08_2005.jpgவழக்குரைஞர்களின் விடாப்பிடியான போராட்டத்தின் விளைவாக குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தங்களின் அமலாக்கத்தை மைய அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. இல் காங்கிரசு அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச் சட்டத் திருத்தங்களில் பெரும்பகுதி போலீசு கமிசனால் சிபாரிசு செய்யப்பட்டவை என்கிறார்கள் போராடும் வழக்குரைஞர்கள். மக்களின் ஜனநாயக உரிமைகளை மறுப்பதில் போலீசு கமிசனுக்கு எந்த விதத்திலும் சளைக்காத சட்டக்கமிசனும் இலேயே இந்தத் திருத்தங்களில் பெரும்பான்மையானவற்றை அங்கீகரித்திருக்கிறது.

 

இருப்பினும் கடந்த ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த இந்தச் சட்டத் திருத்தம் காங்கிரசு கட்சியுடன் சேர்ந்து மீண்டும் உயிர்த்தெழுந்து விட்டது. கடந்த மே மாதம் ம் தேதியன்று நாடாளுமன்ற மேலவையிலும் ம் தேதி மக்களவையிலும் எவ்வித எதிர்ப்புமின்றி சத்தமில்லாமல் நிறைவேற்றப்பட்டு விஞ்ஞானி கலாம் அவர்களின் கைநாட்டையும் பெற்றுவிட்டது.

 

தடா பொடா போன்ற ஆள்தூக்கிச் சட்டங்கள் அவற்றின் கடைந்தெடுத்த பாசிசத் தன்மை காரணமாகவும் அவற்றை அறிமுகப்படுத்தும் போது ஆளும் கட்சிகளும் அதிகார வர்க்கமும் திட்டமிட்டே கிளப்பும் ஆரவாரம் காரணமாகவும் மக்களின் கவனத்தை ஈர்த்து விடுகின்றன. அத்தகைய சட்டங்களை ஏந்திச் சுழற்றும் போலீசின் இயல்பான அராஜகமும் ஜெயலலிதா போன்ற பாசிஸ்டுகளின் விசேட குணாம்சங்களும் அதுவரை எதையும் கண்டுகொள்ளாமலிருந்த மக்கட்பிரிவினரின் பார்வையையும் இத்தகைய சட்டங்களை நோக்கித் திருப்பி விடுகின்றன.

 

தடா பொடா போன்ற சட்டங்கள் ஷகிலா படத்தைப் போலப் பச்சையானவை. தற்போதைய சட்டத்திருத்தமோ ஆபாசத்தை அடையாளம் காண முடியாத ""ஈஸ்ட்மென் கலர் குடும்பச் சித்திரம் போன்றது. ""பெண்களை இரவில் கைது செய்யக்கூடாது பகலில் கைது செய்வதென்றாலும் பெண் போலீசார்தான் கைது செய்ய வேண்டும் காவல் நிலையக் கொலை மற்றும் பாலியல் வன்புணர்ச்சிக்கு நீதித்துறை விசாரணையார் கைது செய்யப்பட்டாலும் கைது குறித்த விவரங்களை "கைதிகுறிப்பிடும் நபருக்குத் தெரிவிக்க வேண்டும் போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சட்டத் திருத்தங்களில் சில.

 

பொதுக் கருத்தைத் திசைதிருப்பும் நோக்கத்துடன் திட்டமிட்டே தொங்கவிடப்பட்டிருக்கும் இந்தப் "பூசணிக்காய்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு உள்ளே செல்லும்போதுதான் சட்டத்திருத்தத்தின் உண்மையான முகம் நமக்குப் புலப்படுகிறது. அவற்றில் சிலவற்றை மட்டும் காண்போம்.

 

சாதி மத சமூக (வர்க்க) அடிப்படையில் வகுப்பு மோதல்களைத் தூண்டுவது முதல் இந்த அடிப்படையில் சட்டபூர்வமாக அமைந்த அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டுவது வரையிலான குற்றங்களுக்குத் தண்டனை விதிக்கிறது இந்திய தண்டனைச் சட்டத்தின் அஆ பிரிவுகள். அத்வானி வகையறாக்களுக்காகவே உருவாக்கப்பட்டதை போன்று தோன்றும் இந்தச் சட்டப்பிரிவின் கீழ் அதிகம் கைது செய்யப்படுபவர்கள் புரட்சியாளர்களும் ஜனநாயக சக்திகளும்தான்.

