12052021ஞா
Last updateச, 09 அக் 2021 9am

ரத்தப் பெருக்கை தடுக்கும் கோவைக்காய்

கோவைக் காயை தொண்டைக் காய் என்று சொல்வதும் உண்டு. இது உடம்புக்கு குளுமை செய்யும். கபத்தை ஒழிக்கும். இதை பருப்புடன் கலந்து கறி, கூட்டு, சாம்பார் தயாhpக்கலாம். சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும். கோவைக்காய் பித்தம், ரத்தப் பெருக்கு, வாயு, வயிற்றில் உள்ள பூச்சி ஆகியவற்றுக்கெல்லாம் முடிவு கட்டும் நல்ல மருந்தாகும்.

கோவைப்பழம் கபத்தை உண்டாக்கும். சீக்கிரத்தில் சீரணமாகாது. ஆனால் மூச்சு இரைத்தல், வாந்தி, வாய்வு ரத்த சோகை, பித்தம், காமாலை முதலான பிரச்சினைகளை குணப்படுத்தும். கடிகளால் ஏற்பட்ட காயங்களின் மீது கோவை இலையை அரைத்து வைத்துக் கட்டினால் புண் விரை வில் ஆறும்.


கோவை இலைச் சாறு, பித்தம், பாண்டு, ஷயம், மூல நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன் படும். கரம் மசாலா அல்லது உஷ்ணத்தைத் தரும் மருந்துகள் கோவைக்காயால் ஏற்படும் தீமைகளுக்கு நல்ல மாற்றhகும்.

http://eegarai.blogspot.com/