ஈழம், கொசோவோ, குர்தீஸ் போராட்டங்கள்: 3

லகில் ஒடுக்கப்படும் இனங்கள் தங்களைத் தாமே ஆளும் காலங்கள் மிக விரைவாக உருவாகிறது! உலகின் அதீத பொருளாதார முன்னெடுப்புகளை ஊக்கப்படுத்தும் பல்தேசியக் கம்பனிகளின் குவிப்புறுதியானது மேன்மேலும் கனிவளங்களை நோக்கிய தேடுதல்-கையகப்படுத்தல்-காத்தல் எனும் எதிர்பார்ப்புகளால் தமக்குச் சாதகமான நிலையில் ஒரு தேசத்துக்குள் ஒடுக்கப்படும் சிறுபான்மைத் தேசிய இனங்களைத் தொடர்ந்தும் ஒற்றைத் தேசப் பெரும்பான்மையின ஒடுக்குமுறைக்குள் இருத்திவைத்துச் சுரண்டமுடியாதவொரு சூழலில் அத்தகைய நோக்கில் தேசத்தைத் துண்டாடும் நிலைக்குப் பல் தேசியக் கம்பனிகளின் ஏவல் நாய்களான ஏகாதிபத்திய நாடுகள் ஒத்துழைப்பு நல்கின்றன. இதுவொரு நல்ல சந்தர்ப்பம்! -நமக்கும்தாம்.

 

வரும் மாதம் கொசோவோ தனது தனிநாட்டுப் பிரகடனத்தைச் செய்கிறது. இது எத்தகையவொரு பாதிப்பை ஐரோப்பாவுக்குள் உருவாக்குமென்று, ஐரோப்பியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆய்வாளர்கள் மண்டையைப் பிய்த்து வருகிறார்கள். நாங்கள் இலங்கையில் நாயிலும் கேவலமாக அடக்கியொடுக்கப்படுகிறோம். இதுவரை இலட்சம் தமிழ் பேசும் மக்களை இலங்கைப்பாசிச அரசு கொன்று குவித்துவிட்டது! இது உலகத்தில் மிகவுமொரு பாரிய இனவொடுக்கு முறையாகும். இத்தகைய வொடுக்கு முறையை எந்தவொரு யுக்கோஸ்லோவியச் சிறுபான்மை இனங்களும் காணவில்லை! எனினும் அங்கே பற்பல நாடுகள் தம்மைத் துண்டித்துவிட்டன. இப்போது செர்பியாவிலிருந்து கொசோவோ பிறப்பெடுக்கிறது. அதைத் தொடர்ந்து இன்னும் பத்துக்கு மேற்பட்ட தேசங்கள் ஐரோப்பிய மண்ணில் பிறக்கும் நிலையைப் பெறுகின்றன. இதற்கான முன்னுதாரணமாகக் கொசோவோ இருக்கப் போகிறது. நமக்கும் கொசோவோ முன்னுதாரணமாக இருக்குமோ அல்லது இந்தியாவிடம் மடிப்பிச்சை எடுப்போமா?

 

மேற்கு ஐரோப்பாவின் கனிவளத் தேவையானது கொசோவோவின் இறைமையாக விரிகிறது. »Kunststaaten« wären nach diesem Maßstab übrigens die meisten Länder der Welt. Und so ist das herbeigeschriebene Schicksal Belgiens denn auch nur ein Menetekel für Kommendes. In der Ankündigung des FAZ-Artikels heißt es: »Ein Staat zerfällt. Dieses Szenario werden wir bald noch häufiger erleben, bei den Schotten, den Kosovaren, auch den Südtirolern. « கொசோவோவின் கனி வளங்களால் தமது உற்பத்தியின் வீச்சையும் அதன் தொடர்ந்த வலிமையையும் பேணும் தேசங்கள் கொசோவோவின் பிறப்பை ஆதரிக்கக் காத்திருக்கிறது. உற்பத்திக்குத் தோதான மூலப் பொருள்களுக்குக் கொசோவோவானது மிகவும் முக்கியம் பெறுகிறது. இங்கே, இந்த நிமிடம்வரை கொசோவோவின் சுயநிர்ணயம் அங்கீகரிப்பதற்கானதான அரசியல் வியூகமே மேற்கு ஐரோப்பாவிடம் இருக்கிறது. எனவே, இதைப் பயன்படுத்தி அகண்ட ஸ்ப்பானியச் சாம்பிராச்சியம் உடைவதற்கான முன் நிபந்தனைகளுடன் வியூகம் அமைக்கும் ஸ்ப்பானியச் சிறுபான்மை இனங்கள்-உதாரணமாக பஸ்கன் மக்கள் முனைப்போடு காய் நகர்த்துகிறார்கள்.

