04192021தி
Last updateதி, 12 ஏப் 2021 7pm

என்னைத் தேடும் புலிகள் - 2

முதலில் எனக்காக, எனது அவலத்துக்குத் தோழமைக்கரந் தந்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி. என் நிலைக்காக தனிப் பதிவிட்டு எதிர்ப்புக் கூறிய இரு கல்வியாளர்கள் ஒருவர் பெயரிலி, மற்றவர் திரு.ரோசா வசந்! இருவருக்கும் என் அன்பு. நான் பெரிதும் மதிக்கும் முகமூடி, சிவக்குமார் மற்றும் காசி, குழலி இவ் நான்கு சான்றோருக்கும் அடுத்து என் அன்புக்குரிய தோழர்கள் இரயா, சுதன் எல்லோருக்கும் உளமொப்பிய நன்றி. நாயகன், மலைநாடன் மற்றெல்லா அன்பர்களுக்கும் கூடவே நன்றி.

இனி விடயத்துக்கு வருகிறேன். ஓசைப்படாமல் தட்டச்சுச் செய்கிறேன். நான் எதுவுமே எழுதப்படாது என்பது வீட்டாரின் கண்டிப்பு. எனினும் மௌனம் சம்மதமாகி விடும். எனவே என் பதில். மேலே வந்துள்ள அறிக்கையையே இதுவரை தேடினேன். நிதர்சனம் இன்னும் பல தளங்களென்று... இந்த மேனிக்கு எழுதிய அவதூறுப் பிரசுரத்தில் எனது படத்தையும் போட்டுத்தாம் புலிகள் நேற்று என்னைத் தேடியபடி. எனக்கு எல்லா விபரமும் தர முடியும். அதை இதில் சொல்வதற்கில்லை. யாரு, எப்படி, என்ன முறைமையில் எனக்கு மரண அறிக்கை தயாரித்து என் படத்தையும் அதில் போட்டு, எனக்குப் பொட்டிட்டு, என் மனைவி மாலையிட வைப்பதற்குத் தயாராகிறார்கள் என்பது நமது தேசியத் தலைவருக்கே தெரியாதிருக்கும்- அல்லது தெரிந்திருக்கும்.

எனக்குப் புலிகள் தண்டனை தருவதாகவிருந்தால் அது பெரும்பாலும்: "பாசிஸ்ட், பயங்கரவாதி பிரபாகரன், மோடன், முட்டாள்கள்" என்ற என் வார்த்தைகளுக்கே தர முடியும். மற்றும்படி வேறெந்தக் காரணத்துக்கும் இருக்காது. ஏனெனில் நான் இல்லை வைகைச் சிறி.

உங்கள் கற்பனைகளை நீங்களே வைத்திருங்கள்.

நான் மார்பை நிமிர்த்தி எந்தவொரு கறையுமற்ற என் நெஞ்சைத் தட்டிச் சொல்வேன்)

பரநிருபசிங்கம் விஜயரெட்ணம் ஸ்ரீரங்கன்.

மற்றவர்களின் தயவில் வாழ்ந்ததுமில்லை, கையேந்தவுமில்லை. இன்றும் எட்டரை மணி நேரம் ஜந்திரத்தில் உடல்வருத்தி வேலை செய்துவிட்டு வந்து இதை எழுதுபவன்.

எனக்கு உளவுத் தொழிலா?

மேதினமென்று தெரியாத்தனமாக எனது பதிவுக்காப் புலிகளின் ஊர்வலத்தைப் படம்பிடிக்கப் போய் இப்போது உளவுப்படைக்கு... நினைக்கச் சிரிப்பு வருகிறது.

நூரன் பேர்க்கில் என்னை விசாரித்தால் நான் யாரென்று நண்பர் சுரதா பதில் தருவார்.

இல்லை அப்படியே சரவணையில் போய் இதுயாரு பேர்வழியென்றால்...ஐயோ விசயரெத்தினத்தின்ர பஞ்சப்பரதேசியளா? என்றுதாம் வருமப்பு.

அவனுக்கு உளவு (ஊரில மாடுகட்டி வயல் உழுதிருக்கிறேன். அப்பன் சாக நாங்கள் தாம் தோட்டஞ் செய்து எங்கள் வயிற்றைக் கழுவினோம்) பார்க்கிறான். இவனுக்குச் சொறியிறான் எண்டு கயிறு திரித்தல் புலிகளுக்குத்தான் சரி வரும்.

அதுவும் என்ன சொல்லுகிறீர்கள்?

வைகைச் சிறீயோ?

அண்ணமார் தம்பீமாரே

அது நான் இல்லை ராசாமாரே!

நான் ஒரு கதை எழுதியிருக்கிறேன் அதில் சன்னதியோடு சாவரி செய்ததாக...அது வருடம் 1984 வரையும். பின் குப்பை கொட்டுவதும், வயிறு வளர்ப்பதும்தாம்.

இந்தப் பெரிய மனிதர் தொழிலெல்லாம் எனக்குரியதில்லை.

