04192021தி
Last updateதி, 12 ஏப் 2021 7pm

ரீ.பீ.சீ-தேனீக் கும்பல்: திருடர்கள்!

"1: ரி.பி.சி. வானோயின் அவசியம் இன்று உள்ளதாக கருதுகிறீர்களா?
>>(பதில் விளக்த்திற்காக மேலும் சில
துணைக்கேள்விகள்.)<<

1:1 நிதர்சனத்தையும் தேனீயையும் நீங்கள் ஒன்றாகவே
கருதுகிறீர்களா?

இலலையென்றால் வேறுபாட்டை விளக்குக.
1:2 ஐ.பி.சியையும்,
ரிபிசியையுயம் நீங்கள் ஒன்றாகவே கருதுகிறீர்களா?
இல்லையென்றால் வேறுபாட்டை
விளக்குக. "

அடுத்தவன்(ள்) வீட்டில்
தென்னை காய்த்திருக்கும்போது
வேலி பிரித்து வெறித்துப் பார்த்து
வேளை வரும்போது
வேட்டிக்குள் திணிப்பவர்கள்
ஊருக்கு நல்லதற்காகத் திருடுகிறார்களாம்!

"அவசியம் உள்ளதாகக் கருதுகிறீர்களா?"

எதன் பொருட்டு ரீ.பீ.சீ-மாமோய்?
எள்ளுக்காயுது எண்ணைக்கு
ரீ.பீ.சீ அலம்புது கைக் கூலிக்கு!
இதற்குள் ஐ.பீ.சீ ஆட்டுக்குட்டி,
நிதர்சனத்தோடு சேர்ந்து தேனீக்குத் திரு விழா!!

திருடர்கள்!

மக்களின் காதுகளில் மலர் சூடி
மயக்கம் காணும்போது
காதறுக்கும் கூட்டம்
மக்கள் நலன் விளக்கி
"சர்வே"செய்கிறார்கள் நம்மிடம்!

ம்...

காலம்தாம்.

இலங்கைக்கு
இந்தியாவுக்கு
ஏகாதிபத்திய எஜமானர்களுக்கு
காசுக்கு வாலாட்டும் ரீ.பீ.சீ-தேனீக் கும்பலுக்கு தேள் கொட்டுது
மக்கள் நலனாக.

என்ன செய்ய?

புலிகளுக்கு
நிதர்சனம்,
எட்டப்பர்.கொம் என்று
ஏராளம் கொம்புகள்!-பாசிசத்தின் பக்கவாத்தியங்கள்!!

இயக்கவாதப் பிழைப்பு வாதிகள்...
எல்லோரும்
மக்கள் விரோதிகள்தாம்!

எந்தப் பக்கம் பார்த்தாலும்
மக்கள் விரோதிகளே மக்கள் குரலாக...
துப்பாக்கிகளுக்குமுன்
மௌனித்துக் கிடக்கும் மக்கள் மனங்கள்
மரணத்தை அடைகாக்கும் இயக்கவாதிகளிடம்
உரிமைக்கு ஏங்கிக் கிடப்பது உண்மைதாம்!!

உயிர்வாழும் நிலமும்
உண்பதற்கு பயிர் செய்தலும்
உழைப்பதற்குத் தொழிலும்
தோணிவிட்டு மீன் பிடிக்கக் கடலும்
கண்ணுறங்க வீடும்
அவர்களது உரிமை

நாடென்றோ
அல்ல மொழியென்றோ
திரண்டுகிடக்கும் எந்தக் கனவும்
மக்கள் நலத்தைக் காத்திடுவதாகவில்லை

தலை தறித்துத் "தமிழ்" தம்பட்டம் அடிப்பவர்கள்
உயிர் பறித்து ஒரு தேசம் விடுதலையாகுமெனச்
சொல்வார்கள்
பற்பல வடிவங்களில்

இத்தகைய திருடர்களின்
மரண சாசனத்தில் பங்கற்றவர்கள் எவர்கள்?
மடிப்பிச்சைபோல உயிர்ப்பிச்சை கேட்கும் நிலையில் மக்கள்...
மசிரப் புடுங்கின ரீ.பீ.சீ-தேனீக் கும்பல் சிங்களக் கொடும் அரசுக்கு
சுக்குக் கோப்பி தயாரிக்குது
ஏகாதிபத்தியத் தயவில்
இதுக்கொரு இந்தியா-ஆனந்த சங்கரித் திருடன் கூட்டாக...

ஆருமற்ற அப்பாவித் தமிழர்களிடம்
அரசியல் பண்ணும் அற்பப் பிராணிகளை
ஆரூ சொன்னார் "அவசியம்"-"தேவை"
மக்களுக்கானதென?

