ன்று நம்மீது கவிந்திருக்கும் அரசியற் சதிகளுக்கு உடந்தையாக இருக்கும் தமிழ் அரசியல்வாதிகளும் அவர்களின் சேவகத்தால் பயன் பெற முனையும் ஊடகங்களும் நம்மக்களை இன்னும் அரசியல் அநாதைகளாக்கும் முயற்சிகளைப் புலிப்பாணியிலேயே முன்னெடுப்பதால் நாம் இத்தகைய மக்கள் விரோத ஊடகங்களைத் தினமும் அம்பலப்படுத்தியே வந்துள்ளோம்.

மக்களின் அடிப்படை வாழ்வு பாதாளத்தில் வீழ்ந்து, உயிர்வாழும் எந்த ஆதாரமுமின்றி மக்கள் படும் துயரமானது வெறும் வார்த்தைகாளால் வர்ணிக்க முடியாதவை.இத்தகைய கொடும் வாழ் சூழலில் மக்கள் கிடந்துழல, அவர்களுக்குத் தனிநாடு-சுதந்திரம்-விடுதலை,அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதாகப் புலிகளும்-புலிகளால் பாதிக்கப்படும் மக்களையும் அவர்களின் அடிப்படை ஜநாயக உரிமைகளைப் பாசிச இலங்கை-இந்திய அரசுகளோடு இணைந்து,அவர்களின் தயவோடு மக்களை விடுதலை செய்வதாகவும்,மக்களின் அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்காகப் போராடுவதாகவும் பூச் சுத்தும் இந்தப் பொய்யான கயமைவாதிகளும்(தேனீ,ரீ.பீ.சீ.,ஆனந்தசங்கரி,டக்ளஸ்,கருணா  

குழு,ஈ.என்.டி.எல்.எப்.,புளட்,ஈ.பீ.ஆர்.எல்.எப்,ரெலோ போன்ற அராஜகக் கும்பல்கள்) இலங்கை மக்களின் அடிப்படை வாழ்வாதரங்களோடு மட்டும் விளையாடவில்லை.மாறாகத் தேசத்தின் இறைமையுடனும் அந்தத் தேசத்துள் உயிர்வாழும் உழைக்கும் மக்களின் அனைத்துவகை உரிமைகளுடனும் தமது அரசியல் இலாபங்களைக் கூட்டிக் கழித்து வருகிறார்கள்.இவர்கள் கூறும் கருத்துச் சுதந்திரமென்பது தமது இலக்கை அடைய முனையும் கருத்துக்களைச் சொல்லக் கூடிய ஒரு ஊடகச் சுதந்திரத்தையே.


இத்தகைய சுதந்திரத்தைப் புலிகள் தமது இயக்க நலனின் மதிப்பீடுகளால் சிதைக்கும்போது, அதை நிறுத்தித் தமது இயக்கங்களின் நலனை முதன்மைப் படுத்தும் பிரச்சாரங்களை மட்டும் முன்னெடுப்பவர்கள் தம் இலக்கை அடைவதற்காகவே பாதிக்கப்படும் மக்களின் உரிமைகளைக் கைகளில் எடுத்து வேசம் கட்டுவதென்பது இன்றைய பொழுதில் உலகம் அறிந்த விடையமாகும்.
இதை உறுதிப்படுத்தும் இன்னொரு நிலையைக் கீழ் வரும் வாசகர் விமர்சனம் உறிதிப்படுத்தும்.

வாசகர் ஒருவர் எமக்கு அனுப்பிவைத்த தனது கருத்துக்களை நாம் உங்கள் பார்வைக்கு முன் வைக்கின்றோம்.

தோழமையுடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்
17.05.2007




சாரணியன் எழுதிய பார்வையற்ற குழந்தையிடம் துப்பாக்கியா? என்ற விமர்சனத்திற்கு சில குறிப்பு எழுத வேண்டும் என்ற நிலையில் சில குறிப்பை எழுத முனைகின்றேன்.


ஒவ்வொரு வர்க்கத்திற்குப் பின்னாலும் ஒவ்வொரு வர்க்க நலன் இருப்பதாக ஏற்றுக் கொள்ளும் நீங்கள் வர்க் நலனை ஐக்கியப்படுத்தவே அல்லது வர்க்க நலனை முதன்மைப்படுத்தும் நிலைப்பாட்டையோ உங்களின் விமர்சனத்தில் காணமுடிகின்றதா என வினா எழுப்ப வேண்டியிருக்கின்றது


நீங்கள் குறிப்பிடும் மூன்று பிரிவினர்களாக


1. புலிகள்

2. புலியை எதிர்ப்பவர்களின் அணி

3. தமிழ் அரங்கம் சிறிரங்கன் ஆகியோரின்தளங்களே பிரதானமானவையாக இருக்கின்றன.


இந்தத் தளத்தில் குறிப்பாக புலிகளின் அல்லது அவர்களின் எதிர்ப்பாளர்களின் நிலைப்பாடு பற்றி இங்கு கருத்துக் கூறுவது அவசியம் அற்றது ஆனால் மார்க்சீய புத்தகத்தில் உள்ள கருத்துக்களை பொறுக்கியெடுத்து வைத்திருப்பவர்கள் எளிமையாக மக்களுக்குச் சேரக் கூடிய வகையில் சேர்க்க முடியாதவர்கள்,மக்களையோ,தனிநபர்களையோ அணிதிரட்ட முடியாதவர்கள் என கூறியுள்ளீர்கள்.


