காலநிலை மாற்றம், பு வெப்பமேறல், பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றம் இவையெல்லாம் நம்மிடையே பரவலாக அறிந்த விடயங்களாகிவிட்டன. பசும்பொருட்கள், பசுந்தயாரிப்புகள் என சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பொருட்களை, மின் கருவிகளை பயன்படுத்தும் அளவுக்கு பல நாடுகளில் இந்த புவி வெப்பமேறல் பிரச்சனைபற்றியவிழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

 

மறுபுறத்தில் எரியாற்றலாக பயன்படும் எண்ணெய் வளத்துக்காக இன்றும் கூட மோதல்கள். ஒரு காலத்தில் ஒரு லிட்டர் 10 ரூபாய், 15 ரூபாய் விற்ற பெட்ரோல், டீசல் இன்றைக்கு நம்மை பெருமூச்சு விடச்செய்கின்றன. எரிபொருட்களின் விலையேறினால் மற்ற பொருட்களும்தான் விலையேற்றம் பெறும். என்ன செய்ய? இது இப்படியிருக்க, அந்த எரிபொருளே கூட இன்னும் சில தசாப்தங்களில் "சட்டியில் இருந்தால்தானே அகப்பையில்" என்றாகும் நிலை. ஆக உலகமே இப்போது மாற்று எரிபொருளை, மாற்று எரியாற்றலை தேடிக்கொண்டிருக்கிறது.

 

காற்று, ஆதவனின் கதிர், நிலத்தடி வெப்பம் என மாற்று எரியாற்றலை பல வழிகளில் தேடிய மனிதன், கடலுக்கடியில் எண்ணெய் வளத்தைத் தவிர வேறு ஒன்றையும் எரிபொருள் தேவைக்கு பயன்படுத்த முடியும் என்று கண்டறிந்தான்.

நீரும், இயற்கைவாயுவும் ஒன்றாகக் கலந்த திட வடிவிலான ஒரு வகை கலவை, பனிக்கட்டி போன்ற படிகத்தன்மையுடன் கூடிய ஒரு பொருளை கடலடியில் கண்டறிந்தனர் ஆய்வாளர்கள்.

 

இது தொழில்நுட்ப ரீதியில் ஒரு பெரிய சாதனையாகவே கருதப்படுகிறது. இந்தச் சாதனையை குறைந்த செலவில் குறுகிய காலாத்தில் சீனா தனக்கும் உரித்தாக்கியுள்ளது. 8 ஆண்டுகால ஆய்வில், 50 கோடி யுவான் நிதித்தொகையில் இந்த் ஐயற்கை வாயு ஹைட்ரேட்களை கண்டறிந்த நான்காவது நாடாக சீனா மாறியுள்ளது.

 

அண்மையில் கண்டறிந்து, எடுக்கப்பட்ட இந்த இயற்கைவாயு ஹைட்ரேட் படிகங்களின் இரு மாதிரிகள் 99.7, 99.8 விழுக்காடு மீத்தேன் கலவையுடன் உள்ளன. அதாவது உலகின் தூய்மையான இயற்கைவாயு ஹைட்ரேட் படிக வளம் நிறைந்த பகுதிகளீல் ஒன்றை சீனா கொண்டுள்ளது எனலாம். கடலின் அடியில் மட்டுமே காணப்படும் இந்த் ஐயற்கை வாயு ஹைட்ரேட் படிகங்கள், அவ்வள்வௌ எளிதில் அகழ்ந்து எடுக்கப்படவும் முடியாது, அவ்வளவு எளிதாக பயன்பாட்டிலும் இறக்கிவிட முடியாது. பிறகு என்ன இயற்கை வாயு ஹைட்ரேட் படிகம் , வெங்காயம்? என்ற சலிப்பு நமக்கு ஏற்படலாம் ஆனால் இந்த வளத்தின் பயனை நெடுநோக்கு சிந்தனையில் பார்ப்பவர்களுக்கு அப்படியல்ல.

 

சீன நிலவியல் ஆய்வுக்கழகத்தின் துணைத் தலைமை இயக்குனர், சாங் ஹாங்டாவ் இந்த் அபணியில் சிக்கலானத் தன்மையை அறிந்தவராய், மெல்ல மெல்ல, கவனமாக இந்தப் பணியை மேற்கொள்ளவேண்டும் என்கிறார். வளர்ச்சியடைந்த நாடுகள் 2015ம் ஆண்டு வாக்கில் இந்த இயற்கை வாயு ஹைட்ரே படிக வளத்தை பயன்படுத்துவதாக கூறியிருக்க, சீனா எப்போது பயன்படுத்தும் என்று இப்போதைக்குச் சொல்ல முடியாது என்று அமைதியாக சொல்கிறார் சாங் ஹாங்தாவ்.

