Language Selection

பி.இரயாகரன் -2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இதில் ஒருவர் தான் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். இவர் மகிந்தவை சந்தித்து ஆசி பெற்றது முதல், இருண்டதெல்லாம் புலியாகத் தெரிய உருவாடுகின்றார். ஏதேதோ புலம்புகின்றார். கொலையையே அரசியலாக கொண்ட புலிப் பிள்ளையான், பேரினவாத மகிந்த அரசினால் ஒரு கூலிக் கும்பல் தலைவனாக திடீரென உயர்த்தப்பட்டவுடன், கிழக்கின் விடிவெள்ளி என்று உச்சிமோந்தவர் தான் இந்த இராஜேஸ் பாலா.  

 

இப்படி கிழக்கு மக்களுக்கு மேல் ஒரு நரகலை அள்ளி தெளித்ததுக்கு அப்பால், அந்த மக்கள் அதை கழுவக் கூட முடியாத வகையில், பிள்ளையான் - மகிந்தவின் பாசிச கொடூரங்களால் அடிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

 

புலி பாசிசக் கும்பல் ஒழிந்தால் சரி என்று கருதும் 'ஜனநாயக" கும்பல் பக்கப்பாட்டு பாட, ராஜேஸ் பாலாவோ இந்தப் பாசிசத்துக்கு ஆராத்தியெடு;த்தார்.  கிழக்கு மக்களின் அடிமைத்தனம் தான், கிழக்கின் விடுதலை என்கிறார். 
 
இப்படி மகிந்தவுக்கு ஏற்ப தளம் போடும் இந்த கிழக்கு பாசிட் தான், புலியெதிர்ப்பு பாட்டுப்பாடும் தேனீயில் மகிந்தவுக்காக முந்தானை விரிக்கின்றார். எழுத்துச் சுதந்திரம் பற்றி,  இன்றைய எதார்த்தத்தையே தனக்கு ஏற்ப திரித்துப் புரட்டுகின்றார்.

 

எழுத்துச் சுதந்திரத்துக்கு எதிராக தானே மகிந்தாவுடன் குலாவியபடி, புலிக்கு எதிராக  புலம்புகின்றார். இன்று இலங்கையில் அதிகளவில் ஊடகச் சுதந்திரத்தை மறுக்கின்ற பேரினவாத பாசிச அரசை காப்பாற்றும் வகையில், ஒரு பாசிட்டுக்கே உரிய கோமாளித்தனதுடன் கதை சொல்லுகின்றார். இன்று இலங்கையில் அதிகளவில் ஊடகச் சுதந்திரத்தை நசுக்குவது அரசு தான். இது உலகமறிந்தது. இப்படி இருக்க இந்தப் பேரினவாத அரசுக்கு எதிராக கருத்துரைக்காது, ஒரு போக்கிலிக்குரிய வகையில் சுதத்திரத்தைப் பற்றிப் பேசுகின்றார். ரவுடி பிள்ளையானை கிழக்கின் விடிவெள்ளியாக எழுதிய இந்தப் பரதேசி தான், இலங்கை அரசின் இன்றைய பாசிச கொடூரங்களை மறுத்து, அதை புலிக்கு எதிராக மட்டும் திரித்து எழுத முடிகின்றது.

 

இந்தப் பரதேசி இலங்கை அரசுடன் ஓட்டிகொண்ட, பிழைப்புவாதிகளுடன் சேர்ந்து  துரோகிகளுக்கு அஞ்சலிக் கூட்டத்தை நடத்துகின்றது. இந்தக் கேடுகெட்ட இந்த அரசியலை நாம் அம்பலப்படுத்தி எழுதுவதால், நாம் இந்தக் கொலை சரி என்று நியாயப்படுத்துவதாக கூட இந்தக் கும்பல் திரித்துக் கதை சொல்கின்றது.

 

இவர்கள் எல்லாம் மாற்றுக்கருத்து என்று இன்று கருதுவது, அரசுடனும், ஏகாதிபத்தியத்துடனும், தன்னார்வ சதிக் கும்பலுடனும், தாம் கூடிக் குலாவி புணரும் அரசியலைத் தான். இதனால் தான் மக்களுக்கு எதிரான துரோகிகளை, இவர்கள் அரசியல் ரீதியாக அடையாளம் காண்பதில்லை. மக்களுக்கு எதிரான துரோகம் தான் மாற்று, அது தான் ஜனநாயகம் என்கின்றது.

 

இந்த துரோகிகளுக்கே அஞ்சலிக் கூட்டம் போடுகின்றனர். இன்று இலங்கையில் நடக்கும் கடத்தல் காணாமல் போதல், இனம் தெரியாத படுகொலைக்கு எல்லாம் துணைபோன துரோகிகளுக்கு இவர்கள் அஞ்சலிக் கூட்டம் போட முடிகின்றது. இந்தத் துரோகிகள் இருந்த அமைப்புகள், எத்தனை கொலை செய்தது, செய்கின்றது. இலங்கை கூலிப்படைக்கு தலைமை தாங்கும் கொலைகாரன் பிள்ளையானை, கிழக்கின் விடிவெள்ளி என்று சொல்லி முந்தானை விரித்தவராயிற்றே இந்த இராஜேஸ். இவர் மற்றொரு அரச கூலிக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்ட போது, அவருக்கு அஞ்சலி செலுத்த முனைவது துரோக அரசியலின் மொத்த விசுவாசமாகும். 

