அறிவியலின் புது அவதாரமான குளோனிங் தற்போது, பற்பல வடிவங்களில் வெளிப்படத் தொடங்கி விட்டது. அண்மையில், மனித மூளையின் செல்களில் சிறிதளவைப் பயன்படுத்தி, எலி ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதனுடைய நோக்கம், நடுக்குவாதம் என்னும் நரம்பியல் கோளாறுகளை குணப்படுத்த ஒரு முன்மாதிரியை ஏற்படுத்த முடியுமா என்று ஆராய்வது.

 

அமெரிக்காவின் சன்தியேகோவில் உள்ள சால்க் ஆய்வுக் கழகத்தைச் சேர்ந்த பிஃரெட் கேஜ் தலைமையிலான ஆராய்ச்சியாளர் குழு, பெருச்சாளியின் வயிற்றில் உருவாகி 14 நாட்களேயான எலிக்கருவின் மூளைக்குள் சுமார் ஒரு லட்சம் மனிதக்கரு தண்டு செல்களை ஊசி மூலம் செலுத்தி, சுண்டெலியை உருவாக்கியுள்ளனர். இவ்வாறு பிறந்த எலிகள் ஒவ்வொன்றிலும் 0.1 விழுக்காடு மனித செல்கள் உள்ளன. மனித செல்களையும், பிராணி செல்களையும் இணைப்பது சரிதானா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

 

எலிகளைப் பொறுத்த மட்டில், அவை மரபணு ரீதியில் மனித செல்களுடன் 97.5 விழுக்காடு ஒத்துப் போகின்றன. மேலும் புதிய பரிசோதனை மருந்துகளும், புதிய திசுமாற்ற சிகிச்சைகலும் மனிதர்களுக்குப் பாதுகாப்பானவை என்பதை நிரூபிக்க, இவ்வாறு மனித திசுக்களையும், பிராணித் திசுக்களையும் இணைக்க வேண்டியுள்ளது. இத்தகைய ஆராய்ச்சியில் கண்டுபிடிப்புக் காப்புலிகை கோரி 3 விஞ்ஞானிகள் விண்ணப்பித்துள்ளனர். ஒருவர் ஜோஸ் ஸிபெல்லி இவர் தனது கன்னத்தில் இருந்து செல்களை எடுத்து பசுவின் கரு முட்டைக்குள் செலுத்தி பரிசோதித்திருக்கிறார். இன்னொருவர் முயல் மற்றும் கோழிகளின் திசுக்களோடு, மனிதத் திசுக்களை கலந்து ஆராய்ந்துள்ளார். முடக்குவாதத்தால் நடக்க முடியாமல் கிடந்த மெருச்சாலியின் உடம்பில் மனித நரம்பு செல்களை ஊசி மூலம் செலுத்தி அதை நடக்கவைத்துள்ளனர் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

எது எப்படியோ!ஒரு பெண்ணின் வயிற்றில் எரி பிறந்து விடுமோ அல்லது ஒரு எலி மனிதக் குஞ்சை பிரசவிக்குமோ என்று எனக்கு பயமாக இருக்கிறது.

 

http://tamil.cri.cn/1/2006/02/27/This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.