04232021வெ
Last updateசெ, 20 ஏப் 2021 6pm

மயூரனும்,இஸ்லாமிய நண்பர்களும்...

"யாதும் ஊரே யாவரும் கேளீர்" பாடியவனின் வாரீசுகளுக்குச் சிலகருத்துக்கள்!

இன்று மயூரனின் கட்டுரையை வாசித்தபோது,இஸ்லாமியர்கள் விவாதத்தில் ஒருகட்டத்துக்குமேல் "திருக் குறானை"த் தாண்டிச் செல்லப் பிரியமற்றவர்களாக இருப்பதாக் குறிப்பிட்டார்.இது சகலநாட்டு இஸ்லாமியர்களுக்கும் பொருந்துவதே!இன்றைய உலக நடப்பில் இஸ்லாத்தின் வழிக் கருத்தியல் மனதானது வெறும் நம்பிக்கைகளாலேயே கட்டித் தகவமைக்கப்பட்டது.கிறிஸ்துவத்தைப் போன்றதொரு யுத்தம்-காணிக்கை,அன்பு-அரவணைப்பு என்ற கோதாக்களிலிருந்து இஸ்லாம் முழுக்கமுழுக்கக் கருத்தியற்றளத்தில் பதியம் போட்ட கருத்துக்களாலும் அதன் தலைசிறந்த"மனோவியல் தாக்க"திருக் குறானாலும் இஸ்லாம் தனக்கான அரசியல் உடல்களை இறுகப் பற்றியுள்ளது!ஒருவகையில் நாம் நம்ப மறுக்கும் கசப்பானவுண்மை என்னவென்றால்"இஸ்லாமென்பது வாழ்கையைத் தயாரிப்பது"-வாழ்வை,மனித்தன்மைக்கொப்ப அதன் அடிப்படைப் பலவீனத்தைப் புரிந்த அந்த வாழ்வைத் தீர்மானிக்கும் பெரும் கருத்தியலை மிக நேர்த்தியாக மனித மனங்களில் பதியம் போட்டுள்ளது.

குறானிடமிருந்து பெறப்படும் எந்த வாக்குகளாலும் அது மனித மனங்களில் நம்பிக்கையைப் பதியம் போட்டே வாழ்வின் மதிப்பீடுகளைச் செய்கிறது.

"உம்மை நாம் உறுதிப்படுத்தி வைத்திருக்காவிட்டால்,நீர் அவர்களின் பக்கம் கொஞ்சமேனும் திட்டமாகச் சாய்ந்திருக்கக் கூடும்.""-திருக்குறான் தர்ஜமா:ருகூஃ 8,வாக்கு:74.பக்கம்:290.

இந்த மேற்காணும் வாக்கியத்திலிருந்து நாம் காணும் உண்மையானது பல்வேறு பிரிவுகளுக்குள் முட்டிமோதிய அன்றைய மனித வர்கங்களுக்கிடையிலான ";இருப்புப் போரில்"ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழ்வைத் தக்க வைக்கும் முயற்சியில் இஸ்லாம் பாரியபோராட்டத்தைச் செய்திருக்கிறது.இந்தப் போரில் அன்றைய குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழ்ந்த அறிஞர்கள் குறான் வழி மக்களின் மனோதிடத்தைக் காத்துப் போராடியுள்ளர்hகள்.பின்னாளில் அவர்களது இடையுறாத கருத்தியல் போரில் ஒரு பகுதி மக்கள்தம் பண்பாட்டுத்தளம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.


" (நபியே)சூரியன் (உச்சியை விட்டுச்) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள்(கவனிக்க: இரவின் இருள் என்கிறார்கள்.அப்படியாயின் இருள் எல்லாம் இரவு இல்லை!இரவு வேறானது,இருள் வேறானது.இரவின் இருள்...லொஜீக் மிக இலகுவாகக் குறானில் பற்பல இடங்கில் இழையோடுகிறது.)சூழும்வரை (யுள்ள,லுஹர்,அஸர்,மஃரிப்,இஷா, முதலிய) தொழுகையையும்,இன்னும் பஜ்ருத் தொழுகையையும் கடைப்பிடிப்பீராக!நிச்சியமாக பஜருடைய தொழுகை (மலக்குகளின்)வருகைக்குரியதாக இருக்கிறது.-தி.குறான் தர்ஜமா:ருகூஃ 9,வாக்கு:78