அது உங்களுக்கே வெளிச்சம்.

புலிகள் என்னைப் படத்தோட தேடவேண்டாம்.

என் கருத்துகளை, அரசியில் நிலைப்பாட்டை எதிர்த்துக் கருத்தாடுங்கள். அல்லது துரோகியா, உளவாளியாவெனத் தெரியணுமானால் ஐயாமாரே நேரடியாக வருகிறேன் உங்களிடம். எங்கே வரணும்?

தெம்போடு வருகிறேன்.

ஓபர்கவுசன், பொண் அல்லது வன்னிக்கு?

வன்னிக்கு வர நீங்கள் தான் ரிக்கற் தரணும்.

இது நியாயமான வேலை.

இதைவிடுத்து அவதூறை அள்ளிவீசும் கடைந்தெடுத்த முட்டாள்களாய் எவன் எனக்கு வைகைச்சிறீ என்கிறான்?

போடாங்... மரமண்டையளே!

இந்த மேற்காட்டிய துண்டுப்பிரசுரத்தை என் பதிவில் போட்டு எனக்கு வேலைப் பளுவைக் குறைத்த அநாமதேயத் தறுதலைக்கு மீண்டுமொரு பெரும் கும்பிடு.

இனி நேற்றைய நடப்பு குறித்து உண்மையான உண்மை தருகிறேன் வாசகர்களே!:

இடம்: வு.சு.மு.ளுpநணநைடடந றுநசமணநரப புஅடிர்இ

புநஎநடளடிநசப.

புநசஅயலெ.

இங்கு வேலை செய்யும் 99 வீதத் தமிழர்களும் நுnnநிநசவயட (என்னபெற்றால்); புலிப் பொறுப்பாளர் சங்கருக்கு (சங்கானை பிறப்பிடம்) உறவினர்களும், வேண்டப்பட்டவர்களும். அங்கே எனது உறவினரும் பஞ்சம்பறிக் அடிமாடாய்...இங்கே மேற்காணும் நோட்டீசோடு புலிகள் போய் (எனது படம் அச்சடித்து) இவனைத் தெரியுமா? இவனொரு துரோகி...உளவு வேலை செய்கிறான். வ+ப்பெற்றாலில் இருந்து...

அந்த அப்பாவி: "எனக்குத் தெரியும் சொல்லமாட்டன்!" என்கிறார். கூடவே எனது மனைவிக்கு போன் எடுத்து விஷயம் சொல்ல வீட்டில் மரண ஓலம். நான் வேலையை இடையில் நிறுத்தி "குய்யோ முறையோவென" ஓடிவந்து, மனையாளைப் பிள்ளையளைத் தேற்றிப் பயந்தடித்துப் பதிவெழுதி...பலபேர் தோழமைக் கரம் தந்து...

அவர் "சொல்லமாட்டேன் என்பது என்மீது உண்மையிருப்பதால். அடுத்து அவர் என் சகலன்.

இராசாமாரே ஏன் அவருக்கு "மூன்று பிள்ளைகளுக்கு நீ தகப்பன்" உண்மையைச் சொல்லென்று ப+ச்சாண்டி காட்டுகிறீர்கள்?

நெஞ்சில் உரமிருந்து நேரிய வழி தெரிந்தால் என்னோடு கருத்தாடுங்கள். நான் துரோகியென நீங்கள் நிரூபித்தால் நான் உங்கள் முன் வந்து நிற்கிறேன் மரணத்துக்காக. இது சவால் பு.ஆண்டிகளே(புலி ஆண்டிகள் என்று வாசிக்கவும்)!

இந்தக் கதம்ப எழுத்தைத் தேடியே நான் நேற்றுப் ப+ராகவும் மனமுடைந்து இருந்தேன். இப்படியொரு கிலுசுகெட்ட பிரசுரத்தை- இணையத்தள எழுத்தை... இவ்வளவு பெரியவொரு அமைப்புச் செய்யுமா? புலிகளின் தலைமைக்கே வெளிச்சம்.

கேடுகெட்ட வால்களே! அளப்பெரிய தியாகத்தை அருவருக்க வைக்காதீர்கள்.

என்னப்பெற்றால் புலிப் பொறுப்பாளர் சங்கர் இது குறித்துப் பதில் தரவேண்டும்.

யார் என்னை இத்துண்டு அடித்துப் படம் ஒட்டித் தேடியதென!

நான் இனிமேல் பொலிசுக்குப் போக முடியும். எனக்குப் புது நடவடிக்கை செய்யத் தெரியும். தம்பிமாரே என் நாவுக்கு அந்த வலிமையுண்டு.

சுத்தமான மனத்தோடு, சோரம் போகாத அரசியல் கொள்கையோடு, நேரிய பார்வையோடு நெஞ்சை நிமிர்த்தி நான் ப.வி.ஸ்ரீரங்கன். சரவணையான். என்கின்ற அரசியல் தெளிவோடு, நான் காணும் பொதுவுடமை மலரப்பாடுபட்டு எழுதிவரும் ஒரு ஜீவன். என்னைக் கொல்ல உனக்கு எங்கிருந்து அந்த றையிட் வந்தது?

