பிரமாண்டமான டைனோசரை தொலைக்காட்சியிலும் திரைப்படத்திலும் பார்த்து நாம் பயந்து போயிருக்கிறோம். அருங்காட்சியகத்திலே அதன் மாதிரி வடிவத்தைப் பார்த்து வியந்து போயிருக்கிறோம். ஆனால் இந்த டைனோசர் ஆணா? பெண்ணா?என்று உங்களுக்கு தெரியுமா?

 

டைனோசர் ஒரு பெண்தான் என்று அடித்துச் சொல்கின்றனர் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள். இதற்கு ஆதாரமாக இருப்பது அவர்கள் நடத்திய எலும்புத் திசு ஆராய்ச்சி. 6 கோடியே 80 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த டைராசோசரஸ் ரெக்ஸ் என்ற டைனோசர் புதைவடிவத்தின் எலும்புத் திசுவை உயிருள்ள பறவைகளின் எலும்புத் திசுக்களுடன் ஒப்பிட்டு அமெரிக்காவின் வடக்கு கரோலினா அரசுப் பல்கலைக்கழகத்தின் துணைப் பேராசிரியர் மேரி ஷ்வைட்ஸர் தலைமையிலான குழு ஆராய்ச்சி நடத்தியது. டி ரெக்ஸ் என்ற அந்த டைனோசர் ஒரு பெண் தான் என்றும் அது இறந்த போது முட்டையிடும் பருவத்தில் இருந்தது என்பதும் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

 

டி ரெக்ஸ் டைனோசர் புதைவடிவத்தின் உடைந்த கால் எலும்பில் வழக்கத்திற்கு மாறான எலும்புத் திசு லைனிங் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இப்படைப்பட்ட திசு இருப்பது டைனோசர் ஆணா பெண்ணா என்று தீர்மானிப்பதற்கு உதவியாக இருக்கின்றது. அது மட்டுமல்ல வெகுகாலத்திற்கு முன்பே அழிந்து விட்ட பிரமாண்டமான டைனோசர்களுக்கு தற்போதைய பிரமாண்டமான பறவைகளான நெருப்புக்கோழி மர்றும் எமுள் எனப்படும் ஆஸ்ட்ரேலியப் பறவைக்கும் இடையே உள்ள தொடர்பை நிலைநாட்டவும் இந்த எலும்புத் திசு உதவியாக உள்ளது. டி ரெக்ஸ் டைனோசரின் எலும்பில் காணப்படும் வழக்கத்திற்கு மாறான திசு ஒரு மஜ்ஜை எலும்பாகும். இது இன்றைய பறவைகளில் ஒரு மெல்லிய நாள எலும்பாக உள்ளது.

 

இந்த எலும்புத் திசு இனப் பெருக்கத்துடன் தொடர்புடையது. உள்ளீடற்ற கால் எலும்பில் காணப்படும் இந்தத் திசு கடைசி முட்டை போடப்படும் வரை இருந்து விட்டு அப்புறம் மறைந்து விடுகின்றது. இந்தத் திருவை பறவையின் உடம்பு கிரகித்துக் கொள்கின்றது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தத் தற்காலிகத் திசு ஈஸ்ட்ரோகன் அளவு கூடுவதால் உருவாகிறது. மேலும் முட்டையின் தோடு உருவெடுப்பதற்குத் தேவையான கால்சியம் சத்தை வழஹ்குகின்றது. இத்தகைய நாள எலும்பு தற்கால பெண் பறவைகளிடம் தான் காணப்படுகின்றது. டைனோசர்க்கு நெருங்கிய சொந்தக் காரரான முதலையிடம் கூட இந்தத் திசு இயல்பாக வளர்ச்சியடைகின்றது. கோழி கவுதாரி போன்ற பறவைகளின் நாள எலும்புக்கும் டைனோசர் நாள எலும்புக்கும் ஒப்பிட முடியவில்லை. ஆகவே நெருப்புக் கோழி எமுஸ் போன்ற பறக்காத பறவைகளின் கால் எலும்புடன் ஒப்பிட்டு ஆராய்ந்தனர். அதில் இந்த ஒற்றுமை தெரிந்து டைனொசர் ஒரு பெண் தான் என்று விஞ்ஞானிகள் முடிவுகட்டினர்.

 

http://tamil.cri.cn/1/2005/07/07/This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.