத்தனங்கள் கேவலாமானது. சொந்த வாழ்க்கையில் நீங்கள் கட்டுடைப்பதாக சொன்னதுக்கு எதிராக நடைமுறையில் இருந்தபடி, மற்றவனின் கருத்தை அதே மாதிரி மாற்றி எழுதுவது தான் கட்டுடைப்போ?

 

விமர்சன நேர்மை இன்மையை கட்டுடைத்து நேரத்தையும், இடத்தையும், உங்கள் வசிப்பு மீது அலுப்புட்டுவதை தவிர்க்க, நேர்மையை கோரியும் மறுத்தால், நேர்மையாக பதிலாளிக்காத விவாதம் அர்த்தமற்றது என்பது சமூக அக்கறைக்குரியவனின் சுட்டிக்காட்டால் ஆகும்.

 

பின்நவீனத்துவ கோட்பாடு இந்த ஏகாதிபத்திய பொருளாதார அமைப்பை பாதுகாக்கின்றது என்பது எமதுநிலை. அதன் விளக்கங்கள், விளக்க உரைகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கானது அல்ல. ஒடுக்கப்பட்ட மக்களுக்கனது எனின் அதில் எது என்பதே எனது கேள்வியாகும். இதை எழுப்பப்படும் போது "கேள்விகள்" பின் ஒழித்துக் கொள்கிறனர். தலித்தியம் எப்படி சாதியை ஒழிக்கும் எனக் கேட்டால் பதில் இல்லை "கேள்வி" என்றபடி நான் அதைப் பூச்சி புழுக்கள் என்று சொன்னதாக சத்தியம் பண்ணுகின்றார்.

 

நாங்கள் எப்படி மனிதஇனம் விடுதலை அடையும் என்ற நடைமுறை செயல் தளத்துக்காக கேட்டால,; அதை பூச்சி, புளுக்கள் எனக் கூறுவதாக எம்மை பிரகடணம் செய்கின்றார். ஆணால் நடைமுறை செயல் தளத்துக்கு வழிகாட்டத வரை இதற்க்கு பதில்அளிக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக எழுத்துலக ஐம்பனாக உலவ, எதாவது ஒரு தத்துவத்தை சொல்லி காலத்தை ஓட்ட, தம்மை வரலாற்றில் பதிவு செய்ய நடைமுறையற்ற ஒருகோட்பாடு, இது மட்டுமே இக்கோட்பாட்டின் உயிர் வாழ்தல் ஆகும். நடைமுறைக்கு மக்களை வழிகாட்ட வேண்டிய ஒரு நிலையில் மட்டுமே "கேள்வி"க்கு பதில் அளிப்பது அவசியமாக்கின்றது அல்லவா?

 

எல்லோருக்குமான  பேருண்மை, பெருநீதி, பேரறம் கிடையாதா?

 

அடுத்து அம்மாவில் வெளியாகிய மேற்க் கோள் ஒன்றைப் பார்ப்போம். "|மற்றதை நோக்கி நீதியாய் இருப்பதே நீதி. மற்றதுக்கு உண்மையாய் இருப்பதே உண்மை. மற்றதாய் இருக்கும் உரிமையே அறம். இது தவிர எல்லோருக்குமான பேருண்மை, பெருநீதி, பேரறம்  என எதுவுமில்லை| என மற்றதன் இருப்பைக்கூறிப் பறைசாற்றுகிறது பின்நவீனத்துவம். விடுதலையைப் பறைசாற்றிய சகல குரல்களும் அதிகாரங்களையே பரிசளித்ததைக் கண்டு கலங்கிப்போயுள்ள நாம் இதனைப் பாசீலணைக்கு எடுத்துக்கொள்ளாமல் புறக்கணிப்தெப்படி?" என்ற மேற்க்கோளுக்கு பதில் ஒரு மாhக்சிய மேற்கோளாக இருந்து இருப்பின் "தீட்டு" நிகழ்ந்தாக கூற பலர் வந்திருப்பர். அ மார்க்ஸ் பின்நவீனத்துவம் - இலக்கியம் - அரசியல் என்ற நூலில் வெளியாகிய இந்த மேற்கோளைப் பார்ப்போம். மாற்றாய் இருக்கும் உரிமையே அறம் என்கின்றார். மாற்று என்றால் என்ன? மாற்று என்பது பிளவுபட்ட சமுதயாத்தில் மட்டும் இருக்க கூடிய ஒன்று. அதாவது வர்க்கச் சுரண்டல், ஆணாதிக்கம், சாதி ஒடுக்குமுறை என நீளும் சமுதாய பிளவுகளில் மட்டும்தான் மாற்றும், மாற்றாய் இருத்தலும் சாத்தியம். இது இல்லாத போது மாற்று என்பது மனிதர்களுக்கிடையில் மறைந்து விடுகின்றது. பிளவுபட்ட சமுதயத்துக்கு மட்டும் உரித்தான இது "நீதியாக", "உண்மையாக", "உரிமையாக" இருக்கமுடியும். இது ஒடுக்குபவனுக்கும் ஒடுக்கப்பட்டவனுக்கும் இடையில் பொதுவான உண்மையாக எப்படி இருக்கமுடியும். இது மாறிமாறி இருக்கமுடியுமா? ஒடுக்கப்பட்ட வர்க்கம் ஆட்சியை பிடித்தபின் ஆணாதிக்கத்தை ஒழிக்கும் தொடர்ச்சியில், சாதியத்தை கடக்கும் போராட்டத்தில், சுரணை;டலை ஒழிக்கும் போராட்டத்தில் என நீண்ட போராட்டத்தில் எப்படி மாற்றாய் ஆணாதிக்கம், சாதியம், சுரண்டல் இருக்க முடியும். அந்த மாற்று பாழையதை மீட்க்கும்  எதிர்ப் புரட்சிதானே ஒழிய வேறு எதுவுமில்ல. இல்லை எனின் எது? அடுத்து விடுதலையை பறைசாற்றிய குரல்கள் அதிகாரத்தை பரிசளித்தை கண்டு கலங்குகின்றோம் எனக் கூறியே மார்க்சியத்தை எதிர்க்கின்றார். மார்க்சியம் வர்க்கப் போராட்டத்தை வன்முறை மூலம் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை சொல்லியே ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக வன்முறை மூலம் ஆட்சிக்கு வந்தது. மாறாக கந்தீய வழிகளிலோ, மதவழிகளிலோ அன்பை போதித்து புரட்சி செய்ய முடியுமென கூறவில்லை. பின்நவீனத்துவம் வன்முறைக்கு பதில், அகிம்சையை மாற்றாக வன்முறையை மறுப்பதன் மூலம் தெரிவிப்பதால், இவ் அகிம்சை கோட்பாடு இவ்வன்முறை சமூகத்தை பாதுகாக்கும் என்கின்றோம். இல்லை எனின் எப்படி சாதியை, ஆணதிக்கத்தை, சுரண்டலை வன்முறை இன்றி ஒழிக்கமுடியும். அதாவது கிறிஸ்துவ மதம் கூறுவது போல் ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் காட்டக் கோருகிறீர்களா? புரியவில்லை. சாதி ஆதிக்கத்தை எதிர்த்து, ஆணாதிக்கத்தை எதிர்த்து, சுரண்டலை எதிர்த்து அதன் மீது நடத்தும் வன்முறையையும், அதன் மீது நிறுவும் அதிகாரத்தையும் கண்டு கலங்கிப் போகும் அ.மார்க்ஸ்சும், அவர் படித்தான தொண்டர் பெடியளும் எதை பாதுகாக்கின்றனர் என்பது தெளிவானது.  "கேள்வி" என்பார்கள் "பரிசீலணை" என்பார்கள் ஆனால் தத்துவத்தில் முடிவான முடிவுகளை, மார்க்சிய எதிர்ப்பில் "கேள்வி" இன்றி நடத்துவதில் ஆக்ரோசமாக உள்ளனர். "எல்லோருக்குமான பேருண்மை, பெரு நீதி, பேரறம் என எதுவுமில்லை" என்கிறார். எல்லோருக்குமான  சுரண்டல் அற்ற சமுதாயம், ஆணாதிக்கமற்ற உலகம், சாதியற்ற மனித இனம் என்ற பேருண்மை, பெருநீதி, பேரறம் மனித குலத்தின் முன் இல்லையா?  அப்படியாயின் எல்லேர்க்கும் இல்லாத எந்த பேருண்மை, பெருநீதி, பேரறத்துக்காக குரல் கொடுக்கின்றிர்கள். நீங்கள் சொல்ல மாட்டிர்கள். இதைக் கேட்டால் இதைக் "கேள்வி", "பரிசீலனை" எனச் சொல்லி இருக்கும் இந்த ஏகாதிபத்திய உலகை "எல்லோருக்குமான பேருண்மை, பெருநீதி, பேரறம் என எதுவுமில்லை" எனக் கூறி (இருக்கும் சிலருக்கான "பேருண்மை, பெருநீதி, பேரற"த்தை) பாதுகாப்பிர்கள். எல்லோருக்கும் இல்லை என்று ஒன்றை பாதுகாக்கும் போது அல்லது ஒன்றை மறுக்கும் போது இன்னொன்றின் மீது வன்முறையல்லவா எஞ்சுகின்றது. பிறகு எப்படி வன்முறையைக் கண்டு கலங்க முடியும்?

