''புத்துயிர் பெறும் சடங்கு" என்ற தலைப்பில் இந்தியாவிலுள்ள மத்தியப் பிரதேசத்தில் பஸ்தார் மாவட்டத்தில் தேவீகாவீன் என்ற கிராமத்தில் நடக்கும் சடங்கில் இளைஞர்கள், இளைஞீகள் கூடி, ஆடி விரும்பிய தனது ஜோடியைத் தெரிவு செய்து ஏழு நாள் ஒன்றாக இருப்பதும், பின் ஜோடி மாறி இருப்பதும் என ஒரு சடங்கில் ஈடுபடுகின்றனர். அங்கு ஆய்வு செய்த நிரஞ்சன் மஹான் அச்சமூகம் மற்ற சமூகத்தை விட அதிக ஒற்றுமையாக வாழ்கின்றனர் என்பதைக் கண்டுபிடித்தார். அத்துடன் பாலுறவு பற்றி மற்ற சமூகம் பார்ப்பதில் இருந்து வேறு விதமாகப் பார்க்கின்றனர் என்றும் தெரிவித்தார். (30.7.1997)34
இந்த நிகழ்வுகள் ஆதிகால வரைமுறையற்ற புணர்ச்சியின் எச்சங்களாக உள்ளது. இது இன்று மிதமாக ஆழ் கிராமங்களில் வாழ்வோரிடையேயும், காடுகளிலும்;, அதை அண்டி வாழும் பழங்குடிகளிடையேயும், மலையில் வாழும் ஆதிகுடிகளிடையேயும், அதாவது நாகரிகம் தொற்றிக் கொள்ளாத இடங்களில் வரைமுறையற்ற புணர்ச்சியின் எச்சச் சொச்சங்கள் நீடிக்கின்றன. இந்தோசீனா தீவுகளில் வாழும் நாகரிகம் எட்டாத பிரதேசங்கள், ஆப்பிரிக்காவில் நாகரிகத்தின் சுவடு படாத இடங்கள், தென் அமெரிக்காவின் சிவப்பிந்திய பழங்குடி மக்கள் வாழும் இடங்கள் என எங்கும் இன்று அதன் எச்சங்கள் அல்லது அதன் தொடர்ச்சியான வாழ்க்கை நீடிக்கின்றது.
அநேகமாக உடுப்பின்றி அல்லது அரைகுறை உடுப்புடன் அல்லது உடுப்புகளுடன் வாழும் இந்தச் சமூகம் கற்பு பற்றிய கோட்பாட்டை மறுக்கின்றனர் அல்லது அதை எல்லைப்படுத்துகின்றனர். இந்தக் கற்பு அறம் அற்ற அல்லது திருமணத்தின் பின் கற்பும் அல்லது ஓர் ஆணுடன் வாழும் காலம் மட்டுமான கற்பும் என்று பலதளத்தில் வாழுகின்றனர்.
இந்தச் சமூகத்தில் ஆண் பெண் முரண்பாடுகள் குறைவானதாகவும், அதிக ஒற்றுமையாகவும் இருப்பது அறியப்படுகின்றது. வேலைகளில் ஏற்பட்டுள்ள பிரிவினை ஆணாதிக்க ஒடுக்குமுறை வடிவமின்றி காணப்படுகின்றது. ஏனெனின் சந்தைப் பெறுமானத்தில் நாகரிக உலகம் தீர்மானமாகின்ற போது அந்தக் காட்டுவாசிகளின் உழைப்பைப் பெறுமானம் அற்றதாக்குவதால் ஆண் பெண் உறவில் தனிச்சொத்துரிமைக் கண்ணோட்டம் சார்ந்து தோன்றும் ஆணாதிக்கம் அற்றுப் போயுள்ளது. ஆண் பெண் இடையிலான வேலைப் பிரிவினை இயற்கையின் மீதான மனித உழைப்பின் வளர்ச்சியுடன் இயற்கையாக ஏற்பட்ட போது அது ஆணாதிக்கத் தனிச் சொத்துரிமையால் சீரழிந்து விடவில்லை. மாறாக அதன் கூறுகளின் தொடக்கங்களே நீடிக்கின்றது. உலகமயமாதல் சந்தைப் பெறுமானத்தை இவர்களின் உற்பத்தி பெறுமதி அற்றதாக்குவதால் ஆணாதிக்கம் ஊடுருவுவது மிகக் கடினமானதாக உள்ளது. இந்தச் சமூகத்தில் பாலியல் நடத்தைகளை அணுகும் போது நாகரித்தின் கேவலங்களை ஒப்பிட்டுக் காணக்கூடாது. நாகரிகச் சமூகத்தில் வரைமுறையற்ற விபச்சாரப் புணர்ச்சியையும், இந்த மக்களின் புராதானக் கம்யூனிச எச்சச் சொச்ச வரைமுறையற்ற புணர்ச்சியையும் வேறுபடுத்தி அணுகுவது அவசியமாகும். இதைப் பலர் காணத் தவறுவதும், பின்னால் அவர்களை அணுகுவதும், சிதைப்பதும் தவறான மதிப்பீடாகும். அந்த மக்களின் இயல்பான காதல், இயல்பான வாழ்க்கை மிகவும் முன்னேறியது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த மக்களிடையே இன்று கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களும், ஏகாதிபத்தியப் பல்வேறு பிரிவுகளும் தமது அக்கறையைக் காட்டுகின்றனர். மனித இன ஆய்வாளர்கள் ஆய்வு என்ற பணிக்கு அப்பால் இந்தச் சமூகத்தைச் சிதைப்பதைப் பெரும்பாலானோர் எதிர்க்கின்றனர். மருத்துவ உதவி செய்யும் தனிப்பட்ட மனிதர்கள் சிலரும் இதே கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளனர்.