தொழுகைகளை இஸ்லாமிய அறிஞர்கள் எப்பவுமே உயர்த்திப்பிடிப்பவர்கள்!ஓடும் காரை ஓரம்கட்டிவிட்டுத் தொழுவதில் நாட்டமுடையவர்கள் இஸ்லாமியர்கள்,செய்யும் வேலையைச் சற்றுவிட்டுவிட்டு-ஒழித்தாவது தொழுதுவிட்டு வருபவர்கள் இந்த மதத்தைச் சேர்ந்தவர்கள்.தமது கருத்துக்கு அங்கீகாரம் தேடுவதில் அக்கறையற்று,மற்றவர்களின் எந்தக்கருத்தையும் வேடிக்கை பார்ப்பது அவர்களின் கருத்தியல் பலம்.இதனாற்றாம் இன்றுவரையும் கிறிஸ்த்துவம் அரேபிய மண்ணில் அடியெடுத்துவைக்க முடியாதிருப்பது.கூட்டுப் பிராத்தனையென்பதின் முக்கிய பலத்தை இவர்கள் வெகுவாக உணர்ந்திருப்பதை நாம் மறுக்க முடியாது.இந்த எளிய முறைமைகளைக் கொண்டே பாரிய மனோ வலிமையை உருவாக்கிய குறானிலிருந்து பாரிய நிலப்பிரபுத்துவச் சிந்தனைகள் ஆங்காங்கே விரவிக்கிடப்பதை நாம் கற்றுணரமுடியும்.அந்தச் சிந்தனையானது மக்களைத் தமது நிர்வாக அலகுகளுக்கிசைவாக இணைப்பதில் "கூட்டுச் செயற்பாட்டை"யுருவாக்கியபோது, மக்கள் தமக்கு எதிராக ஐக்கியமுறும் எந்தவொரு நகர்வையும் எதிர்த்தே வந்திருக்கிறது.அன்றைய மக்கள் விரோத அரச பரிபாலனக் கட்டுமானங்களை மக்கள் தமது அதீத கூட்டுச் செயற்பாட்டால் தாக்கியழிக்கமுடியாது பெரும் கருத்தியற்றளத்தை உருவாக்கிய அன்றைய சமூக அறிஞர்கள் வெகுவாகவே மதத்தின் பெயரிலான மாற்றினத்தின் முற்றுகைகளை-வர்க்கப் போராட்டத்தை"புனிதப் போரினூடாக"த் தடுத்திருpப்பதும் குறான் வாயிலாக நாம் உணரமுடியும்.

உலகத்தில் தோற்றமுற்ற மிகப் பின்னான இஸ்லாத்தின் சமூகப் பாத்திரமானது மற்றெல்லா மதங்களையும்விட மிக முன்னேறிய அரசியல் சட்ட ஒழுங்கு முறைமைகளையும், அதன் வாயிலாகத் தனியுடமையின் இருப்புக்கான முன் நிபந்தனைகளையும் மிக வலுவான வடிவத்தில் உருவாக்கி,மக்களிடம் கருத்தூன்றியுள்ளது.இதை மிக இலகுவாக உடைப்பதற்கான எந்தப் பண்பாட்டுத் தாக்கத்தையும் எதிர்கொள்ளும் வலிமையை அவர்கள் "கூட்டுத் தொழுகை" மற்றும் இடையுறாத தொழுகைகளுடாய்ச் செயற்படுத்துகிறார்கள்.இத்தக் கருத்தியல் ஒருமைக்கு அவர்கள் முற்றுமுழுதாக மனித ஆற்றலையும்,மனோ ஒருமைப்பாட்டையுமே தங்கியிருக்கிறார்கள்.இதற்கு எந்த நவீனப் பரப்புரைகளும் அவர்களுக்கு அவசியமின்றியிருப்பதும்,மொழியின் அனைத்து ஆளுமையும் இஸ்லாம் வழியாகப் பொருத்தப்பட்டதும்,அதுவே ஒருகட்டத்தில் மக்களின் வாழ்வியல் மதிப்பீடுகளாகவும் மாற்றப்பட்டு, குறிப்பிட்ட முறைமையில் அமைந்த மிக முன்னேறிய மனிதவலுதை அது தனதாக்கிக் கொண்டிருக்கிறது.இத்தகைய மனித மனமானதை எந்தவொரு வலுவான நவீனப் பரப்புரையும் வென்றெடுப்பது மிகக் கடினமான முயற்சியாகும்.