 

ஷோபாசக்தி யமுனாவை விமர்சிக்கும் போது யமுனாவின் கருத்து என்ன எனக் கேட்டபடி விமர்சித்தவர் அவர் தனது கருத்து என்ன எனச் சொன்னதில்லை. இதைத்தான் சேணனும் செய்தபடி தமது கருத்தை "கேள்வி"குள் முடக்கி ஒழித்தபடி மற்றவன் மீது "கேள்வி" அல்ல முடிவுகளையே வைக்கின்றனர். அதுவும் யமுனாவை பலரின் கருத்தை ஒன்றுடன்ஒள்று இனைத்து கட்டுரை ஆக்கியவர் எனக் கூறியபடி, அதையே தான் செய்தபடி அதனாலேயே விமர்சிப்பதுதான் வேடிக்கை. இந்த விமர்சனத்தில் எந்தவிதமான தெளிவான விளக்கமும் கிடையாது.

 

அ.மார்க்ஸ் மீதான தனிநபர் புகழ் பாடலும், கட்டுடைக்க மாறுக்கும் பக்கங்களும் தொடர்ந்தும் அ.மார்க்ஸ் பற்றி பல தகவல்களை திரட்டி அரசியல் இன்றி புகழ் உரைக்கின்றார். ஸ்ராலின் தனிநபர் புகழ்படி (மார்க்சியவாதிகள் ஸ்ராலின் தனிநபர் புகழ் பாடலை சரியானமுறையில் விமர்சிக்கின்றனர்.) என எப்போதும் குற்றம் கூறும் இவர்கள் அதையே அ.மாக்ஸ்சுக்கு செய்கின்றனர். ஏன் முன்பு ரவிக்குமார் அ; மாhஸ்சும் ஒன்றாக இருந்த போது மாறிமாறி புத்தங்களை சமர்பித்தும், தமது உடைவை தடுக்கமுடியவில்லை. இன்றும் பலரும் அ:மார்க்ஸ்சுக்கு நூல்களை சமர்பிப்பது தனிநபர் துதிபாடலை எதிர்த்து கட்டுடைப்பதில்லையே ஏன்?. மார்க்சியம் பலபெயரில் பல உள்ளது என ஷோபாசக்கியின் கண்டுபிடிப்பு நகைப்புக்குரியது. முன்பு பேரசன் மார்க்ஸ் என எழுதியதை மறந்து போய்விட்டார் போல் உள்ளது. மார்க்ஸ்தான் மார்க்சியத்தை தொகுத்த வழங்கியவர் என்பதால் அவர் பெயரலேயே மார்க்சியமாகியது. மார்க்ஸ்சின் கோட்பாட்டை யார் மறுக்கின்றனரோ அவர்கள் மார்க்சிய வாதிகள் அல்ல என்பது பின்நவீனத்துவ, ஏகாதிபத்திய வாதிகள் தவிர எல்லோருக்கு இலகுவாக தெரியும். பெயரை கட்டுடைக்க வேண்டும் என்போர், மார்க்சியத்தை பெரும் தத்துவம் என துற்றி அதில் வாழ்வோர், மார்க்ஸ்சின் பெருதத்துவத்தையும், வன்முறையை கோரியவரின் பெயரில் அ.மார்க்ஸ் ஒட்டிக் கொண்டிருப்பதை ஏன் கட்டுடைப்பதில்லை?

 

சோபாசக்தி அ.மார்க்ஸ் பற்றி வசதிகருதி வசதியாக மறந்து போனவைகளை கொஞ்சம் பார்ப்போம். சபாலிங்கம் கொலை நடந்த போது அ.மார்க்ஸ் பரிசில் வந்திருந்தார். அப்போது மாற்றாய் இருக்க அஞ்சி, அதிகாரத்தை கண்டு எதிர்க்காது நடுநடுங்கி சோரம் போனது எனோ? ஏன் பின்னால் இதே பரிசில் நாதன், கயன் படுகொலை செய்யப்பட்ட போது, இந்தியாவில் பிரஞ்சு துதராகம் முன் "கட்டுடைத்து", "மாற்றாய்"; "எதிர்த்து" நீதிவிசாரனை கோரி ஆர்ப்பட்டம் செய்த போது, அதில் சபாலிங்கத்தின் படுகொலைக்கு நீதி விசாரனையை கோராத "மாற்று"தான் என்னவோ. ஏன் ஈழமுரசு, மற்றம் புலிகளின் வெளியீடுகளை பாரீஸ் வந்து சென்ற பின் இந்தியாவில் கணிசமான பிரதிகளை விநியோகம் செய்த "மாற்றாய்" அரசியல் என்ன? இலங்கையில் புலிகளால் கைது செய்யப்பட்ட செல்விக்கு சர்வதேச விருது கிடைத்தைத் தொடர்ந்து அ.மார்க்ஸ்சும் கையெழுத்திட்ட அறிக்கையை பின்னால் என் அனுமதியின்றி எனது பெயரை போட்டனர் என பரிசில் "மாற்றாய்" அதிகரத்தைக் கண்டு மாறுத்தரே, இதில் எது கவிழ்ப்பு. இந்தியாரூடே பார்ப்பணிய பத்திரிகை எனக் கூறி வருடந்த மலரை மலம் துடைத்து இந்தியா ரூடேக்கு அனுப்பியவர்கள், அடுத்த வருட மலரில்  மலம் துடைத்த கை காயமுன் ரவீக்குமார் "மாற்றாய்" எழுதியபோது மாற்றாய் இருக்கவில்லை, மாறாக அவருக்கு "மாற்றாய்" தனது நூல்களை சமர்பித்தரே இதில் எங்கு கலகம் கண்டது. இவை எல்லாம் "கேள்விகள்" அல்ல. அவருக்குத்தான் பதில் சொல்லும் நேர்மை கிடையாது. அவர் தொண்டர் பெடியள் ஆவது பதில் கூறுவார்களா?

