03012021தி
Last updateவெ, 26 பிப் 2021 11pm

ஈழம், கொசோவோ, குர்தீஸ் போராட்டங்கள் (2)

"Der Feind meines Feindes ist mein Freund". "எனது எதிரியின் எதிரி எனக்கு நண்பன்"என்றபடி நமது அரசியலில் இப்போது காய்கள் நகருகின்றன. இலங்கையில் நிகழும் அரசியல் சித்துவிளையாட்டில் தமிழக-இலங்கைத் தமிழ் பாராளுமன்றச் சகதிகளின் குழிப்பறிப்போ சொல்லி மாளாதது. எனினும், நாம் மேலே செல்வோம்.

 

இன்றைய தரணத்தில் தமிழீழ அரசு உருவாகுவதற்கும், அது தமிழ் பேசும் மக்களுக்குமட்டுமல்லாது அனைத்துச் சிறுபான்மை மக்களுக்குமானவொரு அரசாக அமையுங் காரணத்தில் ஒரு முற்போக்கான தேசிய விடுதலைப் போரை முன்வைத்திருக்க முடியும். பேரினவாதச் சிங்கள அரசுக்கும் அதன் பாசிசக்கட்டமைப்புக்கும் அந்தக் கட்டமைப்பால் முன்தள்ளப்பட்ட சிங்களவெறி இராணுவத்துக்குமான மாற்றீடாக-முன்னுதாரணமாக ஈழம் மக்களை நேசிக்கும், உழைக்கும் மக்களைக்கூறுபோடதாவொரு முற்போக்கான நாடாக உருவாதற்கான பெரும் சாத்தியப்பாடுகள் இலங்கையில் இருந்தது. இத்தகையவொரு சாத்தியப்பாடானது உலக அரங்கில் எமக்கான பாரிய அநுதாபத்தையும், நம் மக்களின் நியாயத்தையும் நிலைப்படுத்தியிருக்கககூடிய சாத்தியப்பாடே அன்றிருந்து. இத்தகைவொரு அரசியல் சாதகமான சூழலில் எமது மக்களின் தேசம் உருவாக்கும் அபிலாசை வெறும் கனவாக இருந்திருக்க முடியாது. ஏனெனில், நாம் சிங்களப் பேரினவாத ஒடுக்கு முறைக்குள் தினமும் நசிபட்டுவரும்போது நம்மிடம் பிரிந்து போகும் நிலையைத் தவிர வேறொரு முடிவு இருந்திருக்க முடியாது.

 

இத்தகைய சூழலை மிக இலகுவாகக் கணக்குப்போட்ட இந்தியா அன்று தனது முற்போக்கு முகமூடியோடு நம்மை அணைத்தபடி நமது முதுகில் குற்றுவதற்காக நமக்குள்ளே பற்பல ஆயுதக்குழுக்களை உருவாக்கிப் புலிகளை வளர்த்து எமது அரசியல் எதிர்காலத்தையே நாசம் செய்து, உலக அரங்கில் நம்மையும், நமது ஜீவாதாரவுரிமையான சுயநிர்ணய உரிமையை வெறும் கேலிக்கிடமாக மாற்றியமைத்து தனது நோக்கில் வெற்றியீட்டியது.

 

இன்று, நமது மக்கள் படும் மிகக்கொடுமையான அடக்குமுறை உலகுக்குத் தெரிவதற்குப் பதிலாக புலிகள் செய்யும் பயங்கரவாதத் தாக்குதல்களே பூதாகரமாகத் தெரிகிறது. உலகத்தின் பார்வையில் நமது போராட்டம் தேவையற்ற ஒன்றாகவும், ஒரு பயங்கரவாதக் குழுவால் முன்னெடுக்கப்படும் பயங்கரவாதப் போராட்டமாக மாறியதற்கு யார் காரணம்?

 

பதில் மிக இலகுவானது. ஆனால், அதன் உண்மையை ஏற்பது கடினமானது.

 

தமிழ் ஓட்டுக் கட்சி அரசியலிலிருந்து முன் தள்ளப்பட்ட அரசியலும் அதன் வாயிலாகத் திட்டமிட்டு இந்தியாவால்-உலக ஏகாதிபத்திய அமெரிக்காவால் கட்டி வளர்க்கப்பட்ட ஆயுதக் குழுக்களே இத்தகைய நிலைக்குக் காரணமாகும். இன்றைய புலிகளின் பரிதாபகரமான நிலை இதற்கு நல்ல எடுத்துக்காட்டாகும். தம் மக்களையே வேட்டையாடிக்கொண்டு, அந்த மக்களின் உரிமைக்காகப் போராடுவதாகச் சொன்னவொரு பாசிச இயகத்தின் அழிவு இன்று நெருங்கி வருகிறது. அது தன் இருப்புக்காகத் தனது எஜமானர்களோடு நடாத்தும் பேரம் உலகப் பிரசித்தி பெற்றது. அது எங்கெங்கே பேரங்களைச் செய்ததென்று கூறுவதல்ல இக்கட்டுரையின் நோக்கம். மாறாகக் கொசோவோ, குர்தீஸ் இன மக்களின் போராட்டத்தோடு நமது மக்களின் நியாயமான உணர்வு-ஒரு தேசம் உருவாக்கும் கனவு ஏன் வீணானது என்பதை ஒத்துப் பார்ப்பதே இதன் நோக்காக இருக்கிறது.

