04192021தி
Last updateதி, 12 ஏப் 2021 7pm

கருத்தியல்-கலாச்சாரத் திணிப்பும்,அதன் வினைகளும்.-சிறு குறிப்பு.

கருத்தியல்-கலாச்சாரத் திணிப்பும்,அதன் வினைகளும்.-சிறு குறிப்பு.

Krieg

Eine Lehre

Ein neuer Soldat"-Loch Sommer.

ஒரு புதிய சிப்பாய்க்கு யுத்தமொரு பாடமாகும்.- லொக் சமர்.

இஃதொரு ஐரோப்பிய அரசியல் ஆய்வாளனின் கருத்தாகும்.ஒவ்வொரு களமும் ஒரு படிப்பினையைச் சேர்த்தபடி உரமிடும் புரட்சிகரப்போராளிக்கு.முதலாவது உலக மகாயுத்தத்தில் ஈடுபட்ட இராணுவத்தின் தொகை 41.257.000.இவர்களில் 5.570.000.சிப்பாய்கள் உயிரிழந்தார்கள்.இத்துடன் ஆறுமாத காலத்திற்குள் ஆறு இலட்சம் சிப்பாய்கள் நோய்வாய்ப்பட்டு இறந்தொழிந்தார்கள்.மொத்தமாக இழக்கப்பட்ட மக்கட்டொகை 8,9 மில்லியன்கள்.

இரண்டாவது மகாயுத்தத்தில் இழக்கப்பட்ட மக்கட்டொகை 55-60 மில்லியன்கள்.

இதன் விளைவுக்குக் காரணமான நாடு ஜேர்மனியும்,பழைய ஐரோப்பிய மையவாதச் சிந்தனையும்,மூலவளத்தேவைகளுமே!

இப்போது இவ் ஐரோப்பிய ஆயுதங்கள் மொளனமாகவிருந்த அறுபது ஆண்டுகளை மறந்துவிட்டு,கிழக்கைரோப்பிலும்,மத்திய கிழக்கு நாடுகளிலும் மொளனம் கலைக்கின்றன.

1945'க்குப்பின்பு இந்தப் ப+மிப்பந்தில் 164 முழு அளவிலான யுத்தங்களும்,72 சிறிய யுத்தங்களும் நடந்துவிட்டென! இவ் யுத்தங்களில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் பலவும் ஐரோப்பாவின் வருவாயைக் கூட்டிவருகின்றன,அமெரிக்காவின் நலன்களைக் காத்து வருகின்றன.இவ் வண்ணமே இந்திய|இலங்கையின் ஆளும் வர்க்கங்களின் நலன்களை, இலங்கையால் நடாதப்படும் "தமிழ்பேசும் மக்கள்" மீதான அரசியல்-இராணுவ ஒடுக்குமுறை யுத்தம் காத்து வருகிறது.

இதுதாம் 21 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தின் கதையாக நம்முன் நீண்டுவிடுகிறது.

இந்த நிலையில், 21 ஆம் நூற்றாண்டின் காலவர்த்தமானங்களை மிக எளிதாகவ+கித்தறிதல் அவ்வளவு இலகுவான காரியமில்லை.அதுவும் சராசரி மனிதர்களாகி நமக்குக் கடினமாகவே இருக்கின்றது.

உலகு தழுவிய வர்த்தக வலைப்பின்னல்-இருக்கும் கொஞ்சநஞ்ச உணர்வறிதலையும் காவுகொண்ட நிலைவேறு,நம்மைக் கொத்தடிமைகளாக்கி விட்டபடி.இது நமது பாரம் பரிய அனைத்துத் தேசியத் தன்மைகளை,தேசிய "அலகுகளை" கூண்டோடு கைலாசத்துக்கு அனுப்பியபடி.இங்கே மூன்றாமுலக,வளர்முக நாடுகளின் வர்த்தகக் கூட்டானது தனது கேவலமான கூட்டுக்களால் மேலைத்தேசங்களின் நலனுக்கேற்றவாறு தமதும்,தமது மக்களின் மொழிகளைக் காவுகொடுக்கின்றன.இதற்குக் கருணாநிதி குடும்பம்,ஜெயா குடும்பம்,பண்டாரநாயக்க-மற்றும் நவலோகா,உபாலி குடும்பங்கள்(இவை தமிழ்-சிங்களச் சூழலில்) கங்கணங்கட்டித் தமது வருவாயையை காப்பது கண்கூடு.