 

அண்மையில் பரிசில் சிறுமி ஒருவர் கற்பழிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட போது வெளியான "மெல்லச் சாகுது மனிசம்" என்ற நூலில் ஈழமுரசில் எழுதிய சிவனேசமூர்த்தி எழுதியதால் தனது கட்டுரையை திரும்ப வாங்கிய ஷோபாசக்தி, (ஆணால் துரோக குழுக்கள் உடன் சேர்ந்து எழுத விவாதிக்க பின்னிப்பதில்லை) அ.மார்க்ஸ் இதே சிவணேசமூர்த்தியுடன் பரிசில் விவாதித்தும், பேட்டி கொடுத்து மட்டுமின்றி, "வெள்ளைத்திமிர்" என்ற தனது கறுப்புத்திமிர் நூலில் அவரை சிலாகித்தும் மெய்சிலிர்க்கும் கருத்துகளை அவர் சார்ந்து கட்டுடைத்து ஐரோப்பிய மக்களைப் பற்றி, பொய்களையும், அவதூறுகழைளயும் எழுதியும் இருந்தார். ஐரோப்பிய மக்கள் பற்றி "ஒவ்வொரு அய்ரோப்பியன் கண்ணிலும் தென்படும் அலட்சியம்,  தெறிக்கும் நிறவெறி நம்மைக் கூச வைத்துவிடுகின்றது.  புலம்பெயந்தவர்கள் குறிப்பாக ஆசிய ஆபிரிக்க இசுலாமியர்கள் கிரிமினல்களாகவே அங்கு கருதப்படுகின்றனர். போதைபொருள் கடத்துபவர்கள் , திருடர்கள்  இப்படி பத்திரிகைகள்,  தொடர்புசாதனங்கள் எல்லாம் அப்படித்தான் சித்தரிக்கின்றன. அழுக்கர்கள்-----  கெட்டுப்போகிறது என்கிற எண்ணம் ஒவ்வொரு அய்ரோப்பியனிடமும் இருக்கிறது" என்று எமக்கு "மாற்றாய்" கட்டுடைக்கின்றார். இது கடந்த அம்மாவில் கருணகரமூர்த்திக்கு தமிழரசன் என்ன பதில் கொடுத்தரோ அது அ.மார்க்ஸ்சுக்கம் அச்சொட்டாக பொருந்தும். அ.மார்க்ஸ்சின் கண்டு பிடிப்பின் மோசடியை, அவதூறுகளை தமிழன் அல்லாத மற்றைய அரபு, கறுப்பு இனங்கள் எப்படி இச்சமூகத்துடன் இணைந்து உள்ளன என ஆராய பிரஞ்சு  மற்றும் இறுக்கமான மத உணர்வு கொண்ட அல்ஐPரியா சமூகத்தை எடுத்துப் பார்ப்போம்.

 

அல்ஐpரியாவை தாய்நாடாக கொண்டு பிரன்சில் வாழும் இளம் சமுதாயத்தில் (இரண்டாவது தலைமுறை) அரைவாசி ஆண்களும், நாலில் ஒரு பெண்களும் தனது குடும்பத் தெரிவை வெள்ளையின பிரஞ்சு மக்களில் தெரிந்து எடுத்து குடும்பமாக வாழ்கின்றனர். 1992 இல் பிரான்சில் நடந்த 2,71,000 திருமணத்தில் 31,000 திருமணங்கள் கலப்புத் திருமணங்களாகும். 1980 க்குப் பின் கலப்புத் திருமணம் அதிகரித்து இன்று 57 வீதமாக அதிகரித்துள்ளது. இங்கு திருமணங்கள் வெள்ளைத்திமிரில் நடக்கின்றதா? இல்லை அ.மார்க்சின் கறுப்புத்திமிர் பார்வை தான் பின்நவீனத்துவத்தால் குருடாகியுள்ளதா? ஐரோப்பியன் கண்ணில் மின்னுவது என்ன? இஸ்லாமியரை திருடராக கட்டடைத்து காட்டும் அ.மார்க்ஸ்சை விட  அந்த மக்களின் சமுதாய நோக்க உயர்ந்ததை யதார்த்தம் காட்டுகின்றதல்வா?

 

அடுத்து பத்திரிகை எல்லாம் இனவாதத்தையே கொண்டு உள்ளது என்ற மோசடிக்கு லிபரேசன் (17.2.1997) என்ற சதாரண பத்திரிகையின் சிறப்பு இனைப்பில் வெளியான 54 கலையர்ககளின் நாசி எதிர்ப்பு கலையில் இருந்து ஒரு சிலவற்றை மாதிரிக்கு வைக்கின்றேன்.அடுத்து அ.மார்க்ஸ் 'ஒரு நிறுவனத்தில் பணிபுரியக் கூடிய பெரிய அதிகாரிக்கும், கீழ் நிலைகளில் உள்ளவர்களுக்குமிடையில் ஊதிய வேறுபாடு அதிகமில்லை. பெரியவேலை கீழான வேலை என்ற விழுமிய வேறுபாடுகள் அதிகமில்லை. ...... தீட்டு, வருணாசிரமம் முதலியன இல்லாத போதும் அந்த இடத்தில் இனவெறியும் இன அடிப்படையிலான ஒதுக்கலும் அவற்றை ஈடு செய்கிறது. பேரூரு அரசியல், நுண் அரசியல், தொடர்புச்சாதனங்கள் இப்படி எங்கு பார்த்தாலும் இன வெறியும் பாசிசமும் தலைவிரித்தாடும் அய்ரோப்பிய சூழலில் இடையிடையே சிறு சிறு மனிதாபிமானக் கீற்றுக்களை 'ஆட்டோநாம்" எனச் சொல்லப்படும் எதிர் கலாச்சாரக் குழுக்களிடமே நாம் காணமுடிகிறது " என அந்தோனிசாமி மார்கஸ் தனது அரசியல் கண்ணாடிக்கு இசைவாக எதை பொருத்த முனைவகிறார் எனப் பார்ப்போம்


நிறுவனத்தில் மேல்-கீழ் நிலை, ஊழியர்களுக்கு இடையில் சம்பள வேறுபாடு இல்லை என்கிறார். இப்படி பொய்யாக ஏன் சொல்ல முனைகின்றார். ஒரு வர்க்கப்போராட்டம் இன்றி மேல்- கீழ் என்ற இடைவெளி அமைதியாக மாறிவிடும் என காட்டத்தான். அது தான் பொய்யை அரசியல் ஆக்குகின்றார்.  இதைபுள்ளிவிபர ரீதியாக பார்ப்போம்.

