04012023
Last updateபு, 02 மார் 2022 7pm

கருஞ்சீரகம்

கருஞ்சீரகத்தின் தாயகம் தென் ஐரோப்பிய நாட்டுப்பகுதியாகும். இது பழமையான ஒரு மணம் ஊட்டும் தாவரப் பொருளாகும். மிகப்பழமையான `ஹீப்ரு மொழியில் கருஞ்சீரகம் பற்றிய விளக்கங்கள் உள்ளன. பிளின் என்ற புகழ் பெற்ற பழங்கால மருத்துவ நிபுணர் தனது நூலில் கருஞ்சீரகத்தைப் பற்றி கூறியுள்ளார். கிழக்கு - மத்திய நாட்டுப் பகுதிகளில் இது நன்கு வளர்கிறது. இந்தியாவில் பஞ்சாப், பீகார், அஸ்ஸாம் மாநிலங்களில் காட்டுச் செடியாக வளர்கிறது.

இச்செடி 40 முதல் 50 செ.மீ. உயரம் வரை வளரும். மலர்கள் நீண்ட காம்புகளுடன் வெளிர் நீல நிறத்தில் இருக்கும். கனியின் மேற்பகுதி பிளவுற்று விதைகள் வெளியாகும். ஒரு காயில் பல விதைகள் அடங்கியிருக்கும். இவை கறுப்பாகவும், உறுதியாகவும் இருக்கும்.

கருஞ்சீரகத்தின் பலன்கள் வருமாறு:-

தோல் நோய்களை குறைக்கும். பசியைத்தூண்டும். சீரணத்தை சீர்படுத்தும். வயிற்றுப் போக்கை குணப்படுத்தும். புழுக்கொல்லியாக செயல்படும். வாந்தியைத் தடுக்கும். இதய வலியை குறைக்கும். சிறுநீர் சுரப்பிகளை தூண்டும். பால் சுரப்பைக் கூட்டும்.

* சிறிதளவு கருஞ்சீரகத்தை பசும்பால் விட்டு அரைத்து முகத்தில் பூசி ஊறிய பின் கழுவி வர முகப்பரு மறையும்.

* கருஞ்சீரகத்தை நீர் விட்டு, அரைத்து, நல்லெண்ணையிëல் குழைத்து கரப்பான், சிரங்கு ஆகியவற்றில் பூசி வர குணம் தெரியும்.


* கருஞ்சீரகத்தை தேன் விட்டு அரைத்து பிரசவித்த பின் ஏற்படும் வலிக்குப்பூசிட வலி மாறும்.

* கருஞ்சீரகத்தை அரைத்து தேமல் மேல் பூசி வர தேமல் சிறிது சிறிதாக மாறும்.

* கருஞ்சீரகத்தை வறுத்து காடி விட்டு அரைத்து சொறி, தேமல் மேல் பூசி வர தேமல், சொறி மறையும்.

* கருஞ்சீரகத்தையும், தும்மட்டிக்காயையும் சேர்த்து அரைத்து விலாப்பக்கம் பூசி வர குடல் பூச்சிகள் வெளியேறி விடும்.

* கருஞ்சீரகப்பொடி, மல்லிப்பொடி இரண்டையும் பாலில் கலந்து சாப்பிட அஜீரணம் மாறும்.

* கருஞ்சீரகப்பொடியை தயிரில் கலந்து சாப்பிட அஜீரணம் மற்றும் வாயு உற்பத்தி மாறும்.

* கருஞ்சீரகத்தை எருமைப்பால் விட்டு அரைத்து முகத்தில் தடவி வர முகப்பரு மாறும்.

* கருஞ்சீரகத்தை வெற்றிலை சாறு விட்டு அரைத்து காது, கன்னப் பகுதியில் ஏற்படும் வீக்கம் மேல் பற்று போட வீக்கம் மறையும்.

* கைப்பிடி கீழா நெல்லி இலைகளோடு ஒரு ஸ்பூன் கருஞ்சீரகம் சேர்த்து சிறிதளவு பால் சேர்த்து அரைத்து பின் இதை ஒரு கப் பாலில் கலந்து காலை உணவுக்கு அரை மணி நேரம் பின் மற்றும் மாலை நேரம் பருகி வர மஞ்சட்காமாலை குணமாகும்.

நன்றி
- சா.அனந்தகுமார், அகஸ்தீஸ்வரம்.

 

http://www.tamilnadutalk.com/portal/index.php?showtopic=8474