நந்திகிராம் பிரச்சினையை ஒட்டி கல்கத்தா வந்து சென்றார் அத்வானி. வந்தவர் கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாமல் தனது நண்பர் CPM(டாடாயிஸ்ட்) முதலமைச்சர் புத்ததேவுவை பார்க்காமல் சென்று விட்டார். ஆயிரம் பிரச்சினை என்றாலும் ஒரு அடிப்படை நாகரிகம் வேண்டாம்? ஒரு நண்பரை அவ்வளவு தூரம் வந்துவிட்டு பார்க்காமல் சென்று விடுவதா?

மனம் வெதும்பி பத்திரிகைகளில் புலம்பினார் புத்ததேவு. 'நண்பர் அத்துவானி இம்புட்டு தூரம் வந்துபிட்டு என்ன பாக்காம போயிட்டாரு... ரொம்ப காண்டாக்கீது" என்று. உடனே அத்துவானிக்கு ரொம்ப பொச்சரிப்பா.. ஸாரி புல்லரிப்பாப் போச்சி. அவர் சொன்னார் "நண்பர் புத்ததேவு சந்திக்காம போனது வருத்தந்தான். நான் அவர சந்திக்கிறத எங்க கட்சி தொண்டர்கள் சரியா புரிஞ்சிக்க மாட்டாய்ங்க" அப்படின்னு.

 

இந்த ரெண்டு பேரோட நட்பு செண்டிமெண்டு மேற்கு வங்க கூரையை பிச்சிக்கிட்டு கொஞ்ச நாள் ஓடுச்சு. அந்த செண்டிமெண்டு எபெக்ட் ஆறாருதுக்கு முன்னெயே நாடாளுமன்றத்துல காம்ரேடு பிருந்தாகரத்தும், சுஸ்மாசுவராஜ் அப்படியே கட்டிப் பிடிச்சி உச்சி முகர்ந்து முத்தம் கொடுக்காத குறையாக தமது நட்பை, பாசத்தை வெளிப்படுத்திக் கொண்டனர். படம் பத்திரிகைகளில் வெளிவந்து மூன்று காட்சிகளும் ஹவுஸ் புல்லாக நூறு நாள்கள் ஓடும் அளவு பிரபலமாகியது. படத்த என்னால கண் கொட்டு பாக்க முடியல.. கண்ணு முழியெல்லாம் ஒரே கண்ணீரு.... (போட்டோ வுல கூட பின்னாடி ஒருத்தர் இந்த பாசப்பினப்ப பாத்து பீலிங்ஸ் ஆகி நிக்கிறாரு).

 

 

Where left & right unite: CPI(M) and BJP leaders Brinda Karat (left) and Sushma Swaraj exchange pleasantries after the Women’s Reservation Bill was tabled in the Rajya Sabha on Tuesday. — நன்றி: The Hindu

தூ... வெக்கங்கெட்ட நாயிகளா.... பார்ப்பன பயங்கரவாத படு கொலைகாரர்களுடன், மனித குல விரோதிகளுடன் வெட்கமின்றி பொது இடங்களில் ஒட்டி உறவாடும் இவர்கள் கம்யுனிஸ்டு என்று தமது கட்சிக்கு பெயர் வைத்து கம்யுனிசத்தின் மீதும் ஒணுக்கு அடிக்கின்றனர். விட்டால் பாஜகவை இடதுசாரி கட்சிகள் லிஸ்டில் சேர்த்து விடுவார்கள் போல தெரிகிறது. அங்கீகரிக்கப்பட்ட இடதுசாரிகள் லிஸ்டில் பாஜக இருந்தால் என்ன CPM இருந்தால் என்ன எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய பாசிச மட்டைகள்தான்.

 

http://poar-parai.blogspot.com/2008/05/blog-post_8906.html