 

பிரான்சில் உள்ள 46 லட்சம் குடும்பங்களின் மாதவருமானத்தைப் பார்ப்போம்
குடும்பம் வீதத்தில்   வருமானம் பிராங்கில்
10          3070      குறைய
10          3070   -    5477
10          5477  -     9004
10          9004  -   10739
10        10739  -   12653
10        12653  -   15001
10        15001  -   17921
10        17921  -   22389
10        22389  -   28793
5          28793  -   47376
5          47376     கூட


குடும்பத்துக்கு வெளியில் தனிநபராக 1994 இல் ஆகக்குறைந்த அடிப்படைச் சம்பளத்தை பெற்ற 15 லட்சம் பேர் 1996 இல் 22 லட்சம் பேராக அதிகரித்துள்ளது. அத்துடன் 60 லட்சம் பேர் அடிப்படைச்சம்பளத்தை விட குறைவாக பெற்று வேலையின்றி உள்ளனர். மொத்தமாக அடிப்படைச்சம்பளத்தை அல்லது அதை விட குறைவாக பெறுவோர் 80 லட்சம் பேர் உள்ளனர். இது பிரான்சில் உழைக்கும் பிரிவில் மூன்றில் ஒரு பகுதியாகும். இவர்கள் பரம ஏழையாக உள்ளனர். 

 

புள்ளிவிபரம் மிகத்தெளிவாக மேல்-கீழ் குடும்பவருமான இடைவெளியை தொடர்ச்சியாக பிளந்து அதிகரிக்கின்றது. 10 வீத குடும்பம் பெறும் 3070 பிராங்கை விட 5 வீதக் குடும்பம் பெறும் 47,376 பிராங்கு இடையில் உள்ள இடைவெளி 15 மடங்கு ஆகும். அதாவது இது குடும்ப சராசரி வருமானம் இதை விட தனிநபர் வருமானத்தில் இந்த மடங்கு மேலும் பல மடங்காக உள்ளது. ஏன் பிரான்சில் 1996இல் அரசியலை தீர்மானிக்கு முண்ணனி முதலாளிகளான 416 குடும்பங்களின் சொத்து தனித்தனியே 10 கோடி பிராங்கை விட கூடவாகும். முதல் பெரிய பணக்கரனின் சொத்து 3700 கோடி பிராங் ஆகும். இந்த பணக்கரணின் சொத்தை விட அதிகமான தேசிய வருமனத்தைக் கொண்ட நாடுகள் 94 மட்டுமே ஆகும். உலகில் உள்ள 226 நாட்டில் இந்த ஒருவனின் செல்வத்தை விட 134 நாட்டு மக்களின் தேசிய வருமனம்  குறைவாகும். பிரன்சின் முதல் 416 செல்வ குடும்பத்தின் சொத்து 49000 கோடியாகும். இதை விட அதிக தேசிய வருமனம் உள்ள நாடுகள் 34 மட்டுமே. உலகின் முதல் பணக்கரனின் சொத்து 9000 கோடியாகும். அவனை விட அதிக தேசிய வருமனம் கொண்ட நாடுகள் 65 மட்டுமே. உலகின் முதல் பத்து பணக்கரனின் சொத்து 90350 கோடியாகும். இந்த பத்து பேரின் சொத்தை விட அதிக தேசிய வருமனம் கொண்ட நாடுகள் உலகில் 22 மட்டுமேயாகும். இந்த அமைப்பின் வளர்;ச்சி பாய்ச்சல் நிலையில் உள்ளதுடன், இந்த இடைவெளியை பாதுகாப்பதுதான் ஐனநாயமாக உள்ளது.


கிட்டத்தட்ட பிரன்சில் உழைக்கும் தகுதியுள்ள பிரிவில் மூன்றிலொரு பங்கு அடிப்படைச் சம்பளத்தை விட குறைவாக பெறுகின்றனர். அதி உயர் பிரிவான 10 வீதம் அடுத்த 10 வீதத்தை தவிர மற்றவர்களுக்கு இடையில் தான் வேறுபாடு குறைவாக உள்ளது. அது  மடங்காக உள்ளது.

 

மார்க்சியத்தின் மா-லெ-மா சிந்தனை வழியில் இந்த சம்பளவேறுபாடு முதலாளித்துவத்தின் கட்டமைப்பில் சரியாக உள்ளதை புள்ளிவிபரம் காட்டுகின்றது. அதாவது உயர்மட்ட இடைவெளியை கடக்க நிச்சயமாக வன்முறை சார்ந்த ஒரு  வர்க்கப்போராட்டம் அவசியம் என்பதையும், இடைவெளி (உயர்- கீழ்) தானாக மறையாது என்பதையும் அ.மார்க்சுக்கு சுட்டிக்காட்டவேண்டியதாகியுள்ளது. வர்க்கப்போராட்டத்துக்கு வெளியில் மேல் கீழ் இடைவெளி மறையாது மடியாது. ஆணால் இவை எல்லாம் எப்படி கட்டுடைத்து "எதிர்ப்பு"களில் வெளிவருவதில்லை.

 

இது போல் மற்றொரு மார்க்சிய எதிர்ப்பு வண்டவாளத்தைப் பார்ப்போம். "தலித் கலை இலக்கியம் அரசியல்" என்ற நூலில் "..., நிலத்தின் மீதான குறைந்தபட்ச உயிர் வாழ்க்கைக்குரியவற்றைப் பெறும் உரிமை ஒன்றையே தலித்துகள் உணர்ந்திருந்தனர். உழுகின்ற அடிப்பபடையில் நிலத்திற்கான உரிமை பெறுதல் என்கிற உணர்வு இங்கு உருவாகவில்லை.---- |மான்யம்| பெறும் உணர்வே நிலை பெற்றது." என அ. மார்க்ஸ் வர்க்கப் போராட்டம் கோரும், நிலப்பிரபுத்துவதிடம் நிலத்தை பறித்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கொடுக்க போராடுவதை மறுக்க முன்வைக்கின்றார். இந்தியா சமூகம் மற்றை சமூங்களில் இருந்து வேறுபட்டு நிடித்து நிலைத்த வகையில் நிலம் சமூகத்தின் (இந்த நிலம் மீதான ஆதிக்கம் உயர்சாதிகளிடம் இருந்தது) பொதுவில் இருந்ததை காட்டி, நிலம் தனிப்பட்டவர் கைக்கு மாறியபோது  தாழ்த்தப்பட்ட மக்கள் கோரவில்லை என்பது மகாமோசடியாகும். நிலம் பொதுவாக இருந்த போது அதை தாழ்த்தப்பட்ட சாதிகள் பொதுவில் அனுபவிக்கும் உரிமையை பறித்து உயர்சாதிகள் அணுபவித்ததுக்கு எதிராக எல்லோரும் அணுபவிக்க கோராவும், நிலம் தனியாரின் சொத்தாக மாறிய போது அதை தமது ஆக்கவும் இரத்தம் சிந்திய போராட்டம் (மார்க்சிய வர்க்கப் போராட்டத்துக்கு முன்பே) வரலாற்றில் ஆதாராங்கள் உடன் நிரம்பியே உள்ளது.