திருக் குறானை அவ்வளவு இலகுவாகக் கற்றுவிடுதலென்பது சாத்தியமில்லை.பகவத்கீதையையோ அல்லது பைபிளையோ எந்தத் தடுமாற்றமுமின்றி நாம் கற்றறிந்துவிட முடியும்.ஆனால் இக் குறானைத் தலையால கிடங்கு கிண்டினாலும் முற்றுமுணர்ந்து கற்றுவிடுவது சாத்தயமில்லை.இதுதாம் அன்றைய மத்திய ஆசியாவின் அறிவு நுட்பம்.இதைப் பகுத்துணர்வதும்,அதனூடாகக் கருத்துக்களை முன்வைப்பதும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அன்றைய சமூகப் பொருளாதார்த்தின்மீது நிலவிய வரலாற்று இயக்க அழுத்தங்கள்-எதிர்வுகள் பற்றிய புரிதலும்.இத்தகைய புரிதலின்றிக் குரானைவிட்டு இஸ்லாமியச் சகோதரர்களை இன்னொரு தளத்துக்கு-விமர்சனக் கண்ணோட்டத்துக்கு நகர்த்தமுடியாது.

"ரப்பே!எதன் பக்கம் என்னை இவர்கள் அழைக்கிறார்களோ,அ(த்தீய)தை விட சிறைக்கூடமே எனக்கு மிக விருப்பமுடையதாகும்.இவர்களுடைய சூழ்ச்சியை என்னை விட்டும் நீ தடுக்கவில்லையானால்,அவர்களின்பால் நான் சாய்ந்துவிடுவேன்-அறிவீனர்களில் உள்ளவனாகவுமாகி விடுவேன்."-திருக் குறான்,ருகூஃ 6:வாக்கு33,பக்கம்:240.

எந்தவொரு கருத்தியல் மனதையும் வென்றெடுத்துப் புதிய உலகைத் தரிசிக்க வைப்பதற்கான காலவகாசமானது மிக நீண்ட செயற்பாட்டோடு உறவுடையது.திடீர் புரட்சியோ-பண்பாட்டு மாற்றமோ எந்தச் சந்தர்ப்பத்திலும் நிகழ்ந்தது கிடையாது.மார்க்சியத்தின் ஆதராமே கருத்தியல் போராட்டத்தின் வலுவை மிக நுணுக்கமாக விளங்கியதுதாம்.அதை பல நூறு வருடங்களுக்கு முன் இஸ்லாம் தெளிவாக உணர்ந்து தன்னை மிகக் காட்டமாக மனித மனங்களோடு தகவமைத்திருக்கிறது.
இத்தகைய இஸ்லாமிய உடலானது தனது உளவுருவாக்கத்தை வெறும் பொருள்சார்ந்தவுலகத்தோடு தொடர்புப்படுத்தாது மறுவுலகத்தின் இரட்சிப்பவரோடு பிணைத்திருப்பதும்,அந்த இரட்சிபவரையேதாம் தமது நம்பிக்கையின் அதி உச்சமான பாத்திரத்தில் வைத்து, உலகத்தை எதிர் கொள்வதாலும், புறுவுலகத்தின் எந்தச் செயற்பாடும் வெறும் பகட்டாகவும் அதனால் எந்த விமோசனமும் மனிதர்களுக்குக் கிடைப்பதும் சாத்தியமில்லையென்று நம்புகிறது.இத்தகைய தரணங்களில் மனிதவலுவானது மிகத் திரட்சியான பொதுவுணர்வைத் தனித் தன்மைக்குள் இணைப்பதாலும் அதுவே வேறொருகட்டத்தில் தனித்துவத்தை எதிர்ப்பதாலும் பற்பல எதிருணர்ச்சிகளைத் தகவமைப்பதற்குத் தவறிவிடுகிறது.

"அறிந்து கொள்ளுங்கள்!(முஃமின்களே!)நீங்கள்(வேதக்காரர்களில் முனாபிக்குகளாயிருக்கும்)அவர்களை நேசிக்கிறீர்கள்,(ஆனால்)உங்களை அவர்கள் நேசிப்பதில்லை,(அவர்களுடைய)வேதங்கள் அனைத்தையும் நீங்கள் நம்புகிறீர்கள்,(ஆனால் உங்களுடைய வேதத்தை அவர்கள் நம்புவதில்லை)உங்களை அவர்கள் சந்தித்தால் "நாங்கள் ஈமான் கொண்டுள்ளோம்"என்று(வாயளவில்)அவர்கள் கூறுகின்றனர்,(உங்களை விட்டும்)அவர்கள் தனித்துவிட்டாலோ,உங்கள் மீதுள்ள ஆத்திரத்தால் (தம்)விரல் நுனிகளைக் கடித்துக் கொள்கின்றனர்."உங்களுடைய ஆத்திரத்தாலேயே நீங்கள் இறந்து விடுங்கள்"என்று (நபியே!)நீர் கூறுவீராக!நிச்சியமாக அல்லாஹ் நெஞ்சங்களில் உள்ளவற்றை முற்றும் அறிந்தவன்."-தி.குறான்,ருகூஃ 14,வாக்கு:119.பக்கம்:66

"முஃமின்களே!உங்(கள்மார்க்கத்தவர்)களையன்றி(வேறு எவரையும்)நீங்கள் அந்தரங்கக் கூட்டாளிகளாக்கி கொள்ளாதீர்கள்!(ஏனெனில்)உங்களுக்கு(மாற்றார்களாகிய)அவர்கள் தீங்கு செய்வதில் குறைவு செய்யமாட்டார்கள்,நீங்கள் துன்பப்படுவதை அவர்கள் விரும்புகின்றனர்,அவர்களுடைய வாய்களிலிருந்து(அவர்களின்)கடும்பகை திட்டமாகத் தெளிவாக வெளியாகி விட்டது,அவர்களின் நெஞ்சங்கள்(பகைமையை)மறைத்து வைத்திருப்பதோ இன்னும் அதிகமாகும்,உங்களுக்கு(அவர்களின்)அடையாளங்களைத் திட்டமாக நாம் தெளிவாக்கிவிட்டோம்,நீங்கள் உணர்வுடையோராக(முஸ்லீம்களாக)இருந்தால்(இதை விளங்கிக் கொள்வீர்கள்)."குறான்,பக்கம்66,ருகூஃ14,வாக்கு:118


இவ்வளவு பெரிய எடுகோள்களை நாம் தெரியப்படுத்தியேதாம் மனிதவுறவுகளுக்குள் நிலவும் சிக்கல்களைப் பற்றிய புரிதல்களை விவாதிக்கக் கடப்பாடுடையோம்.என்றுமில்லாதவாறு நாம் நட்பையும் தேடுதலையும் அதன் வாயிலான மனிதவுறவுகளையும் ஒருங்கே வளர்த்துக் கொள்வதிலும், அந்தவுறவின் வாயிலாக அடிமைத்தளைகளை அறுத்தெறியவும் முனைகிறோம்.இதற்கு
"யாதும் ஊரே யாவரும் கேளீர்"என்றவனின் பரம்பரைகள் முயற்சிக்கும்போது அவர்கள் தம்மைப்போல் உலக நடப்புகளையெண்ணுவது மிகக் கடினமானவொரு சூழலை உருவாக்கும்.அதற்கு முன் அனைத்தையுங் கற்றுத் தெளிந்து நகர்வுகளைச் செய்வதும்,எந்தெந்த இடத்தில் எந்தெந்தத் தளைகள் கண்ணிகளாக இருப்பதென்பதையும் புரிந்துணர வேண்டும்.

இவற்றைப் பின் தள்ளிவிட்டு மனிதவுறவுகளைப் புரிவது சிக்கலானது.நான் உன்னை நண்பனென்று கூறினால் நீ,அதை ஏற்கும்போது மட்டுமே அதன் வலிவு சாத்தியம்.இதை மய+ரன்மட்டுமல்ல எவருமே புரிவது அவசியம்.மக்களைக் கூறுபோடும் பற்பல பிற்போக்குக் கருத்தியற்றளைகளைக் கண்ணாக மதிப்பவர்கள் பலர் தமிழ் மக்களின் புதிய தலைமுறைவீச்சைக் கொச்சைப் படுத்துவதற்குள் நாம் மற்றவர்களின் மகிமைகளையும்,அவர்தம் பண்பாட்டையும்,அறிவியலையும் புரிந்து மாபெரும் பாலத்தை அமைத்துக்கொள்ள முனையலாம்.இங்ஙனம் அமைக்கும் பாலமே வலிவானதாக இருக்கும்.

"யாதும் ஊரே யாவரும் கேளீர்"-கணியன் ப+ங்குன்றனார்.

இதுதாம் தமிழரின்(யாழ்ப்பாணம்,முஸ்லீம்கள் வெளியேற்றமென்று இதற்குள் வந்து அறுக்க வேண்டாம்!) நோக்கமும்,மனித கீதமும்,மகத்துவமும்!

ப.வி.ஸ்ரீரங்கன்
21.05.2006

கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்