 

இலங்கையின் இனவாதச் சிங்கள அரசு தமிழ் பேசும் மக்களுக்கிழைத்த அரசியற் துரோகங்கள் பெரும் சமூகக் குற்றமானது. அது யுத்தகாலத்தில் செய்த மனிதவிரோதக் கொலைகளானது பெரும் இனவழிப்பானது. அது, கொசோவோ மக்களுக்கு, குர்தீஸ் மக்களுக்கு நேர்ந்ததைவிடப் பன்மடங்கு பெரிதானதாகும். என்றபோதும், நமது அரசியல் தோல்வியில் முடிந்து, இந்தியக் கயமைவாத அரசிடம் தஞ்சம் கோரும் நிலைக்கு எமது போராட்டச் சக்தியைப் பலவீனமாக்கியது வரலாறு. நாம் எதற்காக நமது மக்களின் சுயவெழிச்சியை முடக்கினோம்?நமது மக்களின் தயவில் நிற்காது இந்தியாவை-ஏகாதிபத்திய மேற்குலகை எங்ஙனம் நம்பினோம்?

 

இங்கேதாம் வர்க்க நலனும், அதன் இருப்பும் நம் அரசியல் அபிலாசையைச் சிதைத்து வந்திருப்பதைக் கட்டுரைகளுடாகச் சொன்னோம். எமது மக்கள் இயல்பாக ஒரு தேசத்தை நிர்மாணிக்கும் நிலைக்குள் உள்வாங்கப்பட முன்னமே அப்படியொன்று நிகழும் தரணத்தைப் புரிந்த அந்நியச் சக்திகள் மிக அவசரமாக முன் தள்ளிய "தமிழீழக்"கோரிக்கையானது நம்மைக் கெலிக்க வைத்து, நமது கால்களில் ஊன்றி நிற்கும் பக்குவத்தை உடைத்து நம்மைக் கோமாளிகளாக்கிப் பாசிசச் செயற்பாட்டை நோக்கித் தள்ளிப் பல பத்தாயிரம் நமது மக்களையே வேட்டையாடியது. இது ஒருகட்டத்தில் இந்திய உளவுப்படையானது புலிகளை வைத்து அப்பாவிச் சிங்கள மக்களை அநுராதபுரத்தில் வேட்டையாடி எமது போராட்டத்தை மிகவும் சூழ்ச்சியோடு முறியடிக்கும் காயை நகர்த்தியபோது, இதற்கும் புலிகள் உடந்தையாக இருந்தார்கள். இதையும் அவர்களின்(புலிகளின்)அரசியல் ஆலோசகர் அடியெடுத்துக் கொடுத்தபோது, அந்தத் துரோகி யார்?அந்நிய நலனை முன் நிறுத்தியவொரு கைக்கூலியென நாம் பதினைந்தாண்டுகளுக்கு முன்னுரைத்தோம். இன்று, எமது போராட்டத்தின் செல்நெறியூடாக மிகவொடுங்கிய தாழ்நிலைப் போராட்டமே செய்ய முடியாதவொரு நிலையில் எங்கள் மக்களின் உரிமைகள், வாழ்வாதாரங்கள் அனைத்தும் நிர்மூலமாகிப் போயுள்ளது. நாம் தலை தூக்கமுடியாதவொரு சூழலுக்குள் மிகத் தந்திரமாகத் தள்ளப்பட்டுள்ளோம். இதிலிருந்து எமது மீட்சி எந்த வகையில் நிகழ முடியும்?