 

இன்றைய பெல்ஜியம் தன்னைப் பிரித்து இன்னுமொரு நாட்டைப் பிறப்பிக்கும் நிலைக்குள. ; அங்கேயும் சிக்கல்கள் எழுகின்றன. (Belgien kann sich mit einiger Wahrscheinlichkeit in einen nördlichen, flämischen Teil, dessen Bewohner niederländisch sprechen und sich eher nach den Niederlanden hingezogen fühlen, und einen südlichen, französischsprachigen wallonischen Teil spalten. )பிரஞ்சு மொழி பேசும் மக்களின் வழிவந்த வலோனியன் மக்களுக்கும் ஒல்லாந்து மொழி பேசும் மக்களினத்தின் வழி வந்த பி§லேமியன் இனத்துக்கும் பாரிய முரண்பாடு உருவாகிறது. இது இனங்களுக்கிடையிலான முதலாளிய வளர்ச்சியின் முரண்பாடாகவும,; வளர்ச்சிகுன்றிய பிரஞ்சு மொழி பேசும் வலையத்துக்குத் தாம் தொடர்ந்தும் நிதி வழங்க முடியாதெனவும் முரண்பாடுகள் முற்றுகின்றன. அங்கே, இன்னொரு தேசத்தை உருவாக்குவதற்காக மேற்குலகப் பகாசூரக்கம்பனிகள் முயற்சிக்கின்றன.

ஆழ்ந்த மெளனத்திலிருக்கும் சுவிட்ஸர்லாந்தில்(Auch in der stillen Schweiz gibt es Separatisten. Die Befreiungsfront von Jura fordert seit mehr als 30 Jahren die Unabhängigkeit des Kantons Jura von der Eidgenossenschaft. Einst wurde das von französischsprachigen Katholiken bevölkerte Jura dem Kanton Bern angegliedert, der größtenteils von deutschsprachigen Protestanten bevölkert ist. Doch die Anführer der Front sehen ein, dass die Chancen auf einen Sieg äußerst gering sind. ) யூரா கன்டோன் மாநிலத்துப் பிரஞ்சு மொழிபேசும் மக்கள் தமது கன்டோன் தனி நாடாக வேண்டுமென்று வாதிட்டு வருகிறார்கள். அங்கே அமுக்கி வைக்கப்பட்ட பிரிவினைவாதம் இப்போது மேலெழுந்து வெடிக்கக் காத்திருக்கிறது. இலங்கைக்குச் சிவிஸ் அரசியல் முறைமைகளைப் பரிந்துரைத்தவர்கள் முகத்தில் கரி பூசுக!

 

இப்படி இற்றாலி, ருமேனியா, பிரித்தானியாவின் ஸ்கோட்லாந்து(In Großbritannien hat sich der Mittelpunkt der separatistischen Stimmungen aus Ulster nach Schottland verschoben. Bei der letzten Parlamentswahl ging in Schottland die Nationale Partei als Sieger hervor, die einen neuen unabhängigen Staat fordert. ) என்று தொடர்கதையாக இன்னும் பல பத்துத் தனிநாடுகளை உருவாக்கித் தத்தமது கைகளுக்குள் போட்டுவிடத் துடிக்கும் பல்தேசியக் கம்பனிகளும் தேசங்களும் இத்தகையவொரு தனிநாட்டுப் பிரகடனங்களுக்கு இப்போது தலை சாய்க்கும்(மட்டுப்படுத்தப்பட்டு) வியூகத்தோடு காய்களை நகர்த்த முனைகிறார்கள்.

 

