Language Selection

பி.இரயாகரன் -2024
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

திசைகாட்டியின் அரசியலென்பது தட்டுத் தடுமாறியே, பயணித்து வந்திருக்கின்றது. ஜே.வி.பி. தேசிய மக்கள் சக்தியாக தன்னை முன்னிறுத்தி, முதலாளித்துவ சீர்திருத்தவாத அரசியலை முன்வைக்கின்றது. அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் அதன் பயணமென்பது, அரசியல்ரீதியான ஊழலலானது. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை என்ற, அதன் வரலாற்றுரீதியான அரசியலைக் கைவிட்டுவிட்டது. இதை வெளிப்படையாக இன்று சொல்வதில்லை.

இவர் அதிகாரத்தை பெற காரணமான அரகலய போராட்டமானது, தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்த போராட்டமல்ல. மாறாக இன்றைய மக்கள் போராட்ட முன்னணித் தலைவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, அதன் அலையில் பல தரப்பினர் இணைந்து கொண்டனர்;. அந்த அலையில் வந்து சேர்ந்தவர்களே ஜே.வி.பி. இதை ஜே.வி.பி. மறுத்தால் அது பொய். நேர்மையற்ற அரசியல் செயற்பாடு.

ஜே.வி.பி. வந்து சேர்ந்திருந்த காலத்தில், ஒரு கால கட்டத்தில் அரகலய அலை ஓய்ந்தது. இந்த அலை ஓய்ந்த போது, அதைவிட்டுக் கரையொதுங்கிய ஜே.வி.பி., போராட்டத்தைக் கைவிட்டுச் சென்றது. 

மீண்டும் இன்றைய மக்கள் போராட்டத் தலைவர்களால் அரகலய போராட்டத்தை மீண்டும் அலையாக்கிய போது, ஜே.வி.பி. மீண்டும் ஓடோடி வந்து ஒட்டிக் கொண்டது. இதில் புகுந்து கொண்டவர்கள், இதன் மூலம் பலாத்காரமாக அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள முயன்றதையடுத்து, மக்கள் போராட்டம் சிதைந்து போனது. 

மக்கள் போராட்டம் மீது நம்பிக்கையற்ற இந்த வரலாறு உண்மையூடாகவே, திசைகாட்டி தேர்தல் அரசியல் பயணத்தை இனங்காண வேண்டும். மக்கள் போராட்ட முன்னணியின் மக்கள் திரள் போராட்டத்தையே, திசைகாட்டி வாக்கு அரசியலாக அறுவடை செய்துள்ளது.

அரகலய போராட்டத்துக்கு தலைமை தாங்கிய தலைவர்கள், தேசிய மக்கள் சக்தியுடன் இல்லை. அவர்களில் பெரும் பகுதியினர் மக்கள் போராட்ட முன்னணியில் இருப்பதைக் வெளிப்படையாக காண முடியும்.

உண்மையான மக்களுக்காகப் போராடிய தலைவர்கள் அதிகாரத்துக்கு வரவில்லை. இன்று எதிர்க்கட்சியில் அமர முனைகின்றனர். இதன் மூலம் 

1.தேசிய மக்கள் சக்தி செய்ய முனையும் முதலாளித்துவ சீர்திருத்தத்தை முரணற்ற வகையில் முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சியாக இருந்து கண்காணிக்கவும் தொடர்ந்து போராடவும் முனைகின்றது.

2.தேசிய மக்கள் சக்தி மக்கள் போராட்டத்தை கைவிட்டு முன்னெடுக்கும் முதலாளித்துவ சீர்திருத்தத்துக்கு அப்பால், மக்களின் முழுமையாக விடுதலையை முன்னிறுத்தி தொடர்ந்து போராடுவதற்காக தன்னை எதிர்க்கட்சியாக முன்னிறுத்துகின்றது. 
 
தேசிய மக்கள் சக்தியின் அடிப்படையாக இருக்கும் ஜே.வி.பி.யானது, வர்க்க அரசியலைக் கைவிட்ட முதலாளித்துவ சீர்திருத்தவாத கட்சியாகச் சீரழிந்துவிட்டதை, 2012 இல் இருந்து விலகிய முன்னிலை சோசலிசக்கட்சியின் வரலாறு எடுத்துக் காட்டுகின்றது. 

இந்த முன்னிலை சோசலிசக்கட்சியில் இருந்து வந்த பெரும்பாலான தலைவர்கள், அரகலய போராட்டத் தலைவர்களாக இருக்கின்றனர். அவர்கள் இன்று மக்கள் போராட்ட முன்னணியில் தேர்தலிலும் நிற்;கின்றனர். முதலாளித்துவ சீர்திருத்தம் மூலம் மட்டும் மக்களின் அனைத்து ஒடுக்குமுறைகளிலும் இருந்து விடுவிக்க முடியாத உண்மையுடன், மக்கள் போராட்ட முன்னணி போராட்டக் களத்தில் சமரசமின்றி நிற்கின்றனர்.   
  
இன்று முதலாளித்துவ கட்சியாக சீரழிந்துவிட்ட ஜே.வி.பி.யானது, 2004 இல் மகிந்த அரசிலிருந்த போது அரசின் இனவாத நடவடிக்கைக்கு துணையாக இருந்தவர்கள். 2004  இற்கு முன் நாட்டில் இனவாதம், மதவாதம் ஒடுக்குமுறை நிலவிய காலத்தில், ஆட்சியாளரின் இனவாதத்துக்கு ஆதரவாக இருந்தவர்கள். இது வரலாறு. அரசியல் என்பது செயற்பாடு, வெறும் கொள்கையல்ல.