அறுத்துப்போட்டுக் கூறுபோடும் ரீ.பீ.சீ.வானொலியா மக்கள் நலன் பேச?
நீறுப+த்த மக்கள் மனங்களை
குருதி கொண்டு"காயடிக்கும்"கள்ளர்கள் கூட்டம்
புலியாக இருந்தாலென்ன
ரீ.பீ.சீ-தேனீக் கும்பலாக இருந்தாலென்ன?

எல்லோருமே கொலைகாரர்கள்!-திருடர்கள்,
மக்களின் விரோதிகள்!!!!!

தமிழ் பேசும் மக்களின் உரிமைகளைத் திருடியவர்கள்
தத்தம் நலனுக்கு மக்களுரிமைகளை
தரணம் பார்த்து ஏலம் விட்டும்
போரிட்டும் பதவி சுகம் காணப் பரதவிக்குமிவர்கள்
மக்களுக்குச் சேவகர்களாம்!
மண்ணாங்கட்டி!!!

நேபாளத்துப் போராளிகள்
"கைக்கூலி ரீ.பீ.சீ-வானொலிக்கு" மாவோயிசப் பயங்கர வாதிகளாம்!
கொடும்பாவி இராஜபக்ச- "ஜனாதிபதி,
மக்களைக் கொல்வதை நிறுத்தும்படி வேண்டினேன்!"-அவிட்டுவிடும்
ஜெயதேவரின் வாய் அழகென்ன அழகு!!
அண்ணே,
அடுப்பெரிக்க உதவாத
கரிக் கட்டை நீங்கள்
ஆருக்கு அபிசேகம் செய்வதில் அவசரம்?

பாழாய்ப்போன புலிகள்
தேசத்தின்-தேசியத்தின்
விடுதலையின் பேரால்
தமிழருக்குக் கொலைகளையே தந்துவர
ரீ.பீ.சீ-தேனீக் கும்பலுக்கு
அரசியலாய்ப் பிழைப்பாய் அது உரமிடுகிறது.
எரிகிற வீட்டில்
பிடுங்குவது மிச்சமென்றலையும்
ஜெயதேவன் அன்ட் கொம்பனிக்கு
மக்களின் சாவுகளும்,குருதியும்
நல்ல கடைச் சரக்கு ஏலமொன்று விடுவதற்கு
சரியான போட்டியப்பா புலிகளுக்கு!

"ஐ.பீ.சீ வானொலியும்
ரீ.பீ.சீ.வானொலியும் ஒன்றா?
அல்லதென்றால் வேறுபாட்டை விளக்குக!"

ஆரடா நீங்கள்
ஆட் காட்டி வேலைக்கு?

அடுப்பெரிக்க அல்லல்ப்படும் நாங்களெங்கே
வானொலிகளுக்கான கூலியாக
அழிந்து போகும் ஒவ்வொரு மணித்தியாலத்துக்கும்
அள்ளிக் கொடுக்கும் பல்லாயிரம் பவுண்களின் ஊற்றெங்கே?

அடிவருடிகள்,கைக்கூலிகள்
மக்கள் விரோதிகள்
சிங்களப் பாசிச அரசின் பாதந் தாங்கிகள்
புலிகளுருவில் மட்டுமல்ல-அது
ரீ.பீ.சீ.-தேனீக் கும்பல் உருவிலும்
தமிழ் மக்கள் உரிமையைக் காவு கொள்கிறது.

தேசியத்துக்கு
சுய நிர்ணயத்துக்கு
விளக்கம்வேறு கேட்கினம் அரசியல் ஆய்வில்(!?)!
தேசியத்தை சிதைக்கின்ற புலிக்கோ
அல்லது சிங்கள அரசுக்கோ
குறுந்தேசியப் புலம்பலென்றால்
பதவிப்பேராசைப் பெரிச்சாளிகளான
புலியெதிர்ப்புக் கும்பல் ரீ.பீ.சீ-தேனீக்கு
தேசியத்தின் வரையறை
மக்களினத்தின் திமிராகத் தெரிகிறது

தேசத்தினதும்
மக்களினதும் பாதுகாப்பே
அந்நியனின் காலடியில்...
பிறகென்ன?
தேசியமோ அன்றித் தமிழ் பேசுவோர்
சுய நிர்ணயிப்போ
சிங்களச் சியோனிசத்தின் சந்தைக்கு நிகராகுமோ?

நக்கிப் பிழைப்பதற்கு
ஒரு
ரீ.பீ.சீ.-தேனீக் கும்பல்
புலிகளைப் போலவே அந்நியனிடம் மண்டியிட்டுக் கிடக்கிறது
மக்களை ஏமாற்றியபடி!

ப.வி.ஸ்ரீரங்கன்
24.06.06

கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்