கொசோவோவின் தனிநாட்டுப் பிரகடனத்தைத் தாம் ஒருபோதும் ஏற்கப்போவதில்லை என்று செர்பியா பராளுமன்றத்தில் பிரேரணை நிறைவேற்றி மேற்கு ஐரோப்பிய நாடுகளை, அதாவது ஐரோப்பியக் கூட்டமைபை எச்சரிக்கிறது. »Serbien wird niemals ein unabhängiges Kosovo akzeptieren«, sagte Tadic im Parlament. Kostunica bezeichnete ein unabhängiges Kosovo als »Marionettenstaat«. Die USA würden ihn nur aus eigenen militärischen und Sicherheitsinteressen anerkennen. Er rief zu weiteren Verhandlungen auf und forderte einen »Kompromiss«. தமக்கும் ஐரோப்பியக் கூட்டமைப்புக்கும் கைச்சாத்தாகிய அனைத்து ஒப்பந்தங்களையும் தாம் முறித்துவிடுவதாகவும் எச்சரிக்கிறது. எனினும்,கொசோவோ தனிநாடாவதை செர்பியாவால் தடுத்திட முடியாது. இதை உணர்ந்த செர்பியா அமெரிக்காவை நேரடியாகத் திட்டுகிறது. கொசோவோவில் தனது இராணுவப் பொருளியல் ஆர்வங்களுக்காகத் தனிநாடாவதை அமெரிக்கா ஆதரிப்பதாகச் சொல்கிறது செர்பிய அரசு. கூடவே, கொசோவோ அமெரிக்காவால் ஆட்டிவிக்கப்படும் "பொம்மை"அரசாகவே இருக்கும் என்றுரைக்கிறது.

 

நவ லிபரல்களான இன்றைய மேற்கு ஐரோப்பிய ஏகாதிபத்தியமும் அதன் நிதி மூலதனமும்(Der Kapitalismus neoliberalen Zuschnitts macht sich auf, die Landkarte Europas neu zu zeichnen. Die nationalen Bourgeoisien sind an großen und einheitlichen Territorien immer weniger interessiert, spielen doch Grenzen dank der EU-Binnenmarktfreiheiten für den ungehinderten Kapital- und Warenfluß keine Rolle mehr. Doch Nationalstaaten sind nach dem Ende des Zweiten Weltkrieges in harten Klassenauseinandersetzungen und unter dem Eindruck des Vorbilds des Ostens auch Sozialstaaten geworden. In ihnen wird Solidarität durch den Transfer erheblicher Mittel zugunsten notleidender Regionen geübt. Dafür ist die EU kein Ersatz. Der Kampf für den Erhalt des Nationalstaats ist daher in erster Linie eine soziale Auseinandersetzung. Traditionelle und liebgewordene antietaistische Sichtweisen trüben in diesem Kampf nur den Blick auf die wirklichen Gefahren. )தத்தமக்குத் தோதாகத் தேசங்களை உருவாக்கி அத் தேசங்களில் தமது மூல வளங்களையும் மற்றும் இராணுவக் கேந்திர நிலைகளையும் காக்க முனைகின்றது. எனவே, கொசோவோ என்பது இத்தகைய நகர்வுக்கு ஒரு முன்னுதாரணமாக இருப்பதற்காககவே அதைப் பல்தேசியக் கம்பனிகள் ஆதரிக்கின்றன. இதை மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாது அந்தப் பல்தேசியக்கம்பனிகளின் தேச அரசுகள் ஏற்கும் நிலையொன்று உருவாகிறது.

 

செயற்கையான ஒருமையான தேசங்களை உடைப்பதில் நோக்கமாக இருக்கும் பல் தேசிய மூலதனம் செயற்கையான இந்தியாவையும் உடைக்கும் அதற்காக இலங்கையை உடைக்கும் முன்னதாகவென்று இந்தியாவுக்கும் பயம். எனவே, இலங்கையின் ஒருமைப்பாடு அதற்கு அவசியம்.

 

நமக்கு?

எமக்கென்றொரு தேசம் உருவாவது அவசியமாக இருக்கிறது சிங்களக் கொடுமைக்கு எதிராக- நமது நாடோடி வாழ் நிலைக்கு மாற்றாக!

 

இதில் நமது அரசியல் வியூகம் இந்தியாவுக்குக் கால் கழுவாமல் நமது காலில் நின்றபடி உலகின் மாறிவரும் சூழலைக் காண்க!

 

அங்கே, கொசோவோ என்றால் இங்கே ஈழமும் சாத்தியம்.

 

இதை நமது விடுதலை இயக்கத்தின் இளைய தலைமுறை புரியுந் தரணங்கள் மெல்லத் தெரிகிறது. புதிய தலைமுறை இந்த நிலைமைகளைத் தரசித்து வரும்போது உருவாகப்படும் புதிய தேசங்களில் ஒன்றாக ஈழம் இருக்கவேண்டும். அது உழைப்பவரின் தேசமாக இருப்பதே எமது அவா! அதற்கு முன் தேசிய முதலாளியத்தை ஊக்கப்படுத்துக! இதை ஒருபோதும் ஏகாதிபத்தியம் விரும்பாது. தேசிய பூர்ச்சுவாக்களை ஏகாதிபத்தியம் ஒழிப்பதற்காகவே சிறு தேசங்களை உருவாக்கித் தமது முகவர்களாக்கி வரத் திட்டங்கள் அரங்கேறுகிறது.

