04232021வெ
Last updateசெ, 20 ஏப் 2021 6pm

இசைக்கும் பகிரதிக்கு அரங்கேற்றம்!

சை, வாழ்வின் அதீத அற்புதத் தாகம்!

உழைத்தோய்ந்த மானுடம் தனது களைப்பைப் போக்குவதற்காகப் பாடிப் பாடித் தன் மனதின் சுமைகளைக் களைந்து, வாழ்வை இரசித்தது-இலயித்தது. பின் ஆன்ம வலுவைத் தக்கவைத்தது.இந்த இலயிப்பின் இயல்பான பரிணாமம் மனித ஆற்றலை மேம்படுத்தும் ஆன்ம வலுவை-மனோ வலுவை மானுட வளர்ச்சிப் போக்கில் தோற்றுவித்தது.இசையும்,கலையும் உழைப்பின் விருத்தியென்பதும்,அது உழைப்பாளர்களின் தேட்டம் என்பதும் வரலாற்றுண்மையாகும்.மானுட வளர்ச்சிப்போக்கில் இசையும,; கலையும் அற்புதமான காரியத்தை மனித அக வளர்ச்சியில்-அறிவு வளர்ச்சியில் ஆற்றியுள்ளது.

"சிறார்களைப் பாடசாலைக்கு அனுப்பி வைப்பதற்கு முன்,
இசை படிப்பதற்கு அனுப்பி வையுங்கள்." என்று ஜேர்மானிய இசைப் பேராசான் மொசாட் குறிப்பிட்டான்.


இது முற்றிலும் உண்மையானது!


இசையும் நடனமும் பாரத வழித் தோன்றில்களான நமக்கு "இரண்டு கண்களுக்கும் சமமாகக்" கண்டுணரப்படுகிறது.இசைத்திலின் அதீத இலயிப்பு,அறிவியில் மனதின் எழிச்சியோடு மனித உள வளர்ச்சியைத் தூண்டுவதை அன்றைய நமது ஞானிகள் உய்துணர்ந்தார்கள்.இந்த உணர்தலின் வெளிப்பாடே ஆத்மீக வளர்ச்சிப்பாதையில் அற்புதமான தேவார-திருவாசகப் பாடல்களாக நமது வரலாற்றோடும் வாழ்வோடும் இறை வணக்கமாகத் தொடர்கிறது.இந்த விந்தை மிகு நிகழ்ச்சி தற்செயலானது அல்ல.மக்களின் மனோ வளர்ச்சியின் உச்சபச்ச விருப்புறுதியே இதைத் தீர்மானிக்கிறது.இத்தகையவொரு சூழலில் நாம் கேட்டும்,இலயித்தும்-இரசித்தும் உய்துணரும் இசை நம்மை உருவாக்கி சமூகத்தில் வலுவான மனிதர்களாக்குவதை இன்றைய நவீனக் கணிதத்தின் வாயிலாக நிரூபிக்க முடியும்.


இசையினதும்,நாட்டியத்தினதும் வாழ்வியில் முக்கியத்தை நம் முன்னோர்கள் இறை வழிபாட்டின் அதீத உச்சமாகக் கண்டபோது,தாம் வழிபடும் இறைவனையே இந்தக் கலை வடிவங்களாகக் கண்டார்கள்.நடராஜர் இசையோடு நடனமிடும் அதீத வெளிப்படுத்தல்களாகவும்,சமூகத்தின் உளவியல் குறிப்பானாகவும் இந்தச் சிலைகள் காலவோட்டத்தில் மிக அவசியமானவொரு குறிப்பீடாக விரிகிறது.


எனவோதாம்"இசை கேட்டால் புவி அசைந்தாடும் இறைவன் கொடுத்த வரம்"என்றார்கள் நமது கவிஞர்கள்.


மனித வாழ்வின்-அதுவும் தமிழ் வாழ்வின் பாரிய பகுதி இசையோடேதாம் பின்னிப் பிணைந்துள்ளது.நாம் பிறந்ததிலிருந்து உலகத்தோடு கலப்பது வரை இசையும் தாலாட்டும் தொடர்கதையாகத் தொடர்ந்து, நம்மைத் தாலாட்டுகிறது.இத்தகைய அரிய கலை வடிவைப் பேணிப் பாதுகாத்து, அதன்வாயிலாகத் தானும் மகிழ்ந்து தான் உருவாக்கும் அடுத்த சந்ததியையும் மிக ஆரோக்கியமான மன-அறிவியல் வளர்ச்சியுடைய சமுதாயமாக்கும் பாங்குக்கு இந்த இசையையும்,நாட்டியத்தையும் கற்பதும் ,அதை நடைமுறையில் -வாழ்வுக்குள் இணைத்து ஒருங்கே வாழ்வதும் நமது இளம் தலைமுறைக்கு அவசியமானதுதாம்.