இந்த நிலையை என்பது உலகில் உள்ள பொதுவான நிலைகள் தான் ஊடகத்தில் இருப்பவர்கள் இருக்கின்ற வர்க்கச் சமூகத்தின் படைப்புக்கள் அதற்கேதான் சேவகம் செய்ய வளர்க்கப்படுகின்றனர். இந்த நிலையில் இருந்து அதவாது எழுத்து வடிவத்தில் உள்ள குறைபாட்டைத் முதன்மைப்படுத்தும் நீங்கள். ((method) அணுகுமுறை பற்றிய பிரச்சனையை முதன்மைப் படுத்தி அவர்களின் தத்துவார்த்த பிரச்சனை பற்றிய நிலைப்பாட்டிற்கு தகுந்த பதிலை கொடுக்காது அவர்களை உங்கள் எழுத்தாற்றல் மற்றும் உங்களிடம் உள்ள ஊடக பலத்தின் மூலம் நீங்களும் மக்கள் மத்தியில் இருந்து அன்னியப்படுத்துகின்றீர்கள்.


தத்துவார்த்த நிலையில் இருந்து உங்களால் அவர்களின் நியாயத்தை புரிந்து கொண்டு அவர்களை மக்களின் (புலிகளுக்கு எதிராக மாத்திரம் அல்ல) "ஒருங்கிணைப்பதில்,ஒருங்கிணைத்து செயலாற்ற வேண்டிய முக்கிய காலகட்ட"மென கருதும் நீங்கள் புலிகளுக்கு எதிரி என்பதற்காக புலிகளின் படைகளில் மூளைச்சலவை செய்து பலிக்கடாக்கலாக்கப்படும் உழைக்கும் வர்க்கத்தின் வாரிசுகளை கொல்வதற்கு துணைபோகும் குழுக்களான EPRLF, EPDP, TULF, PLOT, ENDLF, TMVP போன்றவற்றின் ஒடுக்குமுறையை இனபேதமற்று மேற்கொள்ளும் ஆழும் வர்க்க அரசாங்கத்திற்கும் அரசை பாதுகாக்கும் அரச இயந்திரத்திற்கு (இராணுவம், நாடாளுமன்றம்) போன்றவற்றில் அங்கம் வகித்துக் கொண்டு செயற்படும் செயற்பாட்டிற்கு துணை போகும் படி கேட்கின்றீர்கள்.


மார்க்சீயம் என்பது அரசு என்றும் போதே அடக்குமுறையத்திரம் என்றுதான் போதிக்கின்றது. ஆக அரச யத்திரத்தில் அங்கம் வகிக்கும் எவரும் உழைக்கும் வர்க்கத்தின் பிரதிநிதிகள் எனக் கூறிக் கொள்ள தகுதியற்றவர்கள் இது JVP போன்ற கட்சிக்கும் பொருந்தும்.


இங்கு அணுகுமுறை சம்பத்தப் பட்ட பிரச்சனை என்பது வேறு தத்துவார்த்த நிலைப்பாடு என்பது வேறு. இதில் மாற்றுக் கருத்துக்கு இடம் கொடுக்க வேண்டும் என்பதில் எவ்வித கருத்து பேதமும் இல்லை. கருத்தை கருத்தால் வென்றெடுக்க அல்லது அதனை எதிர்க் கொள்ள தாங்கள் கூறுகின்ற எந்த தளமும் இடம் கொடுக்கவில்லை.

மார்க்சீய நிலையில் அரச யத்திரத்தை ஆதரிப்பவர்கள்; மாற்று ஆட்சியாளர்கள் உழைக்கும் மக்களுக்கு விரோதமான கருத்துக் கொண்டவர்களை தமது இணையத்தில் போடாதிருப்பதற்கு நியாயம் கூற முடியும். ஆனால் கருத்தை கருத்தால் சந்ததிக்க வேண்டும் எனக் கருதும் நீங்கள் உங்கள் இணைத்தில் சிறிரங்கனின் அல்லது தமிழ் அரங்கத்தின் இணைப்பபை உங்களிடம் தளங்களில் இணைப்புக்களை இட உங்கள் சிந்தனை இடம் கொடுக்க வில்லை. ஆக நீங்கள் எதிர்ப்பது http://www.srisagajan.blogspot.com/ , http://www.tamilcircle.net/ அல்லது அவர்களின் தத்துவார்த்த நிலைப்பாட்டையா? ஆக தத்துவ நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்வீர்கள் என்றால் உங்களிடம் உள்ளது பகை முரண்பாடு அல்ல மாறாக நேர முரண்பாடுதான் இருக்கும். ஆனால் தேனி, ரிபிசி போன்றவை முன்வைப்பவை தம்மை மீண்டுமொருமுறை இன்னுமொரு எசமானர்களுக்கு அடிமையாக இருப்பதற்கு சேவகம் செய்பனவாக இருக்கின்றது.

P/S: பொருத்தமில்லாத பகுதிதான் ஆனாலும் இந்த விமர்சனம் மற்றவர்களும் பார்க்கப்பட வேண்டும். இதனால் இதில் பதிவிடுகின்றேன். இதனை தேனிக்கும் அனுப்பி வைத்துள்ளேன் இதனை அவர்கள் பதிவிடமாட்டார்கள் எனினும் இருநாட்கள் சென்ற பின்னர் இதனை பதிவில் இடுங்கள்