 

நிலத்தை உரிமைக்கும் போராட்டத்தில் உதரணமாக 1980இல் பறையார்சசாதியை எடுத்தால் 10 எக்கருக்கு கூட4.9 சதவீதம் பேரும், 5.1 முதல் 10 எக்கர் நிலத்தை 6.4 வீதமும், 1 முதல் 5 எக்கர் நிலத்தை 50.9 வீதமும், ஒரு எக்கருக்கு குறைவாக 51.2 வீதமும், நிலமற்றோர் 70.6 சாதவீமாகவும் மற்றைய சாதிகளின் நிலப் பகிர்வுக்குள் இவ் வீதம் கணப்படுகின்றது. (ஆதாரம் சாதியம் -கோ.கேசவன்) ஆகவே நிலத்துக்கான போராட்டம் தொடர்வதுடன், சாதிக்குள்ளும் வர்க்க பிளவுகள் இருப்பதையும் இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ள மேலதிக புள்ளிவிபரங்கள் தெளிவாக்கின்றன. அ.மார்க்ஸ் தனது கம்யூனிச எதிர்ப்பில் முடிமறைத்து நிலத்துக்கான போராட்டத்துக்கு பதில் கூலிகளாக நிடிக்க தாழ்த்தப்ப சாதிகளை விதிந்துரைக்கின்றார். இதுதான் அவர் வைக்கு தலித் விடுதலையின் மற்றுமொரு சாதி நிலைநிறுத்தல்ஆகும்.உருவகமான  "கற்பு" என்ற அடித்தளத்தை தகர்ப்பது எப்படி?

 

"கற்பழிப்பு" என்ற சொல்லை கைவிடமால் பாவிப்பவர்கள் என "கேள்வி" கடந்து கட்டுரையில் ஷோபாசக்தி விவாதிக்கின்றர். இங்கு "கேள்வி"யல்ல முடிவாக கூறும் போதுதான் இதன் அரசியல் வெட்ட வெளிச்சமாக புரிகின்றது. மக்களிடம் அன்னியப்பட்ட புத்தியீவிகள், மக்களுக்கு அண்ணியமான கோட்பாடு கொண்டோர்  "கற்பழிப்பு"க்கு எதிராக "கற்பு" என்ற கோட்பாட்டை எதிர்த்து போராடுவதத்க்கு பதில் மொழியில் ஒளித்து (என்னதான் சொல்லை மாற்றினாலும் ஆணாதிக்க சமூக அமைப்பில் அச் சொல்லுக்குரிய அர்த்தங்கள் மாறிவிடுவதில்லை. மாறுவதாயின் சமூக அமைப்பு மாறவேண்டும்.) விளையாடுகின்றனர். "கற்பழிப்பில்" ஈடுபடும் ஒருவன் பெண்ணுக்கு "கற்பு" உண்டு என்ற ஆணாதிக்க நிலையில் நின்று, அதை அழித்து சூறையாடும் போது, அதற்க்கு எதிரான ஆணாதிக்க  நோக்கத்தை வெளிப்படுத்தும் குற்றத்தை (எப்போதும் சர்ச்சைக்கு உள்ளவது கற்பழிப்பு குற்றத்துக்கு எதிராக எழுதும் போதே) வேறு எந்த சொல்லும் மாற்றீடு செய்யமுடியாது. இப்படி மாற்றீடுவது என்பது ஆணாதிக்க வெளிப்பாடான "கற்பழிப்பின்" நோக்கத்தை அதன் வக்கிரத்தையும் மழுங்கடித்து, "கற்பு" மீதான ஆணாதிக்க பொருள் சார்ந்த செயல் தளத்தை "தேசியம் கற்பிதம்" என்று கூறி (இங்கு "தேசியம்" முதலளித்துவ கோரிக்கை. "கற்பு" ஆணின் கோரிக்கை. ஆணால் பாட்டாளி வர்க்கம் தேசியத்தின் ஐனநாயக கோரிக்கையை ஆதரிக்கின்றது. இது போல் பெண்ணின் ஐனநாயக உரிமையாக ஆண் உருவாக்கிய "கற்பை" ஆணாதிக்கத்திடம் பாதுகாக்க பெண் போராட வேண்டியுள்ளது. அதவாது இங்கு "கற்பு" என்பது ஆணுக்கு எதிரான ஆணாதிக்க சமுதயத்தில் பெண்ணின் தற்பாதுகாப்பு வடிவமாகவுள்ளது. இதைத்தான் எல்லா ஆணாதிக்கமும் சூறையாட விரும்வதும் பெண்ணின் எதிர்ப்பும் ஆகும்.) தேசத்தை ஏகாதிபத்தியம் சூறையாடுவதை முடிமறைப்பது போல், ஆண் உருவாக்கிய பெண்ணின் "கற்பை" கற்பிதமாக்கி ஆணதிக்கம் சூறையாடுவதை பூசி மொழுக விரும்புகின்றனர். அதாவது ஒரு பெண் தனது சொந்த உடல் மீது, உணர்வு மீதும் பாதுகாக்கும் தனித்துவததை ஆணாதிக்கம் சூறையாடும் போது அது பெண்ணின் கற்பாக பெண் முன் உள்ளது. ஆதிய சமூகங்களில் ஆண் - பெண் வரைமுறையற்ற புணர்ச்சியில் இருந்த போது பெண்தான் ஆணைத் தெரிவு செய்யும் தாய்வழி சமூகம் இருந்தது. பின்னால் தனிச் சொத்துரிமையுடாக ஆண் சொத்துரிமையை பெற்று, சமூகம் மீது ஆதிக்கத்தை நிலை நிறுத்தத் தொடங்கிய போது, பெண்ணின் உரிமை படிப்படியாக பறிக்கப்பட்டு, பெண் மீது ஆணின் சூறையாடல் வரைமுறையற்ற சமூகத்தில் உருவானது. இந்த வளர்ச்சியில் பெண் தற்காப்பு நிலையெடுத்து குறித்த ஆணை சார்ந்திருக்க நிர்ப்பந்திக்கப்பட்டால்;. இந்த தற்காப்பை படிப்படியாக பெண்னிடம் இருந்து ஒரு ஆண் தனது சலுகைக்குரிய, தனக்குரிய சொத்தாக மாற்றினான்;. ஒருதர ஆணைத் தெரிந்தெடுக்கும் தெரிவை பெண் ஆணாதிக்கு சூறையாடலுக்கு எதிராக தற்காப்பு நிலையில் பெற்றதை, தொடர்ச்சியில் ஆண் சார்ந்த தனிச்சொத்துரிமை, பெண்ணை தனது சொத்துரிமையாக்கியது என்பது வர்க்கப் போராட்ட வராலற்றில் ஒரு முக்கியமான புதிய ஒடுக்குமுறையாகும். இந்த எல்லைக்குள் கூட கற்பு பெண்ணின் தற்காப்பு அரண்களை பிரதி செய்கின்றது. இன்று ஆணாதிக்க சமூகத்தில் வரைமுறையற்ற புணர்ச்சியை, ஒழுக்கத்தை மீறி கோருவது ஆண் என்பதும், பெண்ணை விளம்பர பதுமையாக்கப்பட்ட அனைத்துறையிலும் சூறையாட அலைவதை நாம் காணமுடியும்;. இங்கும் பெண் தொடர்ந்த தற்காப்பு நிலையெடுப்பதும், உலகமயமாதல் பெண்ணை மேலும் மேலும் நிர்வாணம் ஆக்குவதும் கண்கூடு.

