நைஜீரியாவின் பெக்சா வட்டாரத்தில் குரங்குகள் அஞ்சல் காரர்களாக பயன்படுகின்றன. இந்த வகை குரங்குகளில் தாய் குரங்குகளும் குட்டி குரங்குகளும் எப்போதும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றன. இவற்றை வெவ்வேறான இடங்களுக்கு மக்கள் அனுப்புவார்கள்.

 

குட்டி குரங்குகள், தாய் குரங்குகளைத் தேடிப்பிடிப்பதற்காக மக்கள், குட்டி குரங்குகளை வெளியே அனுப்புவார்கள். இதன் மூலம், குட்டி குரங்குகள் அஞ்சல் வழியை அறிந்து கொள்ள முடியும். அவற்றுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்ட பின், கடிதங்களை மூங்கில் கழியில் குட்டி குரங்குகளின் முதுகில் வைப்பார்கள். குட்டி குரங்குகள் தாய் குரங்கு இருக்கும் இடத்துக்கு செல்லும் போது அஞ்சல் கட்டையும் அங்கு கொண்டு போய்ச்சேர்க்கும்.