05092021ஞா
Last updateஞா, 02 மே 2021 10pm

படுக்கையில் சிறுநீர்

குழந்தைகள் தூக்கத்தில் சிறுநீர் கழித்து படுக்கையை நனைப்பது என்பது ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லா நாடுகளிலும் குழந்தைகளிடையே காணப்படும் ஒரு பொதுவான குறைபாடு ஆகும்.

பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளுக்கே அதிகம் இக்குறைபாடு காணப்படும். பிறந்ததிலிருந்தே படுக்கையை நனைத்துக்கொண்டிருக்கும் குழந்தைகளை ஒரு வகையாகவும், சிறுநீரைக் கட்டுப்படுத்தி வெளியேற்றும் திறமை வந்தபின்பு சில காலம் இந்தப் பிரச்சினை இல்லாமல் இருந்து திரும்பவும் ஆரம்பிக்கும் குழந்தைகளை மற்றொரு வகையாகவும் பிரிக்கலாம். இதில் முதல் வகை குழந்தைகளைக் காட்டிலும் இரண்டாம் வகை குழந்தைகளை விரைவில் குணப்படுத்த முடிகிறது.

பெரும்பாலான குழந்தைகள் ‘நாம் படுக்கையில் சிறுநீர் கழிக்கின்றோம்’ என்ற உணர்வு இல்லாமலேயோ அல்லது கனவில்தான் நாம் சிறுநீர் கழித்துக்கொண்டு இருக்கின்றோம் என்ற உணர்விலோ படுக்கையை நனைக்கின்றனர். அதே சமயம் பல குழந்தைகளுக்கு நாம் படுக்கையில்தான் சிறுநீர் கழித்துக்கொண்டு உள்ளோம் என்ற உணர்வு இருந்தபோதும் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் போகின்றன.

காரணங்கள்:
குழந்தைகள் படுக்கையை நனைப்பதற்கான காரணங்களை இரண்டு வகைப்படுத்தலாம்.
1. உடலியல் காரணங்கள்
2. மனதியல் காரணங்கள்.
காரணங்கள் பல்வேறாக இருந்தாலும் குழந்தைகளுக்குத் தகுந்த வயது வந்த உடன் முறையான டாய்லெட் பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுக்காமல் போவதே அடிப்படைக் காரணமாக அமைகின்றது.

உடலியல் காரணங்கள்:
சிறுநீர் வழிப்பாதை நோய்க் கிருமிகளால் தாக்கப்பட்டு இருப்பது, முதுகுத் தண்டுவடத்தில் ஏற்படும் சில நரம்பியல் குறைபாடுகள், சிறுநீர் வழிப்பாதையில் பிறப்பிலிருந்தே காணப்படும் குறைபாடு, சிறுநீர்ப்பை வீக்கமும், சிறு வயது சர்க்கரை நோய், குடலில் காணப்படும் பூச்சிகள் போன்றவை உடலியல் காரணங்களாகும். இருந்தாலும் மிகமிகக் குறைவான அளவு குழந்தைகளே இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

மனதியல் காரணங்கள்:
குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதற்கான காரணங்களில் மனதியல் காரணங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.
குழந்தைகளின் மனதை பாதிக்கும் வகையில் நடக்கும் சுற்றுப்புற நிகழ்ச்சிகள், ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளிக் கூடத்திற்கு அல்லது புது வீட்டுக்கு மாறுவது, வீட்டிற்குப் புதிதாக ஒரு குழந்தை (தம்பி அல்லது தங்கை) வருவது, குழந்தையிடம் நெருக்கமாக இருக்கும் யாராவது இறந்து போவது போன்ற நிகழ்ச்சிகள் குழந்தையின் மனதில் அதிர்ச்சியை ஏற்படுத்தி அதன் வெளிப்பாடாக படுக்கையை நனைக்கும் பழக்கம் ஏற்படுகின்றது.


குழந்தைகளின் அடி மனதில் பதிந்து போன சில பய உணர்வுகள் (குழந்தையை பயப்படுத்தி சாப்பிட வைப்பதற்காகக் கூறப்படும் பயங்கர கதைகள் மற்றும் சில விலங்குகளைப் பற்றிய பயம்), குழந்தையின் மனதில் தோன்றும் பாதுகாப்பற்றத் தன்மை, குழந்தையை மிகவும் கண்டிப்பாக வளர்க்க வேண்டும் என்பதற்காக சிறிய தவறுகளுக்குத் தரப்படும் பெரிய தண்டனைகள், பெற்றோர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகள், குழந்தையின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் போவது, குழந்தையை எப்போதும் கேலி செய்து கொண்டு இருப்பது, அவர்களைத் தாழ்த்திப் பேசிக் கொண்டு இருப்பது போன்ற செயல்கள்கூட குழந்தையின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி படுக்கையில் சிறுநீர் கழிப்பதற்குக் காரணமாக அமைகின்றன.

நமது விருப்பு, வெறுப்புகளைக் குழந்தைகளின் மேல் திணிப்பதும், யார் மீதோ இருக்கும் கோபத்தைக் குறைப்பதற்குக் குழந்தைகளை வடிகாலாக (அடிப்பது, கடுமையாகத் திட்டுவது) பயன்படுத்துவது போன்ற செயல்களால், படுக்கையில் சிறுநீர் கழித்தல் போன்ற சிறிய குறைபாடுகள் முதல், ஒரு குடும்பத்தை மட்டுமல்லாமல், சமூகத்தையும் சேர்த்து பாதிக்கும் நடத்தைக் குறைபாடு போன்ற மனதியல் பாதிப்புகள் வரை ஏற்படலாம். Acid phos, Aconite, Cimicifuga, Aloes, Sulphur போன்ற ஹோமியோபதி மருந்துகளை அறிகுறிகளுக்கு ஏற்ப மாற்றி, மாற்றி கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். படுக்கையை நனைக்கும் பரிதாபக் குழந்தைகளும் பலன் பெறும்.

http://kulanthaikal.blogspot.com/2004/07/blog-post.html