 

கொக்கோ கோலாவிற்கு எதிராகச் சுவரெழுத்து எழுதிய குற்றத்துக்காக தருமபுரியைச் சேர்ந்த வி.வி.மு. தோழர்கள் இந்தக் குற்றப் பிரிவின் கீழ்தான் இன்னமும் சிறையில் இருக்கின்றனர். "பார்ப்பன என்ற சொல்லைப் பயன்படுத்தியதற்காக ம.க.இ.க. தோழர்கள் இந்தக் குற்றப்பிரிவின் கீழ் பலநூறு முறை கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பாபர் மசூதியை இடித்ததற்காக அத்வானி மீதும் இந்தப் பிரிவில்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டு தூங்கிக் கொண்டிருக்கிறது.

 

மசூதி இடிப்பிற்கு காவல் நின்ற ராவ் அரசு மதவெறியை ஒடுக்குவதற்காக என்று காரணம் சொல்லி அ ஆ என்று புதிய திருத்தத்தை இல் கொண்டு வந்திருக்கிறது. இந்த புதிய திருத்தத்தின்படி பொது இடங்களில் குச்சியுடன் ஊர்வலம் போவது விசேட தண்டனைக்குரியதாம்! இது ஆர்.எஸ்.எஸ்.இன் தடிக்கம்பை நிச்சயம் பிடுங்கப் போவதில்லை. தொழிலாளிகளின் கொடிக்கம்பைப் பிடுங்குவதுதான் இதன் நோக்கம்.

 

ஆர்.எஸ்.எஸ்.இன் பெயரைச் சொல்லி தடையுத்தரவிலும் "அ என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி மாத காலத்திற்கு ஒரேயடியில் இந்த "ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு இரண்டே இரண்டு உத்தரவுகளைப் பிறப்பித்து விட்டால்ஆர்ப்பாட்டம் ஊர்வலம் உண்ணாவிரதம் உட்பட எந்தவிதமான "தொந்தரவும் இல்லாமல்ஆளும் வர்க்கங்கள் தமது சுரண்டலை நடத்த முடியும். அதிகார வர்க்கமும் போலீசும் தமது "கல்லா கட்டும் கடமையை இடையூறின்றிச் செய்ய முடியும்.

 

அரசு ஊழியர்களைத் தமது கடமையை ஆற்றவிடாமல் தடுத்தால்பேசினால் பார்த்தால்கூடக் கைது செய்ய ஏதுவாக இந்தியத் தண்டனைச் சட்டத்தில் போன்ற பிரிவுகள் ஏற்கெனவே உள்ளன. ""மரியாதையா பேசுங்க சார் என்று போலீசிடம் கூறும் அளவு மானமுள்ளவர்கள் போலீசிடமே சட்டம் பேசும் அளவு துணிவுள்ளவர்கள் போன்றோர் தான் தற்போது இந்தப் பிரிவுகளில் கைது செய்யப்படுபவர்கள்.

 

இவர்களில் பலர் போலீசாரையும் அரசு அதிகாரிகளையும் தாக்கி விடுகிறார்களாம் கைதானாலும் பிணையில் வந்து விடுகிறார்களாம். இதன் காரணமாக போலீசைத் தாக்குவதற்கு அவர்கள் பயன்படுத்திய ஆயுதத்தைப் பறிமுதல் செய்ய முடிவதில்லையாம். பறிமுதலை உத்திரவாதப்படுத்துவதற்காக இது பிணையில் வர முடியாத அதாவது சிறைக்குச் சென்றே தீரவேண்டிய குற்றமாக மாற்றப்பட்டிருக்கிறதாம். போலீசை எதிர்த்துப் பேசுபவர்கள் சிறை செல்ல வேண்டியிருக்கும் என்பது மட்டுமல்ல. இந்தச் சட்டத்திருத்தத்தின்படி பல்லும் நாக்கும் கூடப் பறிமுதல் செய்யப்படும் ஆயுதங்களாகி விடலாம்.