 

பெண் ஒரு ஆணுடன் வாழும் போது அதைத் தாண்டி (இங்கு தாண்டல் என்பது பரஸ்பர விசுவசத்தை துரோகம் செய்வதாகும். இது ஆண் செய்தாலும் பொருந்தும்) கள்ள உறவு கொள்ளும் போது அல்லது திருமணத்துக்கு முன் உறவு கொண்டு ஏமாற்றப்படும் (இங்கு எப்போதும் ஆணாதிக்கம் பெண்ணை ஏமாற்றி விருப்பத்துடன் பெண்ணின் தற்காப்பை கற்பழிக்கின்றனர்.) போது ஆணாதிக்கம் இது போன்றவைகளை கற்பாக வேறு விளக்கம் செய்து பெண்ணின் மீது மட்டும் இதை நிபந்தனையாக்கின்றது.  திருமணம் செய்து வாழ்வை இழந்த அல்லது விவகரத்து பெற்ற பெண் மீள திருமணம் செய்யும் போது கற்பிழந்தவளாக சமூகம் அடையாளப்படுத்துவதில்லை. அடையாளப்படுத்தல் எல்லாம் சமூக ஒழுக்க விழுமியத்துக்குள் உட்பட்ட பொருளாதர வடிவத்தால் மட்டும் வரையறுக்கின்றது. எனவே கற்பு என்பது எல்லா நேரமும் இரண்டாவது ஆணுடன் கொள்ளும் பெண்ணின் புணர்ச்சிக்குள் வரையறுபதில்லை. மாறாக நிலப்பிரத்துவ பண்பாட்டு மீறலின் போதே வரையறுக்கப்படுகின்றது. இது ஒரு நிலையில் பெண்ணுக்கு தற்காப்பு ஆயுதமாகவும் மறுதளத்தில் ஆணாதிக்கத்தின் சூறையாடலாகவும் வழக்கில் நிடிக்கின்றது. அதே நேரம் பெண் மீதான வன்முறையுடாக உறவு கொள்ளும் போதும் கற்பிழந்தவாளாக ஆணாதிக்கம் விளக்கம் கொடுக்கின்றது. |கற்பு" ஆண்களால் பெண்கள் மீது மட்டும் நிபந்தனையாக்கிய சமூக அமைப்பு பொருளாதார அமைப்பால் ஒரு சமூக இயக்கமாக, அதனை ஒரு பொருளாக மாற்றிய நிலையில் இது கற்பிதமல்ல. மாறாக இது ஒரு சமூக பொருளாதார அமைப்பால் இறுக கட்டப்பட்டுள்ளது. இந்த சமூகப் பொருளாதார அமைப்பு நிலப்பிரபுத்துவத்தின் வடிவமாக உள்ளது. இந்த நிலப்பிரபுத்துவம் பாட்டாளி வர்க்க ஆட்சியால் அல்லது ஏகாதிபத்திய உலகமயமாதல் மூலம் என இரண்டு சமூக பொருளாதார நிலைகளில் மட்டும் தகரும் போது "கற்பு" கோட்பாடு தகர்ந்துபோகும். இதில் ஏகாதிபத்தியம் சார்ந்து "கற்பு" ஆணாதிக்கம் சார்ந்த ஆண் வேட்க்கையிலும், பாட்டாளி சார்ந்து பெண் சார்ந்து "கற்பு" என்பதை பெண் ஆண் சார்ந்து கற்பிதமாக்கும். எப்போதும் "கற்பு" மீதான போராட்டம் என்பது பெண்ணுக்கு கற்பு உண்டு என்கின்ற ஆணாதிக்கம் மீது "கற்பு"க்கு எதிரான போராட்டத்தை கோருவதும், கற்பு என்ற ஒன்று இல்லை என்பதை நிறுவதுதன் ஊடாக, இது பொதுவாக "கற்பு இழந்தவள்" என்ற உருவகம் ஊடாக வருவதால் |கற்பை" கற்பிதமாக்கி சமூகத்தை மாற்ற போராட வேண்டும். கற்பழிப்பு போன்ற குற்றத்தில் "கற்பழிப்பு"க்கு எதிரான எழுத்துக்களை போராட்டங்களை கற்பழிப்பு (இங்கு கற்பிழந்தவளாக பொதுவில் கருதாமல் இந்த வன்முறைக்கு எதிராக கற்பழிப்புக்கு எதிரான குரலாக உள்ளது)  மீது எழுதியும், போராடியும் பெண்ணின் உரிமை மீது கற்பிதமாக்க வேண்டும்;. இது மட்டுமே நடைமுறை சார்ந்த மக்கள் சார்ந்த ஓரே செயல்தள நடைமுறையாகும். இதை மறுத்து  சரிநிகரில் தொடக்கி இச்செயல் யதார்த்ததில் மக்களால் ஆணாதிக்க கண்ணோட்டத்தில் பொருளாக்கப்பட்டுள்ள "கற்பு"க்கு எதிரான போராட்டத்தை மறுதலிக்கும் செயலாக இதுமாறியுள்ளது. "கற்பு", "கற்பழிப்பு" போன்ற சொற்க்கள் ஆணாதிக்க பொருளாதார கட்டமைப்பால் அதிகாரம் பெற்றுள்ளதால், அது மக்களுக்குள் உருவகம் சார்ந்து பொருள் சார்ந்து போய்யுள்ளது. இதற்க்கு எதிரான போராட்டத்தை மறுதலித்த, சொற்களை மாற்றிய விளையாட்டுக்கள் அதற்க்கு எதிரான போராட்டத்தை மழுங்கடிக்கவே. முன்பு காந்தி தாழ்ந்த சாதிகளை "அரிஜன்" என அழைத்து சொற்களை மறைத்தது போல், இன்று "தலித்" என்று சொற்களை மறைத்தபடி சாதிகளின் ஒழிப்புக்கு பதில் நிடிப்பை சொற்களுக்குள் எப்படி பாதுகாக்கின்றனவோ, அதேபோல்தான் "கற்பு", "கற்பழிப்பு" சொற்களுக்கும் நிகழ்கின்றது. மக்களுக்குள் இதன் அர்த்தங்கள் இச்சமூக அமைப்பின் அதே வழியில் தொடர்ந்து உயிர்வாழ்வதும், மாற்றங்கள் மாறுகின்ற பொருளாதார வடிவங்கள் அதன் மீதான போராட்டத்தால் மட்டுமே நிகழ்கின்றன. ஒடுக்கும் வார்க்கத்தால் "கற்பிக்கப்பட்ட"  கற்பணை புணைவுகள், ஒரு பொருளாதார அமைப்பால் உருவகம் பெற்று பாதுகாக்கப்படும் போது அதற்க்கு எதிரான போராட்டத்தால் மட்டுமே இல்லாது ஒழிக்கமுடியும். இல்லாது சமூகத்தில் இருந்து அண்ணியப்பட்ட, நடைமுறையில் செயல்பட தயார் அற்றவர்கள், அதற்க்கு தெளிவான கோட்பாடு இன்றி "நடுநிலை", "கேள்வி", "பரிசீலனை"யின் பின் அரசியல் பேசுவோர், தம்மை எழுத்தனாராக காட்டிக் கொள்ள விரும்பும் புத்தியீவிகளின் கோட்பாடுகள் ஒடுக்குபவன் சார்ந்து சொற்களை ஒழித்துக் காட்டுவதன் மூலம் பாதுகாக்கின்றனர்.