எப்படி வரும்?

யாருடைய கழுத்தை நான் அறுத்தேன் அல்லது எவள் தாலியை நானறுத்தேன்? முடிந்தால் நிரூபி .நான் வருவேன் உனது இருப்பிடம் நோக்கி. நான் நீங்கள் நினைக்கும் துரோகியல்ல.

சங்கரே, சிவமே, இல்லை எந்தக் கொம்பு வைத்த புலித் தோழரே புகல்வீர் ஆதாரம் தந்து.

அது உங்கள் அகராதியில் இல்லை.

அடுத்தவன் பணத்தில் பசி போக்குவது இந்த விஜயரெட்னத்தின் வாரீசுக்கு எப்பவும் நேர்ந்ததில்லை. இனியும் நேராது. எட மூதேவிகளே நீங்களா இப்படி ஆட் கொல்லும் நோட்டீசு தயாரிப்பது? வைகைச் சிறி!...ம்...கொ...டை சிறீ!

நான் ப.வி.ஸ்ரீரங்கன்

பாடையில போவாரே மற்றவருக்குப் பாடைகட்ட முனையாது பாருங்கள் உங்கள் சோலியை! நான் தேசியத் தலைவரெனும் உங்களின் தலைவர் பிரபாகரனுக்கே இப்போது சவால் விடுகிறேன் "தலைவரே" முடிந்தால் நான் உளவுப்படையின் தகவல் குஞ்சு என்றும், இலங்கை எம்பசியில் கக்கூசு இருந்ததென்றும், கள்ளுக் குடித்ததென்றும், பாட்டியில தோட்டியென்றும் நிறுவுங்கால் உனது காலடிக்கு நான் வாறேன். இது உண்மையான சொல். அதற்கு முதலில்...

என்னப் பெற்றால் சங்கர ஐயா நீவீர் என்னைத் தேட ஆள் அனுப்புகிறீர் ரீ.ஆர்.கே தொழிற்சாலைக்கு?

அண்ணைமாரே அன்புடைய தம்பீமாரே நான் மீளவும் சொல்கிறேன், இத்தகைய வேலையை ஜெயதேவன், இராமராஜ் மற்றும் உங்கட கருணா, அந்தக் கும்பல் இந்தக் கும்பலென வையுங்கோ! அவர்கள் ரொம்பப் பெரிய புள்ளிகள்.

நான் பட்டுணிப் பானை திறக்க எட்டரை மணிவரை உடலைப் பஞ்சு பண்ணும் பரதேசி.

எனக்கு உளவாளி. தகவல் கொடுப்பவன் என்று பெரிய பதவிகளைத் தராதேங்கோ அண்ணமாரே!

சின்னமடுவடியில மாடுமேய்த்தவனுக்குப் போய் மகிந்த ராசபக்சாவின் வீட்டில் நாமத்தைத் தேடுகிறீர்களே.

சேரியில போய் கேட்டால் சேருமெல்லோ நல்ல சேதி.

அதைப் போய் செய்யுங்கள். அதற்கு முதல் சொல்லுங்கள் எனக்கு ஏன் துரோகிப் பட்டம்?

இதற்காக:

"பிரபாகரன் பயங்கரவாதி-பாசிசவாதி-மோடன் எண்ட திட்டுக்கோ?"

அப்படியெண்டாத் தாங்கோ அந்தப் பொன்னான பட்டத்தை!

...............................

"கருணாநிதி துரோகி,

கடைந்தெடுத்த பாசிஸ்ட்

சுயநலவாதி,"(மோடனென்று நான் சொன்னால் நானொரு மோடன்);" கிழடன், வாரீசு அரசியல் வாதி! எப்படித் திட்டினாலும் எனக்கு உயிராபத்து வரவே வராது!

இனிமேல் இருக்கவே இருக்கார் நம்ம உலகத் தமிழர் தலைவர். அவரைத் திட்டித் தீர்க்கவேண்டியதுதாம்.

கடைசியாக:

"ப.வி.ஸ்ரீரங்கன் என்ற மாற்றுக்(?!)கருத்தாளர், புரட்சியை நேசித்த(?)தோழர் பாசிசப் புலிகளால்; :-)பாடையில் போனார்" என்ற பெரும் பதவியைத் தராதேங்கோ!

அதற்கு நான் கொஞ்சமும் அருகதையற்ற கற்றுக் குட்டி.

அது சொல்லியா தெரியவேண்டும்? இந்தப் புலம்பலே போதாதா- எண்டுறீர்களா? சரி, சிரி-சிந்தி!

ப.வி.ஸ்ரீரங்கன்

31.05.2006

நடுச்சாமம்:2.11மணி.

இங்கேயுள்ள தொடுப்பில் நீங்கள் பதில் கருத்துக்களைப் பார்வையிடலாம்.


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்