12_2005.jpgகடந்த நவம்பர் 34 தேதிகளில் தென்னமெரிக்காவிலுள்ள அர்ஜெண்டினா நாட்டின் மார்டெல் பிளாடா நகரில் அமெரிக்க சுதந்திர வர்த்த பகுதிகள் எனும் ஒப்பந்தத்தை இறுதியாக்குவதற்கான உச்சி மாநாடு நடைபெற்றது. வடதென் அமெரிக்க கண்டத்து 34 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற இம்மாநாட்டுக்கு அமெரிக்க அதிபர் புஷ்ஷûம் வருகை தந்தார். வடதென் அமெரிக்காவின் நாடுகளின் பொருளாதார சுயாதிபத்திய உரிமைகளை நீக்கி விட்டு, வடக்கே கனடாவிலிருந்து தெற்கே சிலி வரை சுதந்திரமாக வர்த்தகம் செய்ய ஒப்பந்தம் செய்து கொள்வது என்ற பெயரில் அமெரிக்க மேலாதிக்கவாதிகள் தென்னமெரிக்க நாடுகளை ஒட்டச் சுரண்டும் மறுகாலனியாதிக்கக் கொள்கைகளின் புதிய ஏற்பாடுதான் இது.

 

இம்மாநாடு நடந்த அதே நாட்களில், உலக சமூக மன்றத்தினர் அதே மார்டெல் பிளாடா நகரில் ""மக்களின் மாற்று உச்சி மாநாடு'' என்ற பெயரில் புஷ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பேரணியை நடத்தினர். உலகப் புகழ் பெற்ற பிரபல கால்பந்தாட்ட வீரரான மரடோனா தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறக் கோரி போராடி வரும் ""அமைதித்தாய்'' சிண்டி ஷீஹன், ஈராக்கில் கொல்லப்பட்ட படைவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், வெனிசுலா அதிபர் சாவெஸ், தென்னமெரிக்க கண்டத்து நாடுகளைச் சேர்ந்த தொழிற்சங்க விவசாய சங்கத் தலைவர்கள் என பலரும் பங்கேற்று முழங்கினர். அர்ஜெண்டினாவில் இதுவரை கண்டிராத அளவுக்கு ஏறத்தாழ 25,000 பேருக்கு மேல் திரண்டு உலக மேலாதிக்கப் போர் வெறியன் புஷ்ஷûக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

 

தென்னமெரிக்க கண்டத்து நாடுகளின் கொடிகளை இணைத்து, அதில் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியான சேகுவேராவின் உருவப் படத்தைப் பொறித்து நீண்ட பதாகையாக நூற்றுக்கணக்கானோர் பிடித்துச் சென்ற ஊர்வலத்தின் இறுதியில், வெனிசுலா அதிபர், ""நாம் எல்லோரும் இந்நகரில் அமெரிக்க மேலாதிக்கக் கனவாகிய அமெரிக்க சுதந்திர வர்த்தகப் பகுதிகள் ஒப்பந்தத்தைக் குழிதோண்டிப் புதைப்போம்'' என்று சூளுரைத்தார். அமெரிக்க மேலாதிக்கவாதிகள் மீது வெஞ்சினம் கொண்ட ஆர்ப்பாட்டத்தினர் இந்நகரிலுள்ள அமெரிக்க சிட்டி வங்கி, மெக்டொனால்டு உணவு விடுதிகள் மீது கல்லெறிந்து சேதப்படுத்தினர். அர்ஜெண்டினா மட்டுமின்றி, பிரேசில், உருகுவே முதலான அண்டை நாடுகளிலும் புஷ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் எழுச்சியுடன் நடந்துள்ளன. தென்னமெரிக்கக் கண்டத்தில் வீசும் புஷ் எதிர்ப்புப் புயலை எதிர் கொள்ள முடியாத நிலையில், அமெரிக்க மேலாதிக்கவாதிகளின் சுதந்திர வர்த்த ஒப்பந்த மாநாடு பெருந்தோல்வியில் முடிந்தது.

 

ஜூலை 2005இல் தென்னமெரிக்க கண்டத்து சமூக விஞ்ஞான கல்வித் துறையினர் அர்ஜென்டினா, பிரேசில், உருகுவே, வெனிசுலா, பொலிவியா, பெரு ஆகிய நாடுகளில் விரிவாக நடத்திய கருத்துக் கணிப்பில் 70மூக்கும் மேலான மக்கள், புஷ்ஷின் கொள்கைகள் உலக அமைதிக்கு எதிரானது என்று கூறியுள்ளனர். தென்னமெரிக்கா மட்டுமல்ல் தனது சொந்த நாட்டிலேயே கூட அதிபர் புஷ்ஷûக்கு மக்களிடம் ஆதரவு இல்லை. கடந்த நவம்பர் 2ஆம் நாளன்று அமெரிக்க மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு, ""தற்போதைய புஷ் ஆட்சியை அகற்ற உலகம் இனியும் காத்திருக்கக் கூடாது'' என்ற முழக்கத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். நவம்பர் 4ஆம் தேதியன்று ""வாஷிங்டன் போஸ்ட்'' நாளேடு வெளியிட்ட கருத்துக் கணிப்பில் ஏறத்தாழ மூன்றில் இரு பங்கினர் ""புஷ்ஷின் நேர்மை சந்தேகத்திற்குரியது; அவர் உலக அமைதியைச் சீர்குலைப்பவர்'' என்று கூறியுள்ளனர். சி.பி.எஸ். என்ற செய்தி நிறுவனம் இதேபோல் அமெரிக்க மக்களிடம் கருத்து கணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளதோடு, 2001இல் அதிபராக பதவியேற்ற பிறகு, இதுவரை கண்டிராத அளவுக்கு புஷ் எதிர்ப்பு வலுப்பெற்றுள்ளது என்றும் எந்தவொரு அமெரிக்க அதிபரும் இந்த அளவுக்கு வெறுப்புக்கு ஆளானதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.