 

இது இன்று மட்டுமல்ல அன்றும் இருந்தன என்பதற்க்கு மார்க்ஸ்சின் மூலதனம் பாகம் 1.2 இல் பக்கம் 722 இல் "தத்துவத்தின் வறுமை|" என்ற நூலில் எழுதியதை மீள மார்க்ஸ் எடுத்துக்காட்டியதைப் பாhப்போம். "..., ஓர் உருவக வழக்குதான் அடித்தளம் என்றாகிறது. சமுதாயம் தன்னைப் பீடித்துள்ள "கேடுகளை எல்லாம் ஒழித்துக் கட்ட| விரும்புகிறதா? சரி, ஓசைக்கேடான சொற்களை எல்லாம் ஓழித்துக் கட்ட வேண்டியதுதான், மொழியை மாற்ற வேண்டியதுதான். சமுதாயம் இதற்காக வேண்டி அறிஞர் பேரவைக்கு விண்ணப்பம் செய்து அதன் அகராதிக்கு ஒரு புதிய பதிப்பை வெளியிடுமாறு கேட்டால் போதும்" என புரட்சியை மழுங்கடிக்க, பிரச்சனையை திசைதிருப்ப சொற்க்களை மாற்றி வித்தை காட்டிய அறிஞர் புத்திஐPவிகளுக்கு அன்று மாhக்ஸ் பதிலளித்தது இன்றும் அச்சொட்டாக அதையே மீளச் செய்வோருக்கும் பொருந்துகின்றது.

 

அம்மா  கவனிக்க தவறியது

 

அம்மா ஆசிரியர் தலையங்கம் பாரிசில் கற்பழிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட குழந்தை சார்பாக இச் சமூகத்தை பொறுப்பாக்கி, அதைக் கண்டித்து வெளியாகியிருந்தது. இந்தவகையில் தனது பொறுப்பை இதில் அம்மா சரிவர வெளியிட்ட போதும், இந்த சமூகத்தின் ஊடகம் என்ற வகையில் அம்மா தனது தவறை கணத்தவறிவிட்டது. இந்த வகையில் சுகன் எக்ஸில் எழுதிய கதை ஒன்றில் பெண்கள் தமது மர்hபை இந்தபிடி இந்தபிடி என திரிபவர்கள் என எழுதியதை அம்மா 8இல் சேணன் புகழ்ந்து சமூக வன்முறைக்கான ஊற்று மூலங்களை அம்மா இனம் கணத்தவறியாது ஏன்? இதே அம்மாவில் வளர்மதி (இந்த வளர்மதி கூட ஒரு ஆணாக இருக்கும் வாய்பே அதிகம்) என்ற பெயரில் அமெரிக்க கவிதை மொழி பெயர்ப்பு சதாரண ஹொலிவுட் சினிமா கதைகளின் ஆண் - பெண்களுக்கிடையில் எப்படி கள்ள உறவு கொள்வது என்பதை பிரதியாக்கியது. இரண்டு மனிதர்க்கு இடையில் இருக்ககூடிய பரஸ்பரம் உள்ள நேர்மைக்கு பதில் மோசடிகளை, துரோகத்தை நியாப்படுத்தும் அபத்தங்கள் தான் சமூகத்தின் கொடூரமான வன்முறைகளின் சிலபகுதியாகும். பரிஸ்; விதிகளில் பெண்களை உறவு கொள்ள முடியுமா என அலைவதும், வீடுகளுக்கு பெண்களை நோக்கி வரும் அனாமாத்து தொலைபேசிகளும் இக்கவிதைக்கும் இடையில் பண்பியல் வேறுபாட்டை மட்டுமேவெளிப்படுத்துகின்றது. இங்கு இருவரும் தாம் விரும்பி துரோகம் செய்வதும், பாரிஸ் வீதியில் ஒருவர் துரோகத்தை முன்வைத்து நோக்குவதும் தான் இந்த விதிவிலக்கு.

 

உலகளவில் "அதித சுதந்திரம்" உலகை சூறையாடுவதில் வளர்ச்சி பெற்றபோது 1970 இல் மாணவர் போராட்டம் தனது நியாயமான கோரிக்கைகளை எழுப்பிய போதும், அது தோற்கடிக்கப்பட்ட நிலையில் சுதந்திரம் என்பது வக்கிரமாக இயக்கங்கள் வீங்கியது போல் வெளிப்பட்டு இன்று பாலியல் வக்கிரத்தால் சமுதாயம்  சூறையாடப்படுகின்றது. இந்தவகையில் குழந்தைகள் மற்றும் சமூகம் மீதான பாலியல் வன்முறைகள் உயர்ந்த வண்ணம் பாய்ச்சல் நிலையில் உள்ளது. அண்மையில் பிரன்சில் பாடசாலைக்குள் நடக்கும் வன்முறையை முதன்முதலாக அரசு ஓத்துக்கொண்டு விசாரணைக் கமிட்டி ஒன்றை அமைத்துள்ளது. குழந்தையின் முதல் 18 வயதுக்கு இடையில் 10 வீதமானோர் பாலியல் வன்முறையை பாடசாலையில் அனுபவிப்பதுடன், இது இரகசியமாக மாறிவிட்டமை அரசு ஒப்புக்கொண்டுள்ளது. அத்துடன் ஒவ்வொரு நாளும் இரண்டு பாலியல் வன்முறை பாடசாலை மணவர் எதிர் கொள்வதுடன், ஒவ்வொரு ஓன்பது நாளுக்கு ஒரு கற்பழிப்பும் சக மணவனால் நடத்தப்படுகின்றது.

