04192021தி
Last updateதி, 12 ஏப் 2021 7pm

ரீ.பீ.சீ.வானொலி மீது மீளவும் புலிகளின் கொலைவெறித் தாக்குதல்!

பாசிசம் எந்த உருவத்தில் வந்தாலும் (தமிழீழ விடுதலை,தாயகம்-சுயநிர்ணயவுரிமை...) அதை அனுமதிக்க முடியாது! நமது காலம் மிகவும் மௌனித்திருக்கத்தக்கதல்ல! உயிர் வாழ்வதற்கே போராடியாகவேண்டிய காலவர்த்தமானத்தில், எதற்காகவும் மௌனித்திருக்க முடியாது.

புலிகளின் அதீத வன்முறை முனைப்பானது மாற்றுக் கருத்துடையவர்களைச் சமூக விரோதிகள்-எட்டப்பர், தேசத் துரோகிகளெனும் சித்தரிப்புகளுடாகக் கருத்து விதைத்து, அப்பாவிகளான மனிதர்களைப் போட்டுத் தள்ளிவரும் புலிப் பயங்கரமானது எப்போதும் தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தைப் பாதுகாக்க முடியாது!

தேசிய விடுதலைப் போராட்டமானது தனிப்பட்டவொரு மனிதரின் சுய முனைப்புக்கான போராட்டமல்ல.

ஒரு இனத்தின் தலைவிதியை அற்ப மனிதரின் நலன் சார்ந்து-அவரதும், அவரது தளபதிகளின் நலனுக்குமான காப்பரணாகக் குறுக்கிவிடும் புலிப் பயங்கர வாதிகளின் போராட்டத்தில் நாம் மரித்தாலும் சரி ஜனநாயக வாதிகளைக் காத்தாகவேண்டும்.

புலிப் பயங்கரவாதிகள்

எட்டப்பர்.கொம்,

நெருப்பு.ஓர்க்,

நிதர்சனம்.கொம் போன்ற இழி இணையத் தளங்களுடாக மாற்றுக் கருத்தாளர்கள்மீது கிட்டலர் பாணி கருத்தியல் வன்முறை மூலமும்,வன்முறை சார்ந்தும் தாக்குதல் தொடுப்பதை உலகத் தமிழ் மக்கள் புரிந்தாகவேண்டும்.

ரீ.பீ.சி.வானொலி மீதான தாக்குதலானாது(08.06.2006) ஜனநாயகத்துக்கெதிரானது-மாற்றுக் கருத்துக்கு எதிரானது.இதை நாம் கண்டித்தேயாகவேண்டும்.

ரீ.பீ.சி போன்ற கடைந்தெடுத்த முதலாளித்துவ ஊடகங்கள் மக்கள்மீது அதிகாரத்தைச் செய்யும் புலிகளுக்கு மாற்றானவர்களில்லை. அவர்கள் புலிகளிடம் பங்குச் சண்டை நடாத்தும் ஒரு கும்பல்தாம். எனினும் நாம் ஜனநாயகப்பட்ட மக்களின் நலத்தை முன் நிறுத்துவதால் இத்தகைய ரீ.பீ.சீ வானொலிக்கெதிரான புலிப் பாசிசத்தின் பயங்கராவாதத் தாக்குதலை அம்பலப்படுத்துவது மிகவும் அவசியமானது.

நமது அற்ப சொற்ப உயிரையும் குடிக்க முனையும் புலிகளின் குருதித் தாகமானது எந்தத் தமிழ் குழந்தைகளையுமே விட்டு வைக்கவில்லை!இந்தப் பாசிசப் பயங்கரவாதப் புலிகளின் தலைமையானது கனகம் புளியடியில் பச்சைப் பாலகனின் உயிரைக் குடித்தது. இத்தகையப் பாசிசப் புலிகளா மாற்றுக் கருத்தாளர்களை ஜனநாயக ப+ர்வமாகச் செயற்பட அனுமதிப்பார்கள்?

இன்றைய காலக் கட்டமானது மிகவும் கொடுமையான ஆயுதக் காட்டாட்சி நிலவும் வன்முறைச் சூழலைக் கொண்டியங்குகிறது!

ஐரோப்பாவில் வாழும் மாற்றுக் கருத்தாளர்களை மெல்லக் கொல்லும் திட்டத்தைப் புலிகள் ஏற்கனவே செய்து முடித்துள்ளார்கள். இப்போது ஐரோப்பாவின் தடைக்குப் பின்பான காலத்தில் நம்மைக் கொல்வதற்குப் புலிகள் தகுந்த திட்டத்துடன் பயங்கரம் புரிகிறார்கள்.

இது கிட்டலரின் நாசிக் கட்சியின் காலத்தை நமக்குக் கூட்டிவருகிறது!

நாம் எங்கும் வாழவே முடியாதவொரு அவலத்தைப் புலிப் பாசிசம் கட்டவிழ்த்து விட்டுள்ளது.

புலிகளின் வால்களுக்கு மனித மதிப்பு,மாண்பு எதுவுமே தெரிந்திருக்கவில்லை! அவர்களுக்குப் பிரபாகரனின் பாதத்தைத் தவிர எதுவுமே தெரிந்திருக்கவில்லை.அத்தகையவொரு தலைமுறையைத்தாம் புலிப் பயங்கரவாதிகள் தயாரித்துத் தமிழ் மக்கள் என்கிறார்கள்! இந்தவொரு கூட்டமே மனித நாகரீகத்துக்குப் புறம்பான காட்டுமிராண்டிகளாக உலகில் வலம் வருகிறார்கள்!

இந்தப் பேய்களின் மத்தியில் வாழும் நாம், மாற்றுக்கருத்தாளர்கள்-ஜனநாயகவாதிகள்,மக்கள் நலன் நோக்காளர்கள்மீது நடாத்தப்படும் வன்முறை சார்ந்த கொலை முயற்சிகளை-மனித வருத்தல்களை வன்மையாக் கண்டிக்கிறோம்!

இதை உலகத் தமிழ் மக்களுக்குப் பறைசாற்றி , எமது மக்களுக்கு ஜனநாயகச் சூழல் கிடைக்கக் குரல் தரும்படி கோரி நிற்கிறோம்.

"ஒழிக புலிப்பாசிசம்!"

"ஓங்குக உலகத் தமிழ்க் குரல்கள்"

இதுதாம் இழந்த மனித மாண்பை மீளப் பெறுவதற்கு எமக்கான ஆயுதம்.


தோழமையுடன்

ப.வி.ஸ்ரீரங்கன்
09.06.2006


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்