இத்தகைய செயற்பாட்டால்-வாழ் சூழலால் எஞ்சியிருக்கும் அரசியல் பிரக்ஜைகூட மூளையிலிருந்து துடைத்தெறியத்தக்க பலவழிகளில் இவர்கள் செயற்படுவது அப்பட்டமாகத் தெரிவதும்,அதையெதிர்க்கத் திரணியற்ற தமிழ் அமைப்புகள் வெறும் சினிமாவுக்குத் தமிழ்ப்பெயர் வைக்கும் போரில் தமது காலத்தையும் நேரத்தையும் விட்டபடி.இவர்கள்கூட மொழிசார்ந்து, கோடுகிழித்து பொருளாதார-அரசியல் நலன்களையடைய முனைப்பாகின்றனர்.முன்னெப்போதையும்விட இன்று நமது தேசி அலகுகளைக் காப்பதற்கான போராட்டம் அவசியமாகிறது.அதைக் கட்சியரசியலானது தனது நலனுக்கும்,அந்நிய நலனுக்கேற்றவாறும் கையகப்படுத்தி ,ஒரு கட்டத்தில் நீர்த்துப்போக வைக்கத் திட்டமிட்டுக் காரியத்தில் இறங்கியுள்ளார்கள்.இதன் வெளிப்பாடே பாட்டாளி மக்கள் கட்சியினதும்,உதிரி அறிஞர்களினதும் போராட்ட வடிவங்கள்.இவை நகைப்புக்கிடமான போராட்ட வடிவமானதாகும்.இத்தகைய போராட்டங்களை உலக வங்கி-உலக நாணய நிதியங்கள் நடாத்தும்படி கட்டளையிட்டுக் காத்து,உந்துதல் கொடுக்கின்றனர்.நிசமாக நடைப்பெறப்போகும் போராட்டைத்தை முளையிலேயே கிள்ளும் நரித்தனம் இதற்குள் நிலவுகிறது.இவ் உள்நோக்கம் திடீர்த் தலைவர்களை உருவாக்கித் தமிழரின் தாhமீகத் தலைவர்களாக்க முனையும் அந்நிய நிதி மூலதனத்தின் சூழ்ச்சியாகும்.

எனவே தமிழ்பேசும் மக்கள் இந்தவகைப் போராட்டங்களையும்,கபட அரசியல் முன்னெடுப்புகளையும் இனம் கண்டு, மக்கள் சார்ந்த போராட்டங்களைக் கட்சியரசியலிலிருந்து பிரித்தெடுத்துப் நாமே முன்னின்று போராடும் அமைப்பு மன்றங்களைக் கட்டவேண்டிய வரலாற்றுத்தேவைக்குள் இருக்கிறோம்.தமிழ்பேசும் மக்கள் மத்தியில் புதிய வடிவங்களில் இந்த வகைப் போராட்ட உளவியல் ஊடுருவியிருப்பது மிக,மிக வஞ்சகத்தனமானது.இந்தச் சதிவலையை இனம் காண்பதும்,நாம் நமது தேசியவாழ்வையும் வரலாற்றையும் காத்துக்கொள்வதும்-அதனூடே நம் மொழியைக் காத்துக்கொள்வதும்,நமக்கான இருப்பை நிலைப்படுத்தும் Nதிய அடையாளத்தை மீட்பதும் நம் ஜீவாதாரவுரிமையாகும்.

இந்தவுரிமை ஒவ்வொரு ஒடுக்கப்படும் தேசிய இனத்துக்கும் உண்டென்பதை முதலாளியக் கட்டமைப்பே உதட்டளவில் ஐ.நா.வில் ஒத்துக்கொண்டுள்ளது.இதைக் கருத்தியல்வழியில் அது அழிப்பதற்குச் செய்துவரும் சதிவலைகளே ஏராளமாக இன்று நடைபெறுகின்றன,அதிலொன்றே ஊடக வன்முறை.இது மக்களின் மனங்களில் அற்ப ஆசைகளைத் தூண்டிவிட்டு வெறும் பொருளடிமைகளாகவொரு படித்த கூட்டத்தைத் தகவமைக்கிறது.இத்தகைய கல்(ல)விசார்-துறைசார் அறிஞர்கள் தமிழ்வழிக் கல்வியை மறுப்பதும்,ஆங்கிலத்தை மாற்றீடாக்க முனைவதும்-இன்றைய வர்த்தகச் சமுதாயத்தின் சமூக உளவியற் கட்டமானத்தின் வெளிப்பாடாகும்.இதை மறுப்பவருக்கு உலக வர்த்தகக்கழகங்களின் அரசியல் கடுகளவும் புரியவில்லையென்பதே வெளிப்படையான விமர்சனமாகும்!