 

அரசியல் இயக்கங்கள் தொழிற்சங்க இயக்கங்களைச் சேர்ந்த முன்னணியாளர்களுக்காகவும் ரேசன் அரிசி குடிநீர் பேருந்து போன்ற அடிப்படைத் தேவைகளுக்காகப் போராடும் மக்களுக்காகவுமே ஒதுக்கப்பட்ட பிரிவு ஒன்று உண்டென்றால் அது இ.பி.கோ.கலைந்து போஎன்று போலீசு சொன்ன மறுகணமே போகாதவர்களைச் சிறைக்கு அனுப்புவதற்காகப் போடப்படும் பொய் வழக்குகள் அனைத்திலும் இந்தப் பிரிவு கட்டாயம் இடம் பெறும். "குற்றமுறு மிரட்டல்என்று கூறப்படும் இந்தக் "குற்றத்தில் குற்றம் சாட்டப்படுபவர் வன்முறையில் ஈடுபடவோ ஆயுதம் வைத்திருக்கவோ தேவையில்லை. வெறும் வாய் மிரட்டல் என்று வழக்கு பதிவு செய்தால் போதுமானது. இதற்கான தண்டனை இலிருந்து ஆண்டாக உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டு முறைக்கு மேல் இந்தப் பிரிவில் கைது செய்யப்படுபவர்களை போலீசு நிலையத்தின் "கேடி லிஸ்டில் சேர்க்கவும் சொல்கிறது புதிய திருத்தம்.

 

பிணை நீதிமன்ற வாய்தா ஆகியவற்றில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்களோ குற்றம் சாட்டப்பட்டவரை நிரந்தரமாகச் சிறையில் வைக்க வழி செய்கின்றன. சாதாரணக் குற்றங்களுக்காகக் கைது செய்யப்படும் ஏழைகள் பிணையில் வெளிவர முடியாமல் தவிப்பதற்கு முக்கியக் காரணம் "சொத்துள்ள ஜாமீன்தாரர்கள் யாரும் அவர்களுக்கு இல்லாமலிருப்பதுதான். மனிதனைக் காட்டிலும் சொத்தை மதிக்கும் நம் நீதிமுறை தொழில்முறை ஜாமீன்தாரர்கள் பலரை நீதிமன்ற வளாகத்திலேயே உருவாக்கி விட்டிருக்கிறது. அவர்கள் இனி ஒவ்வொரு முறை ஜாமீன் கொடுக்கும் போதும் ஏற்கெனவே அவர்கள் எத்தனை பேருக்கு ஜாமீன் கொடுத்துள்ளனர் என்ற விவரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்கிறது புதிய திருத்தம். இதன் விளைவாக ஜாமீனின் "விலைஉயரும். ஏழைகள் நிரந்தரமாகச் சிறையில் வாட நேரும்.

 

ஜாமீனில் வெளிவந்தவர்கள் நீதிமன்ற வாய்தாவுக்கு ஒருமுறை வரத் தவறினாலும் ஓராண்டு தண்டனை என்கிறது இன்னொரு திருத்தம். வாய்தாவுக்கு வராத போலீசு அதிகாரிகள் வாய்தா போடுவதையே சதவீதக் கடமையாகச் செய்து வரும் நீதிபதிகள் ஆகியோருக்கு எந்தத் தண்டனையும் கிடையாது. பிழைப்பை விட்டு நாள் முழுவதும் நீதிமன்றப் படிக்கட்டில் காத்து நிற்கும் ஏழைகளுக்கு மட்டும் சிறை!

 

போலீசின் பொய் வழக்குகளிலிருந்து தற்காத்துக் கொள்ளப் பயன்படும் "எதிர்பார்ப்புப் பிணைமுன் ஜாமீன் என்பதை போலீசிடம் பிடித்துக் கொடுக்கும் பிடிவாரண்டாக மாற்றி விட்டது இந்தச் சட்டத் திருத்தம். இதன்படி முன் ஜாமீன் கோருபவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமாம். முன் ஜாமீன் மறுக்கப்பட்டால் போலீசு கைது செய்து கொள்ளுமாம்! நீதிமன்றத்தை காவல் நிலையமாகவும் வழக்குரைஞர்களை ஆள்காட்டிகளாகவும் மாற்றும் இந்தத் திருத்தம்தான் கபடத்தனமான இந்தச் சட்டத் திருத்தத்தின் நோக்கத்தை பச்சையாக அம்பலமாக்கி விட்டது. இதுவன்றி குற்றம் சாட்டப்பட்டவரை அடையாளம் காணும் பணியை ஆர்.டி.ஓ.வே செய்யலாம் என்ற திருத்தம் போலீசு நிலையத்தையே அதாவது அதிகார வர்க்கத்தையே நீதித்துறையாக்குகிறது.

