04192021தி
Last updateதி, 12 ஏப் 2021 7pm

என்னைத் தேடும் புலிகள்!

ன்பு வாசகர்களே, வணக்கம்! வீட்டில் சாவு வீட்டைச் செய்கிறேனா நான்?

மனைவி பிள்ளைகள் எல்லாம் கண்ணீரும் கண்ணுமாக இருக்கின்றார்கள். என்னை இனிமேல் எழுத வேண்டாமென்றும் வீட்டில் ஒரே இரகளை. சாவு வருவதற்கான வாசல் திறந்துவிட்டதாகவே என் வீட்டார்கள் கண்ணீருடன். இது அவஸ்த்தை.புலிகள் எனது படத்துடன் என்னைத் தேடி வேட்டை!

சாவு எப்போது?

இது இன்று நடக்கிறது. இன்றென்னைத் தேடுவது எனக்குத் தெரிந்திருக்கிறது. நான் அடுத்த நகவர்வில் கால் வைக்கிறேன்.

எனது மரணத்துக்கு முன் நான் எழுதும் கடைசிப் பதிவாகக்கூட இது இருக்கலாம்.

விடை பெறுகிறேன் அன்பு வாசகர்களே!


என்வீட்டார் புலிகளிடம் மன்னிப்புக் கேட்டு எழுதும்படி கோருகிறார்கள்.

நான் என்ன தவறு செய்தேன் புலிகளிடம் மன்னிப்புக் கோருவதற்கு?

வீட்டில் சாவு வீடாகக் குழந்தைகளும், மனைவியும்... நான் கொலைபடுவதற்குமுன் எனது மனைவி தங்களுக்குப் பொலிடோல்-நஞ்சு தரும்படி கேட்டபடி...

ஏதோ வாசகர்களே இப்படியொரு நிகழ்வு என் வீட்டுவாசல் முன்.


என் படத்தை வைத்துக்கொண்டு என்னைத் தேடும் புலிகள் நான் வாழும் நகரத்துப் பொறுப்பாளர்கள்தாம்.

எதுவானாலும் நடப்பது நடக்கட்டும்.

"Schweigen ist Silber
Vergraben ist Gold."

அன்புடன்
ப.வி.ஸ்ரீரங்கன்

29.05.06

கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்