ஒடுக்கப்பட்ட தேசியமென்பது, ஒடுக்குமின மக்களின் ஜக்கியத்தைக் கோராத வரை, அவை சொந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது. இந்த வகையில் கீழிருந்து மக்களின் ஐக்கியத்தை முன்வைக்காத, மற்றும் மறுதளிக்கும்; இனவாதத் தேசியம் தோற்கடிக்கப்பட வேணடும்.
இனம் மதம் கடந்து அனைத்து ஒடுக்கப்பட்ட மனிதர்களையும் முன்னிறுத்தாத குறுகிய அரசியலென்பது, ஒட்டுமொத்த மக்களுக்கும் எதிரானது மட்டுமின்றி, தன் இன-மத ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கும் அரசியலாகும். தமிழனைத் தமிழன் ஒடுக்கும், முஸ்லிமை முஸ்லிம் ஒடுக்கும், மலையகத்தவனை மலையகத்தவன் ஒடுக்கும் அரசியல். இது சிங்களவனைத் சிங்களவன் ஒடுக்கும் இன மத வாத அரசியலே.
பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் இனம் மதம் கடந்த வெற்றியும், இன மத அடையாளம் கடந்து தனிப்பட்ட வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களித்ததென்பது, இன மதம் ஊடாக சிந்திக்கின்ற அனைத்து தரப்புக்கும் எரிச்சல் ஊட்டுகின்ற, தோல்வியாக மாறி இருக்கின்றது. இன மதம் கடந்து, மக்கள் அரசியலை முன்வைக்க முடியாதவர்களின் புலம்பலாக மாறியிருக்கின்றது.
தேசிய மக்கள் சக்தி எஞ்சிக்கிடக்கும் இனமதவாத கோவணத்தை உருவிவிடுமா என்ற அச்சத்துடன் ஒப்பாரி வைக்கின்றனர். தமிழினவாதம், கிழக்குப் பிரதேசவாதம், முஸ்லிம் இனமத வாதம்;, மலையக இனவாதம்.. என தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வெற்றி எதையும் விட்டுவைக்கவில்லை.
இந்த வகையில் தமிழ், முஸ்லிம், மலையக கட்சிகளின் முன்னாள் - இன்னான் தலைவர்கள் எவரும், அந்தந்த இனமத மக்களை ஒடுக்குகின்றவர்களின் பிரதிநிதியாக இருந்தவர்கள். தமிழ், முஸ்லிம், மலையக.. ஒடுக்கப்பட்ட மக்களுடன், தம் அரசியலை முன்னிறுத்தியவர்களல்ல. இதுவரை காலமும் தங்கள் சொந்த இனமத மக்களுக்காக என்ன செய்துள்ளனர்? தாமும், தம்மையொத்த கும்பலும் சொகுசாக வாழ்வதற்காக உழைத்தவர்கள். இனமத ஒடுக்குமுறையை முன்னிறுத்திய தோற்றுப் போன சிங்கள தலைவர்கள் எப்படி சிங்கள மக்களுக்கு எதிராக இருந்தனரோ, அது போன்று தான் மற்றைய இனமத தலைவர்களும்.
சிங்கள – பௌத்த இனமத வாதங்களை ஜனாதிபதி தேர்தலில் தோற்கடித்த தேசிய மக்கள் சக்தி, பாராளுமன்ற தேர்தலில் தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் குறுகிய இனமத வாதங்களின் ஒரு பகுதியைத் தோற்கடித்திருக்கின்றது.
இனவாதம், மதவாதம், பிரதேசவாதம்.. தோற்கடிக்கப்படுவதன் மூலமே, ஒடுக்கப்பட்ட மக்களின் தேசமும் தேசியமும் உயர்த்தப்பட முடியும். இந்தவகையில் இனவாத தமிழினவாதத் தேசியம் தோற்கடிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட தேசியம் ஒடுக்கப்படட மக்களினால் உயர்த்தப்பட வேண்டும்;. இங்கு தோற்றுப் போனது தமிழினவாதமே ஒழியத் தேசியமல்ல.