இந்த வர்த்தகச் சமுதாயம் இதுவரை செய்துவரும் வன்முறைசார் போர்கள்,மென்மைசார் கருத்தியற் போர்கள் யாவும், பொருளாதார ஆர்வங்களினது வெளிப்பாடே!இவர்கள்தாம் இன்றைய சமூக உளவிலைத் தமக்கேற்றவாறு கல்விவழித் தோற்றிவைத்துள்ளார்கள்.நமது கல்விமுறையானது பதினெட்டாம் நூற்றாண்டு ஐரோப்பியப் பாணியிலான முறைமைகளைக் கொண்டவை.இது கொலனிய-நவகொலனியப் பொருளாதாரத்துக்கேற்றவாறியங்கும் சதியுடைய முறைமையாகும். இதன் வழி கல்விய+ட்டப்பட்ட இன்றைய கல்வியாளர்களுக்கு மொழிசார்ந்த மதிப்பீடுகள் முக்கியமற்றவையே.இந்தக் கல்வியானது தொழிநுட்பத்துக்குக் கொடுக்கும் முன்னுரிமையை சமூக விஞ்ஞானத்துக்குக் கொடுப்பதில்லை.இங்கே சமூகவிஞ்ஞானமானது வெறும் பிற்போக்கு முறைமையிலாகக் கற்கைநெறிகளைத் தாங்கியுள்ளது.மன்னர்களினதும்,மதிவாதிகளினதும் வரலாறுகள்-மகிமைகளே சமூகவியற் கல்வியாக வழங்கப்படும்போது,இன்றைய அறிவாளிகள் சரியான அரசியல்-சமூகப் பொருளாதாரச் சிந்தனையற்ற ஜந்திரங்களாக மாற்றப்படுகிறார்கள்.இவர்களிடம் நுட்பவியலை எதிர்பார்க்கலாமே தவிர,மக்கள் சார்ந்த-சமூகஞ்சார்ந்த அறிவியல்போக்கை எதிர்பார்க்கமுடியாது.இந்தவகையிற்தாம் இவர்களால் வெறுக்கப்படும் தாய்மொழிக் கல்வி-போராட்டங்களை நாம் புரிந்துகொள்ளவேண்டுமேயொழிய அவர்களை எதிரிகளாகவல்ல.அவர்கள் வெறும் அம்புகளே!இவர்களை சமூக விஞ்ஞானக் கல்வியால் நாம் எதிர்கொண்டு தாய்மொழி காத்தலை,தேசி அலகுகளைக் காத்தலைப்; புரியவைப்போம்.

தாய் மொழி சிதைந்து,எந்த வேருமற்ற வெறும் மனிதக் குழுவாக நமது இனம் உருவாகுவது ஏற்க முடியாது.இன்றுவரையும் ஜிப்சியின மக்களின் நிலையை நாம் காண்கிறோமல்லவா?அவர்களை நாயிலும் கேவலமாக்கொன்று குவித்த ஐரோப்பிய அரசுகளைக் கண்டோமல்லவா?ஜிப்சிகளினது நிலையை நாமும் வெகு சீக்கிரமாக அடையப்போகிறோம்.

இன்றைக்கு எமது நிலைமையை ஒரு திரைப்பட இயக்குனரின்-வசனகர்த்தாவின் பாhவையில் பார்ப்போம்:

கேள்வி:ஈழப்போராட்டம் இவ்வளவுதூரம் கடுமையாக இருக்கிறதே?-ஆ.வி.நிருபர்.

பதில்: அங்கு(ஈழத்தில்) பொழுதுபோக்குச் சினிமா இல்லை,எனவேதாம்!-பஞ்சு அருணாசலம்(1990 இல்).

இது யாருடைய குரல்?

ஆளும் தரகு முதலாளியத்தின் குரலாகும்.இதைச் சொல்ல வைப்பது உலக வங்கியின் அதிகார வர்க்கமாகும்!இவர்களின் அறிவுஜீவிக்குரல் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியாக வரும்.இந்த வகைக் குரல்கள் ஜிம்மிக் காட்டாரை,புஷ்சை பெருமக்களாகச் சொல்லும்.

எனவே,சமூகச் சூழ்நிலைமைகளை மிகவேகமாக எடைபோடுகின்ற எதிரிகள், எப்பவுமே கவனமாகத்தாம் இருக்கின்ற "சமுதாய நிலைமைகளை" வரலாற்றில் நாம் கண்டுகொண்டே வரலாம்.இந்த நிலைமைகளை நமது இன்றைய பொருள் வாழ்வில் புதிய பல ஊடகங்களுடாய்க் கண்டுகொள்ளலாம்.

