பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் ஆரம்பிக்கப்பட்ட காங்கிரசு கட்சியை, வெளையர்கள் உறுப்பினராக இருந்த அக்கட்சியை ‘ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாரம்பர்யம்’ மிக்க கட்சி என்று போலிகள் சொல்வது ஏன்? அதுவும் காங்கிரசை எதிர்த்து நடந்த பொதுக்கூட்டத்திலேயே இப்படிப்பட்ட காங்கிரசு ஆதரவுக் கருத்துக்களைப் பேசுவதற்குக் காரணம் என்ன?

 

வெள்ளை ஏகாதிபத்தியத்துக்கு எதிராக நடைபெற்ற தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதற்காக, அவர்களுக்கு ஒரு போலியான தலைமையை காங்கிரசு கட்சி எனும் பெயரில் தனது கைக்கூலிகளைக் கொண்டு உருவாக்கியது பிரிட்டிஷ் காலணிய அரசு. காங்கிரசும் போராடுகின்ற மக்களுக்குத் தலைமைதாங்குவதாகச் சொல்லிக் கொண்டு அப்போராட்டங்களைச் செயலிழக்கச் செய்தது. இது அக்கட்சிக்காரனுக்கே தெரிந்த விசயம். அப்படியிருக்கையில் இவர்கள் இவ்வாறு திரித்துப் பேசவேண்டிய அவசியம் என்ன வந்தது?

ஏகாதிபத்திய எதிர்ப்புச் சிங்கம் தியாகத் தோழன் பகத்சிங் தூக்கிலிடப்படுவதற்குத் துணைநின்ற துரோகி காந்தியும் அவர் தலைமையிலான காங்கிரசையும், ஏகாதிபத்திய எதிர்ப்பளர்களாகச் சித்தரிக்க வேண்டிய நிர்பந்தம் இவர்களுக்கு வரக் காரணம் என்ன?

ஒருவேளை ஜவஹர்லால் நேரு, மவுண்ட்பேட்டன் பிரபுவின் மனைவியோடு அந்தரங்க உறவு கொண்டிந்தாரே அதைத்தான் போலிகம்யுனிசதலைவர் டி.ராஜா ஏகாதிபத்திய எதிர்ப்பு என்று சொல்லியிருப்பாரோ?!

ஏகாதிபத்திய கைக்கூலித்தனம் என்பதில் ‘மகாத்மா’காந்திக்கும் சோனியாகாந்திக்கும் உள்ள வேற்றுமைதான் என்ன?

காங்கிரசையும் காந்தியையும் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களாக வருணித்து இவர்கள் ஏன் இவ்வாறு போலிச்சித்திரம் தீட்டவேண்டும்? காரணம் இருக்கின்றது.

அப்படிப் பேசினால்தானே விடுதலைப் போராட்ட காலத்தில் காங்கிரசின் காலடியில் இவர்கள் புரட்சி செய்ததன் நியாயம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளும்படியான தோற்றத்தை உருவாக்க முடியும். துரோகி காந்தியை இன்றுவரை இவர்கள் ஆதரிப்பதற்கான காரணமும் புனிதப்படும். அதற்காகத்தான் காங்கிரசு கட்சியை இவர்கள் இவ்வாறு புகழ்ந்து தள்ளுகிறார்கள்.

அனுசக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பதாக உதார் விட்டுக் கொண்டு இதுநாள் வரை காங்கிரசை மிரட்டி வந்த இவர்கள், காங்கிரசு கட்சி மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொள்வதற்கான கால அவகாசத்தை அள்ளி வழங்கியது ஏன்? மாற்று ஏற்பாடுகளுடன் ஆட்சி தொடர்வதற்கான ஏற்பாடுகளையும் அனு ஒப்பந்தம் நிறைவேறும் வகையிலுமான ஒரு சூழலைத் திட்ட மிட்டே உருவாக்கிவிட்டு, காங்கிரசு ஆட்சிக்கு ஆதரவு வாபஸ் என்று முழங்குவது போன்ற போலிகம்யூனிஸ்டுகளின் கீழ்த்தரமான அரசியலை என்னவென்பது?!

‘மழை விட்டாலும் தூவானம் விடாது என்பார்கள்’. அதுபோலத்தான் அனுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்து ஆட்சியைக் கலைத்தபோதிலும் “வரவிருக்கும் தேர்தல் முடிவுகளுக்கு ஏற்ப காங்கிரசுக்கு ஆதரவளிக்கும் நிலை வந்தால் நிச்சயம் ஆதரிப்போம்” என்கிறார் அக்கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சீத்தாராம் யெச்சூரி.

இதுபற்றிய சில ருசிகர தகவல்களை தொடர்ந்து அடுத்த பதிவில் பார்ப்போம்.

தோழமையுள்ள,
ஏகலைவன்.