 

இலங்கை அரசானது எமது மக்கள்மீது மிகத் திட்டமிட்ட வகையில் இனவழிப்பைச் செய்தது. இது யுக்கோஸ்லோவிய இன அழிப்புப்போன்றே நமக்குள் நடந்தேறியது. ஆபத்துக்குள் வாழும் மக்களுக்கான அமைப்பு என்றவொரு அமைப்பு யுக்கோஸ்லோவியாவின் கொசோவோ மக்களுக்கெதிரான இனவழிப்புப்பற்றி எழுதுகிறது"Die Angriffe folgen einer Systematik, die an jene aus dem Bosnien-Krieg erinnert. Sie beginnen häufig mit Überraschungsangriffen im Morgengrauen, die teils mit schweren Waffen wie Boden-Boden-Raketen und raketengetriebenen Granaten geführt werden. Dann werden Scharfschützen postiert, die der Zivilbevölkerung die Bewegungsfreiheit nehmen. Viele Zivilisten verbergen sich deshalb tagsüber im Wald und kehren nachts in ihre Häuser zurück, um sich mit dem Nötigsten zu versorgen. Schließlich ziehen schwer bewaffnete Truppen auf, die tagsüber alle Straßenverbindungen blockieren. Unter ihrem Schutz kommen Spezialeinheiten in dunklen Uniformen mit Macheten und "Skorpion"-Gewehren tschechischer Produktion in die jeweilige Ortschaft. Diese Truppen sollen Massaker begangen haben. Nach Tagen oder Wochen des Terrors werden die Bombardierungen wieder gesteigert und auch in der Nacht fortgesetzt, bis die Bevölkerung den Ort verläßt. Es folgen Plünderungen im großen Stil. Die Häuser werden niedergebrannt. Das Vieh bleibt unversorgt oder wird getötet. Nach einer Statistik der GfbV wurden zwischen Anfang März und Ende Juli 1998 mehr als 250 albanische Dörfer von den serbischen Truppen angegriffen, mit schwerer Artillerie bombardiert und ganz oder teilweise zerstört. Laut der US-amerikanischen Menschenrechtsorganisation Physicians for Human Rights wurden Frauen festgenommen und vergewaltigt. Einige der Frauen seien anschließend "verschwunden". Nach Schätzungen der GfbV kamen bis Ende Juli mindestens 1. 000 Zivilisten ums Leben. "பொஸ்னிய யுத்தம்பற்றி நினைக்கும்போது திட்டமிட்ட வகையில் தாக்குதல்கள் தொடர்கின்றன என்பதே ஞாபகத்தில் வருகிறது. அடிக்கடி ஆச்சரியப்படக்கூடியதாக்குதல் வைக்கறைக்குள் ஆரம்பிக்கும். ஒருபகுதி ஆயுதங்கள் தரைக்குத் தரை தாவும் ரொக்கட்டுக்கள், ரொக்கட்டுக்களால் இயக்கமுறும் கிரனைட்டுக்கள் உள்வாங்கப்பட்டும், அத்தோடு மிகவும் பாதுகாப்பு வலயப்படுத்தி குடிமக்களின் சுதந்திரமான நடமாட்டம்வேள்வியாகப்படும். இதிலிருந்து தப்புவதற்காகவே மக்கள் தங்களுக்கு அவசியமான உணவாதாரத்தை எடுத்துகொண்டு பகலில் காடுகளுக்குள் ஒழிந்திருந்துவிட்டு இரவில் வீடு மீள்வார்கள். பயங்கர ஆயுதம் தரித்து துருப்புகள் பகற்பொழுதினூடாக வீதிகளை மூடித் தடை செய்தவாறு தமது பாதுகாப்பு அரண்களை நிலையெடுத்தபடி சிறப்புப்படையணிகள் மங்கலான இராணுவயுடையுடனும், கையில் மெக்கனற்-ஸ்கொறோப்பியின் வகை ஆயுதங்களின் நுட்பத்தோடு அந்தப் பகுதியைக் கட்டுப்படுத்தியபடி இருப்பார்கள். இந்தத் துரப்புகளே நரவேட்டையை நடாத்தியவர்கள். நாட்கணக்காகவும் சிலவேளை கிழமைக்கணக்காவும் வான் தாக்குதல்கள் நடக்கும், பின்பு மீளவும் இரவு நேரத்தில் தாக்குதல் முன்னெடுக்கப்படும். அந்தப் பகுதி மக்கள் இடம் பெயரும் வரைத் தாக்கல் நிகழும். தீயிட்டுக் கொளுத்தும் விளைவுகள் ஆரம்பிக்கும். வீடுகள் தீக்கரையாக்கப்படும், கால் நடைகள் பராமரிபற்று நிற்கும் அல்லது கொல்லப்பட்டிருக்கும். ஆபத்துக்குள் வாழும் மக்களுக்கான அமைப்பின் கணிப்பீட்டின்படி 1998 ஆம் ஆண்டு மாச் ஆரம்பம் முதல் யூலை இறுதிவரை அல்பானியர்களின் 250 கிராமங்கள் செர்பிய இராணுவத்தால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. கடினமான ஆட்டிலெறிகளால் முற்று முழுதாகவோ அல்லது பகுதியாகவோ அக் கிராமங்கள் தாக்கியழிக்கப்பட்டன. அமெரிக்காவின் மனிதவுரிமை அமைப்பான Physicians for Human Rights சொல்வதன்படிப் பெண்கள் கைது செய்பட்டுப் பாலியற் பலாத்தகாரப்படுத்தப்பட்டுள்ளார்கள். இதுள் சிலர் இறுதியிற் காணாதே போயினர். ஆபத்துக்குள் வாழும் மக்களுக்கான அமைப்பினது கணிப்பீட்டின்படி யூலை இறுதிக்குள் 1000 பொதுமக்கள் பலி கொள்ளப்பட்டார்கள். "- http://www. bndlg. de/~wplarre/gfbv-03. htm