ஏகாதிபத்திய அமைப்பின் பிரதிநிதிகளும் அவர்களின் தொண்டர் அமைப்புகளும் இந்தச் சமூகத்தைப் பூர்சுவா கண்ணோட்ட எல்லைக்குள் கொண்டு வருவதன் மூலம் அற்ப ஆசைகளைக் காட்டி ஒட்டச் சுரண்டவும், அம்மக்கள் புரட்சியில் பங்கு பெறுவதைத் தடுக்கவும் அம்மக்களுக்குள் காலைப ;பதிக்கின்றனர். இந்த மக்களிடையே இருக்கும் இயல்பான பாலியல் வடிவங்களை ஏகாதிபத்தியக் கண்ணோட்டத்தில் மாற்ற பூர்சுவா கண்ணோட்டத்தைப் புகுத்துகின்றனர். அவர்களின் இயற்கை வாழ்க்கையை, கண்டுபிடிப்புகளை அபகரித்துச் செல்வதன் மூலம் அதை ஆய்வுக்கூடங்களில் பரிசோதித்து, கோடிகள் சம்பாதிக்க அவர்களின் வாழ்வுமுறையைச் சிதைக்கின்றனர். மறுபுறம் அம்பலப்பட்டு வரும் மதநிறுவனங்கள் இங்கு தமது மத நடவடிக்கையை விரிவாக்கி அவர்களின் ஜனநாயகப்பூர்வமான வாழ்க்கையைச் சிதைத்து வருகின்றனர்.
சில கம்யூனிஸ்ட் புரட்சிகரக் குழுக்கள், இந்த மக்களிடையே தலையிடுகின்றபோது சில அடிப்படைத் தவறுகளை இழைக்கின்றனர். வெளியில் இருந்து இந்த மக்களிடம் செல்லும்போது நாகரிகச் சமூகத்தின் வடிவங்களை முன்னேறியதாகக் காண்பதும், புகுத்துவதும் நிகழ்கின்றது. உடுப்பு அணியாத வாழ்க்கையை நாகரிகத்துக்குப் புறம்பானதாகக் காண்கின்றனர். அவர்களின் பாலியல் வடிவத்தை ஏகாதிபத்தியப் பாலுறவு வடிவமாகத் தவறாக அடையாளம் காண்பதும் நிகழ்ந்து விடுகின்றது. இதில் இருந்து அவர்கள் மத்தியில் சில சீர்திருத்தத்தைச் செய்யும் போது அவர்களின் சரியான பக்கத்தை அழித்துவிடுவதும் நிகழ்ந்து விடுகின்றது.
வறுமைக் கோடு பற்றிய ஏகாதிபத்திய வரையறையை எடுப்பின் ஏகாதிபத்திய நுகர்வு எல்லையில் வைத்து மதிப்பிடுவது ஏழைக்கான எல்லையாகின்றது. ஆனால் அடிமட்டக் கிராமத்தில் அவர்களின் சுயத் தேவையை உள்ளடக்கிய வாழ்க்கை வறுமைக் கோட்டைத் தகர்க்கின்றது. முன்னாள் கம்யூனிச நாடுகளில் மேற்கத்திய நாகரிகத்தைக் காட்டியே கிளர்ச்சியைத் தூண்டக் கூடியதாகப் பிரச்சாரம் கட்டமைக்கப்பட்டது. நுகர்வின் எல்லை எல்லாவற்றையும் தீர்மானிப்பதில்லை. வறுமைக் கோட்டை எடுக்கும் போது சுயப் பொருளாதாரச் சமூகத்தின் முழுநிறைவான வாழ்க்கையைப் புரிந்து கொள்ள கம்யூனிஸ்ட்டுகள் கற்றுக் கொள்ளவேண்டும். ஒரு சமூகத்தின் அத்தியாவசியத் தேவையைக் கோருவதும், ஆடம்பரத்தை எதிர்ப்பதும் என்ற இரண்டு பண்புகளை அடையாளம் காண வேண்;டியுள்ளது.