 

இந்தத் துரோகி தான் இப்படி என்றால், அஞ்சலிக் கூட்டத்தை நியாயப்படுத்தும் (அரசியல்) கூட்டத்தை என்ன என்பது! ஆயிரமாயிரமாக தொடரும் அரச படுகொலைகளுக்கும், கடத்தல்களுக்கும் எதிரான கண்டன கூட்டத்தையா இந்த கும்பல் நடத்தியது.? பாசிச அரச ஏஜண்டுகளாக சீரழிந்து போன இந்த ஜனநாயகவாதிகள், அரசு செய்யும் கொலைகளை புலியாக முத்திரை குத்தி ஆதரிக்கின்றன. புலிகள் கொன்றால் மட்டும் கூரையில் ஏறிக் கூவும் இவர்கள், அரசு கொல்வதைக் கண்டு கொள்வதில்லை. இந்தப் படுகொலைகளை புலி (பயங்கரவாத) ஒழிப்பாக காட்டி ஆதரிக்கின்றது அல்லது கண்டும் காணாமல் கள்ள மௌனம் சாதிக்கின்றனர். இதைப் போற்றவே, நேரடியாகவும் மறைமுகமாகவும் அதற்கு துணை போனவர்களுக்கு அஞ்சலிக் கூட்டம் போடுகின்றனர்.

 

அரசுடன் சேராத அல்லது  இனம் தெரியாத, முகம் தெரியாதவர்களின் ஆயிரக்கணக்கான மரணங்களை கண்டு கொள்ளாத வகையில், இவர்கள் புலம்பெயர் ஜனநாயகம் பேசுகின்றனர். துரோகிகளிள் மரணங்கள் தான், இவர்கள் தமது கேடுகெட்ட ஜனநாயகத்தை கடை விரித்து வியாபாரம் செய்ய உதவுகின்றது. இன்று இவர்கள் ஆதரிக்கும் அரசு நடத்துகின்ற படுகொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல்கள், அன்றாட நிகழ்வாகிவிட்டது. மனிதம் இந்த கொடூரத்தால் கதறுகின்றது. கேட்பார் யாருமின்றி மனிதம் செத்துப் போகின்றது.

 

இதே நிலை தான் ஊடகவியலுக்கும். ஊடகவியல் கடத்தல், காணாமல் போதல், படுகொலை, மிரட்டல், விசராணைக்கு ஊடாக வன்முறைக்குள்ளாகின்றது. அரசை மட்டும் ஆதரித்து எழுத வைக்கின்றது அல்லது மௌனம் சாதிக்கக் கோருகின்றது. இதன் மூலம்  ஊடகவிலைக் கூட அரச பாசிட்டுகள் தமதாக்குகின்றனர். அரசை விமர்சிப்பதையே புலிக்கு ஆதரவாக காட்டி, பாசிச பிரச்சாரம் மூலம் அனைத்தையும் ஓடுக்குகின்றது. நாட்டு பொருளாதாரத்தை, ஏகாதிபத்தியத்திடம் தாரைவார்க்கின்றது. தேசிய வளங்கள் அழிக்கப்படுகின்றது. நாடு பலவழிகளில் சூறையாடப்படுகின்றது. இது தெரியாத வண்ணம் கருத்துகள், இதற்கேற்ற ஊடகவியலையே பாசிட்டுகள் கோருகின்றனர்.  

 

இப்படி இருக்க புலி மறுக்கும் கருத்துச் சுதந்திரம் பற்றி மட்டும் பேசுகின்றனர். புலி செய்யும் படுகொலைக்கு எதிராக மட்டும் அஞ்சலிக் கூட்டம் போடுகின்றனர். இந்த வேடதாரிக்கள் புலியல்லாத தளத்தில், ஜனநாயகத்தின் பெயரில் நிறைந்து காணப்படுகின்றனர். இது புலியல்லாத படுகொலை அரசியலையும், மனித உரிமை மீறலையும் ஆதரித்து நிற்கின்றது. புலிகள் எப்படி ஒரு தலைப்பட்சமாக கண்டனங்களையும், மனித உரிமை மீறலையும் பேசி தமது பாசிசத்தை நிறுவனமயமாக்க முடிந்ததோ, அதையே இந்தப் புலியெதிர்ப்பு பரதேசிக் கும்பலும் செய்கின்றது. அசலுக்கும் நகலுக்கும் வேறுபாடு இருப்பதில்லை. இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் தான். மக்களின் அவலத்தில் தான், இவர்கள் மிதக்கின்றனர்.

 

தேனீ முதல் தேசம் வரை, இந்த பாசிச பரதேசிகளுக்கு களம் அமைத்து, பாசிசப் பிரச்சாரம் செய்ய வைக்கின்றது. இதைவிட அவர்கள் வேறு எதைத் தான் செய்யமுடியும். தமிழ் மக்களின் எதார்த்தமான அவலங்களுக்கு எதிராக, அவர்கள் போராடவா முடிகின்றது? இல்லை. மாறாக அவலங்களை உருவாக்கும், பாசிச அரசியலை விதைக்கின்றனர்.   

 

பி.இரயாகரன்
21.06.2008