இசையும்,பாடலும் மனித மனத்தின் உச்சமான சிந்தனைக் குவிப்புக்கும்,கவனக் குறைவின்றிக் கற்பதற்கும்கூட மிக அவசியமானது.இசையால் பிணி தீர்க்கமுடியும்,இசையால் உடலுக்குத் தெம்ப+ட்ட முடியும்,அதனால்தாம் இசை இறையாகிறது நமது சமுதாயத்தில்.


இந்த அரும் கலையை,அதுவும் வயிலினைத் தெரிந்தெடுத்துச் செல்வி.பகிரதி செல்வராஜா கற்றுணர்ந்து அதை அரங்கேற்றும் நிகழ்வுப் படிக்கட்டுவரை இழுத்து வந்துள்ளாரெனும்போது மனதுக்கு மகிழ்வுதாம்.


இசைக் கருவிகளுக்குள்ளேயே கற்பதற்கு மிகவும் கடினமான கருவி இந்த வயிலின்.

அதைத் துணிவோடு தேர்ந்தெடுத்தது மட்டுமல்ல சிறப்பாகவும் வாசிக்கும் தகுதி, இந்தப் பகிரதியிடம் இருப்பதை நான் எனது வீட்டில் அவர் வாசித்தபோது இலயித்து உணர்ந்தேன்.


இத்தகையவொரு மாணவி,அதுவும் கற்பதில் ஆர்வமுடைய,சதா கல்வியையும்,கலையையும் சிந்தனைக்குள் திணித்து தனது ஆளுமையைத் தொடர்ந்து விருத்திக்கிட்டு வந்துள்ள நல்லதொரு மாணவி இந்தப் பகிரதி.ஆர்வம் மட்டும் இருந்தால் போதாது செயற்படும் மனமும் இருந்தாகவேண்டும் கற்பதற்கு.இத்தகைய மனது என்றும் இந்தப் பகிரதிக்கு இருப்பதும் நாம் காணும் ஆச்சரியமான ஒழுக்கம். இந்தச் சந்தர்ப்பத்தில் இவருக்கு மிக நேர்த்தியாக இந்த இசைக் கருவியான வயிலினைக் கற்றுக்கொடுத்த ஆசிரியப் பெருந்தகைக்கும் நாம் நன்றி சொல்லக்கடமைப்பட்டவர்கள்.


ஒரு மாணவரின் வளர்ச்சி,உயர்வு-திறமை அனைத்தும் ஆசிரியர்களின் ஒப்பற்ற உருவாக்கத்தோடு தொடர்புடையது.இந்த நோக்கோடு பார்த்தால் இப்போது அரங்கேற்றும்வரை தனது இசையார்வத்தைச் செயலாக்கும் பகிரதிக்கு இவரது குருவின் மகத்தான உழைப்பு மிகுதியாகவே கிடைத்திருக்கிறது.


இந்தத் தரணத்தில் எல்லோரையும் நினைத்து மனதில் அனைத்தையும் உள்வாங்கி செல்வி.பகிரதி செல்வராஜா மேன் மேலும் கல்வியிலும்,கலையிலும் சிறந்து நமது சமுதாயத்தில் ஆரோக்கியமான சமூகப் பொறுப்புடைய மனித ஆளுமையாகப் பரிணமித்து,வாழ்வின் அனைத்து இன்பங்களையும் பெற்றுச் சிறப்புற வாழ வாழ்த்துகிறேன்.


"அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு
ஐந்துசால் ப+ன்றிய தூண்."


எனும் வள்ளுவன் வாக்குக்கு நிகராக தம்மையுருவாக்குவதில் ஒவ்வொரு சிறார்களுக்கும் ஒழுங்கமைந்த கல்வியும்,பெற்றோரின் அன்பும்,அரவணைப்பும் கிட்டவேண்டும்.இது பகிரதிக்கு மிகுதியாகவே வாய்க்கப் பெற்றிருக்கிறது.


என்றும் சிறப்போடு,
"வாழ்க்கைச் செல்வமெல்லாம் வாய்க்கப் பெற்று வாழ்க"- நீ
தமிழாய்,தாயாய் -நல்
தலைவியாய்.


என்றும் பாசத்தோடு:

ப.வி.ஸ்ரீரங்கன்.
ஜேர்மனி.
04.07.2006

கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்