 

இவ் வகையான எத்தனை தாக்குதல்களை இலங்கைப் பாசிச அரசு நம்மீது நடாத்தியது. இதைவிடக் கொடிய பெரும் இடப்பெயர்வையெல்லாம் ஈழமக்கள் கண்டார்கள். பெருந்தொகையான மக்கள் சில தினங்களுக்குள் கொல்லப்பட்டார்கள். பெண்களின் பெண்ணுறுப்பில் குண்டு புதைத்துக் கொல்லப்பட்டார்கள். எனினும், உலகம் திரும்பிப் பார்க்காத நிலைமையில் நமது"தடுப்பு யுத்தம்"நடந்தேறியது. இன்றுவரை சிங்கள மேலாதிக்க அரசின் கொடிய இராணுவமானது தமிழ்பேசும் மக்களைப் பயங்கரவாதத்துக்கெதிரான புலிவேட்டையென்ற போர்வையில் பல்லாயிரக்கணக்காக வருத்தி அவர்களின் வாழ்விடங்களை அபகரித்தும், கொன்றும் மக்களை அடிமைப்படுத்தி வருகிறது. என்றபோதும், புலிகளின் தவறான யுத்தச் செல்நெறியால் நம் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். இந்திய வல்லாதிக்கம் நம் மக்களை இலங்கை நரவேட்டையாட ஒப்புதல் அளித்தபடி நம்மைப் படுகுழியில் தள்ளுவதற்காகப் புலிகளைப் பயன்படுத்துகிறது. இந்த இலட்சணத்தில் தமிழ்ப் பாரளுமன்றப் பண்டியள் இந்தியாவால்தாம் தீர்வு சாத்தியமாம்-மயிர்!

 

இதுவொரு உதாரணம்தாம்.

 

ஆனால், கொசொவோவின்மீதான இவ்வளவு கரிசனை-ஓராயிரம் குறிப்புகள், எழுத்து வடிவங்களெனக் குவிந்துகிடக்கும் சூழலில் அந்தத் தேசத்தின்மீதான ஆர்வம் என்ன?பொருளாதார ஆர்வங்கள் அங்கே நிலைபெறவில்லையா?உண்டு. இதுவொரு பகுதி நலனே. கொசொவோவானது கனிப் பொருளுடையது. அதன் மூலப்பொருள்கள்மீதான பெரும் தொழில் நிறுவனங்களின் மிகையார்வானமானதும் இன்றைய தனிநாட்டுப் பிரகடனத்துக்கான அங்கீகரிப்புக்கு உடந்தையாக இருக்கிறது. கொசொவோ யுக்கோஸ்லோவியாவின் கனிவளம் நிரம்பிய பகுதியாகும். எனவே, இதை அன்றைய ஜனதிபதியான மிலோசேவிச்(Milosevic) இழக்க விரும்பவில்லை(Im Kosovo befinden sich große Vorkommen an Nickel, Kupfer, Blei und enorme Vorkommen an Chromerzen. (Mit Albanien zusammen verfügt das Gebiet über die zweitgrößten Chromerzvorkommen der Welt). Es ist klar, daß dieser Gegensatz, riesiger Reichtum an Bodenschätzen auf der einen Seite und soziale, sowie nationale Unterdrückung auf der anderen ). இன்றோ மேற்குலகப் பெரும் ஏகாதிபத்திய நிறுவனங்களின் கண்களில் அதன் உலோகம், செம்பு, ஈயம், ஈயக் குரோமியம் போன்ற முலவளத்தைத் திருடுவதற்காகவே இன்றைய தனிநாட்டுப் பிரகடனத்துக்கான ஒத்துழைப்பு நகருகிறது. அல்பானியர்கள் வாழும் கொசோவோவில் உலகத்திலேயே இரண்டவது பெரும் ஈயக் குரோமிய இருப்பு இருக்கிறது.

 

தொடரும்.

ப. வி. ஸ்ரீரங்கன்

26. 12. 2007.


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்