 

அரசு வழக்குரைஞர் நியமனத்திலும் பாரிய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது இந்தச் சட்டத் திருத்தம். தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களால் அரசு வழக்குரைஞர் நியமிக்கப்படும் முறையை மாற்றி ஒரு உயர் போலீசு அதிகாரியின் தலைமையிலான ஆணையத்தால் செய்யப்படும் நிரந்தர நியமனமாக அதை மாற்றுகிறது. அதாவது அரசுத் தரப்பு என்பதை போலீசு தரப்பு என்பதாகவே முழுமையாக மாற்றியமைக்கிறது.

 

சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்காக அல்லும் பகலும் அயராது உழைக்கும் போலீசுக்கு வெறும் அண்ணா பதக்கம் போதாதல்ல வாசிறு குற்றங்களுக்கான அபராதம் ரூ.இலிருந்து ரூ. என உயர்த்தப்பட்டுள்ளது. அதாவதுபோலீசின் லஞ்ச வேட்டைக்கான வாய்ப்பு பெரிதாக்கப்பட்டுள்ளது.

 

அழியக் கூடிய பொருட்கள் அல்லது ரூபாய் மதிப்புக்குக் குறைவான பொருட்களை போலீசே ஏலம் விடவும் புதிய திருத்தம் அனுமதி தருகிறது. மோதிரம் வாட்சு சைக்கிள் முதல் இரு சக்கர வாகனங்கள் வரையிலான பொருட்களை தள்ளுபடி விலையில் வாங்க கடைவீதிக்குப் போகத் தேவையில்லை. இனி போலீசு நிலையத்திலேயே வாங்கிக் கொள்ளலாம். திருட்டுப் பொருள்களை வாங்கி விற்கும் சேட்டுகள் இத்திருத்தத்தின் மூலம் ஒழித்துக் கட்டப்படுவார்கள்!

 

சிறிய சண்டை சச்சரவுகளில் கைது செய்யப்படுவோர் (பிரிவு போலீசு ஸ்டேசனை ருசித்த பின் மனம் திருந்திச் சமாதானமாகப் போக விரும்பினாலும் முடியாதாம். கட்டைப் பஞ்சாயத்து செய்யும் உரிமை போலீசிடமிருந்து பறிக்கப்படுவதால் சமாதானத்துக்கும் தடை விதிக்கிறது புதிய திருத்தம்.

 

நாற்பதுக்கும் மேற்பட்ட திருத்தங்களில் சிலவற்றைப் பற்றி மட்டுமே நாம் இங்கே குறிப்பிட்டிருக்கிறோம். இந்தத் திருத்தங்களின் தன்மையிலிருந்து இவற்றின் நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

 

முதலாவதாக போலீசையும் அதிகார வர்க்கத்தையும் நீதித்துறையின் சில்லறைத் தொந்திரவுகளிலிருந்தும் விடுவித்து அவற்றின் வல்லாட்சியை இத்திருத்தங்கள் உத்திரவாதப்படுத்துகின்றன. இரண்டாவதாக நடைபாதை வியாபாரிகள் உதிரித் தொழில் செய்வோர் போன்ற ஏழைஎளிய மக்களைத் துன்புறுத்தவும் கொள்ளையடிக்கவும் போலீசார் பயன்படுத்தும் குற்றப்பிரிவுகளைக் கடுமையாக்குவதன் மூலம் அவர்கள் நீதிமன்றத்தை நாடுவது குறித்து சிந்திக்கவும் முடியாமல் செய்து ஏழைகள் அனைவரையும் குற்றவாளிகளாக்குகிறது ஏழ்மையையே குற்றமாக்குகிறது. மூன்றாவதாக தொழிற்சங்கங்களும் அரசியல் இயக்கங்களும் மக்களும் நடத்தும் சட்ட வரம்புக்குட்பட்ட போராட்டங்களைக் கூட அரசு இனி சகித்துக் கொள்ளாது என்பதையும் எதிர்ப்புக் குரலே எழும்பாத "மயான ஜனநாயகம் மட்டுமே அனுமதிக்கப்படும் என்பதையும் இத்திருத்தங்கள் தெளிவுபடுத்துகின்றன.