 

இந்த வகையில் முதல் தவணையில் 242 சம்பவம் நடை பெற்றதை கல்வி அமைச்சு ஒத்துக் கொண்டதுடன் இதைவிட மேலும் அதிகமாகவே இருக்கும் என்பதையும் எற்றுக்கொண்டனர்.
இந்த 242 சம்பத்தில் 7 சதவீதம் கற்பழிப்பு, 12 சதவீதம் கற்பழிக்க முயற்சிக்கும் வன்முறையை கையாண்டவை. 29 சதவீதம் செக்ஸ் வன்முறைக்கு உள்ளாக்கியவை. மிகுதி மற்றய பாலியல் வன்முறைகள். இதில் பாதிக்கப்பட்டோர் 30 சதவீதம் 12 வயதுக்க குறைவு. 13 சதவீதத்தினர் 11 வயது. 35 சதவீதத்தினர் 13 வயதுக்கு குறைவு. 18 சதவீதம் பேர் 11 வயதுக்கு குறைவு. இதில் 8,9 வயது குழந்தைனளும் பாதிக்கப்படுவதாக ஒப்புக் கொண்டதுடன், 5 முதல் 11 வயதுக் குழந்தைகள் பல்வேறு பாலியல் வதைக்கு உட்படுவதை கல்வி அமைச்சு ஒப்புக் கொண்டு ஒரு விசாரனை கமிட்டியை அமைத்துள்ளனர்.

 

உலக மயமாதல் செக்ஸ் மயமாகி கட்டுடைத்த எல்லை கடந்த பாலியல் மனிதானக மனிதனை வளர்த்து, பாலியல் சந்தைப் பொருளாக மாற்றி அதன் மறைவில் மனிதர்களை கொள்ளையடிக்கும் ஏகாதிபத்திய அமைப்பு நிடிக்கும் வரை இது மாற்றமுடியாத ஒரு போக்காக வளர்ச்சி பெறுவதை யாராலும் தடுக்கமுடியாது. 0காட்டூன் முதல் குழந்தைகள் முன் தொரிது எல்லாம் பாலியல் நுகர்வின் ஊடான சந்தைப்படுத்தல். குழந்தை முன் பாலியல் வேட்க்கை துண்டப்பட்டு அதை அணுபவிக்க தடையாக உள்ளதை வன்முறை மூலம் சாதிப்பது யதார்த்தமாகியுள்ளது. இது பெரியவர் முதல் சிறுவர் வரை பொது நியாதியாகவும், இதன் பிரதிபலிப்பின் வெளிபாடாக பாலியல் கொள்கைகள், கோட்பாடுகள் முன்வைக்கப்படுவதுடன், இதையே மூன்றாம் உலக நாட்டின் பொதுக் கொள்கையாக்க தீவிரமாக பல்வேறு கோட்பாடுகள், கலை இலக்கியங்கள், நடைமுறைகள் முயல்கின்றன.

 

தமிழரசனின் ஒருதலை பட்சமான உதராணங்கள் மீது

 

அடுத்து தமிழரசன் கட்டுரை உயர்ந்த பூர்சுவா கண்ணோட்டத்துடன் ஐரோப்பாவில் உலாவரும் எம்மவர்களின் முகத்துக்கு முன் சாட்டையாக விழுந்த அடிதான். அத்துடன் nஐர்மனிய பாசிசம் பற்றியும், அந்த மக்கள் பற்றியும் மிகதுல்லியமான கருத்துகளை வெளியிட்ட இருந்தார். எந்த இலக்கியமும் கூட வெளிப்படுத்த முடியாத வகையில் இவ்விவாதம் அம்மாவில் ஒரு நல்ல கதையாக கூட மாறிவிட்டது. இது போன்று எம்மவர்களின் "கேள்விகள்", "நடுநிலை"களை, "பரீசிலனை"களை தகர்க்கும் வகையில் தொடர வாழ்த்துக்கள். இக்கட்டுரையில் சில விடையத்தை விமர்சனரீதியாக சுட்டிக்காட்டுவது அவசியம்.

 

உங்கள் விவாதம் ஒரு படைப்பாளியின் உள்ளடக்கம், அதன் மீதான கலையம்சம் மீது சமூகத்தில் உள்ள துல்லியமான ஆதாரங்கள் மீது அமைந்திருந்தது. தொடர்ச்சியாக கலை அம்சங்களை எப்படி கையாள்வது என குறிப்பிட்டு பலரின் எழுத்தை ஆதாரமாக்கினீர்கள். இதில் குறிப்பிட்டு காட்டிய எழுத்தளார்கள் படைப்பின் உள்ளடக்கம் சரியானதா? கலையம்சம் சரியானதா? அல்லது இரண்டுமா? அல்லது பொதுவான நல்ல எழுத்தளார்கள் என அரசியலுக்கு வெளியில் அடையாளப்படுத்தினீர்களா? அப்படியாயின் பல சமகால எழுத்தளார்களை குறிப்பிடத் தவறியது ஏன்? சேரன், nஐயபாலன், செழியன், செல்வி, சிவரமணி, புலிகளில் நிறைய எழுத்தளார்கள், புலிகளின் சினிமா, பார்த்தியன், சிவசேகரம், சிவத்தம்பி, கைலாசபதி, நுகுமான், கணேசலிங்கம், யோகநாதன், தமைந்தி, ராNஐஸ்வரி, அகஸ்தியர், எஸ்.ஜெகநாதன்,... என நீண்ட படைப்பளியின் பட்டியளை கைவிட்டு சிலரை மட்டும் குறித்துக் காட்டியது ஏன.? அல்லாது பட்டியல் நீளமானது என்பதால் குறிப்பிடவில்லையா? அல்லது அரசியல் காரணத்தால் குறிப்பிடவில்லையா? அப்படி விட்டு இருப்பின் அந்த அரசியல் என்ன?

 

ஸ்ராலின் பற்றி கூறிச் செல்லும் போது வராலாற்று மாற்றத்தை பொதுமைப் படுத்தியது தெரிகின்றது. ஸ்ராலின் மரணத்தின் பின் சோவியத்தில் ஸ்ராலினை மறுத்ததும், சீனா அதை பாதுகாத்து உயர்த்திய போது உலகளவில் பிளவு எற்பட்டது. மாவோக்கு பின் மாவோ, ஸ்ராலின் என இருவரும் மறுக்கப்பட்ட அரசியல் போக்குகளை ஸ்ராலின் அரசியல் போக்காக பொதுமைப்படுத்தி காட்டுவது போன்ற ஒரு மயக்கத்தை கொடுத்துள்ளது அல்லது கொடுக்கிறது. வரலாற்றின் மாற்றத்தை கணாத பொதுமைப் படுத்தலை செய்துவிடுவது இயங்கியல் மறுப்பைக் கொடுக்கிறது அல்லவா?.