 

தற்போதைய முக்கிய பணி, சீனக்கடற்பரப்பில் இந்த இயற்கை வாயு ஹைட்ரேட் வளம் எவ்வளவு இருக்கிறது என்பதை கண்டறிவதாகும் என்று கூறும் சாங் ஹாவ்தாங்கின் கவனமான மனப்பாங்கிலும், அணுகுமுறையிலும் பொருள் இருக்கிறது. காரணம் இத்துறையிலான ஆய்வில் மற்ற 3 முன்னோடிகளான அமெரிக்கா, ஜப்பான், இந்தியாவைவிட சீனா பின் தங்கியுள்ளது. அமெரிக்கா ஜப்பான் தவிர இந்தியாவும் கூட இந்த வளத்தின் ஆய்வு மற்றும் தேடல் பணியில் குறிப்பிடத்தக்க அளவு நிதியை முதலீடு செய்துள்ளது.

 

2006ம் ஆண்டில் இந்துமாக்கடலிலான அகழ்வுப்பணிக்கு பல லட்சக்கணக்கான டாலர்களை இந்தியா செல்வழிக்கவேண்டியிருந்தது என்கிறார் சாங் ஹாய்ச்சி எனும் மூத்த அறிவியலாளர்.

 

அதிக பணம் செலவழித்து இந்த இயற்கை வாயு ஹைட்ரேட் வளத்தை அகழ்வு செய்யவேண்டும் என்பது தவிர, குறைந்த வெப்ப நிலையில், அதிக அழுத்ததில் உருவாகும் இந்த படிக வளத்தின் நிலைத்தன்மை குறைந்த அளவே என்பதும் சிக்கலான ஒரு விடயமே.

 

எரியக்கூடிய பனிக்கட்டி என்று அழைக்கப்படும் இந்த இயற்கைவாயு ஹைட்ரேட், உலகின் நிலக்கரி, எண்ணெய் மற்றும் இயற்கை வாயு வளங்களின் ஒட்டுமொத்த அளவைப்போல் இருமடங்கு இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.

 

ஆனால் தற்போதுள்ள எரிபொருட்களில் கரியமில வாயுக்களின் வெளியேற்றத்தை போல் இந்த எரியும் பனிக்கட்டியிலும் கரியமில வாயு வெளிப்படும். காரணம் ஹைட்ரேட் என்பது நீர் மூலக்கூறும், மீத்தேன் மற்றும் கரியமில வாயுக்களின் மூலக்கூறுகளும் பிண்ணிப்பிணைந்த ஒரு படிகமாகும். எனவே கடலுக்கடியிலேயே கரியமில வாயுவை பிரித்தெடுக்காமல் போனால் பயன்படுத்தும் போது தீவிர சுற்றுச்சூழல் மாடுபாடு ஏற்படும்.

 

தற்போது இயற்கை வாயுவின் விலை ஒரு கியூபிக் மீட்டர் 0.125 டாலர் என்றால் இந்த எரியும் பனிக்கட்டி எனப்படும் இயற்கைவாயு ஹைட்ரேட்ட் படிகத்தின் ஒரு கியூபிக் மீட்டர் விலை 1 டாலர். அதாவது 8 மடங்கு (7 மடங்கு விலை அதிகம்). ஆனால் காலப்போக்கில் இயற்கை வாயு, பெட்ரோல், நிலக்கரி எல்லாம் தீர்ந்து போனால் இவற்றின் மொத்த இருப்பில் இருமடங்குள்ள இயற்கை வாயு ஹைட்ரேட்களை பயன்படுத்துவதுவதைத் தவிர வேறு வழியில்லை.

 

இந்த உண்மை சுட்டெரிக்கவேதான் இந்த வளத்தை பற்றி மேலதிக ஆய்வுகளுக்கும், அகவுக்கும் இந்த வளத்தின் தொடர்புடைய தொழில்நுட்பத்தை பெற்ற நாடுகள் வரிந்து கட்டிக்கொண்டு கடலில் இறங்கியுள்ளன.

 

இன்னும் 70 ஆண்டுகளில் சுரண்டியெடுக்கப்படக்கூடிய அனைத்து எரியாற்றல் வளமும் தீர்ந்து போகும் நிலையில், இந்த எரியும் பனிக்கட்டியை நாடி, தேடி, ஓட்டி வரும் நிர்ப்பந்தம் எல்லா நாடுகளுக்கும் ஏற்படும்.

 

எனவே, இது தொடர்பான ஆய்வு மற்றும் மேம்பாட்டு நகர்வுகள் அத்தியாவசியாமிறன

 

http://tamil.cri.cn/1/2007/06/25/62@55876_2.htm