எஞ்சியிருக்கும் தமிழினவாதத் தேசியமானது, தமிழனை தமிழன் ஒடுக்கும் தமிழனுடையது. தமிழனைத் தமிழன் ஒடுக்கும் அதிகாரத்தைக் கோருபவர்கள், அதற்காக தமிழினவாதத்தை முன்வைத்துப் புலம்புகின்றனர். இந்தத் தமிழினவாதம், தமிழனைத் தமிழன் ஒடுக்கும் இனவாதத்தை கண்டுகொண்டது கிடையாது. தமிழனைத் தமிழன் ஒடுக்குகின்ற அதிகாரத்துடன், ஒடுக்கப்பட்ட மக்களின் முதுகில் சவாரி செய்தவர்கள்.
ஒடுக்கப்பட்ட தமிழனை ஒடுக்கும் தமிழன், தமிழினவாத தேசியத்தின் பெயரில் மக்களை பலியிட்;டவர்கள், அதைக் காட்டியே, மக்களை காலாகாலமாக ஏய்த்தவர்கள் என்பது, மறுக்கப்பட முடியாத உண்மை.
இத்தகைய அரசியல் சூழலில் பூனை கறுப்பா சிவப்பா என்பதல்ல, எலி பிடித்தால் சரி என்று கூறிக்கொண்டு தேசிய மக்கள் சக்தி அதிகாரத்துக்கு வந்திருக்கின்றது.
தேர்தல் மூலம் வெற்றி பெற்றவர்கள் எலி பிடிக்கும் பூனையுடன் கிளம்பியிருக்கின்றனர். தங்கள் பழைய வர்க்க அரசியலால் எலியைப் பிடிக்க முடியாது என்று கூறி, வர்க்க அரசியலை துறந்துள்ளனர். அமைப்பு (சிஸ்ரம்) சரி, அதிலுள்ள நபர்களே பிரச்சனை என்று கூறிக்கொண்டு அதிகாரத்தைப் பெற்றுள்ளனர். இதற்கு தங்கள் இடதுசாரிய வேசத்தையும்;, அதிலுள்ள சில கொள்கைகளையும் முன்வைத்து, எலி வேட்டையில் இறங்கியிருக்கின்றனர்.
முதலாளித்துவத்தையும், அதன் சட்டதிட்டங்களையும் தங்கள் கொள்கையாக்கிக் கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தி, தங்கள் எலி வேட்டையின் போது மக்களை கீழிருந்து ஒற்றுமைப்படுத்தும் சமூகப் பொருளாதார அடிப்படையில் இருந்து முன்னெடுக்குமா என்பதே இன்று அடிப்படைக் கேள்வி.
மக்களை இனமத வடிவங்களில் பிளந்து ஒடுக்கிய அனைத்து இனமதவாதிகளும், விதிவிலக்கின்றி ஊழல், இலஞ்சம், அதிகாரம், சொகுசு வாழ்க்கை, .. என்று சொந்த இனமத மக்களை ஒடுக்கியே வாழ்ந்தவர்கள். பிரபாகரன் உள்ளிட யாரும் இதற்கு விதிவிலக்கு கிடையாது.
அனைத்து இனமத ஒடுக்கப்பட்ட மக்களை கீழிருந்து ஒற்றுமைப்படுத்தாத ஊழல் ஒழிப்பு என்பது, வெறும் கண்துடைப்பாக மாறும்.
அனைத்து இனமத ஒடுக்கப்பட்ட மக்களை, எதற்கு எதிராக அணிதிரட்டப் போகின்றார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும். அனைத்தின ஒடுக்கப்பட்ட மக்களையும் ஒருங்கிiஒந்த தேசியம் முன்னெடுக்கப்படுவதன் மூலமே, தனித்தனியான தேசியத்தை ஒருங்கிணைக்க முடியும்.
இந்த வகையில் தேசிய இன முரண்பாட்டில் முதலாளித்துவத்தை முரணற்றதாக கையாளப்படும் போது, தேசிய முரண்பாடுகளுக்கு தீர்வு காண முடியும்.
அந்த வகையில் அனைத்து இனத்துக்குமான பொது அரசியல் அமைப்புச் சட்டமும், அனைத்து தேசிய இனங்களும் தங்களைத் தாங்களே நிர்வாகம் செய்யக் கூடிய பொறிமுறையை அடிப்படையாகக் கொண்ட ஆட்சிமுறை மூலம், குறுகிய இனமத அரசியலை முடிவுக்குக் கொண்டு வர முடியும்.