 

சிறு குற்றங்களுக்கான அபராதத்தை அதிகரிப்பது போராடும் மக்களுக்குத் தண்டனையை அதிகரிப்பது நீதியின் விலையை அதிகரிப்பது போலீசின் அதிகாரத்தை அதிகரிப்பது போன்றவை இந்தத் திருத்தங்கள் தோற்றுவிக்கும் விளைவுகள். எனவே நீதிமன்றத்தின் தேவை குறைந்து சிறைச்சாலையின் தேவை இனி அதிகரிக்கும். புதிய சிறைச்சாலைகள் கட்டுவதற்காக அரசு உலக வங்கியிடம் கடன் வாங்கலாம் அல்லது பெருகி வரும் "குற்றச் சந்தையைக் கணக்கில் கொண்டு அமெரிக்காவைப் போல இங்கேயும் சிறைத்துறையைத் தனியார்மயமாக்கலாம். இவை இந்தத் திருத்தம் தோற்றுவிக்கக் கூடிய விளைவுகள். திருத்தங்களைத் திணிப்பதற்கான காரணம் என்ன

 

இந்தச் சட்டத் திருத்தங்கள் இல் நரசிம்ம ராவ் அரசால் ஏன் கொண்டு வரப்பட்டனதற்போது காதும் காதும் வைத்தாற்போல அவை ஏன் திணிக்கப்படுகின்றன என்பவைதான் நம்முன் உள்ள கேள்விகள். குற்றங்கள் அதிகரிக்கும்போது அந்தக் குறிப்பிட்ட குற்றங்களுக்கான தண்டனையைக் கூட்டுவதும் புதிய வகைக் குற்றங்கள் தோன்றும்போது அதற்குத் தேவையான புதிய சட்டங்களை இயற்றுவதும் தவிர்க்கவியலாதவை என்பது போலீசும் சட்ட கமிசனும் அரசும் கூறும் வாதங்கள்.

 

குற்றங்கள் தோன்றுவதற்கான சமூக நிலைமைகளை மாற்றாமல் குற்றத்தை ஒழிப்பதாகக் கூறும் பேச்சு. ஒரு மோசடி என்பது ஒருபுறமிருக்கட்டும் கடந்த ஆண்டுகளில் நம் கண்முன்னே அதிகரித்துவரும் குற்றங்களின் தன்மைகள் என்னதீண்டாமைக் குற்றங்கள் குழந்தை விபச்சாரம் கட்டாய விபச்சாரம் விதவிதமான பாலியல் வக்கிரங்கள் நிதி நிறுவன மோசடிகள் பங்குச் சந்தை மோசடிகள் பொதுச் சொத்தைச் சூறையாடும் குற்றங்கள்தண்டிக்கவே முடியாத ஊழல் குற்றங்கள்மிச்சம் இருக்கின்ற தொழிலாளர் நல சட்டங்களைக் கூட மீறும் முதலாளிகளின் குற்றங்கள்அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் நாசமாக்கும் குற்றங்கள்சட்ட விரோதக் கந்துவட்டிக் கொள்ளைபோலி விதைஉரம்பூச்சி மருந்து வியாபாரம் என மிக நீண்ட பட்டியலை நாம் கூற முடியும்.

 

இவையெதைப் பற்றியும் இந்தச் சட்டத் திருத்தம் கவலைப்படவில்லை என்பது மட்டுமல்லஇந்தக் குற்றவாளிகளுக்குச் சாதகமாகப் பல சட்டங்கள் திருத்தப்பட்டிருக்கின்றன. ஆண்டு தோறும் பல்லாயிரம் கோடி கருப்புப் பணத்தை வெளிநாடுகளுக்குக் கடத்தும் முதலாளிகளின் கிரிமினல் குற்றம் சிவில் தாவாவாக மாற்றப்பட்டுள்ளது. ஃபெரா என்ற கிரிமினல் சட்டம் ஃபெமா என்ற சிவில் சட்டமாக்கப்பட்டுள்ளது. இது ஒரேயொரு சான்று.

 

மேற்கண்ட வகையிலான திருத்தங்கள் அரசின் "பொருளாதாரக் கொள்கை முடிவுகள்என்று அரசால் வகைப்படுத்தப்படுகின்றன. இந்தக் "கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்களை நசுக்கவும்தொடர்ந்து எதிர்ப்போரை "கேடி லிஸ்ட் இல் சேர்க்கவும் புதிய சட்டத்திருத்தம் வகை செய்கிறது.

 

போலீசைக் கட்டுப்படுத்துவது போன்ற தோரணையில் இந்தச் சட்டத்திருத்தத்தில் கூறப்படுபவையனைத்தும் நகைக்கத்தக்க ஏமாற்றுகள். ""உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் அனைத்தும் சட்டங்களே என்ற கோட்பாட்டின்படி இவை எதுவும் புதிய கண்டுபிடிப்பு அல்ல.

 

கொலை கொள்ளை பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட அனைத்திலும் கிரிமினல் கும்பல்களுடன் கைகோர்த்துக் கொண்டு போலீசும் ஈடுபட்டு வருகிறது என்பதே நாம் போலீசிடம் கண்டிருக்கும் புதிய வளர்ச்சி. சட்டத்திற்குப் பணிந்து நடக்க வேண்டிய குடிமகன் இழைக்கும் அதே குற்றத்தைசட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதற்காகவே சம்பளம் வாங்குவோர் இழைக்கும் போது அதற்கென்ன தண்டனை என்பது குறித்து இந்தச் சட்டத் திருத்தம் மூச்சு விடவில்லை. மாறாக இந்தச் சீருடைக் குற்றவாளிகளை மேலும் ஆயுதபாணியாக்கியிருக்கிறது.

 

இந்த நாட்டின் ஆகப் பெரும்பான்மையான மக்களின் அன்றாட வாழ்க்கையையும் அவர்களது அமைதி வழியிலான போராட்டங்களையும் கூட நசுக்கும் வகையிலும்கருத்துரிமை என்பதை மக்கள் பயன்படுத்தவே முடியாத உரிமையாக ஆக்கும் வகையிலும் மாற்றுகின்ற இந்தச் சட்டத் திருத்தம் ஒரு எதிர்ப்புக் குரல் கூட இல்லாமல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறதே எப்படி

 

இதில் வியப்புக்கே இடமில்லை. நாட்டையே அடகு வைக்கும் காட் ஒப்பந்தத்தில் நாடாளுமன்றத்துக்கே தெரியாமல் சில அதிகாரிகள் கையெழுத்திடுவதும்அதை நாடாளுமன்றம் அங்கீகரிப்பதும் சாத்தியமாகும்போது இதில் அதிசயிக்க என்ன இருக்கிறது

 

இத்திருத்தம் கொண்டு வரப்பட்டது ஆம் ஆண்டு. காட் ஒப்பந்தத்தின் விளைவுகள் தோற்றுவிக்கக்கூடிய போராட்டங்களைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையே இந்தச் சட்டத்திருத்தம்.

 

நாட்டின் இறையாண்மைக்குப் பொருத்தமான விகிதத்தில்தான் மக்களுக்கு ஜனநாயகம் இருக்க முடியும். இன்று "இரண்டாவது தலைமுறைச் சீர்திருத்தம் என்ற பெயரில் நாலு கால் பாய்ச்சலில் நாடு அக்கக்காகப் பிரித்து விற்கப்படுகிறது. "இறையாண்மைஎன்ற சொல்லே அரசியல் அகராதியிலிருந்து நீக்கப்படவிருக்கும் காலத்தை நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம். எனவே தான் ஜனநாயகமும் அவசர அவசரமாக நீக்கப்படுகிறது.

 

இந்த "ஜனநாயகப் படுகொலையை வழக்குரைஞர்கள் எதிர்ப்பது உண்மைதான். ஆனால் நீதிபதிகளோ தனது அதிகாரத்தை தட்டில் வைத்து அதிகாரவர்க்கத்திடம் வழங்குவதற்கு தயாராகவே இருக்கின்றனர். நாடாளுமன்றம் நிர்வாக எந்திரம் போலீசு நீதித்துறை என்று வௌவேறு பெயர்களால் அழைக்கப்படும் "அரசுமக்களுக்கெதிராக ஒன்றுபட்டு நிற்கிறது. எனவேதான் "ஜனநாயகத்தின்இந்த உறுப்புகள் "உடுக்கை இழந்தவன் கை போல மிகவும் இயல்பாகவும் விவாதமின்றியும் அனிச்சையாகவே ஐக்கியப்படுகின்றன.

 

வழக்குரைஞர்களின் போராட்டம் இந்தச் சட்டத்திருத்தத்தின் அமலாக்கத்தை நிறுத்தி வைத்திருப்பது உண்மைதான். எனினும் அபாயம் நீங்கவிடவில்லை. ரம்பம் வைத்து கதறக் கதற கழுத்தை அறுப்பது பாரதீய ஜனதாவின் பாணி. ஈரத்துணியைக் கழுத்தில் சுற்றி சத்தமில்லாமல் அறுப்பது காங்கிரசின் வழிமுறை. சத்தம் போட்டதனால் இப்போதைக்குக் கத்தியைப் பிடித்த கை கொஞ்சம் இறங்கியிருக்கிறது. நம் கழுத்தில் சுற்றிய ஈரத்துணி இன்னும் இறங்கவில்லை மறந்துவிட வேண்டாம்.

 

சூரியன்