தாய்வழிபாடு கொண்ட நரிக்குறவர்கள் அதாவது தோடர், கோத்தர், இருளர், பணியர், படகர் பற்றிய குறிப்பில், ''வயது வந்த ஆணோ பெண்ணோ தனித்து வாழக் கூடாது. இதற்கு வயது வரம்பு தடுப்பதில்லை. ஒருவரின் உதவியுடன் மற்றவர் வாழும் சமூகத் தன்மை காணப்படுகின்றது. குழந்தை மணம், விதவை மணம், விவாகரத்தும், மறுமணமும் என பல தன்மைகள் காணப்படுகின்றன."66
ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவில் வந்து குடியேறிய தமிழ்ப் பழங்குடியான இருளப்பள்ளர் என்ற வெட்டக்காடு இருளர் பற்றிய ஆய்வில், ''இங்கு திருமணம் இருவரின் சம்மதத்துடன் நடக்கும் காதல் திருமணமாகவே உள்ளது. பெற்றோர் தீர்மானிப்பது இல்லை. இங்கு திருமணம் செய்யும் ஆண், பெண் வீட்டில் ஆறு நாள் தங்கி, பெண்ணின் தாய் - தந்தையின் மனம் உவக்கும் வகையில் நடந்து காட்ட வேண்டும்;. பெற்றோரின் விருப்பம் இல்லாவிட்டாலும் அல்லது வேறு வழியிலும் ஆணும் பெண்ணும் கூடி வாழ்ந்து பிள்ளை குட்டியுடன் வாழும் காலத்தில் பெரியவர்களின் ஆசி கிடைத்தால்தான் திருமணம் நடக்கும். இங்கு பெரியவர் ஆசி இல்லை எனினும் கூடிவாழ முடியும், ஆனால் குடும்பமாக அழைக்கப்படமாட்டாது. கணவன் இறந்தால், கணவனின் சகோதரன் அல்லாத வேறு ஆண்களைத் திருமணம் செய்யமுடியும். அது போல் விவாகரத்து பெற்று வேறு திருமணம் செய்து கொள்ளவும் முடியும்;"66
நீலகிரியில் வாழும் 33 சிற்றூர்களில் உள்ள இருளர் வாழ்வில், ''ஓர் ஆணுடன் சேர்ந்து வாழ்வதா? அல்லது பிரிந்து செல்வதா? என்பது பெண்ணின் விருப்பத்திற்குட்பட்டது. திருமணம் எந்த ஆடம்பரமுமின்றி நடக்கும்;. இங்கு விதவைகள் திருமணம் தடையேதுமின்றி சாதாரணமாக நடக்கின்றது. இங்கு பூப்பெய்திய பெண் திருமணத்துக்கு முன் ஆண் வீடு சென்று ஓராண்டு வாழ்வதுடன் அக்காலத்தில் சேகரிக்கும் பணத்தைக் கொண்டு திருமணத்தை அவர்கள் செய்கின்றனர். இங்கு திருமணத்தின் முன்பே பிடிக்காவிட்டால் பிரிந்து செல்வது எல்லாம் சாதாரணமானது."66 இது போன்று தமிழ் நாட்டுக்குள் மட்டும் பல்வேறு இனப் பிரிவுகளின் திருமணம் மற்றும் பெண்களின் வாழ்வுகளை ஒட்டிய பல தரவுகளை இந்நூல் கொண்டுள்ளது.
இதேபோல் நாம் பழமையான இயற்கையுடன் ஒன்றி வாழும் சமூகத்தில் உள்ள ஜனநாயகப் பூர்வமான எல்லா இயற்கையான மனித நாகரிகத்துக்குட்பட்ட அனைத்தையும் பாதுகாப்பதுடன் அதைத் தத்துவ மயப்படுத்தவேண்டும்;. அதை அவர்களுடைய வாழ்வின் இலட்சியங்களாக்கவேண்டும். இதை அறிவியல் பூர்வமானதாக வளர்த்தெடுக்கவேண்டும். நாகரிகத்தின் அவமானத்தை அம்பலப்படுத்த வேண்டும். நாகரிகத்தின் அறிவியல் பூர்வமான மனித முன்னேற்றத்துக்குத் தேவையானவற்றை அவர்களுக்குப் புகட்டவேண்டும். அதே நேரம் அவர்களின் ஜனநாயகப் பண்பாட்டை நாகரிகச் சமூகத்துக்கு மாற்றாக முன் வைக்க வேண்டும். இதுதான் மக்களிடம் இருந்து கற்று மக்களுக்கே மீள அரசியல் மயப்படுத்தும் அரசியலாகும்.