 

இது ஒன்றும் பித்தலாட்டம் அல்ல!

 

உலகத்தின்-பொருளாதார ஆர்வங்களின் புதிய வியூகம் இப்படியே நகரும் இனி.

 

ஒருசில ரொஸ்கிய வாதிகள் சொல்வதுபோன்று ஏசியா, ஐரோப்பாவென்ற கண்ட அரசியல் தேசங்களை இன்னும் ஒன்றாக்கும் என்பது இனி நடவாது. எங்கே, செயற்கையான தேசங்கள் தேசிய இனங்களை அடிமைப்படுத்திச் செயற்கையாக இணைத்திருக்கிறதோ அங்கே, உடைவுகளோடு பல தேசம் உருவாகும்-உருவாக்கப்படும். அது எந்த ஏகாதிபத்தியக் கம்பனியின் பக்கம் இருக்கும் என்பதே இனிவரும் பிரச்சனையாக இருக்கும்.

 

இந்தியா இருபதுக்கு மேற்பட்ட குட்டிகனை ஈன்றெடுக்கும். இலங்கை ஈழத்தை ஈன்று வருகிறது!

இங்கே, எமது தரப்பின் சாய்வு எங்கே-எப்படியென்பதே நமது கேள்விகள். அதற்கு முன் புலிகளை ஒழித்துக்கட்ட இந்தியா விரும்புகிறது. இதற்காக இலங்கைத் தேசிய குட்டிப் பூர்ச்சுவாக்களை உசுப்பிவிட்டுப் போருக்கான தளபாடங்களை இலங்கை இராணுவத்துக்கு வழங்கும்-வழங்கிவருகிறது. தனது உளவுப்படையூடாகப் புலிகளைப் பிளந்து பலவீனமாக்கிப் பின்னடைவைச் செய்தது. இன்னும் அதிகமாக இந்தியா செய்யும். இங்கே, நமது போராளித் தேசபக்த இளைஞர்கள் புதிய வியூகங்களைச் செய்தாகவேண்டும். இளைஞர்கள் உலகத்தின் மாற்றங்களை மிக அவதானமாகக் கணிக்கத் தவறுவது நமக்கு அழிவாக அமையும்.

 

ஈழத்தைப் பிரகடனப்படுத்தி, அதை எவரும் அங்கீகரிக்காது போனாலும் அது கேலிக்கூத்தல்ல! அதற்குப் பின்பான அரசியலை நேர்த்தியாக்க நமக்கு அது பாடமாக இருக்கும். எனினும், ஈழம் என்பது மெய்யாகும் என்பதற்கான உலகச் சூழல்-பொருளாதார வியூகம் இப்போது உலக அரங்குக்கு வருகிறது. இது நமக்குச் சாதகமானவொரு பக்கத்தையும், பாதகமானவொரு பக்கத்தையும் கொண்டிருக்கிறது. இதில் காய்களை நகர்த்த நமது அரசியல் விவேகமாக இருக்க வேண்டும்.

 

திரு. பிரபாகரனின் 2007 க்கான மாவீரர் உரைக்கு இலண்டனிலுள்ள தமிழ் வக்கீல்கள் தீபம் தொலைக்காட்சியில் விளக்கம்-பொழிப்புரைத்தபோது"சிங்கள ஏகாதிபத்தியம்"என்று பல முறைகள் கூறிக்கொண்டார்கள். இத்தகைய"அறிவு"தமிழருக்கு இருந்தால் நாம் அழிவதைத் தடுக்கமுடியாது! வக்கீல்கள் எல்லாம் அரசியல் விஞ்ஞான நிபுணர்களில்லை. இளைஞர்களே உங்கள் விவேகங்களை இனிவரும் காலத்தில் காட்டுங்களேன்! -அது நமக்கென்றொரு தேசத்தை உருவாக்கட்டும்-அது தொழிலாளருக்கு எற்ற பொருளாதாரத்தைக் கனவாகக் கொண்டெழட்டும்!

 

இக்கட்டுரையை மேலும் விருத்தியாக்கித் தத்துவார்த்த நெறியோடு பின்பு எழுதுகிறேன்.

 

தொடரும்.

ப. வி. ஸ்ரீரங்கன்

11. 01. 2008