முரணற்ற வகையிலான மக்களின் ஜக்கியமே, இன-மத கூறுகளை சமூகப் பொருளாதார அமைப்பில் இருந்து அகற்றும் கருவியாகும். இந்த அடிப்படையில் கல்வியென்பது இனமத வரலாறுகளையும், ஒடுக்குமுறைகளையும் (உள்-வெளி) வெளிப்படுத்தும் வண்ணம், கல்வி முறையை மாற்றியமைக்க வேண்டும். குறுகிய மத, இனவாத கல்வி மாற்றப்படும் வண்ணம், சமூக நடைமுறைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இப்படி பல சமூக அடிப்படைகள் உண்டு. இதைக் கடந்து வெறுமனே
1.அமைப்பில் (சிஸ்ரத்தில்) உள்ள நபர்களை சட்டத்தின் பிடியில் நிறுத்தி, தங்களை முன்னிறுத்தப் போகின்றார்களா!?
2.அரசியல் அமைப்பு சட்டத்தில் (சிஸ்ரத்தில்) சிலவற்றை மாற்றி, தங்களை முன்னிறுத்தப் போகின்றார்களா!?
இப்படி குறுகிவிடப் போகின்றார்களா? தேசிய மக்கள் சத்தி என்ன செய்யப் போகின்றார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
17.11.2024
- சமஸ்டியை கோருபவர்களின்இ மறுப்பவர்களின் அரசியல் - யாருக்கு வாக்களிக்க வேண்டும். பகுதி – 11
- திசைகாட்டியின் திசை குறித்து - யாருக்கு வாக்களிக்க வேண்டும். பகுதி 10
- தமிழ் தேசியமும் கூட்டுக் களவாணிகளும் - யாருக்கு வாக்களிக்க வேண்டும்.? - பகுதி 09
- டொக்டர் அர்ச்சுனாவும் யாழ்ப்பாண மாபியாக்களும் - யாருக்கு வாக்களிக்க வேண்டும். பகுதி – 08
- உதய கம்மன்பில தொடங்கி டொக்டர் அருச்சுனா வரை, மீண்டும் இனவாதம் - யாருக்கு வாக்களிக்க வேண்டும். பகுதி - 7
- தேசிய மக்கள் சக்தியின் அரசு மதச்சார்பற்றதா!? - யாருக்கு வாக்களிக்க வேண்டும். பகுதி -6
- .யார் செழுமையடைய போகின்றார்கள்? மக்களா!?-யாருக்கு வாக்களிக்க வேண்டும். பகுதி - 5
- .டொலர் பொருளாதாரமா? தேசியப் பொருளாதாரமா?-யாருக்கு வாக்களிக்க வேண்டும். பகுதி - 4
- .சமூக மாற்றத்தை மறுதலிக்கும் தேசிய மக்கள் சக்தி-யாருக்கு வாக்களிக்க வேண்டும். பகுதி - 3
- .கள்ளரை வெளியேற்ற அனுரவுக்கு ஆதரவு" தெரிவிக்க வேண்டுமா!? - யாருக்கு வாக்களிக்க வேண்டும்-பகுதி - 2
- .மக்களின் குரலாக யார் இருக்கின்றனர்? யாருக்கு வாக்களிக்க வேண்டும் பகுதி - 1
- .ஜே.வி.பியின் வெற்றியும் சமூகத்தின் தோல்வியும்
- .பாராளுமன்ற ஜனநாயகத்தில் ஜே.வி.பி. குறித்த கற்பனைகளும் நிஜங்களும்.
- .ஜே.வி.பி. மீதான அரசியல் அழுத்தங்கள் மூலம் மாற்றத்தைக் கொண்டு வாருங்கள்
- .தமிழ் தேசியமும் - சாராயக் கடையும் - பொலிஸ் அதிகாரமும்
- .யாருக்கு வாக்களிக்க வேண்டும்!? ஏன்!? எதற்காக!?
எஞ்சிய (தமிழ்) அனைத்து இனவாதத்தையும் துடைத்தெறியுமா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode