08072022ஞா
Last updateபு, 02 மார் 2022 7pm

பூமி-- 1800 களில் அமெரிக்க சிவப்பிந்திய தலைவரின் பார்வையில்.

இந்த பூமியே நமக்கு தாய். இந்த பூமியில் சம்பவிப்பவைகள் அணைத்தும் இந்த பூமித்தாயின் மைந்தர்களுக்கு சம்பவிப்பவைகளே. பூமி மனிதனுக்கு சொந்தமானதல்ல. மனிதன் தான் பூமிக்கு சொந்தமானவன்.நாம் அணைவரும் ஓன்று என இணைக்கும் விதமாக அணைவரது உடலிலும் ஓரே சிவப்பு நிற இரத்தம் தான் ஓடுகின்றது அதுபோல இப்பூமியிலுள்ள எல்லா பொருட்களுமே ஓன்றாக பிணைக்கப்பட்டுள்ளது.

மனிதன் இந்த வாழ்கை வலையை நெய்யவில்லை, அவன் அந்த வலைப்பின்னலின் ஓரு இழை மாத்திரமே. அவன் அந்த வலைப்பின்னலுக்கு செய்யும் யாவும் அவனுக்கே செய்து கொள்ளுகிறான்.

எங்கள் இறைவன் உங்களுக்கும் இறைவனே. இந்த பூமி இறைவனுக்கு மிகவும் விலையுயர்ந்தது. நாம் அதற்கு விளைவிக்கும் தீங்கு அதை படைத்தவன் மீது குவிக்கும் அவமதிப்பாகும்.

பிறந்த குழந்தை தனது தாயின் இதயத்துடிப்பை நேசிப்பது போல நாங்கள் இந்த பூமியை நேசிக்கிறோம். ஆகவே நாங்கள் இந்த பூமியை உங்களுக்கு விற்றால் நாங்கள் நேசித்தது போல நீங்களும் நேசியுங்கள். நாங்கள் எவ்வாறு பராமரித்தோமோ அதே போன்று பராமரியுங்கள்.

இந்த பூமியை அணைத்து குழந்தைகளுக்காகவும் பாதுகாத்துக்கொள்ளுங்கள். இறைவன் நம்மை எவ்வாறு நேசிக்கின்றாரோ? அவ்வாறு நீங்களும் இந்த பூமியை நேசியுங்கள்.


சிட்டேல்
சிவப்பிந்தி்ய தலைவர்.
1854 ஆண்டு அமெரிக்க ஜனாதிபதிக்கு எழுதியதாகக் கூறப்படும் கடிதத்திலிருந்து சில வரிகள்.


இந்த பூமியை அணைத்து குழந்தைகளுக்காகவும் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

 

 

http://maravalam.blogspot.com/2007/08/1800.html