வெளியில் இருந்து அந்த மக்களுக்குள் செல்லும் ஒருவன் அந்தப் பெண்களின் அரை நிர்வாணத்தை எப்படிப் புரிந்துகொள்வது? இது ஏகாதிபத்திய நாகரிகத்தில் அதற்கேயுரிய ஆணாதிக்கப் பார்வையில் வக்கிர எல்லைக்குள் பெண்ணை நுகரக் கோருவதே. ஆனால் அந்தச் சமூகத்தில் அப்படியல்ல. அது இயற்கையாகக் குழந்தைக்குப் பால் கொடுக்கும் தாய்மையின் ஓர் அங்கம்தான். இது பழமையான சமூகத்துக்கும், நாகரிகச் சமூகத்துக்கும் இடையே உள்ள துல்லியமான வேறுபாடு. வெளியில் இருந்து செல்லும் ஒரு மனிதன் நாகரிகத்தில் இருந்து அதை நோக்குவது எதார்த்தமாக இருப்பது சகஜம். ஆனால் இதை அந்த மக்களின் கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ளவும், அதைத் தன்னுள் வளர்த்தெடுப்பதும் அவசியம்;. இதை அம்மக்களின் கண்ணோட்டத்தில் சமூகமயப்படுத்த உழைப்பது அவசியம்;. மாறாக ஏகாதிபத்தியக் கண்ணோட்டத்தில் புரிந்து கொண்டால் தவறான வழியில் அம்மக்களைச் சிதைத்து ஏகாதிபத்திய ஆணாதிக்கக் கண்ணோட்டத்தைப் புகுத்தவே வழி அமைக்கும்.
மேலே குறிப்பிட்ட சம்பவத்தில் அப்பெண்கள், அவ்வாண்கள், அச்சமூகம் இதை ஒரு பெரிய விடயமாக எடுப்பதில்லை. இயல்பான, இயற்கையான நிகழ்வாகக் காண்கின்றனர். ஆனால் இந்தியா டுடே இதைப் பாலியல் நுகர்வாக, அனுபவிப்பாக, வக்கிரமாக இதை வாசகர்களுக்கு இரசிக்கக் கற்றுக் கொடுக்கின்றது. அந்த ஆண் பெண்ணுக்கிடையில் கற்பு பற்றிய வரைவிலக்கணத்தையோ, ஆணாதிக்கச் சமூகக் கண்ணோட்டத்தையோ ஏற்பதில்லை. ஏகாதிபத்திய நாகரிகக் கலாச்சாரச் சீரழிவுகள் இச்சமூகத்தில் ஊடுருவிய போதும் ஒரு தரப்பாரின் நாகரிக எதிர்ப்பை மீறி இது இயற்கையாக, இயல்பாக நிகழ்கின்றது. இது இந்தியாவில் பல பாகங்களில் நாகரிகம் எட்டாத இடங்களில் இருப்பதை நான் விவாதங்கள் மூலம் தெரிந்து கொள்ளமுடிந்தது.
வரைமுறையற்ற புணர்ச்சி பற்றி ஏகாதிபத்தியக் கண்ணோட்டத்தையும், இந்த இயற்கையான வரைமுறையற்ற புணர்ச்சியையும் வேறுபடுத்தி இனம் காணவேண்டும்;. இதில் இயற்கையானதைப் பாட்டாளிவர்க்கம் பாதுகாக்க முன்னெடுக்க முனையும் போது அது ஒருதாரமணத்துக்குப் பதில் (பெண் மட்டும் காதலிக்கும் திருமணங்கள்) வளர்ச்சி பெற்று ஆண் பெண்ணின் சுயமான, இயல்பான நீடித்த இருதார மணத்தை ஆண் - பெண் இணைவை வலுப்படுத்தும். இது சுயநிர்ணயத்தைக் கொண்ட பரஸ்பரம் காதலிக்கவும், வாழவும், விலகவும் மனிதச் சமூகம் தன்னை ஜனநாயகப்படுத்தி அடுத்தக் கட்டத்திற்கு நகர்ச்சி பெறும்.