ஜே.வி.பி.யின் இந்தத் தொடர்ச்சியான சந்தர்ப்பவாத அரசியலை எதிர்த்து 2012 வெளியேறியவர்களே, முன்னிலை சோசலிசக் கட்சியை உருவாக்கினர். இந்தக் கட்சி சட்ட ரீதியாக 09.04.2012 இல் உருவாக்கப்பட்டது.  இந்தக் கட்சி 09.04.2012 உருவாகியிருந்த நிலையில், கட்சியின் தலைவர் குமார் குணரத்தினம் படுகொலை செய்யப்படுவதற்காக, 07.04.2012 அன்று இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டார். அன்று அவர் அவுஸ்திரேலியப் பிரஜையாக இருந்த காரணத்தால், அவுஸ்திரேலியா தலையிட்டதையடுத்து 09.04.212 அன்று வீதியில் கைவிடப்பட்டார். அன்று அவர் கைது செய்யப்பட்டு, 10.04.2012 அவுஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். அவரைக் கடத்தியவர்கள் விட்டுச்சென்ற அதே நாள் கட்சிச் தலைவரின்றி கட்சி உருவானது. கடத்திச் சென்ற அரசின் பின்னணியில் ஜே.வி.பியின் தூண்டுதல் இருந்ததாக அன்று கூறப்பட்டது. கடந்தகாலக் கடத்தல்களை விசாரிக்கும் போது, இதன் பின்னணியில் யார் இருந்தனர் என்பதை ஜே.வி.பி. விசாரிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்;.

மக்கள் போராட்ட முன்னணியின் சோசலிசக்கட்சியின் வரலாறு இது. இதற்கு முரணாக ஜே.வி.பி. வர்க்க அரசியலை கைவிட்டு சீர்திருத்தவாத முதலாளித்துவக் கட்சியாக மாறியதையும், அம் மாற்றம் என்பது முழுமையானதல்ல என்பதும் ஒரு உண்மை. 

சந்தர்ப்பவாத முதலாளித்துவமானது ஒடுக்கப்பட்ட மக்களின் பூரணமான விடுதலைக்குப் பதில், முதலாளித்துவத்துக்குக் கீழ் தொடர்ந்து வாழுமாறு கூறுகின்றது. சட்டத்துக்குப் புறம்பான செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதன் மூலமும், முதலாளித்துவ உற்பத்தியில் மாற்றங்களையும் சீர்திருத்தத்தையும் கொண்டு வருவதன் மூலமும், மக்களின் விடுதலை என்ற பூங் கொத்தையே மக்களின் காதில் செருகிவிட முனைகின்றது. 

இது ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையைத் தராது என்ற வரலாற்று நடைமுறையுடன், மக்கள் போராட்ட முன்னணி உங்களுடன் களத்தில் நிற்கின்றது. அவர்களை எதிர்கட்சியில் அமர்த்தி, பலப்படுத்த வாக்களியுங்கள். 

10.11.2024

  1. தமிழ் தேசியமும் கூட்டுக் களவாணிகளும் - யாருக்கு வாக்களிக்க வேண்டும்.? - பகுதி 09
  2. டொக்டர் அர்ச்சுனாவும் யாழ்ப்பாண மாபியாக்களும் - யாருக்கு வாக்களிக்க வேண்டும். பகுதி – 08
  3. உதய கம்மன்பில தொடங்கி டொக்டர் அருச்சுனா வரை, மீண்டும் இனவாதம் - யாருக்கு வாக்களிக்க வேண்டும். பகுதி - 7
  4. தேசிய மக்கள் சக்தியின் அரசு மதச்சார்பற்றதா!? - யாருக்கு வாக்களிக்க வேண்டும். பகுதி -6
  5. .யார் செழுமையடைய போகின்றார்கள்? மக்களா!?-யாருக்கு வாக்களிக்க வேண்டும். பகுதி - 5
  6. .டொலர் பொருளாதாரமா? தேசியப்  பொருளாதாரமா?-யாருக்கு வாக்களிக்க வேண்டும். பகுதி - 4
  7. .சமூக மாற்றத்தை மறுதலிக்கும் தேசிய மக்கள் சக்தி-யாருக்கு வாக்களிக்க வேண்டும். பகுதி - 3
  8. .கள்ளரை வெளியேற்ற அனுரவுக்கு ஆதரவு" தெரிவிக்க வேண்டுமா!? - யாருக்கு வாக்களிக்க வேண்டும்-பகுதி - 2
  9. .மக்களின் குரலாக யார் இருக்கின்றனர்? யாருக்கு வாக்களிக்க வேண்டும் பகுதி - 1
  10. .ஜே.வி.பியின் வெற்றியும் சமூகத்தின் தோல்வியும்
  11. .பாராளுமன்ற ஜனநாயகத்தில் ஜே.வி.பி. குறித்த கற்பனைகளும் நிஜங்களும்.
  12. .ஜே.வி.பி. மீதான அரசியல் அழுத்தங்கள் மூலம் மாற்றத்தைக் கொண்டு வாருங்கள்
  13. .தமிழ் தேசியமும் - சாராயக் கடையும் - பொலிஸ் அதிகாரமும்
  14. .யாருக்கு வாக்களிக்க வேண்டும்!? ஏன்!? எதற்காக!?