இந்த நிலையில் ,உலக மூலதனத் திரட்சியானது தனது உற்பத்திச் செலவை மிக மிகக் குறைப்பதற்காகவும்,மூலவளத் திருட்டுக்காகவும் நமது நாடுகளின் இறைமைகளைக் காவுகொள்ள, நம் நாடுகளில் தோன்றியுள்ள அதிகார வர்க்கத்தைப் பயன் படுத்துவதால்,அவர்கள் தமது எஜமானுக்கேற்றுவாறு நமது மனங்களைப் பண்படுத்தப் படாதபாடு படுகிறார்கள்.இதனால் புதிய புதிய செய்திய+டகங்கள் நம் மத்தியில் திடீர் திடீரெனப் பிறக்கிறது.இத்தகைய ஊடகங்கள் முதலில் தமது நாட்டினது மக்கள்தம் இருப்பையே அசைத்து,அவர்களை வெறும் நுகர்வுக் கூட்டமாகவும்-கலாச்சார அடிமைகளாக்கவும் முனைவதால்,அந்த மக்களின் ஆன்மாவோடு உறவாடும் நினைவிலி மனதின் மொழியை நோக்கி அம்பு எய்கிறார்கள்.இந்த ஈனத்தனம் அவர்களது பாரம்பரிய நம்பிக்கைகளைச் சிதைத்து,சமூக அவநம்பிக்கையை முதலில்தோற்றிவிடுகின்றனர்.இதன்பால்தோன்றும் சமூகச் சிதைவானது அந்நிய மூலதனமின்றி-அந்நிய ஒத்துழைப்பின்றி நாம் வாழமுடியாதென்ற உளவியலைத் தோற்றித் தமது நோக்கங்களை மிக இலகுவாக மூன்றாம் உலகில் அடைந்துவிடுகிறார்கள்.இந்த இழி நிலைமை தேசிய இன அடையாளத்தையே சிதைத்தெறிந்து, நம்மை வெறும் இனக் குழுவாகததோற்றி வைக்கமுனைவதில் வெற்றியீட்டிவருவதனாலேயேதாம் நாம் நமது மொழிவழிக் கல்வியை-மொழியை கேவலமாகச் சித்தரிக்கின்றோம்.

இவற்றையிங்கு இருவழிமுறைகளில் எதிரிகள் செய்து முடிக்கிறார்கள்.

ஒன்று: கலாச்சார அடிமைப்படுத்தல்.

இரண்டு: திரிவுப்படுத்தப்பட்ட சமுதாயச் சூழ்நிலைமையை உருவாக்கி, வரலாற்றைச் சிதைத்தல்-தேசிய அடையாளத்தை இல்லாதொழித்தல்.

இவ்விரு வடிவங்களுமே இருவேறு வகைப்பட்ட முறைமைகளில் நம்மைத் தாக்குகின்றன.இவையிரண்டும் பாரிய முறையில் நமது வாழ்வையும்-இருத்தலையும் காவுகொள்கின்றன.

நீண்ட காலமாக நாம,; நமது நலனின் பொருட்டு சிந்திக்கும்போதெல்லாம் அவை நிர்மூலமாக்கப் பட்டுள்ளன.தமிழ்பேசும் மக்களின் வரலாற்றில்-அவர்களையேமாற்றி வரலாற்று ரீதியாக அடிமைப்படுத்திய அரசியல்-சமூக ஒடுக்குமுறைகளை நாம் அவ்வளவு எளிதாக மறக்கமுடியாது.

அனல்வாதம்,புனல்வாதம் என்ற போர்வையில் எம் வாழ்வையும்,வரலாற்றையும் திருடிய சாணாக்கிய தந்திரம் மீண்டும் புத்துணர்ச்சிபெற்று,ஊடக வன்முறையாகப் பரணமித்து தமிழ் மொழியை ஆங்கிலம் கலந்தழிக்க முனைதல் தற்செயலான விளைவல்ல.இதற்கு உறுதுணையாக அகண்ட பாரதக் கனவும்,இந்தி-இந்து-இந்தியாவும்,உலக வர்த்தக நலனும் ஒருங்கே கைகோற்கிறது.இந்தக் கூட்டு நமது உயிர் வாழ்வைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.இவர்கள் கோடம் பாக்கத்தை தமது முதல் ஆயுதமாக்கி,ஊடகங்களுடாய் இப் போதையை நம்மீது தூவியபடியே எம்மை இலகுவாகத் தாக்கி,நம் மூளையைச் சலவை செய்து-எதற்கும் உதவாத கலாச்சார அடிமைகளாக்கவும்,பலவீனமான சமூகமாக்கவும் மிக நுணுக்கமாக திட்டமிட்டுள்ளார்கள்!

இனி மேற் சொன்ன யுத்தங்களை எண்ணிப் பாருங்கள்! இவையாவும் வெள்ளையினம் தனது பொருளியில் இலாபத்துக்காகச் செய்த போர்கள்.இவற்றால் தமது மொழிவழியுரிமைகளையும்,பொருளியற் பலத்தையும் தக்கவைத்தவர்கள் மீளவும் புதிய வகைப்போர்களால் நம்மைக் காவுகொள்ள நாம் இடம் கொடுத்தல் நியாயமாகுமா?

ப.வி.ஸ்ரீரங்கன்

29.05.05

கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்